இயற்கைமுறையில் தயாரித்த முள்ளங்கிக் குழம்பு சாதம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:04 | Best Blogger Tips
இயற்கைமுறையில் தயாரித்த முள்ளங்கிக் குழம்பு சாதம்.

தேவையானவை:தேங்காய், தனியா,  சீரகம், பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை,கொத்துமல்லி, பூண்டு , சின்ன வெங்காயம், உப்பு.

அத்துடன் நறுக்கி வேகவைக்கப்பட்ட முள்ளங்கி, தேவையான அளவு சாதம்.

சமைக்காமல் செய்வதால் பூண்டும் சின்ன வெங்காயமும் மிகவும் குறைவாகத்தான் சேர்க்கவேண்டும்.

முதலில் சொல்லப்பட்டவற்றில் தக்காளியில் பாதியையும்  கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் தவிர மற்றதை நன்றாக ஆட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதனுடன் வெந்த முள்ளங்கியையும் சாதத்தையும் சேர்த்துக் கலக்க வேண்டும். 

அத்துடன் மீதித் தக்காளியையும் கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் நறுக்கி மேலே தூவி விடவும். (உண்ணும்போது கலக்கிக் கொள்ளலாம்! 

சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சுவையைச் சொல்லவும்! 

(சிறுநீரகக் கல், சர்க்கரை நோயாளிகள் கவனிக்க) 

http://www.drumsoftruth.com/2013/08/63.html

தேவையானவை:தேங்காய், தனியா, சீரகம், பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை,கொத்துமல்லி, பூண்டு , சின்ன வெங்காயம், உப்பு.

அத்துடன் நறுக்கி வேகவைக்கப்பட்ட முள்ளங்கி, தேவையான அளவு சாதம்.

சமைக்காமல் செய்வதால் பூண்டும் சின்ன வெங்காயமும் மிகவும் குறைவாகத்தான் சேர்க்கவேண்டும்.

முதலில் சொல்லப்பட்டவற்றில் தக்காளியில் பாதியையும் கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் தவிர மற்றதை நன்றாக ஆட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதனுடன் வெந்த முள்ளங்கியையும் சாதத்தையும் சேர்த்துக் கலக்க வேண்டும்.

அத்துடன் மீதித் தக்காளியையும் கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் நறுக்கி மேலே தூவி விடவும். (உண்ணும்போது கலக்கிக் கொள்ளலாம்!

சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சுவையைச் சொல்லவும்!

Thanks to drumsoftruth