அயோத்தி_நினைவுகள்!!
ஒவ்வொரு_ஹிந்துவும்
தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு
*ஸ்ரீராமஜென்ம பூமி*நமக்கு கிடைக்க காரணமாக இருந்த இந்த நாயகனை நினைவு கூறுவோம்.
ஸ்ரீK_K_நாயர் கண்டங்கலம் கருணாகரன் நாயர் சுருக்கமாக K.K.நாயர் என அழைக்கப்படும் இவர் கேரளா ஆலப்புழா, குட்டன்காடு என்ற சிறிய கிராமத்தில் 1907 செப்டம்பர் 7 ல் பிறந்தவர்
பாரதம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே இங்கிலாந்து சென்று தன் 21 வது வயதில் பாரிஸ்டர் பட்டமும், ICS படித்து மீண்டும் தாயகம் திரும்பினார்.
கேரளத்தில் சிறிது காலம் பணியாற்றி நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர் பெற்ற இவர் மக்களின் சேவகர் என பெயர் எடுத்தவர்.
அதன் பின் 1945 ல் உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியராக சேர்ந்தார். பல இடங்களில் பணியாற்றிய இவர் பைசாபாத் துணை ஆணையர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆக ஜுன் 1, 1949 அன்று பதவியேற்றார்.
அப்பொழுது அயோத்யாவில் குழந்தை ராமர் விக்ரஹம் திடீரென வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து,,,, விசாரித்து அறிக்கை அளிக்க, அப்போதைய பிரதமர் நேரு மாநில அரசிற்கு உத்தரவிட, மாநிலத்தின் முதலமைச்சர் கோவிந்த் வல்லப பந்த் இவருக்கு உத்தரவிட, இவர் தன் கீழ் பணிபுரியும் ஸ்ரீ குரு தத் சிங் என்பவருக்கு அங்கு சென்று ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுகொள்கிறார்.
அந்த சிங் அங்கு சென்று பார்த்து ஓர் விரிவான அளிக்கையை கே.கே நாயருக்கு அளிக்கிறார். அதில் அங்கு ராமர் பிறந்த இடமாக (ராம் லல்லா) ஹிந்துக்கள் வழிபடுகின்றனர். மேலும் மசூதி இருப்பதாக இஸ்லாமியர்கள் பிரச்சனை செய்கின்றனர்.
அது ஹிந்து கோவில் தான். அது சிறிய இடமாக இருப்பதால் அங்கு பெரிய கோவில் கட்டவேண்டும். அதற்கு அரசு நிலம் ஒதுக்க வேண்டும் எனவும், இஸ்லாமியர்கள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் எனக்கூறி அறிக்கையை நாயரிடம் சமர்ப்பித்தார்.
நாயரும் அந்த அறிக்கையின் அடிப்படையில் *இஸ்லாமியர்கள் அங்கு செல்ல 500 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிக்கின்றார். ( இந்த தடை உத்தரவை இன்று வரை அரசாங்கத்தாலோ, நீதிமன்றத்தாலோ நீக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
இதைக்கேட்டநேரு*கொந்தளிக்கின்றார். உடனடியாக *ராம் லல்லாவிலிருந்து ஹிந்துக்களையும், குழந்தை ராமரையும் வெளியேற்ற உத்தரவிடுமாறு மாநில அரசை நிர்பந்திக்க, மாநில முதலமைச்சர் கோவிந்த் வல்லப பந்த்* அவர்கள் நாயர்* அவர்களுக்குஉடனடியாகஹிந்துக்களை*,வெளியேற்றுமாறும், குழந்தைராமரை அகற்றுமாறும் உத்தரவிடுகிறார்.
ஆனால் உத்தரவை அமல்படுத்த மறுத்த நாயர் அவர்கள் மேலும் ஒரு உத்தரவையும் இடுகிறார். *குழந்தை ராமருக்கு தினசரி பூஜை செய்யவும், பூஜைக்கு ஆகும் செலவையும், பூஜை செய்யும் அர்ச்சகருக்கான சம்பளத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
இந்த உத்தரவை கேட்டு மிரண்டு போன நேரு அவர்கள் உடனடியாக இவரை பணியிலிருந்து நீக்க உத்தரவிடுகிறார். பணியிலிருந்து நீக்கப்பட்ட நாயர் அவர்கள் அலகாபாத் (தற்போது ப்ரயாக்ராஜ்) நீதிமன்றம் சென்று தானே அரசுக்கு எதிராக (அதாவது நேருவுக்கு எதிராக) வாதிட்டு வெற்றியும் காண்கின்றார்.
நீதிமன்றம் அவரை அதே இடத்தில் பணியாற்ற அனுமதித்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவு நேருவுக்கு கரியை பூசியது போல இருந்தது. இந்த உத்தரவை கேட்ட அயோத்யா வாசிகள் அவரை தேர்தலில் நிற்க வலியுறுத்தினர்.
ஆனால் நாயர் அவர்களோ, நான் அரசு ஊழியன். தேர்தலில் நிற்க கூடாது என சொல்ல நாயரின் மனைவியை நிற்க வைக்க அயோத்யா வாசிகள் வற்புறுத்தினர். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் உத்திரபிரதேச முதல் சட்டமன்ற தேர்தலில் அயோத்யா வேட்பாளராக திருமதி சகுந்தலா நாயர் களமிறக்கப்பட்டார்.
அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நின்ற வேட்பாளர்களே நாடு முழுவதும் வெற்றி பெற்றனர். ஆனால் அயோத்யா தவிர. அயோத்யாவில் மட்டும் நாயர் மனைவி திருமதி சகுந்தலா நாயரை *எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பல ஆயிரம் வித்தியாசத்தில் தோல்வி யை தழுவினார்.
திருமதி சகுந்தலா நாயர் 1952ல் ஜனசங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து ஜனசங்கத்தை வளர்க்க ஆரம்பித்தார்.
கடும் அதிர்ச்சி அடைந்த நேருவும், காங்கிரஸாரும் நாயர் அவர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்தனர். நாயர் அவர்களும் தன் பதவியை இராஜினாமா செய்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார்.
அந்த நேரம் 1962 வது வருடம் 4 வது பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயம், மக்கள் இவரிடம் வந்து அவசியம் தேர்தலில் நின்று பாராளுமன்றத்துக்கு சென்று நேருவுக்கு முன்பு அயோத்யாவை பற்றி பேச வேண்டும்? என வற்புறுத்தி இவரையும், இவரின் மனைவியையும் தேர்தலில் நிற்க வைத்து,, வெற்றி பெறச்செய்து,,, சரித்திர சாதனை படைத்தனர்.....
1962 ல் பாராளுமன்றத்திற்கு பஹ்ரைச், மற்றும் கைசர்கஞ்ச் என *இரண்டு தொகுதிகளிலும் நாயர் தம்பதிகளை மக்கள் வெற்றி பெறச் செய்தனர் .
மேலும் ஓர் இன்ப அதிர்ச்சியாக இவரின் ஓட்டுநரை பைசலாபாத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பினர்.
ஆனால். அடுத்து இந்திரா ஆட்சியில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி தம்பதிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது . ஆனால் இவர்களின் கைது அயோத்யா ஹிந்துக்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்த, பயந்து போன இந்திரா அரசு இவர்களை சிறையில் இருந்து வெளியே அனுப்பினார். தம்பதிகள் அயோத்யா வந்து மக்கள் பணியை தொடர்ந்து செய்தனர்.
1952 லிருந்து இப்பொழுது வரை அயோத்யா சம்பந்தப்பட்ட சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க வே வெற்றி பெற்று வருகிறது (ஒன்றோ, இரண்டோ தேர்தலை தவிர)
அயோத்யா வழக்கை சுதந்திரத்திற்கு பின் கையாண்டவர் முதலில் நாயர் அவர்களே. முழுக்க இவரே கையாண்டார், இவர் *அதிகாரியாக இருந்து போடப்பட்ட உத்தரவை இன்று வரை ஹிந்து விரோதிகளால் மாற்றவே முடியவில்லை.
அந்த உத்தரவின் அடிப்படையிலேயே பூஜைகளும், மக்களின் குழந்தை ராமர் தரிசனமும் இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
திரு நாயர் 1976 ஆம் ஆண்டு தன் சொந்த ஊருக்கு போக வேண்டும் என மக்களிடம் வேண்ட மக்கள் வேண்டாம் இங்கேயே இருங்கள் எனக்கூறினர். அதை மறுத்த நாயர் *என் கடைசி காலம் என் சொந்த ஊரில் இருப்பதையே விரும்புகிறேன் எனச்சொல்லி மக்களிடமிருந்து விடை பெறுகிறார்.
1977 செப்டம்பர் - 7 ஆம் தேதி தன் சொந்த ஊரிலேயே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பாதக்கமலங்களில் சரணாகதி அடைந்தார். இவரின் இறப்பை கேட்ட அயோத்யா வாசிகள் கண்ணீர் விட்டு கதறினர். இவரின் அஸ்தியை பெற கேரளாவுக்கு ஒரு குழு சென்றது.
அஸ்தியை மிகுந்த மரியாதையுடன் பெற்று, அதை சாரட் வண்டியில் அலங்காரம் செய்து அயோத்யா ஸ்ரீ ராமன் தினசரி நீராடி, *சூரியனை வழிபட்ட சரயுவில் கரைத்து வழிபட்டனர்.
அவரது சொந்த கிராமத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிலம் வாங்கி அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்துள்ளது. K.K நாயர் என்கின்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சிவில் சர்வீஸ் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும், பயிற்சியும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாயர் அவர்களின் முயற்சியாலேயே அயோத்யா ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் நம்மால் வழிபாடு நடத்த முடிந்தது, அவர் நிச்சயமாக தெய்வாம்சம் பொருந்திய நபராகவே அயோத்யா வாசிகளால் பார்க்கப்படுகிறார்.
இவர் இல்லாவிட்டால் இன்று இராம ஜென்ம பூமி நம்மிடம் வந்திருக்குமா? என்பது கேள்விக்குறியே! இன்று நமக்கு ஸ்ரீராம ஜென்ம பூமியை நமக்கு கொடுத்த ஸ்ரீ K.K.நாயர் அவர்களின் புகழ் திக்கெட்டும் ஒலிக்கட்டும்.
ராம் ஜன்ம திருக் கோவில் பூமி பூஜையைக் காண அவர் இல்லை யென்றாலும், நிச்சயம் அவரின் ஆசீர்வாதம், அனுக்கிரஹங்கள் நமக்கு கிட்டும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. 🌹🌹
* *இதனைப் படிக்கும் அனைவரும், தங்களால் முடிந்த வரை பலருக்கும் அனுப்பி இதனைப் படித்துப் பயன்பெற உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thanks & Copy from Web