சமயபுரம் மாரியம்மன் கோயில் - திருச்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:35 PM | Best Blogger Tips

தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில்.
இது, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
வரலாறு :
தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர்.
இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும்.
பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.
இங்கு அம்மன் கோவில் உருவாகியதற்கு பின்வரும் சம்பவம் காரணமென்று நம்பப்படுகிறது.
அம்மனின் வரலாறு :
வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது.
அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார்.
அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்து வதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள்.
(அது தற்போதுள்ள இனாம் சமயபுரம்).
பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
(தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்).
அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள்.
பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்குகண்ணனூர் மாரியம்மன்என்று பெயரிட்டு வழிபட்டனர்.
இக்காலத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள்.
அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள்.
அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.
அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள்.
விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
அம்மனின் உருவம் :
சமயபுரம் மாரியம்மன் சிலை அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி அமைந்துள்ளது.
திருவிழாக்கள் :
ஆடி வெள்ளி
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளித் திருவிழா நடைபெறுகிறது.
இதில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும்.
திருச்சியில் உள்ள அத்தனை பெண்களும் அன்னையை தரிசிக்க கட்டாயமாகச் செல்வர்.
அதுவும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடுவர்.
பூச்சொரிதல் விழாவும் இங்கு சிறப்பான கொண்டாடப்படுகிறது.
சமயபுரம் கோவிலுக்கு அம்மனை வழிபட தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வருகிறது.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் மற்ற கிழமைகளை விட கூடுதலாக உள்ளது.
விழாக்காலங்களில் இது இன்னும் அதிகமாகிறது.
. கா. சித்திரைத் தேர்த்திருவிழா.
தமிழக பக்தர்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் உள்ளவர்களும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் சமயபுரம் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

 நன்றி இணையம்

உலக நட்பு நாள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:26 PM | Best Blogger Tips
🍎 இன்று உலக நட்பு நாள். வாழ்த்து செய்தி.
🌻"அழகிய உறவுகள் கிடைப்பது எளிது,
🌻அதில் அன்பான உள்ளம் இருப்பது அரிது"...
🌻வாழ்க்கையின் இனிமையான பல நேரங்கள் நம் நல்ல நண்பர்களால் மட்டுமே...
🌻எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது நம்மை மகிழ்விப்பது அவர்களால் மட்டுமே முடியும்....
🌻உடலால் வேறாக உள்ளங்களால் ஒன்றாகி வாழும் நண்பர்களுக்கு
🌻 இந்த நாள் சமர்ப்பணம்...
🌻என்னோடு தொடர்ந்து பயணிக்கும் என் 
தோழமைகளுக்கு என் மனம் நிறைந்த
🌹🌹நண்பர்கள்_ தின வாழ்த்துகள்...



கிரகங்கள் படுத்தும் பாடு -( 27 )

மணக்கால் அய்யம்பேட்டை | 2:25 PM | Best Blogger Tips


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
இன்றைய *கிரகங்கள் படுத்தும் பாடு* எனும் தொடர் பதிவில்" வக்ர நிலை " என்றால் என்ன ? எந்தந்த கிரகங்கள் வக்ர நிலை உண்டு ,எந்த கிரகங்களுக்கு வக்ரகதி இல்லை எனவும் ,அவ்வாறு வக்ரம் அடைந்த கிரகங்களின் பலம் பற்றியும் இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
சில சமயங்களில் கிரகங்கள் தாம் செல்லும் பாதையிலிருந்து பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறது.இதனைத்தான் "வக்கிர நிலை "என அழைக்கிறோம்.
வக்கிரம் பெறும்பொழுது அக்கிரகங்களுக்கு பலம் அதிகம் உண்டாகிறது.மேலும் அந்த கிரகங்களின் தன்மை கூட மாறி விடுகிறது.நல்லது செய்யக்கூடிய சுப கிரகங்கள் கூட நல்லது செய்வதற்கு பதிலாக கெடு பலனை தந்து விடுகிறது அல்லது எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கமல் செய்துவிடுகிறது. ஒற்றை கிரகங்கள் மகாபலவான்கள் ஆகும்.
இதில் ராகு,கேதுக்களுக்கு வக்ர கதியைதத்தவிர நேர்கதியே கிடையாது.
சூரியன் மற்றும் சந்திர கிரகங்களுக்கு வக்ர கதியே கிடையாது.
குரு,செவ்வாய்,சனி ஆகிய கிரகங்களுக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் வரும்பொழுது வக்ரகதி ஏற்படுகிறது.ஏழில் வரும்போது அதிவக்ரமும்,ஒன்பதாமிடத்தில் வரும்போது வக்ரகதி முடிவடைந்து நேர்கதி ஏற்படுகிறது.
புதனும்,சுக்கிரனும் சூரியனுடையே சுற்றுவதால் சூரியனுக்கு 13- பாகைக்குள்ளே வரின் புதனுக்கும்,8-பாகைக்குள் வரின் சுக்கிரனுக்கும் வக்ரகதி உண்டாகிறது.
வக்ரம் அடைந்த நிலையில் கிரகங்களின் பலனில் ஏற்படும் மாற்றங்களாவன : -
1) உச்சம் அடைந்த நிலையில் ஒரு கிரகம் வக்ரம் அடைந்திருந்தால் அக்கிரகம் உச்ச பலனை தராமல் நீச பலனை கொடுக்கிறது.
2) பாவ கிரகங்கள் உச்சம் அடைந்து வக்ரம் அடையுமானால் அவர்களின் தசையில் யோக பலனை தருகிறது.
3) ஒரு கிரகம் வக்ரம் அடைந்த நிலையில் அக்கிரகம் உச்சம் அடைந்த கிரகங்களால் பார்க்கப்பட்டால் அக்கிரகம் வக்ரபலன் நீங்கி உச்ச பலனை தந்துவிடுகிறது.
4) வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் வக்ரபலன் நீங்கிவிடுகிறது.
5) வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெறுவதும்,பிறகு வக்கரம் பெற்ற கிரகம் இருந்த வீட்டின் அதிபதி எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அந்த வீட்டின் அதிபதியும் உச்சம் பெற்றால் டபுள் டெபாஸிட்டர் முறையில் வக்ரபலன் நீங்கி நன்மையை செய்துவிடுகிறது.
6)வக்கிரம் பெற்ற கிரகம் உச்ச வர்க்கோத்தம் பெறுமானால் அவர் இருக்கும் இடத்தினை பாதிப்பதில்லை (வர்க்கோத்தமம் என்பது ராசி மற்றும் அம்சம் இரண்டிலும் ஒரே ராசியில் ஒரு கிரகம் இருப்பது )
7) வக்கிரம் பெற்றுள்ள கிரகம் ஆட்சி நிலையில் இருந்தால் நற்பலனையே தரும்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆய்வாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் ; 97 151 89 647 (வாட்ஸ்அப் எண்ணும் ,செல் எண்ணும் ஒன்றே)
(தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சாதக பலனை வீட்டிலிருந்த படியே போன் வழி மூலம் தகவல் பெறலாம்.கட்டணம் உண்டு)
My website.Click hear

AstroRavichandransevvai.blogspot.com
********************************


கிரகங்கள் படுத்தும் பாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:16 PM | Best Blogger Tips

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை
ஸ்ரீ குரு பகவான் -தொடர்ச்சி
+++++++++++++++++++++++++
1)
குரு பகவான் ஓரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்வார்.
2) புதிய ராசியில் நுழைந்த குரு நல்லது,கெட்டதுகளை இரண்டு மாதத்திற்கு முன்பே தருவார்.
3) ஒரு ராசி என்பது 30 டிகிரி வீதம் பணிரெண்டு ராசிக்கு மொத்தம் 360 டிகிரி ஆகும்.
1 டிகிரி என்பது 60 கலைகள்
1 கலை என்பது 60 விகலைகள்
எனவே 360 டிகிரி என்பது 21,600 கலைகள் ஆகும்.
ஒரு ராசி என்பது 21/4 நட்சத்திரம் கொண்டது.அதாவது ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம் வீதம் மொத்தம் 9 பாதங்களை கொண்டது.
உதாரணமாக மேஷ ராசி எனில்
அசுபதி நான்கு பாதம்
பரணி நான்கு பாதம்
கார்த்திகை ஒரு பாதம் மட்டும்
எனவே ஒரு ராசி என்பது 1800 கலைகள்
எனவே ஒரு நட்சத்திரத்தின் ஒரு பாதத்தை கடக்க 3 டிகிரி 20 கலைகள் தூரம் ஒரு கிரகம் கடக்க வேண்டும்.
ஒரு முழுநட்சத்திரத்தை கடக்க
13
டிகிரி 20 கலைகள் ஆகும்.
மேற்கண்ட கணித முறையை தெரிந்தால்தான் குருவானவர் ஒரு ராசியை கடக்க ஒரு ஆண்டை எடுத்துக்கொள்வதால் ஓரு நாளைக்கு எவ்வளவு தூரம் கடக்கிறது போன்ற விஷய ஞானத்தை ஆரம்ப நிலை ஜோதிடர்களால் புரிந்து கொள்ள முடியும் என்பதற்காகவே விளக்கினேன்.
எனவே குரு பகவான் ஒரு நாளைக்கு 6 கலைகள் கடப்பர் என்பதை எளிமையாக கணக்கிட்டு கொள்வீர்கள்.
ஒரு நட்சத்திர பாதம் கடக்க
1
மாதம் 10 நாள் 33 நாழிகை 20 வினாடி ஆகும்.
4 ) குரு பகவான் நமக்கு பேரின்ப நிலையை நமக்கு அளிப்பவர்.
5) குரு பார்வை
*****************

குருவின் பார்வை என்பது 5,7,9 ஆகும்.
இதில் திருக் பலம்
5-
ம் பார்வை அரை பலம்
9-
ம் பார்வை முக்கால் பலம்
குருவானவர் சனியை 5,9 ம் பார்வை பார்ப்பது நல்லது.ஆனால்
7-
ம் பார்வை பார்க்காமல் இருப்பது நல்லது.அப்படி பார்க்கும் போது குரு பகவான் சனியின் கட்டுபாட்டில் வந்துவிடுவார்.ஆனால் சனியானது சுப தன்மை பெற்று விடும்.அந்த நேரத்தில் குரு தசை அல்லது குரு புத்தி நடக்க கூடாது.ஆனால் சனி தசை அல்லது புத்தி நடந்தால் பலன் கிடைக்கும்.
6 ) குருவானவர் சூரியனுக்கு முன்,பின் 15 பாகைக்குள்(டிகிரி) அஸ்தமனம் பெறுவார்.
7) குருவானவர் நைசார்கிக பலத்தில் 5-மிடம் பெறுவார்.
8) பகலில் பிறந்தவர்களூக்கு குருவின் கால பலன் மிகுதி
வக்ர கதி
+++++++++++
9)
குரு,செவ்வாய்,சனி போன்ற கிரகங்களுக்குஎப்பொழுது 5-ல் சூரியன் வரும்போது வக்ரகதி ஏற்படும்.
7-
ல் வரும்போது அதி வக்ரம் ஏற்படும்.
9-
ம் இடத்தில் வரும்போது வக்ரகதி நிவர்த்தியடைந்து நேர்கதி ஏற்படும்.பொதுவாக 130 டிகிரி-245 டிகிரி வரை
10) குரு சண்டாள யோகம்
+++++++++++++++++++++
குருவுடன் ராகு சேர்ந்து இருப்பின் மேற்கண்ட அமைப்பு உண்டாகிறது.
இதன் பலன் தெய்வ நம்பிக்கை இருக்காது.
11)
"
வல்லரவு தனித்து நின்று மறையவனோடு இசை ஞானி மறுவக்காணில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவன் என்று இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான் போலும்"
என ராவன காவிய பாடல் தெரிவிக்கிறது.
பலன்;- குருவுடன் ஞானகாரகன் கேது சேர்ந்திருந்து அதற்கு ஏழில் ராகு தனித்திருந்தால் எல்லையில்லா நிதி உடையவன்
தொடரும்.... 
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd (Teacher)
Email: masterastroravi@gmail.com
Cell;9715189647

செல் ; 740 257 08 99
Om sakthi jothida Nillam(
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
Karambakkudy.
Pudukkottai District.
தங்களுடைய ஜாதகம் தொடர்பான விவரங்களை விரிவாக தொலைபேசியிலே பெற மேற்கண்ட அலைபேசியில் தொடர்புகொள்ளவும்.எனது வாட்ஸ்அப் 97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை மெஸ்ஸேஸ் செய்யவும்.கட்டணம் உண்டு.
நன்றி,வாழ்க நிறைவுடன்.