மணக்கால் அய்யம்பேட்டை | 11:12 AM | Best Blogger Tips
Image result for ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய...!

உடல் பஞ்ச
பூதங்களால்
ஆனாது...!

ஆன்மா உணர்வு
பூர்வமானது...!

உடலுக்கு
உருவமுண்டு...! 

ஆன்மா ஜோதி
புள்ளி வடிவமானது...!

உடலைப்
பார்க்க முடியும்...!

ஆன்மாவை
பார்க்க முடியாது...!
Image result for ஓம் நமசிவாய
உடல்
ஸ்தூலமானது...! 

ஆன்மா
சூட்சமமானது...!

உடலுக்கு
பெயருண்டு...!

ஆன்மாவிற்கு
பெயரில்லை...!

உடல் ஆண்
பெண் என
வகைப்படும்...!

ஆன்மா ஆணுமல்ல
பெண்ணுமல்ல...!

கண்கள்
காண்கிறது...! 

ஆன்மா
நினைவு
செய்கிறது...!

காதுகள்
கேட்கிறது...!

ஆன்மா
புரிந்து
கொள்கிறது...!

மூக்கு
சுவாசிக்கின்றது...! 

ஆன்மா
நுகர்கின்றது...!

வாய்
உண்கிறது...! 

ஆன்மா
சுவைக்கின்றது...!

தோல்
தொடுகிறது...!

ஆன்மா
ஸ்பரிசிக்கிறது...!

உடலுக்கு
ஐம்புலன்கள்
உண்டு...!

ஆன்மாவிற்கு
அஷ்ட சக்திகள்
உண்டு...!

உடல்
உழைக்கின்றது...! 

ஆன்மா
சிந்திக்கின்றது...!

உடல் உணவைப்
பெறுகிறது...! 

ஆன்மா தூக்கத்தை
பெறுகிறது....!

உடல்
உருவத்தில்
வளர்கிறது...!

ஆன்மா
அறிவில்
வளர்கிறது...!

உடலுக்கு
வைத்தியம்
பார்க்கப்படுகிறது...! 

ஆன்மா
வழிபாடு
தியானம்
செய்கிறது....!

உடல் விபத்தை
சந்திக்கின்றது...! 

ஆன்மா வலியை
அனுபவிக்கின்றது....!

உடலுக்கு
ஆதாரம் சுவாசம்...!

ஆன்மாவிற்கு
ஆதாரம் விருப்பம்...!

உடலுக்கு
கண்களே ஒளி...!

ஆன்மாவிற்கு
ஞானமே ஒளி...!

உடலுக்கு
16
மண்டலங்கள்
உண்டு...!

ஆன்மாவிற்கு
16
குணங்கள்
உண்டு...!

உடல் ஒரு
கருவி...!

ஆன்மா
அதனை
இயக்குபவர்...!

உடல் ஒரு
வீடு...!

ஆன்மா
அதில்
குடியிருப்பவர்...!

உடல் ஒரு
வாகனம்...!

ஆன்மா
அதன்
ஓட்டுனர்...!

உடல் ஒரு
அடிமை...!

ஆன்மா
சுதந்திரமானது...!

உடல் ஒரு
படைப்பு...!

ஆன்மா
படைப்பவர்...!

உடல்
உருவாக்கப்படுகிறது...! 

ஆன்மா ஆதி
அந்தமற்றது...!

உடலுக்கு
தந்தை
வேறுபட்டவர்...!

அனைத்து
ஆன்மாக்களுக்கும்
தந்தை
ஒருவரே...!

உடலுக்கு
இரத்த
சம்பந்தம்
உண்டு...!

ஆன்மாவிற்கு
உணர்வு
சம்பந்தம்
உண்டு...!

உடல்
அழியக்கூடியது...!

ஆன்மா
அழிவற்றது...!

உடல்
எரிக்கப்படுகிறது...! 

ஆன்மாவை
எரிக்க இயலாது...!

உடல்
புதைக்கப்படுகிறது...! 

ஆன்மாவை
புதைக்க இயலாது...!

உடல் பூமிக்குள்
சேர்க்கப்படுகிறது...! 

ஆன்மா ஆத்ம
லோகத்திற்கு
சேர்ந்து விடுகிறது....!

உடல் நினைவு
செய்யப்படுகிறது...! 

ஆன்மா ஆசிர்வதிக்கப்
படுகிறது...!

உடலை
பிரிக்க இயலும்...!

ஆன்மாவை
பிரிக்க இயலாது...!

உடல்
எல்லைக்குள்
உட்பட்டது...! 

ஆன்மா
எல்லைக்கு
அப்பார்பட்டது...!

உடல் ஒரு
அத்தியாயம்...! 

ஆன்மா ஒரு
முழுக்கதை...!

உடலைப்
பற்றியது
பௌதீகம்...! 

ஆன்மாவைப்
பற்றியது
ஆன்மிகம்...!

உடலை மட்டும்
அறிவது
அசுரகுணம்...! 

ஆன்மாவை
அறிவது
தேவகுணம்...!

இறைவன் அருளால்
வாழ்க வளமுடன்...! 

வளர்க அருளுடன்...!

நற்றுணையாவது
நமசிவாயவே...!




நன்றி இணையம்