மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:18 PM | Best Blogger Tips
விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர்.கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது.
சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.

மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
397

வேதங்கள் என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:15 PM | Best Blogger Tips

வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம் ஆகும்.வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை.பண்டைய காலத்தில் ஞானிகளும்,ரிஷிகளும் தவமிருக்கும்பொழுது அவர்கள் வாய்மொழியாக வந்த மந்திரங்களே வேதங்களாக கருதப்படுகின்றன.

இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படுகிறது.
அவையாவன:
· ரிக் வேதம்
· யசுர் வேதம்
· சாம வேதம்
· அதர்வண வேதம்
என்பனவாகும்.

வேதங்களை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்காக செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவுகிறது.

வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு.
1. "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்).

முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் ஓதப்படுகிறது.தனி நபராக ஓதாமல் குழுவாக சேர்ந்து ஓதினால நல்லபலன் கிஅடைப்பதை விஞ்ஞானமும் ஒத்துகொள்கிறது.

உபவேதங்கள்;
1.ஆயுர்வேதம்:- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.
2.தனுர் வேதம்:- யஜøர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது.
3.காந்தர்வ வேதம்:- சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது.
4.சில்ப வேதம்:- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
23

செவ்வாய் தோஷம்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:15 PM | Best Blogger Tips

கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம

ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.

அந்த வகையில் லக்கினம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு, இரண்டாவது இடம், நான்காவது இடம், ஏழாவது இடம், எட்டாவது இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் எனப்படும்.

மேற்கண்ட 2, 4, 7, 8, 12 என ஐந்து இடங்களில் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது பாமரர்களுக்கும் தெரிய வந்ததால் இன்று ஏழைகளும் சுகமாக வாழ செவ்வாயின் அருள் அவசியம் என்பது புரியும். மேலும் 2, 4, 7, 8, 12-ல் பாபக்கிரகங்கள் இருந்தாலும் இதே நிலைதான். இருந்தாலும் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை.

மேலும் சூரியன், குரு, சனி ஆகியோருடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலே தோஷம் இல்லை. இதே நேரத்தில் செவ்வாய் தோஷ அமைப்பு ஆண் பெண் இரு பாலருக்கும் இருந்தால் தோஷம் இல்லை. மேலும் பல காரணங்கள் தோஷம் இல்லை என்பதை புரிந்து அப்படியும் தோஷம் இருந்தால் அதற்கு எளிய பரிகாரம் உள்ளது.

மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.

குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.

சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

2 - இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும்.

பலன் தரும் பரிகாரங்கள்:

துவரை தானம்:

உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

வாழைப்பூத் தானம்:

முழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.

வழிபாட்டு முறை:

செவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடைïறுகளும் இதனால் விளைவதுண்டு.

கோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும்.

இந்த தோஷத்தைத் தன்னிடத்தில் இருந்து விலக்கி கொண்டு விட்டால் இத்தகு தொல்லைகள் வராது. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மௌனம் இருக்க வேண்டும்.

இந்த மௌனம் இருக்க முடியாத படி எத்தனையோ தடங்கல்கள் வரும். தடங்கல்களைத் தோணியாக்கிக் கொண்டு மேலும் அதிலேயே பயணம் செய்யக் கூடாது. தடங்கல்களை எதிர்த்து நின்று மௌனத்தைக் கடைப்பிடிப்பவன் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவான்.

செவ்வாய் தோஷக் காரர்கள் முருகப் பெருமானையும், வளம் தரும் வயிரவக் கடவுளையும் விடாது வழிபட வேண்டும். காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது. முருகன் கோலங்கள் பலவாக இருந்தாலும் தண்டபாணியாக விளங்கும் கோலம் செவ்வாய்க்குச் சிறப்பு.

வயிரவ வடிவங்கள் வெகுவாக இருந்தாலும் க்ஷத்ரபாலர் என்ற அவதூத வடிவம் சிறப்பானது. முருகனையும் க்ஷத்ர பாலனையும் அன்றாடம் தோத்திரங்களாலும் அர்ச்ச னைகளாலும் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார் விஜய்சுவாமிஜி.

பரிகார காலம்:

செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.

பொதுவாகவே செவ்வாய்தோஷம் விசயத்தில் ஜாதகத்தை,நன்றாக ஆராய்ந்து இணப்ப்தே சிற்ப்பாகும்,அப்படி ஆராய்ந்து இணைக்காவிடில் திருமண வாழ்வு பாதிக்கும் என்பது உண்மை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

நாய் வால பிடிச்ச கதை..!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:45 PM | Best Blogger Tips

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்¬கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...

நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.

இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

பனித்துளி சங்கர்
நாய் வால பிடிச்ச கதை..!
-----------------------------------

இன்டர்நெட் மோடத்தைத் திறப்பது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:28 PM | Best Blogger Tips

இணையதள சேவை வழங்குனர்களின்
(Service Providers like
Airtel, Reliance, Docomo,
Mts, Vodafone) Dongle-ஐ
வாங்கினால் அந்தந்த SIM-ஐத் தவிர
வேறு எந்த SIM-யையும் பயன்படுத்த
இயலாதவாறு Program
செய்யப்பட்டிருக்கும்.
வேறு ஒரு நிறுவனத்துடைய SIM-ஐ
Dongle-இல் போட்டால் Unlock
Code கேட்கும். அதில் சரியான
Code-ஐப் போடும்பட்சத்தில் Dongle
திறந்து கொள்ளும்.
இந்த Unlock Code-ஐக்
கண்டுபிடிக்க மிக எளிய வழி உள்ளது.
முதலில் Dongle-ன் 15
இலக்கத்தை கொண்ட IMEI Number-ஐ
கண்டுபிடிக்க வேண்டும்.
இது Dongle-ன் பின் புறத்தில்
காணப்படும். இதை அப்படியே Copy
செய்து பின்வரும் தளத்தில் Paste
செய்ய வேண்டும். http://­
www.wintechmobiles.com/
tools/huawei-code-
calculator/
DONGLE-ன் IMEI எண்ணைக்
கொடுத்து CALCULATE கொடுக்க
வேண்டும். இப்போது Dongle-
க்கு உரிய Unlock Code
கிடைக்கும். அதை அப்படியே Copy
செய்து, வேறு ஒரு நிறுவனத்துடைய
SIM-ஐ Dongle-க்குள்
போட்டு Unlock Code என்ற இடத்தில்
Code எண்ணை Paste செய்தால்
Unlock ஆகிவிடும்.
Thanks to   Suresh Sureshsaro

ஏன் நிம்மதியாக தூங்கமுடியவில்லை?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:24 PM | Best Blogger Tips

 இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு.

சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும்.

30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை தொடங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்த அழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே.

இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி, கணனி பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும்.

தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும்.

இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை தொடங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.

மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், குழந்தைகள் பயங்கரமான கனவுகளால் விழிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கனவு பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மரபு ரீதியான இரவு நேர பய உணர்வும் தூக்கத்தின் எதிரியே. தூக்கத்தில் எழுந்து நடப்பது, தானாகப் பேசுவது போன்ற குறைபாடுகளும் குழந்தைகளிடம் காணப்படலாம். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகள் நிம்மதியான தூக்கம் பெற முடியும்.

பாதுகாப்பு முறை: தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும்.

எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும்.

இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும். தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இன்றி இருத்தல், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தவிர்த்தல், மனக் கவலைகளை ஓரம் கட்டுதல் வேண்டும்.

படுக்கையில் அலுவலகப் பணிகள் செய்வதைத் தவிர்க்கவும். இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும்.மூளையைத் தூண்டும் மருந்துகளைத் தவிர்க்கவும். புகை பிடிப்பதும் நல்லதல்ல. பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொள்ளவும்.

மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
 
ஏன் நிம்மதியாக தூங்கமுடியவில்லை?....B-)

Thanks to சுபா ஆனந்தி 

குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியமான 10 காரணங்கள்.......!!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:18 PM | Best Blogger Tips

உடல் ஆரோக்கியமாக இருக்க பல ஆயத்தங்களை மேற்கொள்கிறோம். இருப்பினும் அதையும் மீறி நம்மை பல நோய்கள் தாக்கவே செய்கின்றன. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், உடலில் நோய் இருந்தால் அது நமக்கே தெரிவது இல்லை. அதற்கு ஓர் உதாரணம் தான் குறைந்த இரத்த அழுத்தம்.

ஹைப்போடென்ஷன் என்றழைக்கப்படும் குறைந்த இரத்த அழுத்தம், ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும், அதற்குப் பின்னும் இரத்தக் குழாய்களின் சுவர்களை எதிர்த்து போராடும் போது, இரத்த அழுத்தம் இயல்பு நிலையை விட குறைவாக இருப்பதால் வருவதாகும். இந்நிகழ்வு உலகத்தில் உள்ள பலத்தரப்பட்ட மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. நம்மில் பலரும் இந்த பிரச்சனையை சந்திப்போம். ஆனால் இது தூக்கமின்மை, நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்.

தொடர்ச்சியாக குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், ஆக்ஸிஜன் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு செல்வதை தடுக்கும். அதனால் பெரும் ஆபத்தாக முடியும். ஏன் உயிரை கூட பறித்து விடும். குறைந்த இரத்த அழுத்தத்தினால் ஏற்பட போகும் பெரிய விபரீதங்களில் இருந்து காக்க, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட அதிமுக்கியமான காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக குறைந்த இரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமான சிலவற்றை காணலாம்.

1) நீர் வறட்சி :

நீர் வறட்சி என்பது அன்றாடம் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. நீடித்த குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு இவையாவுமே நீர் வறட்சி ஏற்பட காரணமாக இருக்கிறது. இதுமட்டுமின்றி அதிக அளவு உடற்பயிற்சி, அதிகமாக வியர்த்து கொட்டுதல் மற்றும் அதிகப்படியான வெப்பத்தினாலும் இது உண்டாகலாம்.

2) இரத்தப் போக்கு :

இரத்தப் போக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ, எப்படி இருந்தாலும் அது குறைந்த ரத்த அழுத்தத்தில் வந்தடையும். இத்தகைய இரத்தப் போக்கானது விபத்து, அறுவை சிகிச்சை அல்லது வேறு காரணங்களால் ஏற்படலாம்.

3) உறுப்பு வீங்குதல்/அழற்சி :

உடம்பினுள் இருக்கும் உறுப்புகள் வீங்கினாலோ அல்லது அழற்சி வந்தாலோ குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடும். இதற்கும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? உறுப்புகள் வீங்கினால் இரத்தக் குழாய்களை விட்டு திரவம் வெளியேறி பாதிப்படைந்த உறுப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களில் சென்றடையும். இது இரத்தத்தை உறிந்து கொண்டு அதன் அளவை குறைப்பதால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

4) உறுதியற்ற இதய தசைகள் :

உறுதியற்ற இதய தசைகளை கொண்டவர்களா? அப்படியானால் குறைந்த இரத்த அழுத்தத்தினால் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. உறுதியற்ற இதய தசைகள் இதயத்தை செயலிழக்கச் செய்து, இரத்தம் அழுத்த அளவையும் குறைக்கும். உறுதியற்ற இரய தசைகள் ஏற்பட காரணம் லேசான மாரடைப்பு தொடர்ச்சியாக வருவதால் அல்லது சில கிருமிகளால் இதய தசைகள் பாதிப்பு அடைவதால் ஆகும்.

5) இதய அடைப்பு :

மாரடைப்பு மற்றும் தமனித் தடிப்பதால் ஏற்படுவது தான் இதய அடைப்பு. இதய அடைப்பினால், மின்னோட்டத்தை இதயத்துக்குள் அனுப்பும் சிறப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் இதயத்திற்கு வர வேண்டிய சில அல்லது அனைத்து மின்சமிக்கைகளும் நின்று விடும். இது மேலும் இயல்பாக நடக்க வேண்டிய சுருங்குதலையும் நடக்க விடாமல் தடுக்கும்.

6) இயல்பு நிலையற்ற வேகமான இதயத் துடிப்பு இதயத் துடிப்பு :

இயல்பற்ற நிலையிலோ அல்லது மிக வேகமாக துடிப்பதனாலோ, இதயக் கீழறைகளும் இயல்பற்ற விதத்தில் சுருங்கும். இதனால் இதயக் கீழறைகள் சுருங்குவதற்கு முன் தேவையான இரத்த அளவை நிரப்ப முடியாமல் போகும். இதனால் அதிக இதய துடிப்பு இருந்தும், இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறும் அளவும் குறையும்.

7) கர்ப்பம் :

குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறீர்களா? அப்போது இரத்த அழுத்தம் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கர்ப்பக் காலத்தில் குறைந்த இரத்த அழுத்தம் இருப்பது சகஜம் என்றாலும், சில சிக்கல்களை தவிர்க்க சோதனை செய்து கொள்வது நல்லது.

8) தீவிர தொற்று :

அழுகச் செய்கின்ற காயங்கள் அல்லது தீவிர தொற்றுக்களால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படலாம். இந்த தொற்று ஏற்பட காரணம் நுரையீரல் அல்லது வயிற்று பகுதியில் இருந்து பாக்டீரியா இரத்த ஓட்டத்தில் நுழைந்துவிடும். நுழைந்த பின் இந்த பாக்டீரியாக்கள் நச்சுத் தன்மையை வெளியிடுவதால், இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்யும்.

9) குறைவான ஊட்டச்சத்து :

அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான உடல் நலம் வேண்டுமானால், வளமான ஊட்டச்சத்து உடலில் இருக்க வேண்டும். அதில் சிறு குறைபாடு இருந்தாலும் சிக்கல்களை ஏற்படுத்தி குறைந்த இரத்த அழுத்தம் வர காரணமாகும்.

10) சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகள் :

ஹைப்போ தைராய்டிசம், ஃபாரா தைராய்டு, சிறுநீரகச்சுரப்பி குறைபாடு, குறைந்த இரத்த சர்க்கரை மற்றும் சர்க்கரை நோய் போன்ற உட்சுரப்புப் பிரச்சனைகள் இருப்பதினால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக இத்தகைய நோள்கள் ஏற்படுவதற்கு சுரப்பியிலிருந்து வெளியாகும் ஹார்மோன் சிக்கல்கள் தான் பெரும் காரணம். ஆகவே இத்தகைய நோய்களினாலும் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும்
 
THANKS TO சுபா ஆனந்தி பக்கம் ' 

வெற்றிலை போடுவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips
Photo: வெற்றிலை போடுவது ஏன்?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது. பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

Via இந்து மத வரலாறு - Religious history of hinduism

பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:05 PM | Best Blogger Tips

 பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

நலம் தரும் நந்திகேஸ்வரர்

நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள்.

பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.

எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.

சோம சூக்தப் பிரதட்சணம்

மற்ற நாட்களால் ஆலயத்தில் மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக சோம சூக்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கதிலும் எதிர்த்துச் சென்று பயமுருத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்சிதான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது.

பிரதட்சண முறை

முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும். இfவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது.

பிரதோஷ வழிபாடு செய்ய மாலயனாதி வானவர்களும் சிவாலயம் செல்வார்கள். ஆதலால் பிரதோஷ நேரத்தில் திருமால் கோயில்களால் வழிபாடு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் மாலை நாலரை, முதல் ஆறுவரை பிரதோஷ நேரமாகும். இது தினப் பிரதோஷம் எனப்படும்.

சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-

1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் - பல வளமும் உண்டாகும்

3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்

4. பழங்கள் - விளைச்சல் பெருகும்

5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

6. நெய் - முக்தி பேறு கிட்டும்

7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்

8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

9. எண்ணெய் - சுகவாழ்வு

10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும் 
 
நன்றி  amilkalanjiyam.com

NET தேர்வு குறித்து முழுமையாக அறிய...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips

தேர்வுகள் பலவிதம் 2 - NET தேசியத் தகுதித் தேர்வு

முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்குத் தகுதியடைவதற்கும் (Lectureship), முனைவர் ஆய்வுப் பட்டப் படிப்புக்குத் தகுதியுடையவர், இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) ஆவதற்கும் பல்கலைக் கழக மாணியக்குழுவால் (UGC - University Grants Commission) நடத்தப்படும் தேர்வு NET - National Eligibility Test.
 
கலைப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வுகளை பல்கலைக் கழக மாணியக்குழு நடத்துகிறது. அறிவியல் பொறியியல் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தேர்வை பல்கலைக் கழக மாணியக்குழுவும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமும் (CSIR - Council of Scientific and Industrial Research) இணைந்து நடத்துகிறது. 

விரிவுரையாளர் பதவிக்கு மட்டுமான தேர்வை எழுத வயது வரம்பு இல்லை. JRF தேர்வை எழுத பொது பிரிவினருக்கு வயது வரம்பு 28 ஆண்டுகள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு மேலும் 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்ச்சி உண்டு. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் அதற்குரிய சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். - முழுமையான வழிகாட்டுதலுக்கு http://bit.ly/160cah1

thanks to Kalvi Vikatan's

தமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips

தமிழ்நாடு சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. தமிழ்நாடு, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டு மலை வாசஸ்தலங்கள் – அறைகூவல் விடுத்து சலனப்படுத்தும் பயணப் பிரதேசங்கள்!

தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலங்களில், முக்கியமாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பெருஞ்சிறப்பு பெற்ற தலங்களில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர்.

நீலகிரியின் மலை வாசஸ்தலங்களான ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகியவை தங்களின் இயற்கை எழில் மற்றும் தேக ஆரோக்கியத்துக்கு உகந்த வானிலை ஆகியவற்றால், சுற்றுலாப் பயணிகளின் அளவில்லா கற்பனா சக்திக்கு உயிரூட்டக்கூடியனவாய், அவர்களுக்கு வரவேற்பு அறைகூவல் விடுக்கின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, தமிழ்நாட்டின், புகழ்பெற்ற மற்றொரு மலை வாசஸ்தலமாகும். அவ்வளவாக யாரும் இதுவரை சென்றிராத கொல்லிமலை மற்றும் வால்பாறை ஆகியவையும் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாப் பயணிகளிடையே பரிச்சயமாகி வருகின்றன.

தமிழ்நாட்டு கடற்கரைகள் – கவர்ந்திழுக்கும் கரையோர வசீகரங்கள்!

தமிழகத்தின் கரையோர சுற்றுலாத்தலங்கள், முடிவின்றி அகல விரிந்திருக்கும் கடல்நீரின் அழகு சூழ, அனைத்து அம்சங்களும் பொருந்தியனவாய், ஒரு முழுமையான கடற்கரை விடுமுறையை அளிக்கவல்லனவாக உள்ளன.

கடற்கரை விடுமுறை என்றாலே, மஹாபலிபுரம் கடற்கரை நம் கண் முன்னே விரியும். மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை, தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருவோர்க்கு பயண விருந்தளிப்பனவாய் உள்ளன.

மஹாபலிபுரம் மற்றும் சென்னை கடல் நீரின் விரிவாக்கமாக விளங்கும் கோவளம் கடற்கரை, அதற்குரிய அழகோடு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.

நாகப்பட்டின மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான சில கரையோர சுற்றுலாத்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கோடியக்கரை, வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் தரங்கம்பாடி ஆகியவற்றை, உள்ளடக்கியுள்ளது.

நாகூர், வங்காள விரிகுடாவின் கரையோரத்தில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள, இனிய முரண்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய நகரமாகும். பூம்புஹார், ஒரு கடற்கரையோர தலமாக இருப்பதோடல்லாமல், வரலாற்றுச் சிறப்பு பெற்று, புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றதாகத் திகழ்கிறது.

கன்னியாக்குமரி, இந்தியாவின் தெற்குக் கடைக்கோடியில், வங்காள விரிகுடா, அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை சங்கமமாகும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது.

இதன் பூகோள அமைப்பு மற்றும் சுண்டி இழுக்கும் சுற்றுலா அம்சங்களினால், இது தமிழ்நாடு சுற்றுலாவின், அதீத மவுசு கொண்ட தலமாக விளங்குகிறது. திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை கடற்கரையோரம் அமைந்துள்ள சில முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய முனைகள் ! கலாச்சார மையங்கள்!

தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்கள், அவற்றின் வலிமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சார மணம் கமழும் தன்மைக்காகவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடையே பெரும் புகழ் பெற்றுள்ளன.

இவ்வகை தலங்களில் முதன்மையானது, செட்டிநாடு பகுதியில், மிகப் பிரபலமாய் இருக்கும் காரைக்குடி ஆகும். இங்குள்ள சமையற்கலை, நெசவுகள், ஏராளமான கோயில்கள் மற்றும் சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள மாளிகைகள், ஆகியவை தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

கொங்கு கலாச்சாரம் தவழும் கோயம்புத்தூர், கோயில் நகரங்களான மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகியவையும் தமிழ் கலாச்சாரத்தின் உறைவிடங்களாக விளங்குகின்றன. இவை, இந்த நவீன யுகத்திலும், கலாச்சாரப் பெருமை பொதிந்து காணப்படுகின்றன.

தமிழ்நாட்டுக் கோயில்கள் – ஆவலை தூண்டும் அற்புதங்கள்!

தமிழ்நாட்டின் கோயில்கள், தமிழ்நாடு சுற்றுலாவின், முத்திரை பதித்த மிக முக்கியமான தலங்களாகும். இங்குள்ள கோயில்களின் கோபுரங்கள் உயர்ந்தோங்கிய வண்ணம், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளும், அடுக்கடுக்கான சித்திர வேலைப்பாடுகள் மற்றும் வடிவங்களும் கொண்டவையாக மிளிர்கின்றன.

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகியவற்றின் தெய்வாம்சம் மற்றும் இவற்றை ஆண்ட அப்போதைய மன்னர்களால் நிறுவப்பட்டுள்ள கட்டிடக்கலை அற்புதங்களை பார்க்கவென்றே சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர்.

தாராசுரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமணஞ்சேரி, திருக்கருக்காவூர் ஆகியன கட்டாயமாக சென்று வரக் கூடிய சில முக்கிய கோயில்களாகும்.

பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு உன்னதமானதோர் சான்றாக, அற்புதமான சிற்ப வடிவங்களை கொண்ட கோயிலாக, உயரிய கட்டிடக்கலை அதிசயமாக விளங்குகிறது.

அலைகளற்ற அமைதியான கடற்கரையில் அமைந்துள்ள இராமேஸ்வரம் கோயில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றை கொண்டுள்ள சிறப்பு வாய்ந்ததாகும். தமிழ்நாட்டில், பாடற்பொருள் சார்ந்த கோயில்கள், ஆன்மீக சுற்றுலாக்களில் முக்கிய இடம் வகிக்கின்றன.

தஞ்சாவூரை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்கள் (ஒன்பது கிரகங்கள்), ஒன்பது கிரகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். இக்கோயில்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஆலங்குடி (வியாழன்), திருநள்ளாறு (சனி), கஞ்சனூர் (வெள்ளி), திருவேற்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (பாம்பு கிரகம்), கீழ்பெரும்பள்ளம் (பாம்பு கிரகம்), சூரியனார் கோயில் (சூரியக் கடவுள்), திங்களூர் (சந்திரன்) மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) ஆகியனவே அந்த ஒன்பது நவக்கிரக கோயில்களாம்.

பஞ்சபூதக் கோயில்கள் (ஐம்பூதங்கள்) – சிவபெருமான், ஐம்பூதங்களின் ஆதாரமாகவும், அவற்றின் திவ்ய தரிசனமாகவும் போற்றப்பட்டதால், இக்கோயில்கள், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும்.

திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன; காளஹஸ்தி மட்டும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.

வீரம் மற்றும் விவேகம் நிரம்பியவராய் வர்ணிக்கப்படும், சுப்ரமண்யர் என்றும் அழைக்கப்படும் தமிழ்க் கடவுளான முருகனின், ஆறு போர் முகாம்களான பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருத்தணி மற்றும் சுவாமிமலை ஆகியவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தனிச்சிறப்புடன், கோயில்களுள் ஐம்பொன்னாய் ஜொலிக்கின்றன.

தமிழ்நாட்டின் நகரங்கள்

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்கள், மாநிலத்தின் வெவ்வேறு ஊர்களுக்கும் செல்வதற்கான முக்கிய பயண தலங்களாக விளங்குகின்றன.

@ Aatika Ashreen.

தமிழ்த் தாத்தா - பேராசிரியர் உ.வெ.சாமிநாத ஐயர்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:15 PM | Best Blogger Tips

உ.வெ.சாமிநாத ஐயர் 
===============

தமிழ்மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர் தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.!

1855,  பிப். 19'ம் நாள், நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில், வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!

அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.  இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கு மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.

அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன்சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் 'சீவகசிந்தாமணி’. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான “பத்துப்பாட்டு’ என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் 'சிலப்பதிகாரம்’, 'மணிமேகலை’ போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அடுத்து 'குறுந்தொகை’ என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 'சங்க நூல்கள்’, 'பிற்கால நூல்கள்’,  'இலக்கண நூல்கள்’,  'திருவிளையாடற் புராணம்’ போன்ற காவிய நூல்களாகும். ஆக மொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் தனது 17 வது வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும்,  சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி  'மகா மகோபாத்யாயர்’ என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு 'தமிழ் இலக்கிய அறிஞர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937ம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, 'இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது’ என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் 'தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1940-ஆம் ஆண்டு 'என் சரித்திரம்’ என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. 

இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942, ஏப். 28  ம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழி போல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

-இராம. அய்யப்பன்
ஆதாரம்: அலைகள் இ-நியூஸ்

உழக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips
உழக்கு என்பது பண்டைத் தமிழர்களின் முகத்தலளவை அலகுகளில் ஒன்றாகும். உலக அளவை முறையில், ஒரு உழக்கின் அளவு 336 மி. லி ஆகும். இந்த உழக்கை நீர், பால், எண்ணெய் போன்ற பாய்மப் பொருள்களை அளப்பதற்கும் நெல், அரிசி, உளுந்து போன்ற தானியங்களை அளப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.

பண்டையத் தமிழர் பயன்படுத்திய முகத்தல் அளவைகள்:

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி அல்லது நாழி
8 படி = 1 மரக்கால் (குறுணி)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

இவ்வாய்ப்பாட்டின் படி:
1 உழக்கு
=10 செவிடு
=2 ஆழாக்கு
=1/2 உரி
= 1/4 படி
= 1/16 மரக்கால் ஆகும்.

நன்றி : வித்துவான் வை. சுந்தரேச வாண்டையார், முப்பது கல்வெட்டுக்கள்

windows 7-ஐ தமிழில் மாற்ற வேண்டுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:10 PM | Best Blogger Tips

கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.

இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.

அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் இந்த இணைப்பில் (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta) சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.

உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.

இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

தகவலுக்கு நன்றி ....
வளரும்-கணினி பக்கம்..

To know the latest trends & fashions like this page
https://www.facebook.com/Nilafashions

மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.

அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்

அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips

கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.

இம் மூலிகை காடுகள்,வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50 வருடங்க ளுக்கு முன்பு குருவிக...்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு , நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.

நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும்.

இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.

உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. "சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.

இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன்கள் :-

இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும்,உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்பு சுவை கொண்டது.

சிறப்பாக பாம்பு விஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில் முறியும்.பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும், மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும்.

விபூதி - சந்தனம் ( அறிவியல் விளக்கம்)

மணக்கால் அய்யம்பேட்டை | 11:27 AM | Best Blogger Tips

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

நன்றி ! தர்மத்தின் பாதையில் பேஸ்புக்கில் இருந்து எடுத்தது