உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:12 PM | Best Blogger Tips

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன :
எவ்வளவு சந்தோசமான விஷயம்,பார்த்து விட்டு ஷேர் செய்யுங்கள் :
1.
அங்கோர் வாட்,கம்போடியா,ஆசியா 

2.
ஸ்ரீ ரங்காநாதசுவாமி கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி, தமிழ்நாடு 

3.
அக்ஷர்தம் கோவில்,டெல்லி 

4.
பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில்,மேற்கு வங்காளம்.

5.
தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்,தமிழ்நாடு 

6.
பிரம்பணன், திருமூர்த்தி கோவில்,இந்தோனேசியா.

7.
பிரஹதீஸ்வரர் கோவில்,தஞ்சாவூர்,தமிழ்நாடு 

8.
அண்ணாமலையார் கோவில்,திருவண்ணாமலை, தமிழ்நாடு 

9.
ராஜகோபால சுவாமி,கோவில்,மன்னார்குடி, தமிழ்நாடு

10.
ஏகாம்பரேஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம்,தமிழ்நாடு

11.
ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சிபுரம், தமிழ்நாடு 

12.
தியாகராஜேஸ்வரர் கோவில்,திருவாரூர்,தமிழ்நாடு 

13.
ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி,தமிழ்நாடு 

14.
நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,தமிழ்நாடு 

15.
மீனாக்ஷி அம்மன் கோவில்,மதுரை ,தமிழ்நாடு 

16.
வைத்தீஸ்வரன் கோவில்,தமிழ்நாடு 

17.
ஜகன்னாதர் கோவில்,பூரி,ஓடிஷா

18.
பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயண் கோவில்,நியூ டெல்லி

மூலம் : விக்கிப்பீடியா இணையதளம்.
Among the World Largest 18 Hindu Temples, 12 Temples are in our Tamilnadu.See all and share it.
1. Angkor Wat Temple ,Angkor, Cambodia 
2. Sri Ranganathaswamy Temple, Srirangam,Tirchy,Tamil Nadu.
3. Akshardham Swaminarayan Temple,Akshardham,New Delhi
4. Ramakrishna temple,Belur Math,Belur, West Bengal
5. Thillai Nataraja Temple,Chidambaram ,Tamil Nadu
6. Prambanan,Trimurti temple, Yogyakarta, Indonesia
7. Brihadeeswarar Temple,Thanjavur,Tamil Nadu
8. Annamalaiyar Temple,Tiruvannamalai,Tamil Nadu
9. Rajagopalaswamy temple,Mannargudi, Tamilnadu
10. Ekambareswarar Temple,Kanchipuram, Tamil Nadu
11. Varadharaja Perumal Temple,Kanchipuram,Tamil Nadu
12. Thyagarajaswamy Temple,Tiruvarur, Tamil Nadu
13. Jambukeswarar Temple,Thiruvanaikaval,Trichy, Tamil Nadu, 
14. Nellaiappar Temple,Tirunelveli, Tamil Nadu
15. Meenakshi Amman Temple,Madurai,Tamil Nadu
16. Vaitheeswaran Koil,Vaitheeswaran Koil,Tamil Nadu
17. Jagannath Temple,Puri,Odisha.
18. Birla Mandir Laxminarayan Temple,New Delhi
Source : https://en.wikipedia.org

இனிமையான பொருள் கொண்டு வாருங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:04 PM | Best Blogger Tips


குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் 
"
நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.
குரு அவனைப் பார்த்து
நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் மனிதனின் நாவு 👅
தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது .
குரு 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். 
நாவை 👅
விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
கலைவாணி குடியிறுப்பு நாவில் என்று வேதம் கூறுகிறது .
மனிதனை தேவன் ஆக்குவது குருவின் அருள் நா 👅
அன்றோ .
ஆகவே அதுவே இனிமையான பொருள் என்றான் .
குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார் .
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதனுள் மனிதனின் நாவு 👅
தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது .
குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் , நாவை 👅
வரைந்து 
கொண்டு வந்தாய். 
கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை 👅 வரைந்து கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" 
என்று கேட்டார்.
சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான்.
மனிதன் அழிந்துபோகிற உலகத்தைப் பற்றியே பேசி ,
கடைசியில் 
கசப்பு ஜல தீட்டு வெளியாகி ,
மரணம் அடைகிறான் .
எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.
நாவு 👅
ஒரு அற்புத பொருள். 
சொர்கத்தின் திறவுகோலும் அது தான். 
நரகத்தின் வாசல்படியும் அது தான்.

 நன்றி : இணையம்

கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள் - 86

மணக்கால் அய்யம்பேட்டை | 11:00 PM | Best Blogger Tips

மனம் கொள் !!
|| ராதேக்ருஷ்ணா ||
உலகம் என்ன தரப்போகிறதோ
என்று ஏங்காதே . . .
உலகம் எதைத் தந்தாலும்
ஏற்கும் மனம் கொள் ! ! !
உலகம் என்ன சொல்லப் போகிறதோ
என்று பயப்படாதே . . .
உலகம் என்ன சொன்னாலும்
கலங்காத மனம் கொள் ! ! !
உலகம் எப்படி நடத்துமோ
என்று நடுங்காதே . . .
உலகம் எப்படி நடத்தினாலும்
ஜெயிக்கும் மனம் கொள் ! ! !
உலகம் எப்படி ஏமாற்றுமோ
என்று குழம்பாதே . . .
உலகம் எப்படி ஏமாற்றினாலும்
ஏமாறாத மனம் கொள் ! ! !
உலகத்தில் எப்படி வாழப்போகிறேனோ
என்று புலம்பாதே . . .
உலகத்தில் எப்படியும் வாழ்ந்தே தீருவேன்
என்னும் மனம் கொள் ! ! !
உலகம் என்னை ஏற்குமா
என்று சந்தேகப்படாதே . . .
உலகம் என்னை ஏற்றுத்தான் ஆகவேண்டும்
என்ற திடம் கொள் ! ! !
உலகில் நான் வீணாகிவிடுவேனோ
என்று அழுதுகொண்டிருக்காதே . . .
உலகில் நான் சாதித்துக்காட்டுவேன்
என்ற வைராக்யம் கொள் ! ! !
உலகில் எனக்கு வாழ அதிகாரம்
இல்லை என்று உளராதே . . .
உலகில் நான் சந்தோஷமாக வாழவே
வந்திருக்கிறேன் என்று நினவில் கொள் ! ! !
உலகம் என்னை மதிப்பதில்லை
என்று அஹம்பாவத்தில் ஆடாதே . . .
உலகம் என்னை மதிக்கும்படியாக
காரியம் செய்வேன் என்று நம்பிக்கை கொள் ! ! !
உலகத்தில் யாரும் எனக்கு
உதவவில்லை என்று பழிபோடாதே . . .
உலகம் உதவவில்லையென்றாலும்
நான் வாழ்ந்துகாட்டுவேன் என்ற மனம் கொள் ! ! !
உலகம் என்பது சில தேசங்கள் ! ! !
உலகம் என்பது பல கோடி மனிதர்கள் ! ! !
உலகம் என்பது சில மொழிகள் ! ! !
உலகம் என்பது பல பழக்கவழக்கங்கள் ! ! !
அவ்வளவு தான் ! ! !
இந்த உலகிற்காகவா நீ பயப்படுகிறாய் ! ? !
என்ன கொடுமை இது ? ? ?
இனி உலகம் உனக்குச் சொந்தம் என்று நம்பு ! ! !
இனி உலகில் வாழ உனக்கு அருகதை உண்டு ! ! !
வாழ்ந்துவிடு . . .
உலகத்தை மறந்துவிடு . . .
உலகத்தை ஜெயித்துவிடு . .

 நன்றி : இணையம்

சாவித்திரியின் சோகத் தருணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:58 PM | Best Blogger Tips


மக்களைக் கவர்ந்தவர்.. மதுவால் மடிந்தவர்..! - நடிகையர் திலகம் சாவித்திரியின் சோகத் தருணங்கள்

தமிழ்த்திரையுலகில் 1950 மற்றும் 60களில் சுண்டி இழுக்கும் தன் அழகுமற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சாவித்திரி. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலதரப்பட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்ற அவரது அந்திமகாலம் மிக சோகமான ஒரு திரைப்படத்திற்கான கதை போன்று கண்ணீரை வரவழைப்பவை.
வெற்றிகரமான நடிகையாக உலாவந்த தேர்ந்த நடிகையான சாவித்திரி நடிப்புத் தொழிலில் தன் சம்பாத்தியத்தில் வாங்கிக்குவித்த பங்களாக்கள், கார்கள், நகைகள் என அனைத்தையும் எதிர்காலத்தில் தன் பலஹீனங்களால் இழந்து வீதிக்கு வந்தவர்.

தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும் நடிகை சாவித்திரி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் சிறுசிறுவேடங்கள்.
பிரபல ஜெமினி நிறுவனம் தங்களின் அடுத்த படத்திற்கு கலைஞர்கள் தேர்வு நடத்துவதாக கேள்விப்பட்டு சென்றவருக்கு ஏமாற்றம். அவரது பேச்சும் நடிப்பும் அங்கிருந்த நிர்வாகிக்கு திருப்தியை தராததால், 'ஏன்மா நீயெல்லாம் நடிக்க வந்த' என நக்கலாக கேட்கிறார். எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறிய சாவித்திரிக்கு தெரியாது, நடிப்பு வரவில்லை என தன்னை வெளியேற்றிய அந்த நிர்வாகிதான் பின்னாளில் தனக்கு கணவராக வரப்போகிறவர் என்று.
வாழ்வின் சுவாரஸ்யங்களும் விதியின் விளையாட்டுக்களும் அரிதாக எப்போதாவது கைகோர்க்கிற சந்தர்ப்பங்கள் இவைதான்.
எல்.வி பிரசாத் இயக்கிய ஒரு படத்திற்கு இரண்டாம் கதாநாயகி வேடம் தரப்பட, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட சாவித்திரிக்கு படத்தின் முக்கிய நடிகையால் அதிர்ஷ்டம் அடித்தது.
முதல் இருநாட்கள் படப்பிடிப்பிலேயே இயக்குநருக்கும் முக்கிய கதாநாயகிக்கும் முட்டிக்கொள்ள, படம் பாதியில் நின்றது. இயக்குநர் ஒரே முடிவாக இரண்டாவது கதாநாயகியை முதல்நாயகி ஆக்கினார். 'என்னங்க இப்படி பண்ணிட்டீங்க யோசிச்சி முடிவெடுத்திருக்கலாம்' என இயக்குநருக்கு துாபம் போட்டனர் உடனிருந்தவர்கள். எல்.வி பிரசாத் தெளிவாக இருந்தார் சாவித்திரிதான் தன் படத்தின் நாயகி என்பதில்.

படம் வெளியானபோது படத்திலிருந்து கழன்றுகொண்ட நடிகைக்கு மனதளவில் நன்றி சொன்னார் இயக்குநர். அத்தனை அற்புதமாக காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை பக்கங்களிலும் அசத்தியிருந்தார் சாவித்திரி. எல்.வி பிரசாத் முதல் நடிகையிடமிருந்து எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பான நடிப்பை திரையில் தெறிக்கவிட்டிருந்தார் சாவித்திரி.
மிஸ்ஸியம்மா என்ற அத்திரைப்படம் திரையிட்ட இடங்களில் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி. அடுத்த 20 வருடங்கள் அவரது கார் போர்டிகோ, தயாரிப்பாளர்களால் நிறைந்தே இருந்தது. அந்த உச்சத்தை அவர் தக்கவைத்துக்கொண்டாரா என்பதில்தான் விதியின் விபரீதமான விளையாட்டு இருந்தது.
மிஸ்ஸியம்மா திரைப்படம் சாவித்திரியின் திரையுல வாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆம்.. படம் முடியும் தருவாயில் சாவித்திரி படத்தின் கதாநாயகன் ஜெமினி கணேசன் மீது உண்மையிலேயே காதல் வயப்பட்டிருந்தார். இத்தனைக்கும் ஜெமினி ஏற்கனவே மணமானவர். காதலுக்குதான் கண் இல்லையே!
படம் வெளியாகி சில மாதங்களில் தம்பதிகளாகினர். மிஸ்ஸியம்மா தந்த புகழால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாவித்திரி. தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆந்திராவில் என்.டி. ஆர் நாகேஷ்வரராவ் என ஜோடி சேர்ந்த சாவித்திரியின் புகழ் அடுத்த இருபது வருடங்களில் கொடிகட்டிப் பறந்தது திரையுலகில்.
திரையுலகை ஆட்டிப்படைத்த பிரபல கதாநாயகர்களே, 'இணையாக நடிக்க சாவித்திரியை ஒப்பந்தம் செய்யுங்கள்' என வெட்கத்தை விட்டுத் தயாரிப்பாளரிடம் கேட்கும் அளவு சாவித்திரியின் புகழ் கொடி பறந்துகொண்டிருந்தது. 'நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தே' என முன்னொரு காலத்தில் அவமானப்படுத்திய ஜெமினியுடன் திருமணமாகி, அவருக்கு 2 குழந்தைகளும் பிறந்திருந்தன.
பணம், புகழ், பிரபல்யம் என நன்றாகச் சென்றுகொண்டிருந்த சாவித்திரியின் வாழ்வில் விதி மதுவின் வடிவில் வந்தது.

புகழின் வெளிச்சத்தில் இருந்தபோது ஒருநாள் அவரின் நெருங்கிய தோழிகள் சிலர், 'உனக்கு இருக்கும் திறமைக்கு ஏன் நீயே படத்தை தயாரித்து, இயக்கக் கூடாது' என துாபம் போட்டனர். சாவித்திரி அதற்கு உடன்பட்டால் அவர்களுக்கு அதில் வருமானம் என்பதுதான் இதன் பின்னணி. எறும்பு ஊற கல்லும்தேயும் என்பார்களே...ஒருநாள் அந்த முடிவுக்கு உடன்பட்டார் சாவித்திரி.
அவருக்கும் உள்ளுக்குள் அப்படி ஒரு ஆசை இருந்ததும் அவர் ஒப்புக்கொள்ள ஒரு காரணம். ஆனால் தயாரிப்பு ஜெமினியின் நண்பர். சாவித்திரி இயக்குகிறார். முதல் இரு படங்கள் வெற்றி. அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பில் சிக்கல் வர தானே படங்களை தயாரிக்கும் முடிவுக்கும் வந்தார்.
அதுவரை எப்போதோ எட்டிப்பார்த்து விட்டுச் சென்றுகொண்டிருந்த விதி, சாவித்திரியின் வாழ்வில் சம்மணம் போட்டு அமர்ந்தது.
தயாரித்த படங்கள் நஷ்டம், படு நஷ்டம் என தயாரிப்பு நிர்வாகிகளிடமிருந்து தகவல் வந்தது. தியேட்டரில் கூட்டம் அலைமோதினாலும் சாவித்திரியின் நம்பிக்கை உகந்த நபர்கள் அதை மறைத்து நஷ்டக்கணக்கை காட்டி சாவித்திரியை நிம்மதி இழக்கச்செய்தனர். இதனிடையே படம் தயாரிப்பது நமக்கு வேண்டாத வேலை என்று அறிவுரை சொல்லியதால் சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்குமான உறவில் பிணக்கு உருவாகியிருந்தது. சேர்ந்து வாழ்கிறார்களா பிரிந்து வாழ்கிறார்களா என ஊடகங்கள் குழப்பமடையும் அளவுக்கு நிலை இருந்தது. குழந்தைகளைப் பார்க்க மட்டுமே ஜெமினி, சாவித்திரியின் வீட்டுக்கு வந்துபோய்கொண்டிருக்கிறார் என பத்திரிகைகள் பரபரப்பாய் எழுதிக்கொண்டிருந்தன.
தொடர் தோல்வி, காதல் கணவரின் பிரிவு, பண நட்டம் இவற்றால் நிம்மதியிழந்த சாவித்திரி எப்போதோ அறிமுகமான மதுவை நாட ஆரம்பித்தார். உடல்நிலை சீர்கெட்டது

 நன்றி : இணையம்

குறையையும் நிறையாக்கும் அன்பு உள்ளம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:56 PM | Best Blogger Tips


ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்
அதற்கு விவசாயி, “பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்
இதைக் கேட்ட பானை, தான் சொல்லாமலே தனது குறையை அறிந்து அதனையும் நிறையாக மாற்றிய விவசாயிக்கு மனதிற்குள் நன்றி சொன்னது.
அன்றிலிருந்து பானை தன்னைப்பற்றி கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.


நீதி :- இறைவன் என்னும் தலைவன் நாம் சொல்லாமலேயே நமது குறைகளை அறிந்து அதனையும் நிறையாக்க வழி வகுத்திருப்பான் ..!!!
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தால், நம்மால் எந்த வேலையையும் சரிவர செய்ய முடியாது ..!!!
நன்றி : இணையம்

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:56 PM | Best Blogger Tips

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.
1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?
2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும்
ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம்
ஏற்படுகின்றது?
4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க
வேண்டுமா?
போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே
இப்பதிவு.
பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை
பார்த்துவிடுவோம்.
சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை
விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில்
நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி
கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது
வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.
வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை
தியானத்திலும் பிராத்தனையிலும்
செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து
கொண்டன.
அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி
குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.
தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில்
சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.
இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை
என்பது துளிகூட இல்லை. அவனுக்கு
சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி
செய்வது என்பது வாடிக்கையான வேலை.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.
கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்
மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய்
என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை
என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு
ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான
பிராத்தனையில் ஈடுபட்டான்.
போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு
அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று
விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து
கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க
உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ
உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று
விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை
பார்த்து, அதையும் மூட்டையாக
கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன்
வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில்
வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு
முட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.
இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது
அசிங்கம் என்று சித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை
நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட
அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை
என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல்
ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து
தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ
தூக்குவது போல் உணர்ந்தான்.
ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே தெய்வம் அவனை
காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
தோனவில்லை, மாறாக சண்டை போட
தொடங்கினான். தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.
அனைத்தையும் பொறுமையுடன்
கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை
தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான்
சித்தன்.
இப்பொழுது கடவுள் பேச
தொடங்கினார்,
சித்தா நீ இப்பிறவியில்
நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.
நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில்
நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல
நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.
என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ
அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,
மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும்
ஒருவன் முதலில் அவனது பாவ பதிவையே
அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக
அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன்
செய்த புண்ணியங்களை அனுபவித்தபின்
அவன் பாவ பதிவுகள் செயல்பட தொடங்கும்.
வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.
அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு
புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து
பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.
நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை
நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு
கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில்
வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது
மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.
தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய
சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.
ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை
எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க
விதிவிலக்குகளும் உண்டு. அதுதான்
"
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள
வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
பார்த்துவிடுவோம். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.
இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில்
பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும். எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர
வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.
நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்
அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த
கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
மாடோ அல்லது வண்டியோ உங்களை
குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே
கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.
ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது
மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம். இங்கேயும் அதே
கர்மவினைதான் செயல்படும்.
அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வரவேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும். ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு. எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை
அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.
இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட
வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித
சேதமும் ஏற்படவில்லை.
நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த
கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால்
அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற
து. இதைதான் " தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது " என்பர்
பெரியோர்கள். அந்த பொருளுக்கும்
உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும்
நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை
கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும்
நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை.
இதைத்தான் " தீதும் நன்றும்
பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
என்பதை விட்டுவிட வேண்டும். ஆன்மீகத்தில்
இதற்கு பெயர் பூரண சரணாகதி.
அந்த விதிவிலக்கு என்பது கூட
இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்
சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்?
எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம்
என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.
கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?
எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?
கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற
எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான
புரிதல் ஏற்படும்.
புரிதல் ஏற்படும்போது
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம்
வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
நீங்கள் அடையும்போது, உங்களின் 95%
கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள்
அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த
அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.
ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு
வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர்
என்று அங்கே உள்ள சாக்கடையில்
குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்
குழாயில் காலை கழுவிவிட்டு
சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்
பைத்தியகாரன் என்று தோன்றலாம். ஆனால்
அவரை பொறுத்தவரை பொருளுக்கும்
அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது
ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி
இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்
அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.
இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி
வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை
என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.
காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம்
தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்ற
ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும்
உதிப்பதும் கிடையாது!! மறைவதும்
கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
என்று சொல்லப்படுகின்றது.
ஒருவன ்அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள் சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
என்ற விதி இருக்கும், ஆனால் இவன்
உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை
கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில்
சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு
செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.
முடிவில் இவர்களும் அந்த ஞானியின்
நிலைக்கே வந்துவிடுகின்றனர்.
அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!
நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான்
இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ
கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு
அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும்.
இதில் பூரண சரணாகதி என்பது இனி
அனைத்தும் உன் செயல் என பற்றுகளை
துறப்பதுவே ஆகும். "நான்" என்ற
எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.
அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட
எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு
செயலும் அவன் செய்வதாகவே இருக்க
வேண்டும்.
இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை
அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.
மனிதனாக பிறந்த ஒவ்வொருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல்
உள்ளவர்களை பொறுத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில்
"
ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது. ஏனென்றால்
அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும்.
இதையும் புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.
ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு
அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு
தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு. கடவுளிடமும் இதை
குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும்
பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.
மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு
தெரிந்ததெல்லாம் அவனே என்பதால்
மறுபடியும் ஒரு வேண்டுதல்!!
இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு
அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"
என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை
வசந்தமாகி இருக்கும்.
புரியும்படி கூற வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல்என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால் ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய
அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
கர்மவினை இதுதான் என்பது யாருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான
கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.
உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம்
அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி
அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.
எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே
ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.
உங்கள்
தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்
ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால்
அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!!
எனவே உங்கள் அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும்
நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.
இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால்
இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!!
நன்றி : இணையம்