மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:59 PM | Best Blogger Tips
Image result for மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லைRelated image


ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.
கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.
இதுவரை குருவி அப்படியொரு
அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.

வண்ண வண்ண விளக்குகள்,

அழகான நதிகள்,

மரங்கள்,

எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று
அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால்
போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.
அது பறந்து போகும் போது
ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு
அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன?
அவரிடம் குருவி வழி கேட்டது.

எனக்கு முழு விபரம் தெரியாது.
தெரிந்த வரை சொல்கிறேன்.

அதற்கு விலையாக
நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்என்றார் ஜோதிடர்.

ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும்
சரி என்றது.

குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.
குறிப்பிட்ட இடத்துக்கு மேல்
அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.

பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்என்றது.
பாம்பு இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.
பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.

உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடுஎன்றது.
இன்னொரு சிறகுதானே,
தந்தால் போச்சு என்று
குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி,
அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.
அவர்களும் வழி சொல்லிவிட்டு
குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.
குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில்
வழி சொன்னவர்களுக்கெல்லாம்
ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக,

அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.

வந்து விட்டோம்.....

வந்தே விட்டோம்......

இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.
குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால்,

இதென்ன....

ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ,

என் உடம்பெல்லாம் கனக்கிறதே.
கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.
பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும்

அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.

நவீன வசதிகளே சந்தோஷம்என்று
அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது,
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த கோவிலுக்கு போவது,
பிடித்த உடை உடுத்துவது,
பிடித்த உணவு உண்பது
என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.

எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."


நன்றி இணையம்

உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பது தான்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:54 PM | Best Blogger Tips


Image result for அம்பானி மோடிImage result for அம்பானி மோடி
அம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினை அல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பது தான் எதிரிகட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது.

நண்பர் ஸ்ரீராம் பகிர்ந்த பதிவிலே ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும்போது அதுவும் செவ்வாய்க்கு ஒரே முறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும்போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் நடக்கவில்லை என கேட்டு அதுக்கு இஸ்ரோ சுயாட்சி அமைப்பாக இருக்கீறதா எனவும் கேட்டிருந்தார்.

நண்பர்கள் பலரும் ரபேல் பிரச்சினையிலே என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியாமலும் இருக்கிறார்கள் அதிலே என்ன பிரச்சினை என விரிவாக சொல்கிறேன்.

போன வாரம் இஸ்ரோ இரண்டு செயற்கைகோள்களை ஏவியது அது இங்கிலாந்துடையது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட நாட்டிலே இப்போது தனியா ஏவுதளம் எல்லாம் இல்லை. ஐரோப்பா முழுக்க சேர்ந்து ஒரு அமைப்பு வைத்திருக்கிறார்கள். ஏரியான் என. அதிலே முன்பு நாமும் செயற்கைகோள்களை ஏவி வந்தோம். அவர்களோ வருடத்திற்கு ஒரு முறை தான் ஏவமுடியும் என்ற நிலையிலே இப்போது இருக்கிறார்கள்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து இந்த வசதி இருப்பது இந்தியாவிலே. ஆனால் நம்மால் ஒரு போர் விமானம் தயாரிக்க முடியவில்லை. 30 வருடங்களாக தேஜஸ் தயாரிக்கிறேன் என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இருட்டிலே தடவிக்கொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு காலத்திலே நாமும் நாமே போர் விமானம் தயாரித்தோம். ஆனால் இப்போது முடியவில்லை? போர்விமானம் வேண்டாம் மக்கள் பயணிக்கும் விமானம் கூட தயாரிக்க முடியவில்லை. ஹெலிகாப்டர் ம்ஹூம். பிரேசில் கம்பனி ஒன்று பயண விமானங்கள் தயாரித்து இந்தியாவுக்கு விற்கிறது.

விமானம், ஹெலிகாப்டர், கப்பல் விடுங்கள், கேவலம் துப்பாக்கி, காலுக்கு போடு ஷூ கூட இறக்குமதி தான் செய்துகொண்டிருக்கிறோம்.

காலுக்கு போடும் ஷூ தயாரிப்பது இந்திய கம்பெனி அது இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்பு இந்திய ராணுவத்தால் வாங்கப்பட்டது. பரிக்கர் அதை நேரடியாகவே வாங்கினார் ஏன்? இந்திய கம்பெனிக்கு முன்பிருந்த அரசுகள் ஒழுங்காக பணம் கொடுக்காதது மட்டுமல்ல லஞ்சம் அழவேண்டும்.

இதே பிரச்சினை தான் அர்ஜீன் டாங்கியிலும். ஆவடியிலே தயாரிக்கப்படும் டாங்கிகளுக்கு பலமுறை இதை மாத்து அதை மாத்து என சொல்லியே ஓட்டினார்கள்.

இதுக்கெல்லாம் என்ன காரணம்? ஏவுகணை போன்ற மிகவும் முன்னேறிய விஷயங்களை மற்ற நாடுகள் விற்பனை செய்யாது. அதனால் அதை வாங்க முடியாது. கமிஷன் அடிக்க முடியாது. இந்த முன்னேறிய விஷயங்களிலும் ரொம்பவும் முன்னேறிவிடாமல் பார்த்துக்கொள்ளத்தான் நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்தது.

இந்த விமானம், ஹெலிகாப்டர், டாங்கி, பீரங்கி, துப்பாக்கி, அதுக்கு போடும் குண்டுகள் என எல்லாமும் இறக்குமதி செய்யலாம். அதிலே கமிஷனோ கமிஷன் அடிச்சு ஊழல் செய்யலாம் என்று தான் இதுவரை கான்கிரஸ் களவாணிகள் ஆட்சி செய்து வந்தன.

உள்நாட்டு உற்பத்தி என்ற ஒன்றே வளராமல் பார்த்துக்கொண்டதும் இதனால் தான். தனியார் அனுமதிக்கபடவே இல்லை.

ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை. எலன் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் தான் தற்போது உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் வைத்திருக்கிறது. அமெரிக்க அரசு அதிலே யார் வேலை செய்யவேண்டும் செய்ய வேண்டாம் என சில பல கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. அவ்வளவு தான்.

அமெரிக்கா ஏன் உலக வல்லரசு ஆக இருக்கிறது என்றால் அரசு கட்டுப்பாடு விதிப்பது, கண்கானிப்பது என்பதோடு நின்றுகொள்ளும். யார் வேண்டுமானாலும் விருப்பட்ட விஷயங்களை செய்யலாம். கண்டுபிடிக்கலாம். முன்னேறலாம்.

இந்தியாவிலே? நாமெல்லோரும் பரம ஏழைகளாவே விவாசயம் மட்டும் செய்து விவசாயக்கூலியாகவே வாழவேண்டும். எல்லாத்தையும் வெளிநாட்டிலே இருந்து இறக்குமதி செய்து ஊழல் செய்து அதை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தி மக்களை ஏமாற்றி திரும்ப திரும்ப ஆட்சி வரவேண்டும் என்பது தான் எதிரி கட்சிகள் வைத்திருக்கும் திட்டம் கொள்கை எல்லாமும்.

இந்த தனியார் உற்பத்தி என்பதே அதுக்கு ஆப்பு அடிப்பது. ஆங் தனியார் உற்பத்தி செஞ்சா மக்களுக்கு என்ன நன்மை என கேட்டால் அதுக்கும் இப்போதே பதில் சொல்லிவிடுகிறேன்.

இன்றைக்கு நாம் பயனபடுத்தும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் உலகின் பல நாடுகளிலே ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டவையே. இணையத்திலெ இருந்து ஜிபிஎஸ் வரை.

நம் நாட்டிலேயும் பல உதாரணங்கள் இருக்கின்றன. ராக்கெட்களுக்கு என தயாரிக்கப்பட்ட உலோக கலவை கொண்டு நடக்கமுடியாதவர்களுக்கு கருவிகளை செய்து தந்தார் மக்கள் மனதிலே இருக்கும் அப்துல் கலாம். இரும்பை விட உறுதியானது ஆனால் பிளாஸ்டிக்கை விட எடை குறைவானது என இருக்கும் கலவை ஆனது பல இடங்களிலே இன்று பயன்படுகிறது. இந்தியாவிலேயே இன்றைக்கு செல்போன் பேட்டரிகள் தயாரிக்க வந்திருக்கிறோம் என்றால் அதுவும் இதனால் தான்.

நாசா நிறுவனம் தான் கண்டுபிடித்த விஷயங்களை பொதுமக்களிடம் எடுத்து செல்ல தனியார் கம்பெனிகளை ஊக்குவிக்கிறது. அமெரிக்காவிலே இது ஒரு பெரும் வேலை வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் தரும் விஷயம்.

ஆனால் நம் நாட்டிலே? எவன் எக்கேடு கெட்டால் எனன் மக்கள் ஏழைகளாகவே இருந்தால் என்ன? கான்கிரஸுக்கு கமிஷனும் லஞ்சமும் ஊழலும் தானே முக்கியம்.

சரி இதை ஏன் பத்திரிக்கைகள் எழுதாமல் பேசாமல் இருக்கின்றன, கம்மினிஸ்டுகள் பொங்காமல் இருக்கிறன என கேட்கிறீர்களா?

பத்திரிக்கைகளுக்கும் இதிலே பங்கு சரியாக பங்கிடப்பட்டு போய் சேர்ந்துவிடுகீறது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலிலே பத்திரிகைகளுக்கு கொடுத்ததாக இதுவரை வந்திருக்கும் செய்தி 45 கோடி.

கம்மினிஸ்டுகளுக்கு படியளக்கும் ரஷ்யா சீனாவின் மேலாதிக்கம் இந்த ஆயுத தயாரிப்பால் ஒழியும். அதை விட ரஷ்யாவுக்கு இருக்கும் இரண்டாவது ஆயுத விற்பனை. முதல் வியாபாரம் எண்ணெய்யும் எரிவாயு விற்பனை.

செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மேலாதிக்கம் விழுந்தால் சீனாவுக்கு பயங்கர அடிவிழும். சீனா பெரும்பாலான உணவு பொருட்களை அமெரிக்காவிலே இருந்து தான் இறக்குமதி செய்கிறது.

அப்புறம் எப்படி பேசுவார்கள்? இந்த கூடங்குளம் அணு உற்பத்தி நிலையத்திற்கு தேவையான அணு உலைகள் நாம் ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறோம். ஏன்னா இங்கே தயாரிக்க முடியாது என காரணம். ஆனால் அரிஹந்த் போன்ற நீர் மூழ்கி கப்பலிலே வைக்க சிறு அணு உலைகளை நம்மால் தானாகவே தயாரிக்க முடிகிறது.

ஆமாங்க கப்பலிலே பொருத்தி கப்பலை இயக்கும் வகையிலே மின்சாரம் தரக்கூடிய கடலிலே ஓட்டக்கூடிய வகையிலேயான அணு உலையை நாம் தயாரிக்கிறோம். ஆனால் பெரிய அணு உலையை ரஷ்யாவிடமும் அமெரிக்காவிடமும் தான் வாங்க வேண்டும் என எழுதப்படாத சட்டம்.

இப்படி இருந்த போது மோடி என்ன பண்ணினார்?
இனி எல்லாத்தையும் இங்கேயே உற்பத்தி பண்ணு. காசை சம்பாதிச்சு அடுத்தவன் கிட்டே கொடுக்கவேண்டியதில்லை. உற்பத்திக்கு உற்பத்தி ஆச்சு வேலைவாய்ப்புக்கு வேலை வாய்ப்பும் ஆச்சு அப்படீன்னு சொல்லிட்டார்.

சரிங்க ஆனா இந்த எதிரிகட்சிகள் தான் இப்போது ஆட்சியிலே இல்லையே அதுகளுக்கு எப்படி பாதிப்புன்னு கேட்டா சர்வதேச ஆயுத தரகர்கள் இனிமேல் இந்த எதிரிகட்சிகளுக்கு பணம் கொடுக்காதுகள். அது தான் இவ்வளவு பாதிப்பு.

அடுத்த தேர்தலிலே ஜெயிக்க முடியாது என்பது மட்டுமல்ல. இனிமேல் காலாகாலத்துக்கும் இந்தியாவிலே காலூன்ற முடியாத படி பண்ணிட்டார். எனவே பணம் வராது. வரனும் அப்படீன்னா இந்த தனியார் உற்பத்திய தூக்கு அப்பத்தான் மேற்கொண்டு எல்லாமும் என.

அதுக சொன்ன மாதிரி இதுக பேசுதுக.
தனியார் உற்பத்தி கூடாது. 30 வருசமா பல லட்சம் கோடிகளை முழுங்கியும் ஒரு விமானம் கூட தயாரிக்க முடியாத ஹெச் ஏ எல் நிறுவனத்திற்கு ஏன் கொடுக்கலன்னு பொங்குதுக.

கேட்டா ரிலையன்ஸுக்கு என்ன தகுதி இருக்குன்னு கேள்வி.
டாட்டவுக்கு ராணுவ உற்பத்தி என்ன தகுதி இருந்தது? இப்போது பீரங்கிகள் தயாரிகிறது. எல் அண்ட் டி தானகவே முன்னேறும் பீரங்கிகளை கொரிய நிறுவனத்தோடு சேர்ந்து தயாரிக்கிறது. போன வாரம் டாங்கிகளுக்கு தாக்கும் சிறு ஏவுகணையை வெற்றிகரமா பரிசோதிச்சு இருக்காங்க.

விட்டாத்தானே தெரியும் தகுதி இருக்கா இல்லையான்னு?
இல்லாட்டி அரசுக்கு என்ன நட்டம். கொடுத்தா காசு கொடுத்து அரசு வாங்கப்போது இல்லாட்டி இறக்குமதி தான். எப்படியும் இறக்குமதி பண்ணப்போறதுக்கு இங்கே ஒரு வாய்ப்பு கொடுத்தா என்ன?

கணினிக்கு தேவையான சிப்புகளிலே இருந்து எல்லாத்துக்கும் இதே மாதிரி பஞ்சப்பாட்டு பாடி தனியார் கூடாதுன்னு சொல்றது.

ஆனா உபயோகிப்பது எல்லாம் அமெரிக்க தனியார் இறக்குமதி தான். பேஸ்புக் டிவிட்டரிலே இருந்து எல்லாம் தனியாருடையது.

ஆனால் நாம் மட்டும் ஏழைகளாகவே சோத்துக்கு பிச்சை எடுத்துட்டே இருக்கனும் இல்லையா?

ஸ்டெர்லைட்டை மூடிட்டு செம்பிலே இருந்து எல்லாத்தையும் இறக்குமதி செய்யுறது போல. நாம சம்பாதிச்சு அடுத்தவன் கிட்டே கொண்டு கொடுக்கனும்.
இந்த விஷயத்தை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினை அல்ல. 

உள்நாட்டிலே தயாரிக்கவேண்டும் அதை தனியாரும் செய்யட்டும் என மோடி கொண்டு வந்தது தான் பிரச்சினை.
போன வாரம் ஆர் எஸ் எஸ் தலைவர் இதை எளிமையாக விளக்கினார்.

நானே தயாரிப்பதை பக்கத்துவீட்டிலே வாங்கமாட்டேன்.
என்னுடைய கிராமத்திலே கிடைப்பதை பக்கத்து கிராமத்திலே வாங்க மாட்டேன்.

என்னுடைய நாட்டிலே உற்பத்தி ஆவதை இறக்குமதி செய்ய மாட்டேன்

இது தான் சுதேசி வாதம் என சொன்னார். அது தான் இதுகளுக்கு எரியுது.

எனவே தான் ஊழல் கீழல் என குதிக்குதுகள். இதெல்லாம் ஹிந்தி பத்திரிக்கைகளிலே பேசப்படுகிறது. நிர்மலா சீத்தாராமன் விரிவான பேட்டியே கொடுத்திருக்கார்.
நாமே தயாரிப்போம் நாமே முன்னேறுவோம்.


நன்றி இணையம்