அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை - நம் வாழ்க்கைக்கே இதுதான் அருமை நேரம்!💐
நாம் அதிகாலையில் எழுவதால் பல நன்மைகளை பெறமுடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிரம்ம முகூர்த்தத்தில் (அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான். இந்நேரத்தில் எழுந்து, குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையைத் துவங்க வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுது ’உஷத் காலம்’ எனப்படுகிறது. அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும்.
அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். சத்தம் இல்லாமலும், பரபரப்பு இல்லாமலும், நாம் எடுத்த செயல்களை சிறப்பாக முடிக்க முடியும்.
அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்று சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். காலையில் சூரியக்கதிர்களினால் கிடைக்கும் வைட்டமின் டி நமக்கு நேரடியாக கிடைக்கும். அதிகாலை எழுவதால் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். தியானம் செய்யலாம். இறைவழிபாடு செய்வது நன்மை தரும்.
இல்லாத நோயை இருப்பதாக காட்டும் MRI ஸ்கேன்... ஆய்வில் வெளிவந்த உண்மை!
உஷத் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த தேவதை தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற்காலை உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி சாய்வதால், அந்த வேளையில் குளித்து விட்டு இறைவனை வணங்குவது விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை வருகின்ற சூரிய ஒளிக் கதிர்கள் மூளையின் நடுப்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியை இயங்கச் செய்கிறது. சூரிய ஒளிக் கதிர்கள் உடல்மீது படும்படியும், கண்களுக்கு நீலநிற வானத்தின் ஒளிக்கதிர்கள் தெரியும்படியான நடைப்பயிற்சி செய்யும் போதும் பீனியல் சுரப்பி இயங்குகிறது. பீனியல் சுரப்பியிலிருந்து மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. காலை 6.00 மணிக்கு பிறகு மெலட்டோனின் என்ற திரவம் சுரப்பது நின்று விடுகிறது.
அதிகாலையில் முதல் முதலாக நமது உடலில் சுரக்கும் இந்த திரவமே மூளைக்கும் இருதயத்திற்கும், மூளைக்கும் தண்டுவடத்திற்கும், மூளைக்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது.
மின்சாரம் மற்றும் மின்காந்த ஆற்றல்களை உடல் முழுவதும் உள்ள செல்களுக்கும், நரம்பு இணைப்புகளுக்கும் கிடைக்கச் செய்கிறது.
மெலட்டோனின் ஹார்மோன்தான் 24 மணி நேரமும் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் நடுநிலைப்படுத்துகிறது. தினசரி உடல் ஆரோக்கியம் அனைத்திற்கும் மெலட்டோனின் திரவ உற்பத்தியே முதல் காரணமாக உள்ளது. தனிமனிதன் உடல் ஆரோக்கியம் என்பது அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்யும்போதும், இரவு 9.00 மணிக்கு முன்பே உறங்குவதாலும் 50% அதிகமாக மெலட்டோனின் திரவம் உருவாக்கப்படுகிறது .
நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்த தினம் தினமும் காலையில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும். நாளை முதல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பழகுவோம். கோடீஸ்வர யோகம் நம்மைத் தேடி வரும். 🌹
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏