78 வயதான பாட்டி சந்திரா தோமர். இவர் கலக்குவது துப்பாக்கி சுடும் போட்டியில். உத்திரப் பிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில், சின்னஞ்சிறு வீட்டில் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருப்பவரைப் பார்ப்பவர்களுக்கு, இவரின் மறுபக்கம் தெரியாது.
15 பேரக்
குழந்தைகள் உள்ளனர். நரைவிழுந்த தலைமுடி; தலையை மறைக்கும் முக்காடு, ஆண்கள் அணியும் முழுக்கைச் சட்டை, மூக்கில் பெரிய மூக்குத்தி. இவைதான் இவரது அடையாளம்.
:strip_icc():format(jpeg)/kly-media-production/medias/1091844/original/068425300_1450777943-penembak_1.jpg)
உலகின் மிக வயதான தொழில் ரீதியான துப்பாக்கி சுடும் வீராங்கனை இவர் தான். இவரது மறக்க முடியாத அனுபவம். ஒரு போட்டியில் டில்லியைச் சேர்ந்த போலீஸ் டி.ஐ.ஜி.யை இறுதிச் சுற்றில் தோற்கடித்தது.
இதுவரை மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று பதக்கங்கள், பரிசுகள் எனப் பலவும் குவித்துள்ளார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், அதாவது அவரது 63வது வயதில், இவர் ஊரில் உள்ள கிளப் ஒன்றுக்குத் தன் பேத்தியை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அழைத்துச் சென்று வருவார். அங்கு பயிற்சி செய்பவர்களைப் பார்த்து பார்த்து தானும் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க ஆசைப்பட்டார். முதலில் வெளியே சொல்லத் தயக்கமாக இருந்தது. ஆசை அவரைத் தூங்க விடவில்லை.
ஒருநாள் துணிந்து பேத்தியிடம் தன் மனம் திறந்தார். பயிற்சியாளரிடம் பாட்டியின் ஆசையைப் பேத்தி விளக்கினார். அவரும் மகிழ்ச்சியுடன் சேர்த்துக் கொண்டார். துப்பாக்கி பிடித்ததும் உண்டான நடுக்கம் நிற்க பல நாட்கள் ஆயின. சில மாதங்களில் மிகச்சிறப்பாக குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்றார்.
பிறப்பு, வசதி, வயது, படிப்பு – இவை ஒன்றுமே தேவைப்படவில்லை; தூங்க விடாமல் செய்த ஆசை தான் இவரைச் சாதனையாளராக்கியது.
நீங்கள் சாதனையாளர் ஆக வேண்டாமா?