அகண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு. . . . .

மணக்கால் அய்யம்பேட்டை | 11:29 AM | Best Blogger Tips
Image result for அகண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் ஒ

இயற்கையாகவே நம் எல்லோருக்கும் பிறர் மேல் அன்பு, அபிமானம், அக்கறை உண்டு. ஒவ்வொருவருக்கும் அந்த அளவின் விகிதாச்சாரம் மாறும்.

இந்த டிவி சீரியல்கள் இருக்கின்றனவே? அவை என்ன செய்கின்றன? மக்களுடைய 'அந்த' அடிப்படைக் குணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. பிழியப் பிழிய அழும் சோகக் காட்சிகள்; கண்ணீர் வடிய வடியப் பார்க்கும் தாய்க் குலங்கள். என்ன காரணம்? அந்த நிழல் பிம்பங்களின் மேல் ஏற்படும் அன்பு, அக்கறை, பாசம். அந்த நிழல் பிம்பங்களின் தியாகமும் சோகமும் இன்னலும் மக்களின் ஆழ்மனதை அப்படியே ஈர்க்கின்றன. “அய்யோ! பாவம்”, என்று அடிமனதிலிருந்து அக்கறை பீறிட்டு எழுகிறது, கண்ணீர் முட்டுகிறது.
Image result for அகண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் ஒ
அந்தக் கண்ணீரின் அளவைப் பொறுத்து தொடரின் 'டிஆர்பி' எகிறி, வேறொருவர் பாக்கெட்டில் பணமாய்க் கொட்டுவது தனிக் கதை.

உலகின் ஏதோவொரு மூலையில் பஞ்சம், இயற்கை சீற்றத்தினால் அழிவு, அதனால் நிர்க்கதியான மக்கள்……. 

எனச்செய்தித்தாளில் படிக்கும் போதும் தொலைக்காட்சியில் காணும் போதும் மனம் பதைத்து உள்ளே வலிக்கிறதே ஏன்? அடிப்படையில் எல்லோருக்கும் உதவ, அனைவரையும் அரவணைக்க மனம் விரும்புகிறது. அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப உதவியானது பொருளாகவோ பணமாகவோ ஆறுதல் வார்த்தைகளாகவோ வெளிப்படுகிறது.
ஆச்சரியமில்லை.

அதுதான் அடிப்படை மனித இயல்பு.

விஷயம் யாதெனில் அப்படி நீங்கள் பிறரிடம் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்துவதைப் போல் பிறர் உங்களிடமும் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்த நீங்களும் ஒரு தகுதியான மனிதனே! இதற்கென நாலைந்து பக்க பயோடேட்டாவும் சிறப்புத் தகுதிகளும் தேவையில்லை. அவையெல்லாம் வேலைக்கு அப்ளை செய்ய மட்டுமே!

இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு தரமான மனிதர். அது போதும். சக மனிதர்களிடமிருந்து அன்பும் பாசமும் பெற அது போதுமானதாகும். அது தான் உங்களது அடிப்படை மதிப்பு.


நன்றி *பெ.சுகுமார்*

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:17 AM | Best Blogger Tips

Image result for modi pm image
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். சில உண்மைகளை எதை கொண்டு மூடினாலும் மறைக்க முடியாது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் சிங்கப்பூரில் காலடி வைக்கையில் ஒரு சிங்கப்பூர் டாலரின் மதிப்பு 24 ரூபாய், பிரதமர் வாஜ்பாய்.

அடுத்து அரியணை ஏறினார் மன்மோகன் சிங். பத்தாண்டு ஆட்சி முடிந்து கிளம்புகையில் 46.6 சொச்சம், இடையே 52 வரை கூட சென்றது.ஒருவேளை 2014 ல் காங்கிரஸே மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் ஒரு டாலர் இந்நேரம் 60 தாண்டி இருக்கும்.

என் போல வெளிநாட்டில் சம்பாதிப்பவர்களுக்கு இவரே பிரதமராக ஆயுளுக்கும் இருந்தாலும் ஆனந்தமே. ஆனாலும் மனம் மோடியையே நாடியது. காரணம் அவரது புடம்போட்ட நேர்மை. தேசமே முதலில் என்னும் பார்வை கூர்மை. குஜராத்தை ஒரு சாதனை மாநிலமாக மாற்றிக்காட்டிய ஆளுமை.

என் நண்பர் சொல்வார் "இந்த ஆள் வந்தால் நமக்கு நஷ்டம், டாலர் ஏறாது". போகட்டுமே, தேசம் ஏற்றம் பெற இதை கூட தாங்கிக்கொள்ளவிட்டால் எப்படி என்று சொல்வேன். அவர் சொன்னது நடந்தது. கிட்டதட்ட முதல் மூன்றரை ஆண்டுகளில் டாலர் மதிப்பில் எந்த ஏற்றமும் இல்லை. சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் டாலர் 44க்கு கீழே விழுந்தது, நானே கூட திட்ட ஆரம்பித்தேன். சமீபத்தில் தான் இது கொஞ்சம்போல ஏற்றம் கண்டது.

எந்த ஆட்சியில் டாலர் மதிப்பு ஒரே நிலையாக இருந்தது எப்போது உயர்ந்தது என்று படம் பார்த்து புரிந்து கொள்ளுங்களேன். இது பத்து வருட புள்ளிவிவரம், பாஜக வெப்சைட்டில் இருந்து எடுக்கவில்லை  http://www.xe.com. உயர்ந்தது சாதனை என்று நினைக்கவேண்டாம். குறைந்தாலோ, நிலையாக இருந்தாலோதான் சாதனை.

மோடி பொறுப்பேற்றதும் கொஞ்சமோ நஞ்சமோ மாற்றங்கள் வரத்தொடங்கின. இந்தியாவின் மதிப்பும் உயர ஆரம்பித்தது. உலக தலைவர்களில் ஒருவராக அவர்களில் முதன்மையானவராக இந்திய பிரதமர் வலம் வருவது பெருமையாக இருந்தது.
Image result for modi pm image
ஊழல் ஊழல் என்று திரும்பிய பக்கமெல்லாம் அடித்த துர்நாற்றம் சுத்தமாக காணாமலே போனது. நோட்டை மாற்றி நாட்டை மாற்றவும் முற்பட்டார். தனக்கும் தன் கட்சிக்கும் அது எத்தனை பாதகம் என தெரிந்தும் துணிந்து செய்தார்.

மோடிக்கு காட்டவேண்டிய விசுவாசத்தை வேறு இடத்தில் காட்டி அதை கொஞ்சம் பிசுபிசுக்க வைத்தது அதிகாரவர்க்கம். ஆனாலும் கறுப்புப்பணம் வைத்திருக்கும் எல்லாரையும் செருப்பால் அடித்த அந்த நிகழ்வு எந்த ஒரு தலைவரும் செய்ய துணியாதது.

இன்னும் GST அமல், ஆதார் கார்ட் இணைக்கப்பட்ட திட்டங்கள், மின்சாரமில்லாத கிராமங்கள், தடையில்லாத மின்சாரம், நீர்வழி சாலை என்று எல்லா பக்கமும் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறது.

இவரை விட்டால் இனி மீண்டும் கொள்ளையடிக்கவே முடியாது என்று நினைக்கும் குள்ளநரிகள் ஒன்று சேர்ந்து சிங்கத்தை சூழ்ந்துகொண்டு தாக்குகின்றன. எந்த திட்டம் போட்டாலும் ஒரு முட்டுக்கட்டை, போராட்டம், ஆர்பாட்டம். இதையும் தாண்டி தான் அவர் நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைக்கிறார்.

ஓட்டே போடாத தமிழகம் அவரை பார்த்து Go Back Modi என்று கொடி பிடிக்கிறது. நமக்கு இவரையெல்லாம் பிடிக்காது, ஊரையே அடித்து உலையில் போட்டவர்கள் தான் வேண்டும். எந்த தொழிலையும் செய்ய விடாமல் தடுப்பவர்கள்தான் வேண்டும். மின்சாரம் என்றால் தினம் மூன்று மணிநேரம் தந்து அதில் பார்க்க இலவச டிவி தரும் கூட்டம்தான் வேண்டும். இன்று பாஜகவின் பின்னடைவு இவர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கும், சந்தேகமில்லை.

துண்டை தவறவிட்ட படையப்பாவாக காட்சி தருகிறார் மோடி. இது தாற்காலிகமானதாக இருக்க வேண்டுவோம். அது மோடிக்கு நல்லதோ இல்லையோ தேசத்துக்கு நல்லது.

எழுத்து
V.
வெங்கடேஷ்
சிங்கப்பூர்



நன்றி இணையம்