*சங்கு சுட்டாலும்*
வெண்மை தரும்
மேன் மக்கள்
மேன் மக்களே
*பிராமணன்* எனும் நான்"
அருமையான படைப்பு
எழுதியவருக்கு நன்றி...
நான் அர்ச்சனை தட்டுடன் நிற்கும் பிராமணன்தான்.
இப்படியே
எலும்பும் கூடுமாக இருந்துவிட்டுப் போகிறேன்…
நான் இப்படியே இருந்துவிட்டுப் போவதில்
உனக்கு சந்தோஷம் என்றால்,
எனக்கு என்ன கவலை.....
நான் தெருவில் கொடி பிடித்து எனக்கு இது வேண்டும்,
அது வேண்டும் என்று கேட்டு போராட மாட்டேன்…
அக்ரஹாரத்து வீடுகளையெல்லாம் அழித்தாகி விட்டாலும்
என்னை அழிக்க இயலாதது வருத்தம் தானோ உனக்கு ?
அதுதான்
பூணூல் அறுத்து, சிரத்தை வெட்ட கிளம்பி விட்டாயே?
நான் இப்படியே இருந்துவிட்டு போவதில் உனக்கு என்ன கவலை…
நான் கடவுளை சிக்கென பிடித்துக் கொண்டவன்.
அறியாமையால் ஏற்படும் மடமை நீங்கப் பெற்றவன்.
மனம் சரியில்லை என்று
TASMAC கடைமுன் மண்டி போட மாட்டேன்…
அன்றைக்கு வெள்ளையன் சூழ்ச்சிக்கு நீ அடி பணிந்ததால், நான் இரையாகிப் போனேன்.
அப்படியும் இந்து தர்மம் காப்பது என்று உறுதிப்பாட்டுடன் இருந்தேன்.
அந்த உறுதிப்பாடு கடவுள் எனக்கு அளித்த வரம்….
இன்று சில வக்கிர எழுத்தாளர்களின் எழுத்துப் பசிக்கும், சில பலரின் வக்கிரப் பேச்சுக்கும் நானே இரையாகிப் போகிறேன்.
ஆனாலும், என் உறுதிப்பாடு என்னை விட்டு போகவில்லை…
அதனால் உனக்கு என்ன நஷ்டம்?
இட ஒதுக்கீட்டில் இடமில்லாத பிறவியாய் இருந்த நான், விடியும் வரை விளக்கு ஒளியில் படித்தும் என் வாழ்க்கை விடியாத இருளாக உள்ளது.
பரவாயில்லை, இருந்துவிட்டு போகட்டும்!
கிடைப்பதை உண்டு வாழ்வை ஓட்டுகிறேன். பட்டினி கிடந்தாலும் பிச்சை எடுப்பது இல்லை…. திருடுவது இல்லை என்று உறுதியாக இருக்கிறேன். என் உறுதிப்பாடு இறைவன் எனக்கு அளித்த வரம்.
என் மதம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.
என்னை இப்படியே இருந்துவிட்டுப் போக விடு….
என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் மிதித்தெழுந்தே செல்கின்றனர்,
பயணத்திற்குரிய படிகட்டுகளாய். அதிலும் எனக்கு சுகம் இருக்கிறது .....
இத்தனை செய்த பின்பும் இன்னும் வந்து நிற்கிறான்.
என் முப்புரிநூலும், சிகையும் அவனுக்கு நன்கொடையாய் வேண்டுமாம்!
என் வீட்டு பெண்களின் தாலி வேண்டுமாம்….!
நம்பிக்கை உள்ளவர்கள் கூட, உங்களுக்காக வளர்க்கப்படும் வேள்வியில் என்னையே தானமாக தள்ளிவிட யத்தனிக்கிறீர்கள், அவன் பேச்சைக் கேட்டு!
என் ஆகமம் என்னோடு உண்டென்றாலும், இறை சேவை செய்யும் உனக்கு, காணி நெல்லிற்கும் உரிமை இல்லை என்கிறாய்........
இவன் செய்வது அத்தனையும் சுலப வேலைகள் என்ற எக்காள பேச்சு என் காதுகளுக்கு கேட்கிறது......
முதல்ல கருவறையுள் போக மத்தவங்கள அனுமதி என்று கேட்கிறாய்…
நல்லது. நீயும் வா என்னோடு.
பிராமணன் என்பது ஒரு தகுதி மட்டுமே.
நீயும் அந்த தகுதி பெற்றிரு.
அதிகாலை எழு…
ஆகமம் பழகு…
தயங்காமல் என் பூஜாரி இனத்திற்குள் வா.
நான் செய்யும் சுலபமான வேலையை நீயும் செய்…
அரசும் உன்னை தடுக்காது. அனைவரும் அர்ச்சகராக ஆகலாம் என்ற சட்டம் உள்ளது.
ஒரு வேளை உணவு மட்டுமே உனக்கு கிடைக்கும். அதனால் வருடத்தில் பாதி நாள் விரதம் அனுசரி...
இருமுறை ஸ்நானமும், மும்முறை ஸந்தியும் மரபாகக் கொள்...
கடவுள் அருகில் நீயிருக்க உறவுகளை புறந்தள்ளு.....
சலுகையாக தட்டில் வரும் சில காசுகளை நாம் பங்கிட்டுக் கொள்ளலாம்......
அரசு சலுகை வேண்டாம், ஆண்டவன் சலுகை போதும் என்று இரு. இப்படியாகிலும் இங்கு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் ஒழியட்டும்.
பார்ப்பனன் என்று ஏளனம் பேசும் உன் சமூகம் நாளை தட்டு ஏந்தி பிழைப்பு நடத்துபவன் என்று உன்னையும் பேசட்டும்!.
முடியுமா உன்னால்?
முடியாது என்றால் பூணூல் அறுக்க புறப்படு…
அரசின் அனைத்து உயர் பதவியிலும் பார்ப்பனன் என்கிறாய்.
தேர்வில் 35 % போதும் என்றாலும் உன்னால் தேற முடியவில்லை. ஒதுக்கீடு இருந்தால் மட்டும் அரசு வேலையை எட்டி பிடிக்க முடிகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள், நாசா இவற்றில் ஒதிக்கீடு தருவானா சாதி அடிப்படையில்? அங்கு மூளைக்கு தான் வேலை. உண்மையை உப்புக்குள் மறைக்க முடியாது….
என் தமிழை கோவிலுக்குள் நுழைய விடாமல் தவிர்த்துவிட்டு, சமஸ்கிருதம் கலக்கிறாய் என்பது உன் அடுத்த குற்றச்சாட்டு.
ஆம், கிருத்துவ வழி பாட்டில் ஆங்கில மொழி கலக்க வில்லையா? அல்லேலூயா என்பது என்ன மொழி.
அதன் பொருள் என்ன அல்லாஹ அக்பர் என்பது என்ன மொழி. அதன் பொருள் அறிந்து தானே இருக்கிறாய்!
தினம் 5 முறை வேற்று மொழியில் கூம்பு ஒலி பெருக்கி வைத்து முழங்கப் படுகிறதே. இதே தமிழ் தேசத்தில் தானே அதுவும் நடக்கிறது. அவர்களிடம் கேட்க திராணி அற்றவன், தானே நீ!
தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் என்னை ஏன் இன்னும் நோகடிக்கிறாய்?
நான் புலியாக இல்லை,
ஆடு போல் சாது என்பதாலா?
மாற்று மத மக்களிடம் உன் கைவரிசையை காட்டு பார்க்கலாம்?செல்லிடத்து செய்யும் அராஜகம் உன் செயல்…..
உலகில் பழைமை வாய்ந்த மொழிகள் 5. அதில் இந்திய திரு நாட்டில் தோன்றிய மொழிகளில் தமிழும் சமஸ்கிருதமும் அடங்கும். இன்று ஆங்கில கலப்பு இல்லாமல் உன்னால் பேச முடிகிறதா?
உன் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வியில் தானே பாடம் சொல்லி கொடுக்கிறாய். அவர்களுக்கு ஹிந்தி பயில வைக்கிறாய். நீ தமிழ் அன்பன், தமிழ் வெறியன். பெயரில் மட்டும்.
நேற்று தோன்றிய அன்னிய நாட்டு மொழி உன்னோடு ஒன்றி விட்ட நிலயில், உலகில் பழைமை வாய்ந்த இந்திய மொழி சமஸ்கிருதம் தமிழில் கலந்து விட்டது என்று கூச்சல் போடுவது ஏன்.?
பிரராண எதிர்ப்பு என்பது உனக்குள் திட்டமிட்டு திணிக்கப்பட்ட வெறுப்பு.
அதன் பின்னால் இருப்பது அடையாள அழிப்பு வரலாற்று துடைப்பு மத ஒழிப்பு மண் பிடிப்பு..
நீ சாதாரணமாக கடந்து போகலாம் ஆனால் ஒரு நாள் தொலைந்து போன மீயூசியங்களில் உனது அடையாளம் கிடக்கும் போது உணர்வாய் அதை தாங்கி பிடித்தது பிராமண வேர்கள் என்று..
அதுவரை அமைதியாய் இருந்துக்கோ..
பிராமண எதிர்ப்பு.?
மனது வலிக்கிறது. இன்னும் என்ன ஏளனம். எக்காளம்?
நீ எதிர்க்க எதிர்க்க இறைவன் என்னை தூக்கி விட்டுக் கொண்டு இருக்கிறான். நீயும் அவன் பாத மலர்களை சிக்கென பிடித்துக்கொள். நற்கதி அடைவாய்.
என்றும் உங்கள்...
செல்வா செல்வம்...
( ஒரு சில வரிகள் மிகைபடுத்தப் பட்டு எழுதியதாக தெரிந்தாலும் )
தனது சமூக நன்மைக்காக எழுதியதில் தவறில்லை .
நன்றி இணையம்