#இந்தியர்களுக்கு எழுதத் தெரியுமா? அப்படி எழுதத் தெரிந்தால் அதை யாரிடம் கற்றார்கள்? என்று 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி! பல கட்டுரைகளை வெளியிட்டார்கள்.
அதில் பெரும்பாலான ஆராய்ச்சி கட்டுரைகள் இந்தியர்களுக்கு எழுதத்தெரியாது அதை #சுமேரியர்கள் அல்லது #பீனிசியர்கள் இடமிருந்து கற்றார்கள் என்று எழுதி முடித்தார்கள்.
#மார்கசீய_திராவிட வரலாற்று அறிஞர்களும் ஆமாம், ஆமாம் அது உண்மையே என்று முத்திரை குத்தினார்கள். அதுவும் இந்த #பெரியார் அறிவு என்பதே இந்தியாவுக்கு மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது போலவும் நம் முன்னோர்கள் அனைவரும் காட்டு மிராண்டிகள் போலவும் மேடைக்கு மேட முழங்கினான்...
அதாவது கிரேக்கர்கள், எகிப்தியர்கள், சுமேரியர்கள், மாயா இன மக்கள், சீனர்கள் ஆகிய எல்லோரும் எழுத்துக்களைத் தானாக உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள். ‘’முட்டாள் இந்தியர்கள்’’ மட்டும் எதையுமே இறக்குமதி செய்யும் ‘’கடன் வாங்கிகள்’’ என்று முத்திரை குத்தினர். நம்மூர் #திராவிடங்களுக்கும்_அதுகளுக்கும்_இதுகளுக்கும் ஒரே மகிழ்ச்சி. ஆமாம் ஆமாம், ஆரியப் பார்ப்பனர்கள் சைபிரீயவிலிருந்து வந்த காட்டு மிராண்டிகள் என்று மேடை போட்டு முழக்கி வந்தனர்....
உண்மை என்ன?
கடிதம் எழுதும் கலை, 2500 ஆண்டுகளுக்கு முன் எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதற்கு #மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று காவியத்தில் குறந்தது ஆறு எடுத்துக்காட்டுகள் உள்ளது....
#அசோகன் என்னும் மாமன்னன் கல்லிலே எழுத்துக்களைப் பொறித்ததால் நமக்குக் கொஞ்சமாவது தடயங்கள் கிடைத்தன. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கல்வெட்டுகள் இலங்கையிலும் உள்ளது.
காஷ்மீர் முதல் கண்டி வரை எழுத்துக்கள் இருந்தன அது மட்டுமல்ல அதை எல்லோரும் படிக்க முடியும் அளவுக்கு அறிவுத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது நம் முன்னோர்கள் இடத்தில் அப்படி இல்லையானால் #ஆப்கனிஸ்தான் முதல் கர்நாடகம் வரை அசோகன் கல்வெட்டு எப்படி கிடைக்கும்?
அது சரி! 2300 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம் என்ன? நம்மிடையே இருக்கும் #சிந்து_சமவெளி_எழுத்துக்கள் 4000 ஆண்டு பழமை உடையவை! ஆனால் அவர்கள் என்ன எழுதினர் என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை! மேலும் அசோகனுக்கும் சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் இடையே 1500 முதல் 2000 ஆண்டுவரை இடைவெளி இருக்கிறது! இடைபட்ட காலத்தில் இந்தியர்கள் எழுத்தையே மறந்துவிட்டார்களா?
இல்லை! இந்தியர்கள் எழுதிக் கொண்டேதான் இருந்தார்கள். ஆனால் #மரபட்டையிலும், #பனை_ஓலைகளிலும் எழுதினார்கள். அவை சில நூறு ஆண்டுகளுக்கு மேல் அழியக்கூடிய பொருட்கள்! சரி இதற்கு என்ன ஆதாரமென்று நீங்கள் கேட்க கூடும்..
மகாபாரதத்தில் சிசுபாலவாதம் பகுதியில் ருக்மினி, கிருஷ்ண பரமாத்மாவுக்கு எழுதிய #காதல்_கடிதம் பற்றி வருகிறது!
அதுமட்டும் அல்ல பெண்கள் #ரகசிய_மொழியில் (உவமை) எப்படிக் கடிதம் எழுத வேண்டும் என்று 64 கலைகளைப் "நம்ம தோஸ்த்" #காமசூத்திர ஆசிரியர் #வத்ஸ்யாயன_மகரிக்ஷி கற்றுத் தருகிறார்.
ஆக நம்ம கொள்ளு பாட்டிங்க லொல்லு புடிச்சதுங்க,,, ரகசிய காதல் கடிதங்களை எழுதி தள்ளி இருக்கிகுதுங்க! அப்படி என்றால் நம் சமூகத்தில் பெண்கள் அப்பொழுதே கல்வி சுதந்திரம் பெற்று இருந்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. பத்தாம் நூற்றாண்டில் சிலை வடித்த சிற்பிகளும்கூட பெண்கள் கடிதம் எழுதுவது போல சிலை வடித்தானேயன்றி ஆண்கள் எழுதுவது போல வடிக்கவில்லை! (10 ஆம் நூற்றாண்டு சிற்பம் தான் பதிவில் நீங்கள் பார்ப்பது)
கிருஷ்ணர் காலம் கி.மு. 3100-க்கு முன்னர் அதாவது #கலியுகம் தொடங்கியதற்கு முன்னர். அதே காலத்தில் வாழ்ந்த வியாசன் என்னும் மாமுனிவன் மஹாபாரதம் என்னும் உலகிலேயே நீண்ட காவியத்தை எழுதியதை நாம் அறிவோம்.
மஹாபாரதத்துக்கு முந்தி நடந்தது ராமாயணம். அதில் ராமன் என்ற பெயர் அம்புகளில் எழுதப்பட்டதையும், இலங்கைக்கு கடல் பாலம் கட்டுகையில் #ராம என்று எழுதிய கற்கள் மிதந்ததையும் நாம் கதைகளில் படிக்கிறோம். ஆனால் இவைகளுக்கு #தொல்பொருட்துறை சான்றுகள் இல்லாததால் அறிஞர் பெருமக்கள் ஏற்கமாட்டார்கள்,,, பரவாயில்லை போகட்டும்......
இலங்கை வரலாற்று நூல் #மகாவம்சம் எனும் பவுத்த நூலில் வரும் சாட்சியங்களைப் பார்ப்போம்....
மகாவம்சத்தில் அத்தியாயம் 5-ல் ஆசோகனுக்கு வந்த கடிதங்கள் பற்றி சொல்லப்படுகிறது. 84,000 ஊர்களிலும் புத்த விகாரைகள் கட்டி முடிக்கப்பட்ட செய்தி ஒரே நாளில் கடிதங்கள் மூலம் வந்ததாக மகாவம்சம் கூறுகின்றது..
அருமையான #அஞ்சல்துறை அக்காலத்தில் செயல்பட்டது என்பது இதன் மூலம் உறுதி ஆகின்றது! அடேய் #திராவிட அப்பரசட்டிங்களா எழுத்து துறை மட்டும் இல்லை #அஞ்சல்_துறையிலும் "நாமதாண்ட" அட்வான்ஸ்....
ஒரே நேரத்தில் மன்னன் வீட்டில் இத்தனை கடிதங்கள் டெலிவரி ஆயிற்றா? கதை விடாதயா என்று ஏதாவது #திராவிட_குஞ்சி கேள்வி கேட்கலாம் அதுக்கும் பதில் சொல்லிட்டு அடுத்த ஆதாரத்தை பார்க்களாம்...
ஐயா! திராவிட குஞ்சி,,, 84,000 ஊர்கள் என்பது மிகைப்படுத்த எண்ணிக்கையாக இருக்கிறதே என்று அங்கலாய்க்காதே,, இது சாத்தியம் என்பதற்கு நம்ம தமிழ் சங்க இலக்கிய நூலில் இருந்து புரிய வைக்கிறேன், புரிகிறது என்றால் புரிஞ்சிக்கோ இல்லை என்றால்.....
கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடலில் பாரி என்னும் #சிற்றரசன் வசத்தில் இருந்த 300 ஊர்களையும் பாரி வள்ளல் ஏற்கனவே தானம் செய்துவிட்டதாக மூவேந்தர்களுக்குச் செய்தி தருகிறார் கபிலர். #சின்ன_பாரியிடமே 300 ஊர்கள் இருந்தால் ஆப்கனிஸ்தான் முதல் கர்நாடகம் வரை ஆண்ட அசோகனிடம் 84,000 ஊர்கள் இருந்ததில் வியப்பில்லையே. பிற்காலத்தில் வந்த #யுவாங்_சுவாங் போன்ற சீன யாத்ரீகர்களும் இதை உறுதி செய்கின்றனர் ஐயா திராவிட குஞ்சி....
சுவையான காதல் கடிதம்
அத்தியாயம் 22-ல் காதல் கடிதம் அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைச் செய்திகள் வருகின்றன..
அத்தியாயம் 8-ல் 2500 ஆண்டுகளுக்கு முன்னர், வங்க தேசத்தில் இருந்து இலங்கையில் குடியேறிய #முதல்மன்னன் விஜயன் எழுதிய கடிதம் பற்றிய செய்தி கிடைக்கிறது. அவன் முதல் மனைவி #யக்ஷிணி அவளையும் அவள் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் குடும்ப பிரச்சினை காரணமாக வங்க தேசத்துக்கு விரட்டிவிட்டான்! பின்னர் கல்யாணம் கட்டிய #தமிழ்ப்பெண் மூலம் குழந்தை கிடைக்கவில்லை. சாகப்போகும் தருணத்தில் தன் சொந்த நாடான வங்க தேசத்துக்கு கடிதம் அனுப்பி தன் தம்பியை வரவழைத்து முதல் மனைவியின் உறவை புதுப்பிக்க முயற்சி செய்கிறான். இதன் மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த அஞ்சல் சேவையை (தபால் துறை) நாம் அறிய முடிகிறது
இப்படி பல ஆதாரங்கள் இலங்கை வரலாற்று நூலில் இடம் பெற்று இருக்கின்றது..
என்றும்
அன்புடன் அன்புவேல்