100% புரோட்டின் டயட்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:22 | Best Blogger Tips
100% புரோட்டின் டயட்

உடம்பு பெருத்து,எடை கூடி இருப்பது இன்றைய பெரும்பாலான நண்பர்களின் பிரச்சினை.பல நோய்களுக்கு அதுவே மூல காரணம் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகிறது.

உடலின் எடை குறைய, ஊளைச் சதை குறைய பலவிதப் உணவுப் பழக்கங்கள் சொல்லப் படுகின்றன.
அதில் '100% புரோட்டின் டயட்' என்பது அறிவியல் சார்ந்த மிகச் சிறந்த வழியாகச் சொல்லப் படுகிறது.

கொழுப்புச் சத்தை அறவே நீக்க வேண்டும் என்பது எந்த டயட்டாக இருந்தாலும் பொதுவான நிபந்தனை.

அதனால் எந்த வடிவத்திலும் எண்ணைக்கு அனுமதி இல்லை.
அதனுடன்,கார்போ ஹைட்ரேட்டுகளைக் குறைத்துப் புரோட்டின்களை நூறு சதவீதம் சாப்பிட்டால் உடம்பு மளமளவென்று குறையும்,ஆரோக்கியமும் கூடும் என்பது நவீனக் கண்டுபிடிப்பு.

அரிசி,கோதுமை போன்ற தானிய வகைகளில் எல்லாம் கார்போஹைட்ரேட்டுகளே அதிகம் இருப்பதால் அவற்றை அறவே தவிர்த்து விடவேண்டும்.எனவே பிஸ்கட்,ரொட்டி,சப்பாத்தி,சாதம் இவை அனைத்தும் தவிர்க்கப் பட வேண்டியவை.

அதற்குப் பதிலாக புரோட்டின்கள் நிறைந்த பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
முக்கியமாகப் பச்சைப் பயறு.
அதனை அரைத்துத் தோசையாக,அவித்துச் சுண்டலாக, எந்த வடிவத்திலாவது சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இரண்டு மணி நேரம் பச்சைப் பயறை ஊற வைத்துப் பிறகு இஞ்சி,பச்சை மிளகாயுடன் அரைத்துத் தோசை வார்த்தால் ஆம்லெட்டைப் போல அவ்வளவு சுவையாக இருக்கிறது.

கொண்டைக் கடலை,கொள்ளுப் பருப்பு.ஓட்ஸ்,கடலைப் பருப்பு இப்படி எந்தப் பருப்பாக இருந்தாலும் அது ஓ.கே.
எண்ணை அறவே கிடையாது.

பச்சைக் காய்கறிகள்,அவித்த காய்கள் எல்லையில்லாமல்.
வாழைப் பழங்கள் தவிர ஆப்பிள்,திராட்சை என்ற எந்தப் பழமும் ஓ.கே.

புலால் உண்ணும் நண்பர்கள் கோழியும்,மீனும் தாராளமாக உண்ணலாம்,பொரிக்காமல்,வறுக்காமல்.எண்ணை சேர்க்காமல் எப்படி வேண்டுமானாலும்.

காலையில் வெறும் வயிற்றில் அரை அல்லது முக்கால் லிட்டர் தண்ணீர்.அதற்குப் பிறகு அரை மணி நேரம் எதுவும் அருந்தக்கூடாதுடீ காலை, மாலை இரண்டு வேளை ஓ.கே.

கண்டிப்பாக ஒரு மணி நேரம் வேக நடை.வெறும் வயிற்றில் நடப்பதே கலோரிகளைச் சீக்கிரம் எரிக்கிறது என்கிறார்கள்.
கார்போ ஹைட்ரேட்டுகளே சதையின் பெருக்கத்துக்குக் காரணம் என்பதாலும் புரோட்டின்கள் தசை நார்களையே வளர்க்கின்றன என்பதாலும் இந்த '100% புரோட்டின் டயட்' மிக விரைவான பலன்களைத் தருகிறது என்கிறார்கள் வெற்றி கண்டவர்கள்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு