பெண்களுக்கு பேறுகால வலி !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:15 PM | Best Blogger Tips
பெண்களுக்கு பேறுகால வலி : 

முருங்கை இலை ஒரு பிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறு கால வலி குறையும். 
தாது விருத்தியாக : 

பலாக் கொட்டையை அவித்து பின் காயவைத்து நன்றாக காய்ந்தவுடன் பவுடராக்கி அந்த பவுடரை கருப்பட்டியுடன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட தாது விருத்தி ஆகும். 
நீர்த்தாரையில் எரிச்சல் குணமாக : 

அகத்தி வேரையும், அருகம்புல் வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர ஆண்குறியில் எரிச்சல் குணமாகும். 
செருப்புகடி குணமாக : 

தென்னை ஓலையை தனாலில் போட்டு கருக்கி பட்டு போல் தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழம்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும். 
தலைவலி குணமாக : 

அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும். 
நரைபோக்க : 

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை மாறிவிடும்.

சீதபேதி குணமாக :

முருங்கை கீரை கைபிடி அளவு, சோற்று உப்பு சிறிதளவு சேர்த்து வறுக்க வேண்டும். இலை சாம்பலாக மாறியதும் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்த இந்த சாம்பல் தேக்கரண்டி அளவு வெந்நீரில் 21 வேளை குடிக்க குணமாகும்.

விந்து கெட்டிபட :

ஆலமரத்தின் இளம் கொழுந்து மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, விந்து கெட்டிபடும்.

முடி வளர்வதற்கு :

கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும் தலைமுடி அடர்த்தியும், கருப்பாகவும் ஆகும்.

கருப்பு முடியாக மாற்ற :

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.முருங்கை இலை ஒரு பிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறு கால வலி குறையும்.
தாது விருத்தியாக :

பலாக் கொட்டையை அவித்து பின் காயவைத்து நன்றாக காய்ந்தவுடன் பவுடராக்கி அந்த பவுடரை கருப்பட்டியுடன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட தாது விருத்தி ஆகும்.
நீர்த்தாரையில் எரிச்சல் குணமாக :

அகத்தி வேரையும், அருகம்புல் வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர ஆண்குறியில் எரிச்சல் குணமாகும்.
செருப்புகடி குணமாக :

தென்னை ஓலையை தனாலில் போட்டு கருக்கி பட்டு போல் தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழம்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.
தலைவலி குணமாக :

அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.
நரைபோக்க :

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை மாறிவிடும்.

சீதபேதி குணமாக :

முருங்கை கீரை கைபிடி அளவு, சோற்று உப்பு சிறிதளவு சேர்த்து வறுக்க வேண்டும். இலை சாம்பலாக மாறியதும் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்த இந்த சாம்பல் தேக்கரண்டி அளவு வெந்நீரில் 21 வேளை குடிக்க குணமாகும்.

விந்து கெட்டிபட :

ஆலமரத்தின் இளம் கொழுந்து மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, விந்து கெட்டிபடும்.

முடி வளர்வதற்கு :

கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும் தலைமுடி அடர்த்தியும், கருப்பாகவும் ஆகும்.

கருப்பு முடியாக மாற்ற :

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.
Via FB பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.
 
செல்லப் பெயர் தெரியும், முழுப்பெயர் தெரியுமா உங்களுக்கு. தெரிந்து கொள்ளுங்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 4:12 PM | Best Blogger Tips

செல்லப் பெயர் தெரியும், முழுப்பெயர் தெரியுமா உங்களுக்கு.  தெரிந்து கொள்ளுங்கள்.

கொள்ளு - உளுந்து வடை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:28 PM | Best Blogger Tips

கொள்ளு - உளுந்து வடை

தேவையானவை: 
உளுந்து, கொள்ளு - தலா ஒரு கப், 
பச்சைமிளகாய் - 2, 
மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

உளுந்து மற்றும் கொள்ளை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் பச்சைமிளகாய், மிளகு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

கொள்ளு - உளுந்து வடை: 
சிறிது இஞ்சி (அ) சீரகம் சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tips

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....

செட்டிநாடு வெள்ளரிக்காய் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:15 PM | Best Blogger Tips
Photo: செட்டிநாடு வெள்ளரிக்காய் சூப்

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய்	 -	1 கப்
பெரிய வெங்காயம்	 -	1
கார்ன் ப்ளார்	 -	1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர்	 -	300 மி.லி.
கிரீம்	 -	2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்	 -	தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கவும், பிறகு துருவிய வெள்ளரிக்காயையும் 2 நிமிடம் வதக்கவும். பின்பு கார்ன் ப்ளாரையும் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். அதன் பின்பு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், கிரீமைச் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.

மற்றொரு முறை:

வெள்ளரிக்காய் சூப்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1
துருவிய வெள்ளரிக்காய் - 1
மைதா மாவு - 1 மேஜைக் கரண்டி
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மில்லி
பாலேடு அல்லது கிரீம் - 2 மேசைக் கரண்டி
வெண்ணெய் - 25 கிராம்
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

வெங்காயத்தை நறுக்கி 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை அதில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

பேரிச்சம்பழத்தில் சூப்பர் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:15 PM | Best Blogger Tips
Photo: பேரிச்சம்பழத்தில் சூப்பர் சூப்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழம். இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

இரும்புசத்து அதிகம் உள்ள பேரிச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பேரிச்சம் பழ சூப் செய்ய தேவையான பொருள்கள்:

பேரிச்சம் பழம் – 5
வெள்ளரிக்காய் – 1
கேரட் – 2
தேங்காய் – 2 கீற்று
புதினா இலை – 5
மிளகு – 2
பச்சை மிளகாய் -1
மல்லி இலை – சிறிது

செய்முறை:
பேரிச்சம் பழம், வெள்ளரிக்காய், கேரட், தேங்காய் ஆகியவற்றை நன்றாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகு, பச்சை மிளகாய், புதினா இலை ஆகியவை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இந்த கலவை அரைந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வடிகட்டவும். பின்னர் விழுதுடன் மேலும் தண்ணீர் விட்டு இரண்டாவது சாறு எடுத்துகொள்ளலாம்.

பிழிந்த சாறை கொதிக்க விடவும்.கடைசியில் அரைத்து வடித்து எடுத்த விழுதை அதில் சேர்த்து கலக்கலாம். பின்னர் மல்லி இலை, உடன் இரண்டு முழு பேரிச்சை தூவி இறக்கவும்.

வெஜிடபிள் மோமொஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:13 PM | Best Blogger Tips
Photo: வெஜிடபிள் மோமொஸ் 

இந்தியாவில் இட்லி தோசைக்கு நிகராக பிரபலமாக உள்ள ஒரு திபெத்திய உணவு. இன்று எல்லா உணவகங்களிலும் கிடைக்கின்றது. மைடவுக்கிஉ பதிலாக கோதுமை மாவு அல்லது அரிசி மாவிலும் தயாரிக்கலாம். மைதாவில் மிகவும் மென்மையாக இருக்கும். இது நம்ம ஊர் பில்லிங் கொழுக்கட்டை போன்றது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். 

வெஜிடபிள் மோமொஸ் 

Veg Momos with Red Hot Chutney

 Spicy and tangy vegetable dumplings served with fiery hot paprika chutney a traditional Tibetan delicacy.

Ingredients

Dough

Salt ¼ tsp
Maida 1cup
Oil 1tbsp

Filling

Salt – 1 tsp
Pepper powder – ½ tsp
Onion – 1 (chopped)
Mushrooms – 6 (chopped)
Green chilies – 2(chopped)
Ginger garlic (paste) – 1 tsp
Carrot – 1 large (chopped)
Cabbage – 2 ½ cups (chopped)
Vinegar
Soya sauce ½ tsp

METHOD

Sieve maida with salt.
Combine oil and knead the maida flour with water to make firm dough.

Heat oil in a pan add onions and mushroom

Sauté them two minutes till golden brown.

Combine ginger garlic paste, cabbage, carrot and green chilli.

Sauté the mixture for two minutes.Add pepper, soya sauce, salt and vinegar

Switch off the flame.

Make small sized balls out of the dough.

Roll them into circular shaped puris.

Place 1 tbsp of filling in the center of the puri.

Make loose folds like frills from the side.

Close the frills from all the sides

Combine each fold and frill in the center.

Give the momos a flattened shape.

Place each momo on a greased idli stand.

Lay the idli stand on a vessel filled a cup of water.
Steam the momos for twenty minutes over low flame.
Serve with red hot chutney.

Red Hot Chutney

Ingredients

Tomato 1 (large)
Garlic flakes  5
Red paprika 2 (large)
Salt
Red chilli powder 1 tbsp
Water (optional)

METHOD

Cut tomatoes and red paprika into half
Add galic cloves, salt and red chilli powder.

Add a liitle water if the consistency is too thick.
Blend all the ingredients.
Empty the chutney in a bowl.
Serve with momos.

வரையாடு!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:40 PM | Best Blogger Tips
வரையாடு!

தமிழ்நாட்டின் மாநில விலங்கு "வரையாடு"

வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது.தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை. 

வரையாட்டின் தற்பொழுது மொத்த உயிர்த்தொகை 2000 முதல் 2500 வரையில், மொத்தம் 17 இடங்களில் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்டக் உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதன் மொத்த உயிர்த்தொகையில் சுமார் 1000 எண்ணிக்கையிலானவை கேரளாவின் இரவிகுளம் தேசிய பூங்காவிலும், சுமார் 300 எண்ணிக்கையிலானவை ஆனைமலைப் பகுதிகளிலும் மற்றும் ஏனையவை இன்னபிற இடங்களிலும் காணப்படுகிறது

இவ்விலங்கின் வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் சாகுபடி செய்யப்படுவதால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர காடுகளில் கால்நடை மேய்த்தல், மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் வரையடுகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன. பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும் வரையாடிகளின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தலாகும்.

காணப்படும் இடங்கள்:

இரவிக்குளம் தேசிய பூங்கா (கேரளா)
ஆனைமலை (தமிழ் நாடு)
தேனி - மேகமலை (தமிழ் நாடு)
முக்கூர்த்தி மலைகள் (தமிழ் நாடு)
நீலகிரி மலைகள் (தமிழ் நாடு)
அகத்திய மலைகள் (கேரளா)
ஹை கில்ஸ், மூணார் (கேரளா)
வால்பாறை (தமிழ் நாடு)
ஆழியார் மலைகள் (தமிழ் நாடு)
சிறீவல்லிப்புத்தூர் (தமிழ் நாடு)

வரையாடு = வரை + ஆடு. வரை என்பது மலை, மலையுச்சி, குன்று, குவடு ஆகியப் பொருள்களை உணர்த்துகின்றன. ஆடு என்பது விலங்கினங்களில் ஒன்றான ஆட்டின் இனத்தைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.

ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்' என்று சீவகசிந்தாமணியில் வரும் அடி இதன் பெயர் முற்காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கியதையும், இதன் மலைச்சிகர வாழ்க்கையையும் விளக்குகிறது.

மதுரைக் கண்டராதித்தனின் பாடலில் வரையாடு நெல்லிக்காய் உண்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

புரி மட மரையான் கருநரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

மணக்கால் அய்யம்பேட்டை | 1:38 PM | Best Blogger Tips

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
 
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
 
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
 
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
 
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
 
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
 
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
 
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
 
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
 
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
 
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
 
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

ஹெல்தி வெஜிடபில் கொழுக்கட்டை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:38 PM | Best Blogger Tips

உருளைக் கிழங்கில் அதிக அளவில் ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறு உள்ளது. இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து நெஞ்செரிச்சலை குறைய காரணமாகிறது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:

1.அரிசி மாவு அல்லது
மைதா - 2 கப்
(கோதுமை மாவும் அரிசி அல்லது மைதா மாவிற்கு பதிலாக உபயோகிக்கலாம்)
2.வெண்ணெய் - 1/4 கப்
3.உருளைக்கிழங்கு- 2
4.கேரட் - 1
5.பீன்ஸ் - 10
6.முட்டைக்கோஸ் - சிறியது
7.காலிஃபிளவர் - சிறியது
8.பட்டாணி - 1/2 கப்
9.பொடித்த பச்சை மிளகாய் - 2
10.வெள்ளைப் பூண்டு - 2 பல்
11.பொடியாக நறுக்கிய இஞ்சி -சிறிதளவு
12.பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
13.வெங்காயத்தாள் - சிறிதளவு
14.சில்லி சாஸ் - சிறிதளவு
15.சோயா பீன்ஸ் சாஸ் - சிறிதளவு
16.உப்பு - தேவையான அளவு
17.எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு அல்லது மைதா மாவு, வெண்ணெய் கலந்து அதனுடன் சிறிதளவு சூடான தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உருளைக் கிழங்கு, கேரட், முட்டைக் கோஸ், காலிஃபிளவர், பட்டாணி ஆகியவற்றை தண்ணீர் விடாமல் ஆவியில் வேகவைத்துக் கொள்ளவேண்டும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், வெள்ளைப் பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்து, பிறகு காய்கறிக் கலவையை சேர்த்து, அதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவேண்டும்.
Page 2 of 2பிசைந்து வைத்துள்ள மாவை சிறிதாக எடுத்து வட்ட வடிவில் உருட்டி அதன் நடுவில் ஒரு ஸ்பூன் காய்கறி கலவையை வைத்து மடித்து தண்ணீரை தொட்டு ஓரங்களை ஒட்டி இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவேண்டும். வெந்தவுடன் இறக்கி சூடாக பரிமாற வேண்டும்.

சிறப்பு:

1.உருளைக் கிழங்கில் அதிக அளவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறு உள்ளது. இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து நெஞ்செரிச்சலை குறைய காரணமாகிறது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.

2.கேரட்டில் விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளது. கண் பார்வைக்கு நல்லது. உடல் பருமன் ஆகாமல் காக்கும்.

3.பீன்ஸில் புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள் ஆகிய சத்துக்கள் உள்ளது. பித்தத்தை தணிக்கும், பார்வையை தெளிவாக்கும், சருமப் பளபளப்பாகவும், வாயுவை குறையச் செய்யும்.

4.முட்டைக் கோஸில் சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ ஆகிய சத்துக்கள் உள்ளது. ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். மலச்சிக்கலை போக்கும். தாது பலப்படும்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு

ஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:35 PM | Best Blogger Tips

Photo: ஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்..!

வலியிருக்குமிடத்தில் ஆறுதலாக யாராவது தடவிக் கொடுத்தால் அது இதமாகவும் வலியைக் குறைப்பதாகவும் தெரிவது பொய்யல்ல, அது நிஜம் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதமாக வருடும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கென்றே நரம்புகள் தனியாக இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். இந் நரம்புகள் வலியிருக்குமிடத்திலிருந்து வலி உணர்வை கொண்டு செல்லும் நரம்புகளால் தடை செய்யப்படுவதில்லை, மாறாக இந்த தொடுஉணர்வு நரம்புகள் வலி நரம்புகளை தடை செய்கின்றன.

அன்பு, பரிவுடன் இதமாகத் தொட்டு தடவிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் வலி பறந்துவிடும். இதைவிட மலிவான மருந்து என்ன இருக்கிறது.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.

மணக்கால் அய்யம்பேட்டை | 1:30 PM | Best Blogger Tips

** மகத்தான மாமனிதர்கள் **
** மகாகவி பாரதியார் **

எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.
மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.
நான் படித்தவளல்ல.
ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.

சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கே ட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார்.

அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம்.
அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார்.

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை.

அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது.

ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன்.

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம்.

மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார்.

அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும்.

அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார். —

****
நன்றி : வேர்களை தேடி

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:22 PM | Best Blogger Tips

உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். உண்மைதான், ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம், அதில் உப்பு சேர்த்திருப்பதாலேயே தான். 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்று சொன்னால், உடனே உப்பு இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட முடியாது என்று நினைக்க வேண்டாம். உப்பு அதிகம் சேர்த்தால், நம் உடலைத் தான் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் அதை அதிகம் உணவில் சேர்த்தால், உடலில் பலவகையான நோய்கள் தான் வரும். அதுவும் ஹைப்பர் தைராய்டிசம் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை அனைத்தும் உருவாவதற்கு உப்பே காரணம் ஆகும். இதற்கு காரணம் உப்பில் சோடியம் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சோடியம் உப்பில் மட்டுமில்லை, அன்றாட சமையலில் பயன்படுத்தும் சில மூலிகைப் பொருட்களிலும் உள்ளது.

மேலும் உணவுகளில் போதிய அளவு சோடியம் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய சோடியத்தை உப்பிலிருந்து மட்டும் தான் பெற வேண்டுமென்பதில்லை, உணவுகளில் சுவைக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் ஒருசில மூலிகைகளிலும் சோடியம் உள்ளது. இந்த மூலிகைப் பொருட்கள் சுவை மற்றும் மணம் கொடுப்பதோடு, மருத்துவ குணங்களும் வாய்ந்தது. இதனால் உடலில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். இப்போது அத்தகைய உப்பிற்கு பதிலாக உணவிற்கு சுவையை தரும் ஆரோக்கியமான மூலிகைப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய மூலிகைப் பொருட்களால், உணவானது சுவையுடன் இருப்பதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே குறைந்த அளவுள்ள சோடியம் இருக்கும் மூலிகைப் பொருட்களை உணவுகளில் பயன்படுத்தி, ஆரோக்கியத்தையும், சுவையையும் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த மூலிகைப் பொருட்களைப் பார்ப்போமா!!!

பட்டை:

மசாலாப் பொருட்களில் ஒன்றாக பயன்படும் பட்டை, இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆசியாவின் பல இடங்களில் சமைக்கப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுக்கு சுவை கிடைப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கச் செய்யும்.

ஏலக்காய்:

நிறைய மக்கள் ஏலக்காயை வைத்து டீ போட்டு குடிப்பார்கள். அதிலும் ஏலக்காய் போட்டு சமைத்தால், உணவானது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, வித்தியாசமான சுவையும் கிடைக்கும். குறிப்பாக இதனை சீரகம் மற்றும் மல்லியுடன் சேர்த்து சமையலில் சேர்க்கும் போது, இதன் சுவை மற்றும் மணத்திற்கு அளவே இல்லை.

பேசில்:

இந்தியாவில் சமைக்கும் போது பயன்படுத்தும் மூலிகைகளில் பேசில் இலையும் ஒன்று. இந்த இலை சற்று காரமான சுவையும் மற்றும் லேசான இனிப்பு சுவையையும் உடையது. இது வெறும் மருத்துவப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுவதோடு, உப்புக்கு பதிலாக உணவுகளில் சிறந்த சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.

சிவப்பு மிளகாய்:

சிவப்பு மிளகாய் வெறும் காரத்திற்காக மட்டும் பயன்படுவதில்லை. இது உணவில் காரத்துடன், ஒரு நல்ல சுவை தரும் பொருளாகவும் பயன்படுகிறது

பிரியாணி இலை:

பொதுவாக பிரியாணி இலை பிரியாணிகளில் மட்டும் தான் சுவைக்காக பயன்படுத்துவோம். ஆனால் அத்தகைய பிரியாணி இலை சற்று இனிப்பு சுவையுடன், மிகுந்த மணமுடன் இருக்கும். எனவே தான், இதனை உணவுகளில் சேர்த்தால், உணவின் சுவை சூப்பராக உள்ளது.

பூண்டு பொடி:

உணவில் பூண்டை சுவைக்கு மட்டும் பயன்படுத்துவதோடு, அதிலுள்ள மருத்துவ குணம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்பதால் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

மிளகு தூள்:

மிளகு தூளுக்கும் உப்புக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி உப்பை உணவில் சேர்க்கிறோமோ, அதேப் போல் தான் மிளகு தூளையும் சேர்க்கிறோம். உப்பில்லாமல், வெறும் மிளகுத் தூளை மட்டும் சேர்த்தாலும், உணவில் சூப்பரான சுவையைப் பெறலாம்.

சோயா சாஸ்:

சோயா சாஸை கூட உப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் சரியான அளவில் உப்ப இருப்பதால், அதை சமைக்கும் போது பயன்படுத்த நல்ல சுவை கிடைக்கிறது. அதுமட்மின்றி, சோயா சாஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சத்துக்கள் உள்ளன.

வெங்காயப் பொடி:

காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் மிகவும் காரமான சுவையுடையது. எனவே இதனை உணவில் சரியான அளவில் சேர்த்தால், சரியான ருசியைப் பெறலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றிலும் சூப்பரான சுவை உள்ளது. அதிலும் நல்ல ஃப்ரஷ்ஷான எலுமிச்சை பழத்தை நறுக்கிப் பயன்படுத்துவது சிறந்த ருசியைத் தரும். அதுவே காய்ந்த எலுமிச்சையை பயன்படுத்தினால், பின் உணவில் சுவையே மாறிவிடும்.

சூரியகாந்தி விதை:

சூரியகாந்தி விதைகளில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் உப்பிற்கு பதிலாக சேர்க்கக்கூடிய சிறந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

இரும்பு மனிதர் வல்லபாய் படேல் ...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:20 PM | Best Blogger Tips

ஆங்கிலேயர்கள், இந்தியாவிற்கு ”சுதந்திரம் கொடுத்த சமயத்தில், இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. சிற்றரசர்கள் அவற்றை ஆண்டு வந்தனர். "இந்த சமஸ்தானங்களில் உள்ள மன்னர்களும், அங்குள்ள மக்களும் என்ன முடிவு எடுக்கின்றனரோ, அதன் பின், தொடர்ந்து தனி நாடாகவோ, விடுதலை பெற்ற இந்தியா அல்லது பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம். அது அவர்களின் உரிமை; அதில் நாங்கள் தலையிட முடியாது...' என்று ஆங்கிலேயர்கள் கைவிரித்து விட்டனர்.

தானே விரும்பி, இந்தியாவுடன் சேர்ந்த முதல் சமஸ்தானம், தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை சமஸ்தானம். மற்ற, எல்லா இந்திய சமஸ்தான ராஜாக்களும், தங்கள் மன்னர் பதவியையும், சுகபோகம், அதிகாரம், சொத்துக்களை இழக்கத் தயாராக இல்லை. அதனால், உள்துறை அமைச்சராயிருந்த வல்லபாய் படேல், மேற்படி மன்னர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் எழுதினார். "இந்தியாவுடன், அவர்கள் தாமாக இணைந்தால், அவர்களுக்கு தரப்படும் மானியம் மற்றும் சலுகைகளை பெறலாம். அரசாங்கமாக நடவடிக்கை எடுத்து பிடுங்கிக் கொண்டால், அந்தச் சலுகைகள் கிடைக்காது...' என்று குறிப்பிட்டார். சமஸ்தானங்கள் உடனே வந்து சேர்ந்து கொண்டன.

திருவிதாங்கூர், மைசூர், ஐதராபாத், காஷ்மீர், சுனாகத் ஆகிய ஐந்து மாநிலங்களும் பரப்பளவில் பெரிதாக, மக்கள் தொகையில் கணிசமான அளவில் இருந்தன. ஆகவே, திருவிதாங்கூர் ராஜா, மைசூர் மகாராஜா, ஐதராபாத் நவாப், காஷ்மீர் பேரரசர், சுனாகத் நவாப் ஆகிய ஐவரும், இந்தியாவுடன் தங்கள் சமஸ்தானங்களை இணைக்க மறுத்தனர்.

உடனே, படேல் ராணுவ நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தார். மைசூரும், திருவிதாங்கூரும் இந்தியாவுடன் இணைந்தன. சுனாகத் சமஸ்தான நவாபுக்கு எதிராக, அங்குள்ள மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். அவர், "எனக்கு சமஸ்தானமும் வேண்டாம்; மன்னர் பதவியும் வேண்டாம்...' என்று குடும்பத்துடன், பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார்.

ஐதராபாத் நிஜாமும், காஷ்மீர் அரசர் ஹரிசிங்கும், "எக்காரணத்தைக் கொண்டும், மன்னராட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம்...' என்பதில் உறுதியாக இருந்தனர். இதே சமயத்தில், காஷ்மீரை பாகிஸ்தானுடன் சேர்க்க வேண்டும் என்று, பாகிஸ்தான் கோரியது. ஐதராபாத்தில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். மன்னரோ முஸ்லீம் நிஜாம். காஷ்மீரில் பெரும்பான்மை முஸ்லீம்கள். மன்னரோ இந்து - ஹரிசிங். ஆகவே, மக்கள் தொகையை வைத்து, ஐதராபாத், இந்தியாவுடன் இணையுமானால், அதே அடிப்படையில் காஷ்மீர், பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று வற்புறுத்தினர் பாகிஸ்தானியர்.

ராணுவ தளபதி கரியப்பா, படேலுடன் சென்று, பிரதமர் நேருவை சந்தித்தார். "நாம் காஷ்மீர் மீதும், ஐதராபாத் மீதும் ஒரே நேரத்தில் முன்னறிவிப்பின்றி, திடீர் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்றார்.

நேரு அதற்கு சம்மதிக்கவில்லை. காஷ்மீரியான நேருவுக்கு, காஷ்மீர் மன்னர் ஹரிசிங் மீது ஒரு அன்பு. அதனால், "இப்போது காஷ்மீர் மீது படையெடுக்க வேண்டாம். ஹரிசிங்கிடம் பேசி, சமாதானப்படுத்தி, அவரை சேர்த்துக் கொள்வோம். இப்போதைக்கு, ஐதராபாத் மீது மட்டும் ராணுவ நடவடிக்கை எடுங்கள்...' என்று கூறி விட்டார். படேலுக்கும், நேருவுக்கும் ஆகாது. அதனால், படேல் கோபத்துடன் திரும்பி விட்டார்.

கரியப்பா ஐதராபாத் சென்று, நிஜாமுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஐதராபாத் தனி நாடாக இருப்பதில் உள்ள சிரமங்களையும், தொல்லை களையும் விளக்கி, அவரை இந்தியாவுடன் சேரும்படி சொன்னார். நிஜாம் மன்னர் மனம் மாறி இறங்கி வந்தபோது, நிஜாமின் படையிலிருந்த, "ரசாக்கர்கள்' அதை ஏற்கவில்லை. இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடத் தயார் என்றனர்.

அக்., 22, 1947ல் ஐதராபாத் மீது, இந்திய ராணுவம் படையெடுத்தது. அதன் திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாத, "ரசாக்கர்'கள் தலை தெறிக்க ஓடி, ஒளிந்து விட்டனர். நிஜாம் சரணடைந்தார். ஐதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது.

ஐதராபாத்திற்குள் இந்தியப் படைகள் நுழைந்து விட்ட செய்தியறிந்த பாகிஸ்தான், அந்த நிமிடமே தன் படைகளை காஷ்மீருக்கு அனுப்பியது. ராவல்பிண்டிக்கும் காஷ்மீர் எல்லைக்கும் 50 கி.மீ., தொலைவு தான். பாக்., படைகள் அங்கிருந்து, சூறாவளியென காஷ்மீருக்குள் புகுந்தது. புகுந்த 24மணி நேரத்திற்குள், யூஞ்ச் முதல் ஜான்கர் வரை பலுச்சிஸ்தான் முதல் கில்சிட் வரையிலும் கைப்பற்றி விட்டது.

இதன் பின்னரே, காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கிற்கு காஷ்மீர் தனித்து வாழ முடியாது என்ற ஞானோதயம் பிறந்தது. ஹரிசிங், டில்லிக்கு பறந்து வந்து இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். பாகிஸ்தானோ, காஷ்மீரின் எல்லை முடிவடையும் கார்கில் வரை, 500 கி.மீ., தூர எல்லைகளை ஆக்கிரமித்துக் கொண்டது.

கரியப்பா சொன்னது போல், ஒரே நேரத்தில் ஐதராபாத், காஷ்மீர் ஆகிய இரு பகுதிகளையும் தாக்கி இருந்தால், காஷ்மீர் எல்லைப்பகுதி பறி போயிருக்காது. நேருவின் பிடிவாதத்தால், தும்பை விட்டு வாலைப் பிடித்திருக்கமாட்டோம்.

— மகுடபதி எழுதிய, "பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா' நூலிலிருந்து...

டோபோர்ச்சி மரம்-Toborochi Tree.

மணக்கால் அய்யம்பேட்டை | 1:15 PM | Best Blogger Tips

டோபோர்ச்சி மரம்-Toborochi Tree.

இந்த மரத்தை பத்தி நேற்று தான் கேள்விபட்டேன்,இதை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்த எனக்கு இந்த மரத்தை பற்றிய நாடோடி கதை தெரிய வந்தது...கண்டிப்பா நீங்க இந்த கதையை பற்றி கேள்வி பட்டு இருக்க மாட்டீங்க...படித்து பாருங்கள் இந்த மரத்தின் கதையை...

அந்த காலத்துல துஷ்ட சக்திகள் மனித குலத்தை அழித்து கொண்டு இருந்தது.cacique Ururuti என்பவள்  Colibri (hummingbird) என்ற கடவுளை திருமணம் செய்து கொண்டாளாம்,அவளுக்கு பிறக்கும் குழந்தை தான் அந்த துஷ்ட சக்திகளை அழிக்கும்னு கடவுள் சொன்னாராம்.

இதை கேள்விப்பட்ட துஷ்ட சக்திகள் அவளை கொல்வதற்கு விரட்டினார்களாம்.அவள் எங்கு ஒளிந்தாலும் துஷ்ட சக்திகள் தேடி கண்டுபிடித்து  வந்து விடுகிறதாம்.

பிறகு டோபோர்ச்சி மரத்தின் உள் ஒளிந்து கொண்டாளாம்.அங்கு எந்த தொந்தரவும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்தாளாம்.

அந்த குழந்தை பெரியவனாகி துஷ்ட சக்திகளை கொன்றானாம் .அவன் தாய் அந்த மரத்தின் உள்ளே கடைசி வரை இருந்து உயிரைவிட்டாளாம்.

அவள் இறந்து அந்த மரத்தில் பூவாக  தன் கணவருக்காக பிறக்கிறாளாம்,அதனாலேயே Colibri (hummingbird) அந்த பூவால் கவரப்பட்டு தினமும் அந்த பூவை நோக்கி  வந்து விடுகிறதாம்.

அந்த மரமே பார்க்க வித்தியாசமாகத் தான் இருக்கிறது.

Ilayaraja Dentist.

Via FB Ilayaraja Dentist.

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:11 PM | Best Blogger Tips
Thank you  @[100002378131698:2048:Sumi Suma]

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...
 
நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு , கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..

அந்த கலர்களின் அர்த்தம் ,

பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .

இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..

( உடனே குடு குடுன்னு ஓடி போய் , டூத் பேஸ்ட் எடுத்து " color bar " இருக்கானு செக் பண்ணுவிங்களே ..!!! ஹி ஹி ஹீ ... =D

நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு , கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..

அந்த கலர்களின் அர்த்தம் ,

பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .

இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..

( உடனே குடு குடுன்னு ஓடி போய் , டூத் பேஸ்ட் எடுத்து " color bar " இருக்கானு செக் பண்ணுவிங்களே ..!!! ஹி ஹி ஹீ ... 
 
Thank you Sumi Suma

உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல் !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:09 PM | Best Blogger Tips
உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:-

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்:

பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தேநீர்:

உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.

அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்:

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.

இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்:

பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்:

நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

செர்ரிபழம்: 

மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்:

பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தேநீர்:

உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.

அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்:

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.

இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்:

பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்:

நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

செர்ரிபழம்:

மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 
உங்கள் பழைய போன்களை வீசிவிடாதீர்கள் – வெப்கமெராவாக பயன்படுத்த முடியும்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:53 PM | Best Blogger Tips
உங்கள் பழைய போன்களை வீசிவிடாதீர்கள் – வெப்கமெராவாக பயன்படுத்த முடியும்!

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் Koozoo எனப்படும் நிறுவனமானது பழைய ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் கமெராக்களை வெப் கமெராக்களாக மாற்றியமைக்கும் அப்பிளிக்கேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இணையத்தளம் மூலம் செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை Koozoo வலைத்தளத்தின் பயனாளர்கள் தற்போது முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளதுடன் காலப்போக்கில் இச்சேவைக்கு கட்டணம் அறிவிடப்படலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :
tamilspace

மருத்துவத்திலும் நஷ்டஈடு பெறலாம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:47 PM | Best Blogger Tips
மருத்துவத்திலும் நஷ்டஈடு பெறலாம்!
-----------------------------------------------------
"மருத்துவ சிகிச்சை கவன குறைபாட்டை எதிர்த்து, நஷ்டஈடு பெறும் நடைமுறைகளை கூறும், நீதிபதி ரத்னவேலு: 

நான், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றுகிறேன். மருத்துவரின் சிகிச்சை பயனளிக்கவில்லை என்பதால், அவர் மீது வழக்கு தொடர்வது சாத்தியமில்லை. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால், எந்த மருத்துவரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாது.

ஆனால், "மெடிக்கல் நெக்லிஜன்ஸ்' என்றழைக்கப்படும், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு இருந்தால், வழக்கு தொடரலாம். பிளட் மற்றும் யூரின் டெஸ்ட், ஸ்கேன், இ.சி.ஜி., என, பல பரிசோதனைகள் செய்து, அதன் அடிப்படையில் தான், நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

மேலும், இந்த மருத்துவர் மூலம், இந்த ஆபரேஷன் செய்ய போகிறோம். ஆபரேஷன் செய்தால் என்ன பயன், செய்ய தவறினால் என்ன தீங்கு ஏற்படும், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எத்தனை சதவீதம் என, ஒரு ரிப்போர்ட்டாக நோயாளி அல்லது உரியவரிடம், தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மருத்துவ விதி.
இதை பின்பற்றாமல் செய்யப்படும் எல்லா சிகிச்சைகளுமே, "மருத்துவ சிகிச்சை கவனக் குறைபாடு' என்ற வரையறைக்குள் வரும். ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கினால் தான், நீங்கள் நுகர்வோர். அதனால், இலவச சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்கள், நுகர்வோர் நீதிமன்றத்தை நாடாமல், தகுந்த ஆதாரங்களோடு, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பயன் பெறலாம்.
நுகர்வோர் நீதிமன்றத்தில், 45 நாட்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், பணம் கொடுத்து சிகிச்சை பெற்ற நுகர்வோர்க்கு, விரைவிலேயே நீதி கிடைத்துவிடும்.

ஒரு தனியார் மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணிற்கு, மீண்டும் குழந்தை பிறந்தது என்றால், அது மருத்துவ சிகிச்சை கவனக் குறைபாடு. பாதிக்கப்பட்ட பெண்ணிடம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான, "ரிப்போர்ட்' இருந்தாலே, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நஷ்டஈடு பெற முடியும்."

Via FB விஜய பாரதம்
 
அறுவகைச் சுவை என்ன என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:45 PM | Best Blogger Tips
நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 
பையிலே வளர்க்கலாம் பலவித செடிகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips
பையிலே வளர்க்கலாம் பலவித செடிகள்! 

ஒருவர் நின்று சமைக்கும் போது இன்னொருவர் வர இடம் இல்லாத சமையலறைகள் இருக்கும் இந்தக் காலத்தில் கிச்சனுக்குள் கார்டனா? ஏற்கனவே  ஒளி குறைந்த இடத்தில் என்ன வளர்ப்பது?  இரண்டுக்கு நான்கு அடி அளவுள்ள பால்கனியில் மண்தொட்டி வைத்து அதன் ஈரம் கீழ் போர்சனில்  இறங்கி பிரச்னை வருமே? இப்படியெல்லாம் திகைக்க வேண்டாம்!

உங்கள் அத்தனை பிரச்னைகளுக்கும் நிறைய மாற்று முறைகள் உள்ளன. கிச்சன், மொட்டை மாடி, பால்கனி, இரும்பு ஸ்டாண்ட், படிக்கட்டு என்று  எங்கு வேண்டுமானாலும் வைக்கும் ‘யுவி ட்ரீட்டட் பிளாஸ்டிக்  பேக்’ கிடைக்கிறது. செடிகள் வளர்ப்பதற்காகவே தயாரிக்கப்படும் இந்தப் பைகள் புற  ஊதா கதிர்களைத் தாங்கி, வெயிலிலும் மழையிலும் ஆண்டுக்கணக்கில் உழைக்கும். பார்வைக்கு அழகாக பல வண்ணங்களிலும் கிடைக்கிறது.

உடையாது... கிழியாது. வளர்க்கும் தாவரங்களுக்கேற்ப நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை நாமே முடிவு செய்யும் வசதி இதில் உண்டு. இவ்வகை  பைகள் உபயோகிப்பதால் களை என்பதே மிக அரிது. நீரின் தேவையையும் மட்டுப்படுத்தி மிக அதிக அளவில் சிக்கனப்படுத்தலாம்.

1. மொட்டை மாடி சுவரின் மேல் வைக்கும் பைகள்...
இதில் கொத்தமல்லி முதல் ரோஜா வரை வளர்க்கலாம்.
2. நீளமான 2 இன் 1 பைகள்...
கீழ் அடுக்குகளில் மண்புழு உரமும் மேலே கீரையும் விதைக்கலாம்.
3. மரமும் வளர்க்க உதவும் பெரிய பைகள்...
மரவகையான முருங்கைகூட வளர்க்கலாம். இடமும் அதிகம் தேவையில்லை. எங்கு
வேண்டுமானலும் நகர்த்தும் வசதியும் உண்டு.
4. பால்கனியில் கீரை வகைகள் வளர்க்க சிறிய பைகள்...
பளிச் கீரையே பால்கனியே அழகாகும் இப்பைகளில் வளர்க்கும்போது!
5. அடுக்கு முறையில் கீரை வளர்க்கும் பெரிய அளவிலான பைகள்...

மண்ணுக்கும் உண்டு மாற்று!

இந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதை விட மண்ணுக்கு மாற்று இட்டு வளர்க்கலாம். அது என்ன மண்ணுக்கு மாற்று? மண்ணைவிட குறைந்த  அளவு தண்ணீர் தேவைப்படுவதும், எடை குறைந்ததும், அதிக அளவு உரம் தேவைப்படாததுமான ‘காயர் பித்’ உள்பட பலவித மண் மாற்றுப்
பொருள்கள் உள்ளன. மேல்நாடுகளில் ஒரே சீரான விவசாயத்துக்கு உதவும் வகையில் இவை அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும் விவரங்கள்  அடுத்த இதழில்...

தண்ணீர் மேலாண்மை பற்றி விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் கோவை பா.வின்சென்ட்...

படத்தில் காட்டிய படி ஒரு பெரிய பக்கெட்டை சிறிது உயரமான இடத்தில் வைத்து ஒரு குழாய் மூலம் எவ்வளவு தேவையோ அந்த அளவு நீளத்தில்  பைப் பொருத்தவும்.

தேவைப்படும் இடங்களில் லி, ஜி வடிவ இணைப்புகளை பொருத்தி ட்ரிப்பர் என்னும் சொட்டுநீர் பாசன இணைப்பை ஒரு துளையிட்டு பொருத்தவும்  (இது கடைகளில் 2 ரூபாய் முதல் கிடைக்கும்). இதனை உபயோகிப்பதால் மிகமிக குறைந்த அளவு தண்ணீரில் நிறைய செடிகள் பயனடையும்.

நிரப்புவதற்கு நிறையவே உண்டு!

இந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதைவிட மரக்குச்சிகள், பழைய கால்மிதிகள், தேங்காய் மட்டைகள், மண்புழு உரம் என்று கலவையாக நிரப்பலாம்.  பழைய கால்மிதிகளை உள்ளிடுவதின் மூலம் ஈரப்பதம் எப்போதும் இருக்கும். கால்மிதிகள் துணியால் ஆனவை என்பதால் அவை மக்கும் உரமாகும்.

Via FB ஆயுதம் செய்வோம்

அல்லிப்பூவின் மருத்துவ குணங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 PM | Best Blogger Tips

நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம்.

கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகும்.இதற்கு அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரிது பூசினால் கட்டி உடைந்து குணமாகும்.

அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப் பூச அக்கி கொப்புளம் தீரும்.

அல்லி இதழ்களை நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக்கி பாலுடன் கலந்து பருகி வர நாவறட்சி,தீராத தாகம்,சிறுநீர் எரிச்சல் குணமாகும்

அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்

அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மில்லி நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்

கண்சிவப்பு,எரிச்சல்,நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரைத்து கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும்

அல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.

அவுரி இலைச் சாறு,மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மில்லி அளவு எடுத்து 500 மில்லி தேங்காய் எண்ணையில் கலந்து ,அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும்,35 கிராம் தான்றிக் காயும் அரைத்து கலந்து காய்ச்சி பதமுடன் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும்.முடி கருத்து தழைத்து வளரும்.அத்துடன் பித்தம் தணியும்.

சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வர இதயம் பலமடையும்.இதய படபடப்பு நீங்கும். இரத்தம் பெருகும்

அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும்.நீரிழிவு நோய் தீரும்.ஆண்மை பெருகும்.

வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராக சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மில்லி அளவு எடுத்து அதை 100 மில்லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உஷ்ணம் தணியும்

ரத்தக் கொதிப்பும்,நீரிழிவு நோயும் கட்டுப்படும்.வெள்ளை நோய் ,மேகவெட்டை குணமாகும்.உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்.
 
Via FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
 
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 PM | Best Blogger Tips
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்;
--------------------------------------------------------
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் உயிர் சக்தியே குண்டலினி ஆகும்.இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். 

ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது  இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினி யும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும்.

நமது உடலில் பிராண சக்தி எழுபதாயிரம் நாடிகளில் பாய்கிறது.இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு சக்கரங்களில் இணைகிறது.இவை ஆற்ரல் மையங்கள் என சொல்லப்படுகின்றது.கீழிருந்து மேலாக மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிப்பூரகம்,அனாகதம்,விசுக்தி,ஆக்ஞை,சஹஸ்ரஹாரம்.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்  தூண்டப்படுவது இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலி னியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும் ஆகும்.யோகாவை முறையான குருவிடம் கற்று நாமும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆற்றலை அனுபவிக்கலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன். மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் உயிர் சக்தியே குண்டலினி ஆகும்.இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம்.

ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினி யும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும்.

நமது உடலில் பிராண சக்தி எழுபதாயிரம் நாடிகளில் பாய்கிறது.இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு சக்கரங்களில் இணைகிறது.இவை ஆற்ரல் மையங்கள் என சொல்லப்படுகின்றது.கீழிருந்து மேலாக மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிப்பூரகம்,அனாகதம்,விசுக்தி,ஆக்ஞை,சஹஸ்ரஹாரம்.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலி னியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும் ஆகும்.யோகாவை முறையான குருவிடம் கற்று நாமும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆற்றலை அனுபவிக்கலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.