அன்று பற்ற வைத்தது இன்று எரிகிறது?????

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 PM | Best Blogger Tips

 


மத்தியில் ஆளும் பாஜக மேல் சாதாரண பாமரர் கூட வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் எரிபொருள் விலை உயர்வு.  


மூனா கானா பணியாளர்களுக்கு இது அல்வா துண்டு.  "சதம் அடித்தது. சங்கடத்தில் இந்தியா" என்று எதுகை மோனையாக எழுதச் சொல்லவா? வேண்டும்.


எரிபொருள் விலை உயர்ந்தால் அனைத்து விலைகளும் உயரும் என்பது எழுதப்படாத விதி. மறுப்பதற்கில்லை.  ஆனால் அதே எரிபொருள் விலை குறைந்தால் ஏறிய விலைகள் குறையுமா? என்றால் குறையாது. இது இந்தியாவின் வாழ்பவர்களின் விதி என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஆனால் இந்த இடத்தில் தான் நண்பர்கள் சில அடிப்படை விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.


காரணம் மிகச் சிறந்த பொருளாதார மேதை என்று வர்ணிக்கப்படும் மன்மோகன்சிங் செய்த காரியங்கள் என்பது இந்தியாவைப் பாதாளக் குழிக்குள் இறக்கிய செயல்பாடுகளை எவரும் பேசுவதே இல்லை.  மக்களைத் துன்பப்படுத்தக்கூடாது என்ற ஓட்டரசியலில் தாரக மந்திரத்தைக் காங்கிரஸ் கட்சி அவர்கள் ஆண்ட பத்து வருடமும் கையாண்டது. இதனைத் தந்திரமாக வைத்திருந்தார்கள்.


என்ன செய்தார்கள்?


1. பாஜக அரசு கச்சா எண்ணெய் பீப்பாய் 30 டாலருக்கு வந்த கடந்த காலத்தில் கூட  அந்த விலை குறைப்பை மோடி அரசு இந்தியர்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்பது குற்றச்சாட்டு. உண்மை தான். 


காரணம் என்ன?


2. மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த போது எரிபொருள் விலையைக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று சந்தையில் அதிகமான விலைக்கு வாங்கிய போது அதற்குரிய விலையை இங்கே (எதிர்க்கட்சிகள் அச்சுறுதல்) ஏற்றவில்லை. இப்படியே தான் பத்தாண்டுகளும் நகர்த்தி வந்தார்கள். நாட்டின் நிதி நிலைமை தாங்குமா? தாங்காது? என்ன செய்ய முடியும்? உடனே ஆயில் பத்திரங்கள் வெளியிட்டார்கள்.


2008 ஆம் ஆண்டில் (ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டு ஆயிரம்  கோடி ரூபாய்) 1.42 ஆயிரம்  கோடி + மதிப்புள்ள 'ஆயில் பத்திரங்களின்' பொறுப்பை யுபிஏ அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அந்தப் பத்திரங்களில் 70K (எழுபதாயிரம் கோடி) கோடிக்கும் அதிகமான வட்டி செலுத்தப்பட வேண்டும். ஆனால் கூச்சப்படாமல் நாட்டுக்குச் செலவழிக்க வேண்டிய தொகையை வட்டிக்கு செலவழிக்கத் தயாராக இருந்தார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்கள் இவரைச் சிறந்த பொருளாதார மேதை என்று பாராட்டு பத்திரம் வழங்கினார்கள். நாட்டின் நிதி செல்லரிக்கத் தொடங்கியது.


3. ஆட்சிக்கு வருகின்றவர்கள் அடுத்து வருகின்றவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று கஜானாவைச் சுரண்டி துடைத்து எறிவது இங்குள்ள அரசியலில் வாடிக்கை தானே? தமிழ்நாட்டின் கடன் ஆறு லட்சம் கோடி என்பது போல மன்மோகன் சிங் உருவாக்கியிருந்த மோசமான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கிய மொத்தக் கடன் சுமைகள் ஒரு பக்கம்.  மற்றொரு பக்கம் எரிபொருள் விலையைச் சந்தை விலையின் அடிப்படையில் அந்தந்த சமயத்தில் உயர்த்தாமல் குறுக்கு வழிகளைக் கையாண்டார்கள். அதன் பாதிப்பு அனைத்தும் மோடி அரசுக்கு வந்து சேர்ந்தது. இந்த நிமிடம் வரைக்கும் காங்கிரஸ் செய்த எந்த அயோக்கியதனத்தையும் சொல்லி மோடி புலம்பவே இல்லை என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்கவும்.


4. இப்போது, அந்தப் பரம்பரை சுமை (இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டு ஆயிரம்  கோடி ரூபாய்)2.48 ஆயிரம்  கோடி 2026 வரை மோடி அரசு செலுத்த வேண்டும். 2024 ல் பாராளுமன்றத் தேர்தல் வரப் போகின்றது. அடுத்த ஆட்சியிலும் இந்த கடன் சுமை தொடரும் என்பதே உண்மை.


5. வங்கியில் நீங்கள் கடன் வாங்கியிருந்தால் எந்தந்த தேதிகளில் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று ஒரு பட்டியல் தாள் கொடுப்பார்கள். அதே போல இதுவரையிலும் வட்டித் தொகை கட்டியது இனி கட்ட வேண்டியதை எரிபொருள் நிறுவனம்  கொடுத்துள்ளதைப் படித்துப் பாருங்கள்.


6. 1996 முதல் எரிபொருள் என்ற துறையில் மட்டும் இந்தியா வருடந்தோறும் வட்டி என்கிற வகையில் எத்தனை ஆயிரம் கோடி கட்டிக் கொண்டு இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். இது அனைத்தும் நம்முடைய பணம். நம் வசதிகளுக்கு செலவழிக்க வேண்டிய பணம். ஆனால் வட்டியாக மட்டுமே ஆட்சிக்கு வந்தவர்களின் தவறான கொள்கைகளால் இன்று வரையிலும் கட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருங்கள். 2021 மோடி ஆட்சியில் இருக்கும் இன்றைய காலகட்டம் வரைக்கும் வட்டித் தொகை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


7. இன்னமும் உங்களுக்குச் சுருக்கமாக புரிய வைக்க வேண்டும் என்றால் 2019 முதல் 2020 வரை எரிபொருள் விலையை மன்மோகன்சிங் சந்தை விலையில் அடிப்படையில் உயர்த்தாமல் இருந்த காரணத்தால் ஆயில் பத்திரங்கள் என்ற வகையில் செலுத்தப்பட்ட வட்டித் தொகையின் அளவு 9989.96 கோடி.


8.  2020 முதல் 2021 வரைக்கும் செலுத்தப்பட்ட வட்டியின் தொகை அளவு 9989.96 கோடி.


9. 2021 முதல் 2022 வரைக்கும் நாம் செலுத்த வேண்டிய வட்டித் தொகையின் அளவு 9989.96 கோடி.


ஒருவர் ஆட்சியை விட்டு இறங்கி ஏழு வருடங்கள் முடிந்து விட்டது. ஆனால் அவர் உருவாக்கிய பள்ளத்தை ஏழு வருடமாக இட்டு நிரப்பி இன்னமும் நிரப்ப வேண்டியதாக உள்ளது என்றால் எவ்வளவு பெரிய பள்ளத்தை உருவாக்கி விட்டுச் சென்று உள்ளார் என்பதனை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். கற்பனையாக நான் எதுவும் எழுதவில்லை. எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை இணைத்துள்ளேன். 


இது பிசினஸ் லைன் என்ற பத்திரிக்கையில் வெளிவந்த முழுமையான தகவல்களை அதன் துண்டுப் பகுதியை இணைத்துள்ளேன். இது இந்து என் ராம் குழுமத்திலிருந்து வெளிவரும் தினசரி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரும் மோடியைத் திட்டிக் கொண்டே தானே இருக்கின்றார் என்று குழப்பம் வந்தால் நீங்கள் அரசியலில் உள்ள அரிச்சுவடி கூட இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.



நன்றி இணையம்


உளவியல் தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:06 PM | Best Blogger Tips

 


உளவியல் தகவல்கள்


1. _ஏழாண்டுகளுக்கு மேலாக *நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும்* நீடிக்குமாம்._ 


2. _அடிக்கடி *ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.*_ 


3. எல்லாவற்றுக்கும் _எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்க_ ளாம்.


4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது _ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்._ 


5. நாளொன்றுக்கு நான்கைந்து _பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்._ 


6. உங்கள் _மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்._ 


7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.


8. *மிக _விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள்_ தானாம்.* 


9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, _அவர்களுக்குள் காதல் இருக்கிறது._ இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.


10. *இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.* 



11. *ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால், அதை அவர் செய்திருக்கலாம்* என்று

 உளவியல் கூறுகிறது.


12. ஒருவர் *அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் _(ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்)_* என்று அர்த்தம். 


13. *ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.*  


14. ஒருவர் *அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும்.* 


 *15.  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு _இதய நோய்_ வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.*  


 _*16. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6 மணித்தியாளங்கள் (மணிநேரம்) ஆழ்நிலையில் உறங்க வேண்டும் (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.*_ 


_*17. ஒருவர் அதிகமாக  *Negative Thoughts* (முடியாது/கிடைக்காது/இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுபட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் *Negative Thoughts* பேசுபவராக இருப்பார்..💜




நன்றி இணையம்

ஏன் மோடியை ஒரு சாரார்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips

 



ஏன் மோடியை ஒரு சாரார் கொண்டாடுகிறார்கள், மறுசாரார் எதிர்க்கிறார்கள், வெறுக்கிறார்கள்? அவசியம் ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது!


அன்று டாக்டர் ஹெக்டே லண்டனில் ஒரு கான்பரன்ஸுக்கு போய்விட்டு இந்தியா திரும்புகிறார். அதே ஏர் இந்தியா விமானத்தில் மற்றொருவரும் கடைசி நேரத்தில் ஏறுகிறார். அவர் வேறு யாருமல்ல குஜராத்தின் முதல்வர் மோடி என்பதை அறிந்துகொள்கிறார் ஹெக்டே. பயணிகள் இல்லாத விமானத்தில் இவர்கள் இருவர் மட்டுமே! விமானம் கிளம்புகிறது. அந்த விமானத்தின் பயண நேரம் கிட்டத்தட்ட 10 மணி நேரம், கொஞ்ச நீண்ட பயணமே அது!


சிறிது நேரம் கழித்து மோடி எழுந்து சென்று விமான பணியாளர்களிடம் தண்ணீர் கேட்கிறார். அவர்கள் கொடுத்ததும் குடித்துவிட்டு கிளாஸை திரும்ப கொடுத்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்கிறார். பொதுவாக எதுவும் வேண்டுமானால் பெல் அமுக்கினால் விமான பணியாளர்கள்  வந்து சேவகம் செய்வார்கள். அதுவும் முதல்வர் என்றால் ஓடி வந்து விழுந்து வேலை செய்வார்கள். அங்கே ஒரு அதிகாரம், ஆணவம் இருக்கும், ஆனால் அது போன்ற பந்தா என்று ஒன்று இல்லாமல் பணிவான போக்கு மோடியை என் மனதில் உயர்த்தி, நல்லெண்ணத்தை எனக்கு தோற்றுவித்தது. 


சிறிது நேரம் சென்றது, மோடி எழுந்து என் அருகில வந்தார், அறிமுகப்படுத்திக்கொண்டோம். நான் டாக்டெரென்று தெரிந்த பின்னால் அவர் குஜராத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து (Maul Nutrition) குறைவாக இருப்பதையும், அதனால் குழந்தைகள் இறப்பு அதிகமாக இருக்கிறது அதை தவிர்ப்பது எப்படி என்று ஆலோசனைகளும் விளக்கங்களும் கேட்டார். அவர் வெறுமனே பேசாமால நான் சொல்வதை ஆவலோடு குறிப்பெடுத்துக்கொண்டார். உரையாடல் கிட்டத்தட்ட 9 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்தது. மும்பை வந்து சேர்ந்ததும் அவர் அஹமதாபாத் சென்றார், நான் பெங்களூர் வந்தேன். 



இரண்டு மாதங்கள் சென்றது, எனக்கு குஜராத் ஹெல்த் மினிஸ்டரிடம் இருந்து ஒரு போன் வந்தது. Children Maul Nutrition ஐ பற்றி பேச அழைத்தார்கள், முடியுமா என்று கேட்டார். டிக்கெட் அனுப்புங்கள் வருகிறேன் என்றேன். டிக்கெட் வந்தது. முந்தைய நாள் அங்கு சென்ற எனக்கு முறையான வரவேற்பும், தங்குமிட வசதியும் செய்யப்பட்டு இருந்தது. அடுத்த நாள்  காலை 10 மணிக்கு Conference, 9 மணிக்கு கார் வந்தது. 9:45 am அங்கு சென்று சேர்ந்த போது முதலமைச்சரும், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என்னை வெளியே வந்து நின்று வரவேற்றார்கள்.  இது என்னை மேலும் ஆச்சர்ய படுத்தியது ஏனெனில் என் முந்தைய மோசமான அனுபவம் அப்படிப்பட்டது. 


என் நினைவு கொஞ்சம் பின்னோக்கியது. சில வருடங்களுக்கு முன்பு நான் மனிபால் பல்கலைகழகத்திதின் துணை வேந்தராக இருந்த போது கர்நாடக முதல்வர் என்னை சந்திக்க வரச்சொல்லி இருந்தார். காலையில் முதல்வர் அலுவலகம் சென்றேன். கிட்டத்தட்ட நான்கு மணி நேர காத்திருப்பிற்கு பின் என்னை வரச்சொன்னார்கள். முதல்வர் அறைக்கு சென்றேன். பேச தொடங்குமுன்  ஜப்பானில் இருந்து சில Delegate வந்திருந்தார்கள். முதல்வர் என்னை ஓரமாக காத்திருக்க சொல்லிவிட்டு அவர்களுடன் உரையாடல் சென்றது. மேலும் சில மணி நேர காத்திருப்பு. கடைசியில் என்னை அழைத்து நீங்கள் யார் என்று கேட்டார் முதல்வர். நீங்கள்தான் வரச்சொன்னீர்கள் என்று சொன்னேன். எதற்கு என்று தெரியாமல், இல்லையே என்றார். அந்த சந்திப்பு, கிட்டத்தட்ட 12 மணி நேர காத்திருப்பு பயனற்று தொடங்காமலே முடிந்துவிட்டது. அந்த அனுபவத்தால் இந்த வரவேற்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது.


கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு சென்றோம், சரியாக 10 மணி அனைத்து கதவுகளும் மூடப்பட்டது. அதற்கு பின்பு அமைச்சர்கள் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். கான்ஃபரன்ஸ் திட்டமிட்ட நேரத்தில் சரியாக தொடங்கியது, அது மதியம் வரை தொடர்ந்தது. மதிய உணவு வேளை, முடிந்தபின் 15 நிமிடம் இடைவெளி. முடிந்ததும் கான்ஃபரன்ஸ் மீண்டும் தொடர்ந்தது. இப்போது மந்திரிகள், அதிகாரிகள் என்ன புரிந்து கொண்டார்கள் என்று  குறுகிய Riverse Presentation தந்தார்கள். அதன் முடிவில் இருபுறமும் கேள்வி, பதில்களை பரிமாறிக்கொண்டோம். 


அடுத்து மோடி ஏக்‌ஷன் ப்ளான் பற்றி விவாதித்தார்.  முடிவில் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இறக்காமல் இருக்க கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு மதிய உணவு தருவது என்று அங்கேயே முடிவு செய்யப்பட்ட 8 நாட்களில் இது தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆணைகள் அங்கேயே பிறப்பிக்கப்பட்டது ஆச்சரியத்தோடு திரும்பினேன்.


அதன்பின் குஜராத்தில் குழந்தைகள் இறப்பு வெகுவாக குறைந்தது, எனக்கும் மனம் நிறைவடைந்து இருந்தது. நாம் உயர இது போன்றவர்கள் நாடாளும் நேரம் வரவேண்டும் என்று உரையை ஹெக்டே முடித்தார். 


இப்போது புரிகிறது மோடியைப்பற்றி அறிந்தவர்கள் இப்படி அவரை போற்றுவதும், நம்புவதும் ஒரு புறம் இருக்க தவறான எதிர்கட்சிகள், மீடியா போன்ற மோசமான வழிகாட்டிகளால் மறுபுறம் தவறான வழியிலேயே தொடரும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று அச்சத்தில் மோடியை எதிர்க்கிறார்கள். ஏனெனில் மோடியின் கடுமையான உழைப்பு, நேர்மையான வாழ்க்கையால் அவர் உயர்ந்துவிட்டால், அவரைப்பற்றி மக்கள் புரிந்துகொண்டுவிட்டால் இந்த கேவலமான அரசியல்வாதிகளின் எதிர்காலமும், அதை சுற்றி பின்னப்பட்ட மீடியாவும், அதன் பின்னால் கைகோர்த்திருக்கும் எதிரி நாடுகளும் வீழ்ந்துவிடும் என்று நன்கு அறிவர். விளைவு தவறானவர்கள் தண்டிக்கப்பட்டு, மோசமான வழியில் சேர்த்த சொத்துக்களை இழக்க நேரிடலாம் என்ற பயம் கூட.  அவர்கள் தீவிரமாக எதிர்ப்பதில் அவரின் மீதுள்ள அளவு கடந்த பயமே காரணம். 


அவர்கள் பயப்படலாம் அதில் சுயநலம் என்ற காரணம் புதைந்திருக்கிறது ஆனால் நாடு முன்னேற வேண்டும் என்று தவிக்கும் ஒவ்வொரு இந்தியனும் ஏன் பயப்பட வேண்டும்! 


நல்லவரை நாடு அறிந்துகொள்ள, முன்னேற நீங்கள் படித்ததைப்பகிருங்கள்!


ஹெக்டேவின் பேச்சிலிருந்து

Indhea



நன்றி இணையம்