இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டு..

மணக்கால் அய்யம்பேட்டை | 11:11 AM | Best Blogger Tips

Ship That Sailed Without a Crew for 38 Years / Bright Side

 

இறைவனின் அருட்பார்வை  .

இயல்பான குணங்கள்
மட்டும் தான்.
அனைவருக்குமே
சிறந்த ஆடைகள்.

பிடித்தவர்கள் மீது
வருவது தான் கோபம்.....!!
மற்றவர்கள் மீது
வருவது எரிச்சல்....!!

 வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை - கப்பல் ஒன்று கடலில் வழிதவறி  செல்லும் போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் ...


கப்பல் ஒன்று கடலில்
வழி தவறிச் செல்லும் போது ,பெரும் புயலில் சிக்கி மூழ்கியது... அதில் இருந்த ஒருவன் மட்டும் எப்படியோ தப்பினான்.
அருகிலுள்ள தீவில் அவன் கரை யேறினான்.
Puradsifm - கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி  மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான் ...
இறைவா இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்து விடு.
என வேண்டினான்.ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பேன். என் மனைவி மக்களை பார்க்க வேண்டாமா.” என்று கண்ணீர் விட்டு பிரார்த்தனையும் செய்தான்...!!எந்த உதவியும் அவனுக்கு கிடைக்க வில்லை.

இப்படியே சில நாட்கள் ஓடின.

தன்னைக் காத்துக் கொள்ள,தீவில் கிடைத்த பொருட்கள்,மற்றும் கப்பலின் உடைந்த பாகங்களை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டினான்.
அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள்,மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப் படுத்தி தங்கியும் வந்தான்.
கரையொதுங்கிய திரவியங்களை எடுத்து சென்ற நபர்களை தீவிரமாக தேடும் பொலிஸார்! -  ஜே.வி.பி நியூஸ்
இப்படியே நாட்கள் ஓடின.

இவன் பிரார்த்தனையை மட்டும் விடவே இல்லை.கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை நம்பிக்கையோடு தேற்றிக் கொண்டான். ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்று விட்டு திரும்புகையில்,அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.

பட்ட காலிலே படும் என்பது போல…
எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது. இவன் தங்குவதற் கென்று இருந்த ஒரே ஒரு குடிசையும் , வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரை யாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாமும் போய்விட்டது.இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய் விட்டது.

“இறைவா என்னைக் காப்பாற்றும் படி தானே உன்னை மன்றாடினேன்.நீ என்ன வென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே.
இது தான் உன் நீதியோ. ” என்று கதறி அழுகிறான்.அப்போது ஒரு கப்பலின் பெரும் ஹாரன் சப்தம் இவனை எழுப்பியது. இவன் இருந்த தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது.

அப்பாடா…நல்ல வேளை…ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம்.
யாரோ நம்மைக் காப்பாற்ற வருகிறார்கள்.”என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல் சிப்பந்திகள் அவனை,லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள். தான் இங்கே தனியாக தீவில் மாட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்டான்.

தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்.
யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி,சிக்னல் கொடுக் கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.
அப்போது இவனுக்கு குடிசை எரிந்ததற்கான காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான். அந்த வழியில் கப்பல்கள்  வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் ,தன் நிலை என்னவாகி யிருக்கும் என்று அவனுக்கு அப்போது புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங் களில் நாமும் இப்படித் தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டு விடுகிறோம். ஒரு சில நேரங்களில் நம்மை காக்கவே இறைவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான்.

அவன் தரும் சோதனைகள் அனைத்தும்,நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே . "சோதனை மேல் சோதனை என்றால்" இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்து விட்டது என்றே அர்த்தம்.

*திக்கற்றவர்களுக்கு
              தெய்வமே துணை!*

என் கவலைதனை
நண்பனிடம்
பகிர்ந்து கொண்டேன்
என் மனம் இலேசானது...
அவன் பிறரிடம் அதை
பகிர்ந்து கொண்டான்
அவன் மனம் மகிழ்ச்சி கொண்டது..

 கடலின் எல்லை கூட
முடிந்து விடும்
கற்றலின் எல்லை
எங்கு முடியும் ! 

 

🌷 🌷🌷 🌷  


🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 

"கேரியர்"

மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

 No photo description available.
இந்த பெயரை கேட்டாலே மனம் எத்தனையோ அழகான நினைவுகளை அசை போடும்.
ஓட்டலில் பார்சல் வாங்கி வருவதற்கு,வயலுக்கு சாப்பாடு கொண்டு போவதற்கு,வேலைக்கு செல்பவர்கள் மதிய உணவு எடுத்து செல்வதற்கு ஒரு அற்புதமான விசயம் இந்த கேரியர்.
 
என்ன தான் நமக்கு தெரிந்த உணவாக இருந்தாலும்,கேரியரை கழட்டி ஒவ்வொரு அடுக்காக கழட்டும் போது மனம் மட்டுமல்ல,நாவும் ஆசை கொள்ளும்.
சிறு வயதில் பட்டுக்கோட்டை ஓட்டலில் கேரியர் எடுத்துட்டு போய்தான் பார்சல் சாப்பாடு வாங்கி வருவதுண்டு!
 
அடி அடுக்கில் சாதம்,அடுத்து சாம்பார்,அடுத்து வத்த குழம்பு,ரசம்,மோர் என பட்டியல் நீளும்.
கூடவே பொறியல்களை வாழை இலையில் வைத்து பேப்பரில் மடித்து கொடுப்பார்கள்.
மத்தியானம் பசி நேரத்தில் கேரியரை கழட்டும்போது சாப்பாட்டு வாசம் பசி உணர்வை மேலும் தூண்டி சாப்பாடு தேவாமிர்தமாக இருக்கும்.
 
நாகரீகத்தின் வளர்ச்சியில் கேரி பேக் எனும் அரக்கன் எத்தனை ஆரோக்கியமான விசயங்களை விழுங்கிவிட்டது.
 
இதில் மனிதனின் சோம்பறி தனமும்,பாத்திரம் என்பது பழமை வாதம் என என்ற எண்ணமும் ஒரு காரணம்.
 
"ஏய் தம்பி!!அப்பாவுக்கு கேரியல்ல சோறு வயல்ல கொடுத்துட்டு வாடா"என அம்மா கொடுக்கும் சாப்பாட்டை வயலில் அப்பாவுக்கு கேரியலை கழட்டி போடும்போது அதில் வரும் மீன் குழம்பு வாசமும்,முட்டை அவியலும் வாழை இலை சாப்பாடும் வாழ்வில் மறக்க இயலா பொக்கிசமான நினைவுகள்..,
 

மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:43 AM | Best Blogger Tips

 May be an image of 3 people

மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி?
 
கவியரசர் கண்ணதாசன் அவர்கள்...
 
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது.
 
"அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே" என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! 
 
உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.
 
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோட்சத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.
 
ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
 
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். 
எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், 
 
ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன் போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.
 
எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப் பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள் என்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
 
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது. அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய்போல் இருக்க வேண்டும்.
 
பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும். மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை, வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
 
நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கவியரசர் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டால் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கிவிடுகிறது என்றும்கூறுகிறா ர் கவியரசர் கண்ணதாசன்..
 
#கவிஞர்கண்ணதாசன் #

 

❤️❤️❤️❤️இப்படியும் சில மனிதர்கள்❤️❤️❤️❤️

மணக்கால் அய்யம்பேட்டை | 10:40 AM | Best Blogger Tips

 May be an image of 5 people and text

 
❤️❤️கென்ய ஓட்ட பந்தய வீரர் Abel Mutai, எல்லைக் கோட்டை அடைய சில மீட்டர் தூரம்தான் இருந்தது. 
 
ஆனால் குறியீடுகளைப் பார்த்துக் குழம்பிப் போய், இலக்கை அடைந்து விட்டதாக நினைத்து நின்று விட்டார்.
 
பின்னால் வந்த ஸ்பெயின் நாட்டின் Ivan Fernandez, அதைச் சுதாரித்துக் கொண்டு, Abel ஐ தொடர்ந்து ஓடச் சொல்லி சத்தமிட்டார்.
 
Abel க்கு ஸ்பானிஷ் மொழி தெரியாததால், அவர் சொன்னது புரியவில்லை.
 
அதைப் புரிந்து கொண்ட Ivan Fernandez, Mutai ஐ இலக்குக்கு நேராய் உந்தித் தள்ளினார்.
 
"ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று பத்திரிக்கையாளர்கள் Ivan இடம் கேட்டபோது, 
 
"என்றாவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தித் தள்ளுகிற ஒரு சமுதாயமாக மாறுவோம் என்பதுதான் என் கனவு" என்றார்...!
 
"ஏன் அந்தக் கென்னியரை ஜெயிக்க விட்டீர்கள்?"
 
 என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, "நான் அவரை ஜெயிக்க விடவில்லை,
 
 அவரே வெற்றிக்கு அருகில் வந்து விட்டார். 
 
இந்தப் பந்தயம் அவருடையது" என்றார்....
 
"நீங்கள் ஜெயித்திருக்கலாம்.." என்று 
பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது,
 
அதற்கு Ivan, "அந்த வெற்றியின் சிறப்பு என்னவாக இருக்கும்? இந்தப் பதக்கத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?
 
என் தாய் .. எனது குடும்பம் என்ன நினைப்பார்கள்?"
 
என்றாராம்.
 
நற்பண்புகள், ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 
 
நாம் நம் குழந்தைகளுக்கு எப்படிப் பட்ட பண்புகளை கற்றுக் கொடுக்கிறோம்?
 
எந்த அளவுக்கு மற்றவர்களை, நற்பண்புகளால் ஈர்க்கிறோம்? 
 
நம்மில் பலரும், மற்றவர்களின் பலவீனத்தில் உதவி செய்வதை விட, அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வே எண்ணுகிறோம்.
 
சுயநலமாய் இருப்பதை விட்டு,ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தித் தள்ளுவோம்.
 
நாம் எல்லாருமே வெற்றிக்குத் தகுதி ஆனவர்கள்தான்...!
 
Thanks - Copy from Youtube.com
படித்ததில் பிடித்தது🙏