கோவையில் ஈஷா யோகாமையம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:54 AM | Best Blogger Tips
கோவையில் ஈஷா யோகாமையம் க்கான பட முடிவு
சார்பில்அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிலை முன்பு மகாசிவராத்திரி விழா என்ற பெயரில் ஜக்கி வாசுதேவின் கமர்ஷியல் சிவராத்திரி படுஜோராக நடைபெற்றது. கோவையில் பிப்ரவரி 13 அன்றுஇரவு மகாசிவராத்திரி என்கிற பெயரில் ஈஷா யோகா மையத்தின் சார்பில்வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் மிகப் பிரம்மாண்டமாக விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்தவர்களும் இந்தவிழாவில் பங்கெடுத்தனர்
கோவையில் ஈஷா யோகாமையம் க்கான பட முடிவு
தமிழக ஆளுநர், துணை முதல்வர் .பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இவ்விழாவில் பங்கெடுத்தனர்.ஈஷா மையத்தின் சார்பில் நிறுவப்பட்ட ஆதியோகி சிலைக்கு முன்பாக சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் சுமார் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விழாவிற்கு வந்தவர்கள் அமர வைக்கப்பட்டனர். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் பயிற்சிமையங்களில் கட்டணங்கள் வசூலித்து தனித்தனி வாகனங்கள் மூலம்விழாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.ஆதியோகி சிலைக்கு வெகு தொலைவில் அமைக்கப்பட்ட தடுப்பில் அமர்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டது. மேலும் முன்னேசெல்ல செல்ல கட்டணம் எகிறிக் கொண்டே செல்லும் வகையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படிஆதியோகி சிலை முன்பு, ஐக்கியின் பின்னால் அமர்வதற்கு ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்பட்டிருக்கிறது.சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துகிறோம் என்கிற பெயரில் விழா மேடைகளை சுற்றி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகள் அமைப்பதற்காக குழந்தைசாமி கவுண்டர் என்பவரது 5 ஏக்கர் விவசாய நிலம் முழுவதுமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், சென்ற ஆண்டு பிரதமர் மோடி வருகை புரிந்ததையொட்டி இங்கு கடை அமைப்பதற்கான என்னுடைய விவசாய நிலத்தை கேட்டனர். இதற்காக ஊர் பெரியவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்என்னிடம் பேசினர். நானும் சரி எனஒப்புக்கொண்டு அவர்களுக்கு என் னுடைய நிலத்தை கொடுத்தேன். அப்போது, நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தேன். இவர்கள் கேட்ட காரணத்திற்காக அறுவடை காலத்திற்கு ஒருவார காலத்திற்கு முன்பாகவே அறுவடை செய்து விட்டு நிலத்தை அவர்களிடம் கொடுத்தேன். இந்த வருடமும் விழா நடத்துவதற்கான நிலம் வேண்டும் என்று என்னிடம்கேட்டனர். இதனால் அறுவடைக்கு நாட்களுக்கு முன்னரே அறுவடையை மேற்கொள்ள வேண்டியதாகிற்று. இந்த இடத்திற்காக வாடகை ஏதும் தரவில்லை என்றார். அதேநேரம், இந்த ஐந்து ஏக்கரில்நுழைவு வாயில் முதல் மேடையின் அருகே வரை சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன. இதில்நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அதாவது பார்வையாளர் கட்டணமாக ரூ.500 கொடுத்து அமர்ந்திருப்பவர்கள் அருகில் கடை அமைக்கஒரு நாளைக்கு ரூ 8 ஆயிரம் வாடகை.இதே போல் ஆதியோகி சிலை அருகே அதாவது விஐபி பகுதி நெருங்க நெருங்க வாடகைக் கட்டணமும் கூடும். இப்படி ரூ.8 ஆயிரம் முதல்ரூ.1 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்பட்டதாக அங்கு கடை அமைத்தவர்கள் தெரிவித்தனர். இந்த கடைகளிலும் ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்களுக்கே முன்னுரிமையாம். மேலும், விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் அமர்ந்த இடங்களை சுற்றிலும் சுமார் 10க்கும்மேற்பட்ட இடங்களில் அன்னதானம்வழங்குவதற்காக நன்கொடை பெறப்படும் என குடில் அமைத்து நன்கொடை வசூலும் நடைபெற்றது. இந்த விழாவில் இடையிடையே வடமாநிலங்களைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் தங்களது இசை கச்சேரியை நடத்தினர். இதில் வடமாநிலத்திலிருந்து வந்திருந்த இளைஞர்கள் மெய்மறந்து ஆடிக் கொண்டிருந்தனர்.
இரவு 11.45 மணியளவில் மீண்டும் விழா மேடைக்கு வந்த ஜக்கி, விழாவிற்கு வந்திருந்தவர்களை ஒருநிலைக்கு கொண்டு வருவதற்காக ஓம் நமச்சிவாய என்ற முழக்கத்தை சுமார் அரை மணி நேரம் மெல்லிய இசையோடு பாடிக்கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட விழாவில் கலந்து கொண்டவர்கள் அந்த மனநிலைக்கு வந்தவுடன், உடுக்கைசத்தம் வேகமாக ஒலித்து ஓம் நமச்சிவாய என்ற முழக்கத்தை இன்னும் வேகமாக கூறிக்கொண்டே சென் றார். ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பக் கூற வைத்து விழாவிற்கு வந்தவர்கள் மெய்மறந்த நிலைக்குசெல்லும்போது அவர்கள் சிவனுக்குஅடிபணிந்து விட்டதாக ஜக்கி மேடையில் பேச துவங்கினார். மேலும் நிகழ்ச்சியின் போது பேசிய ஜக்கி வாசுதேவ், தனது கமர்ஷியல் வியாபாரத்தை கடவுளோடு இணைத்து விற்பனைக்கான விளம்பரத்தை செய்தார். ‘’மகாசிவராத்தியன்று ஈஷா யோகா மையத்தில் அமைந்திருக்கும் ஆதியோகிசிலை முன்பு இரவில் விழித்திருந்தால், 365 நாட்களும் யோகாபயிற்சியில் ஈடுபடுவோருக்கு சமமான பலன், மகாசிவராத்திரியன்று ஓரே நாளில் கிடைத்து விடும்’’ எனஓரே போடாக போட்டார். அதற்குமுன்னால் அமர்ந்திருந்த அமைச்சர்செல்லூர்ராஜூ முதல் எஸ்.பி.வேலுமணி, ஆளுநர் வரை தலையசைத்து ஆமோதித்தனர்.
ஆதியோகி வளாகத்தை வலம்வரும் ஆதியோகி பிரதட்சிணம் என்னும் முறை குறித்தும் அறிவிக்கப்பட்டது. ஒரு ஆண்டிற்குள் ஒருவர் 1, 3, 7, 21 அல்லது 112 என்றஅளவில் சுற்றி வந்தால், நோய்களில்இருந்து விடுதலை பெறலாம். தடைகள் அகலுதல் போன்ற பல்வேறு பயன்களும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பூஜை பரிகார கட்டணம் அப்போது அறிவிக்கப்படவில்லை. அதே போல் 2017ல்மோடியால் ஆதியோகி சிலை திறக்கப்பட்ட போது 1 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்கள் கொண்டமாலை ஆதியோகி சிலையில் மாலையாக அணிவிக்கப்பட்டிருந்தது. அந்த மாலையில் இருந்த ருத்ராட்சங்கள் அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என அறிவித்து அதற்கு ஒருபுறம் பக்தர்களைஅணிவகுத்து நிற்க வைத்துக் கொண்டிருந்தனர். இந்த மகாசிவராத்திரிக்கு அடுத்த பிராண்ட் அம்பாசிடர் போன்று அவ்வப்போது துணை குடியரசுத்தலைவர் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த காட்சிகள் எல்சிடி ஸ்கிரீனில் ஒளிபரப்பப்பட்டது.
மகாசிவராத்திரி விழாவை ஒளிபரப்பும் ஊடகங்களுக்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது ஊடகவியலாளர்கள் எந்த வீடியோக்களையும் எடுக்கக் கூடாது.எல்லாவற்றையும் ஈஷா யோகாமையமே எடுத்து நேரடியாக சேனல்களுக்கு வழங்கி விடுவார்கள். அதாவது செய்தி ஊடக தலைமையில் பேசி இந்தஏற்பாடுகள்’’ செய்யப் பட்டிருக்கிறது. கோவையில் இருக்கும் ஊடகவியலாளர்கள் சிவராத்திரிவிழாவிற்கு வரவிரும்பினால் வரலாம் என்ற அளவில் ஏற்பாடுகள் இருந்தன. அதே நேரம் அச்சு ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு தனித்தனியாக வாகன ஏற்பாடும்செய்யப்பட்டிருந்தது. குடும்பத்தினருக்கும் தனியாக வாகன ஏற்பாடு ஈஷா யோகா மையத்தில் இருந்து செய்யப்பட்டிருந்தது. அதே நேரம் ஆனந்த விகடன் சார்பில் சென்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என மறுத்து விட்டனர். இதேபோல் சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து நாட்டுநலப்பணி திட்டத்தில் உள்ள மாணவர்களை அழைத்து வந்து ஈஷா மையத்தின் தொண்டர்களாக மாற்றிவைத்திருந்தனர்.
ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டுஇங்கு நடைபெற்ற மகாசிவராத்திரியின் போது சுற்றுச்சூழலை பாதிக்கும்வகையில் ஒலி மாசு ஏற்படுத்தப் பட்டது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. அதுகுறித்தவழக்கு தற்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஒலி, ஒளி ஏற்பாடுகள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே கடந்தாண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் அளித்திருந்த மனுவில்ஈஷா யோகா மையத்தில்மகாசிவராத்திரி விழா நடைபெற்ற2017 பிப்ரவரி 24 ஆம் தேதியன்று8 இடங்களில் ஒலி அளவு கணக்கிடப் பட்டது. ஈஷா அமைந்துள்ள பகுதிவரையறுக்கப்படாததால், அங்குகுடியிருப்பு பகுதிக்கு வரையறுக்கப்பட்ட ஒலியின் அளவை கருத்தில் கொள்ளலாம். குடியிருப்பு பகுதியில்ஒலியின் அளவு பகல் நேரத்தில் 55 டெசிபலும், இரவு நேரத்தில் 45 டெசிபலும் இருக்க வேண்டும்.மகாசிவராத்திரி விழா இரவில்கொண்டாடப்பட்டதால் அங்கு 55 டெசிபல் அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால், மஹாசிவராத்திரி நிகழ்வு நடைபெற்றபோது 8 இடங்களில் எடுக்கப்பட்ட அளவுகளும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. ஒலி மாசு சட்டத்தில் உள்ள விதிகளை காவல்துறையினர் தான் அமல்படுத்த வேண்டும். எனவே, இதுகுறித்து கோவை காவல் கண்காணிப்பாளருக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் கடந்தஏப்ரல் 7 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளது’’ என்று தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், ஆட்சியர்கள் கைகட்டி ஜக்கி வாசுதேவ்விற்கு பாதுகாப்பு அளித்து, மகாசிவராத்திரி ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். எல்லா அத்துமீறல்களும் ஒருங்கே மகாசிவராத்திரி என்ற பெயரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. சட்டமும் நீதியும் அங்கே சந்தி சிரித்தது.

நன்றி .ஜீவானந்தம்