செயர்கையாக மனிதனையே உருவாக்கும் அளவிற்கு இன்று நாம் அறிவியலில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட, இயற்கை என்ற மாபெரும் சக்திக்குமுன், அதன் எல்லையில்லா ஆற்றலிடம் மண்டியிட்டு தோற்றுத்துத்தான் போய்விடுகிறோம் என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்காது என்று கருதுகிறேன்.
எங்கும் எதிலும் அறிவியலின் அபிரிமிதமான வளர்ச்சி புரையோடிகிடக்கும் இந்த காலகட்டத்தில் கூட இன்றைய நவீன விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத கேள்விகள் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே?
அப்படிப்பட்ட கேள்வியில் ஒன்றை பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். அந்த கேள்வி ஒளிந்திருக்கும் இடம்தான் சுமார் 5000 ஆண்டுகலுக்கும் மேல் பழமைமிக்க இந்துக்களின் புனிததலமான அமர்நாத் குகைக்கோவில் (Amarnath Cave Temple).
விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத அந்த கேள்வியை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் அந்த கோவில் இருக்கும் இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதுதான் அமர்நாத் குகைக்கோவில்.
இந்துக்களின் புராண இதிகாசங்களின்படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான சிவன், தனது மனைவியான பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்ததாக கூறப்படுகிறது. இந்துக்களின் சிவ வழிபாட்டு தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள் என்று இந்துக்களின் இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன.
இக்கோவிலை அடைய நாம் முதலில், ஸ்ரீநகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இமயமலையின் அடிவாரதத்தில் அமைந்துள்ள பகல்காம் (Pahalgam) என்ற
இடத்தை அடைய வேண்டும். பகல்காம் வரை செல்ல சாலை வசதிகள் உண்டு. இந்த பகல்காம் கடல் மட்டத்தில் இருந்து கிட்டதட்ட 7,200 அடி
உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இமயமலையின் அடிவாரத்திலிருந்து அதாவது பகல்காமில் இருந்து அமர்நாத் பனிகுகைக்கு செல்ல செங்குத்தான பனிபாறைகளுக்கு நடுவே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். பக்கதர்கள் பெரும்பாலும் பகல்காமில் இருந்து அமர்நாத்திற்கு, மூன்று அல்லது நான்கு நாட்களில் கால்நடையாக நடந்துதான் செல்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் குதிரை, பல்லக்கு, டோலி போன்றவற்றில் பயணம் செய்கிறார்கள்.
சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள், மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர், குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி, அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி, சிவலிங்கமாக உருப்பெருகிறது. தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம்தான், வியப்பதிர்க்கில்லை. ஆனால் இங்கே ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டங்களில் அதுவும் லிங்க வடிவில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான், இதுவரை புரியாத அதிசயமாக உள்ளது. இதில் எந்த விஞ்ஞானமோ அல்லது செயற்கையோ கிடையாது.
இங்கே இன்னுமொரு அதிசயம் உங்களுக்கு காத்திருக்கிறது, பனிமலை சூழ்ந்த அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும், பறவைகளையும் காண முடியாது. காரணம் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதுதான். இங்குதான் நம் விஞ்ஞானத்தால் இன்றுவரை பதிலளிக்க இயலாத ஆச்சர்யம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத் குகைக் கோவிலில் இன்றுவரை ஒரு ஜோடி மலைபுறாக்கள் மட்டும் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறது, இவை எப்படி உயிர் வாழ்கிறது என்ற கேள்விக்கு இதுவரை இன்றைய நவீன விஞ்ஞானத்திடம் இருந்து பதில் இல்லை.
அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இறைவனும், இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை. விஞ்ஞானம் தோற்றுப்போன வெகு சொற்ப இடங்களில் அமர்நாத்தும் ஒன்று. என்பதே உண்மை.