பிரதமர் மோடி ஐீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமர் மோடி ஐீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்திய🌹🌹🌹🌹🌹....❤️🌹🌹....❤️🌹🌹....❤️🌹🌹....❤️🌹🌹....❤️🌹🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:03 AM | Best Blogger Tips


மோடி ஆட்சியில் இந்தியா முன்னேற்றம் அடைந்து உள்ளதா? பின்னோக்கி பயணிக்கிறதா?
2001 - Narendra Modi takes oath as Gujarat CM for first time - YouTube 
ஒரு நாட்டின் உள்நாட்டு வளர்ச்சிக்கு மிக முக்கியமானது உள் நாட்டு வெளிநாட்டு தீவிரவாதத்தை அடக்கி ஆள்வது. அதனால் மோடி அரசு ராணுவத்துக்கும் உளவு அமைப்புகளுக்கும், சட்டத்துக்கு புறம்பான குடியேற்றத்துக்கு எதிரான நடைமுறைகளுக்கும், எல்லை பென்சிங் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
 Karnataka approves AI centre of excellence to drive deeptech innovation in  Bengaluru - The Economic Times
ராணுவ நடவடிக்கைகளில் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க பெங்களூரு BEL-இல் புதிய "செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்" (Centre of Excellence for AI) திறக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்தல், சைபர் பாதுகாப்பு மற்றும் தன்னிச்சையான போர் முடிவுகளுக்கு 75 க்கும் மேற்பட்ட AI அமைப்புகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 
 DRDO conducts long-duration ground test of scramjet engine for hypersonic  missiles - The Economic Times
DRDO அமைப்பு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்க்ராம்ஜெட் (Scramjet combustor) தொழில்நுட்பத்தை ஜனவரி 2026-இல் 12 நிமிடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக சோதனை செய்து, அதிவேக ஏவுகணை தொழில்நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு இணையான சாதனையை செய்துள்ளது. 
 பகுப்பாய்வு - இஸ்ரேலிய காரணி: ஏன் இந்தியாவின் MR-SAM ஆனது உலக ஏற்றுமதி  விற்பனையில் தென் கொரியாவின் Cheongung-II ஐ விட பின்தங்கியுள்ளது ...
ஏவுகணை இடைமறிப்பான்கள் மற்றும் லேசர் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை DRDO வெற்றிகரமாக சோதித்துள்ளது.
கடற்படையில் எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, AI மூலம் இயங்கும் 200 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய நீண்ட தூர "காமிகாஸே" (Kamikaze) தற்கொலைப்படை நீர்மூழ்கி ட்ரோன்களை DRDO வடிவமைத்து வருகிறது. 
 எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் அக்னி 5ஐ இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது
ஒரே ஏவுகணையில் பல அணுஆயுதங்களை சுமந்து சென்று வெவ்வேறு இலக்குகளை தாக்கும் MIRV தொழில்நுட்பத்துடன் கூடிய 'அக்னி-V' ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்தியாவின் 5ஆம் தலைமுறை ரகசிய (Stealth) போர் விமானமான AMCA-வின் முன்மாதிரி (Prototype) தயாரிப்புகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் AI-ஆல் இயங்கும் 'மின்னணு பைலட்' (Electronic Pilot) வசதியும் இடம்பெற உள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் சொந்த யோசனைகள் மூலம் உருவாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளில் அகினியாஸ்த்ரா (Agniastra), பாஸ் அட்டாக் ட்ரோன் (Baaz Attack Drone), வித்யுத் ரக்ஷக் போன்ற சாதனங்கள் தொழிற்சாலை உற்பத்திக்கு மாற்றப்பட்டுள்ளன.
 மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக்  கூட்டணி ஆட்சியின் 12 ஆண்டுகளில், பாரதத்தின் எல்லை உள்கட்டமைப்பு ...
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு மிக முக்கிய மைல்கற்களையும் சாதனைகளையும் எட்டியுள்ளது. 
 14 திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் சீனாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  மாற்றம்
எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் வேகம் ஆண்டுக்கு 600 கி.மீ என்பதில் இருந்து ஆண்டுக்கு 1,200 கி.மீ-க்கும் அதிகமாக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எல்லைப்புற சாலைகள் அமைப்பிற்கு (BRO) கடந்த நிதியாண்டுகளில் இல்லாத அளவாக, 2024-25 நிதியாண்டில் ₹16,690 கோடியும், அதனைத் தொடர்ந்து 2025-26 நிதியாண்டில் ₹17,900 கோடியும் அதிகபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 BRO Unveils Rs 1,200 Crore Push For Roads, Tunnels And Bridges In Ladakh
கடந்த பத்தாண்டுகளில் BRO அமைப்பு 8,500 கி.மீ-க்கும் அதிகமான சாலைகளையும் 400-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பாலங்களையும் கட்டியுள்ளது. தவாங் பகுதிக்கு தடங்கலற்ற போக்குவரத்தை வழங்க உதவும் சேலா சுரங்கப்பாதை (Sela Tunnel) மற்றும் லடாக்கிற்கு அனைத்து காலநிலைகளிலும் செல்லும் வசதியைத் தரும் 4.1 கி.மீ நீளமுள்ள ஷின்கு-லா சுரங்கப்பாதை (Shinku-La tunnel) போன்றவை மிக முக்கிய சாதனைகளாகும். லடாக்கில் உள்ள துர்புக்-சியோக்-தவ்லத் பெக் ஓல்டி (DBO) சாலையில் மிகக் கடினமான நிலப்பரப்பில் சியோக் சுரங்கப்பாதை (Shyok Tunnel) வெற்றிகரமாகக் கட்டப்பட்டுள்ளது. 
 PM மோடி திறந்து வைத்த 36 கோடி ரூபாய் சாலைக்கு வந்த நிலைமை - வைரல் காட்சி  #sathiyamnews #sathiyamtv #news
எல்லைக் கிராமங்களை நாட்டின் "கடைசி கிராமங்கள்" என்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அழைத்து வந்தனர். அவற்றை அப்படி அழைக்காமல், "முதல் கிராமங்கள்" என அறிவித்து மோடி அரசு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. VVP-I மற்றும் VVP-II ஆகிய திட்டங்கள் மூலம் மொத்தம் ₹11,639 கோடி நிதி ஒதுக்கீட்டில் சர்வதேச எல்லைகளில் உள்ள கிராமங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இதுவரை சாலை வசதி இல்லாத 135 கிராமங்களை இணைக்க ₹2,513 கோடி மதிப்பில் 112 சாலைகள் மற்றும் 35 பாலங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
 வினையூக்க பிராந்திய நடவடிக்கை: கடல்சார் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பில்  IORAவின் பங்கு – இந்தியா அறக்கட்டளை
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டபடி, “...இந்த இணைப்புகள் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றின் உயிர்நாடிகளாகும்.” என எல்லைப் பகுதி சாலைகள் ராணுவப் படைகளின் விரைவான நடமாட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் இடம்பெயர்வு (migration) தடுக்கப்பட்டு, அங்கு சுற்றுலா மற்றும் உள்ளூர் வாழ்வாதார வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
 Press Release Page | Press Information Bureau
ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு போக்குவரத்து வசதி மிக முக்கிய பங்களிக்கிறது. இந்திய ரயில்வேயின் அகலப்பாதை (Broad Gauge) நெட்வொர்க்கில் 99.4%-க்கும் அதிகமான பகுதிகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது கார்பன் உமிழ்வைக் குறைத்து பசுமை எரிசக்தி இலக்கை அடைய உதவுகிறது. 
 2025-2026ம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் கையாள்வது 11.7%  அதிகரிப்பு; 16 ஆயிரம் டன் சரக்கு இறக்குமதி செய்து சாதனை - Dinakaran -  Dinakaran
2025-26 நிதியண்டில் சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனை படைத்து, 1,670 மில்லியன் டன் (MT) அளவுக்குச் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளது.w பயணிகள் போக்குவரத்தை பொறுத்த மட்டில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் மற்றும் அமிர்த பாரத் சேவைகள் நாடு முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.
தினசரி சராசரியாக 14 கி.மீ அளவுக்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, நவீன எல்.எச்.பி (LHB) பெட்டிகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே 2025-26 ஆம் ஆண்டில் சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் ரயில்வே 1 ஆயிரத்து 670 மில்லியன் டன்கள் (MT) சரக்குகளை எடுத்துச் சென்று, முந்தைய ஆண்டை விட 3.25% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
 காஷ்மீரில் Article 370 நீக்கம் ! இது அரசியல் பழிவாங்கலா? மாநில உரிமை  என்னாச்சு? 2019 வரை Article 370-ன் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீரின் அரசமைப்புச்  சட்ட ...
ஜம்மு காஷ்மீர் நேரு ஏற்படுத்திய art 370 காரணமாக தனி கொடியுடன் தனி நாடு போல் செயல்பட்டு வந்தது. மோடி அரசால் art 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரயில் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. பல தசாப்தங்களாகத் துண்டிக்கப்பட்டிருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைப்பதில் இந்த அரசு மிகப்பெரிய மைல்கற்களை எட்டியுள்ளது. 
 உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) 28 ஆண்டுகளுக்குப் பிறகு  முழுமையாகச் செயல்படும்
உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம், வரலாற்றிலேயே முதன்முறையாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்திய நிலப்பரப்பின் பிற பகுதிகளுடன் ரயில்கள் மூலம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. 
 The Chenab Bridge, India's engineering marvel, rises 359 metres above the Chenab  River in Jammu and Kashmir. It boasts a record-breaking span of 467 metres,  making it the highest railway bridge globally.
செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் (1,177 அடி) உயரத்தில், உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் (Chenab Rail Bridge) கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது பாரிஸின் ஈஃபெல் கோபுரத்தை விட உயரமானது மற்றும் பொறியியல் துறையின் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் முதலாவது கேபிள் அமைப்பிலான ரயில் பாலம் (Anji Bridge) காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டு, நாட்டின் ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது. கத்ரா முதல் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான பயண நேரம் பாதியாகக் குறைந்துள்ளது. 
 காஷ்மீரின் 'ஆப்பிள் எக்ஸ்பிரஸ்' செப்., 1ல் வெளியாக உள்ளது
பள்ளத்தாக்குக்கு முதன்முறையாகச் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு, சிமெண்ட், நிலக்கரி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல், காஷ்மீரின் முக்கிய வாழ்வாதாரமான ஆப்பிள் பழங்கள் டன் கணக்கில் ரயில்கள் மூலம் இந்தியாவின் பிற சந்தைகளுக்கு விரைவாகவும் குறைந்த செலவிலும் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதார புரட்சி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
 Indian Railways Nears 100% Broad | Akashvani News
ஜம்மு-காஷ்மீரின் அகல ரயில்பாதை (Broad Gauge) நெட்வொர்க் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த புதிய 'ஜம்மு ரயில்வே கோட்டம்' (Jammu Railway Division) உருவாக்கப்பட்டுள்ளது. 
 ஏழு தொழிலாளர்கள் கொல்லப்பட்ட Z-Morh சுரங்கப்பாதை ஜம்மு மற்றும் காஷ்மீரில்  ஒரு முக்கிய மூலோபாய உள்கட்டமைப்பு திட்டம் | காஷ்மீர் வாழ்க்கை ...
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 1,436 கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் காஷ்மீர் துண்டிக்கப்படுவதைத் தடுக்கப் பல பிரம்மாண்ட சுரங்கப்பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜோஜிலா (Zojila Tunnel), ஜெட்-மோர் (Z-Morh) மற்றும் சோனமார்க் சுரங்கப்பாதைகள் மிக வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குப் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டு, மக்களின் அன்றாடப் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது.
 Beyond North and South: India and the future of development
இன்னும் நாட்டின் பிற பகுதிகளில் ஏற்பட்டு உள்ள உள் கட்டமைப்பு மற்றும் முன்னேற்ற திட்டங்கள் குறித்து சொல்வதற்கு ஏராளம் உள்ளது. பதிவு நீண்டுவிடும் என்பதற்காக தவிர்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் உரைகளில், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை விமர்சிப்பவர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது, நாட்டில் ஏதேனும் ஒரு புதிய பெரிய திட்டமோ அல்லது நவீன உள்கட்டமைப்பு வசதிகளோ கொண்டுவரப்படும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் எப்போதுமே "இப்போது இதற்கு என்ன தேவை ஏற்பட்டுவிட்டது?" (What's the need?) என்று கேள்வி எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் "எப்போதுமே 'இதற்கு என்ன தேவை?' என்று கேட்கும் ஒரு கூட்டம் இருக்கவே செய்யும் என்றும் இந்த கேள்விக்கு இந்தியாவின் பதில் என்னவென்றால்... இது நாட்டிற்குத் தேவை என்று கருதினால், நிச்சயம் அதை நாங்கள் உருவாக்குவோம்" என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 விக்சித் பாரத் 2047” என்றால் என்ன? #viksitbhart2047 PMO India Ministry of  Information & Broadcasting, Government of India
வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான அதிநவீனத் திட்டங்களை இந்த அரசு எவ்விதத் தயக்கமுமின்றி உறுதியாகச் செயல்படுத்தும் என்பதை வெளிப்படுத்தவே பிரதமர் மோடி இந்த உரையாடலை மேற்கொண்டார். 
 
தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு பேசு பவர் களை 5 வகையாக பிரிக்கலாம். 
 
முதல் ரகம், மதவெறி பிடித்து, மோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என்று கண்மூடித்தனமாக மோடியை எதிர்ப்பவர்கள் மற்றும் ஆதாரம் அற்ற அவதூறு பரப்புபவர்கள்.
 
இரண்டாவது, அந்த மதவெறிபிடித்து எதிர்ப்பவனை, குளிரவைத்து, தன் பக்கம் இழுத்து அவன் வோட்டை அறுவடை செய்பவன். 
 
உதாரணத்துக்கு சிறுபான்மை அரசியல் செய்யும் …. உள்ளிட்ட அரசியல் கட்சிகள்.
 
மூன்றாவது அந்த ஓட்டு அறுவடை செய்பவனிடம், கூட்டணி வைத்துக் கொண்டு, தேர்தல் செலவுக்கு என்று கொடிகளில் பணம் வாங்கித் தின்பவன். 
 
நான்காவது அந்த வாங்கித்திபவனெல்லாம் தன்னையும் மதவெறியன் என்று சொல்லி விடுவார்கள் என்று பயந்து “நான் நடுநிலை வாதி” என தன்னை மிகவும் நல்லவன் போல் காட்டிக்கொள்ள நினைப்பவன். 
 
ஐந்தாவது இது எதுவுமே தெரியாமல், அறியாமை எனும் மடமையில் ஊறிப் போன கூட்டம். 
 
சினிமாவில் வருவதையும், மற்றவர்கள் பேசுவதையும் கேட்டு தனக்கு தானே ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளும் கூட்டம். இதில் இந்த ஐந்தாவது வகையை சேர்ந்தவனை தவிர்த்து வேறு யாரையுமே பேசி அல்லது இது போன்ற பதிவுகள் மூலம் திருத்த முடியாது. காரணம் அவர்கள் தாங்கள் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார்கள்.

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

பிரதமராகும் முன்னரே, பழங்குடியின சமூகங்களுடன் கொண்ட பயணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:02 PM | Best Blogger Tips

 May be an image of text

 

பிரதமராகும் முன்னரே, நரேந்திர மோடியின் பழங்குடியின சமூகங்களுடன் கொண்ட பயணம் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய அலுவலகங்களில் அல்ல, 
 
குஜராத்தின் சிறு கிராமங்களில் துவங்கி . அவரின் இளம் பிரச்சாரகராக இருந்த காலத்தில், சபர்காந்தா, பரோடா, டாங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜனஜாதியா குடும்பங்களுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களது வீடுகளில் தங்கி,
 
அவர்களுடன் உணவு பகிர்ந்து, அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை நேரடியாகப் புரிந்துகொண்டார்.
 
1980களில் குஜராத்தில் ஏற்பட்ட வறட்சி காலங்களில், பல கிராமங்களுக்கு உதவி சென்றடையாத நிலையில், பழங்குடியின குடும்பங்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்க ஏற்பாடு செய்தார். 
 பிரதமர் நரேந்திர மோதியின் தொட்டுத் தொடரும் தலைப்பாகை பாரம்பரியம் - BBC News  தமிழ்
ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்து, பழங்குடியினக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது போன்ற அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபட வேண்டும் என்று அவர் தன்னார்வலர்களை ஊக்குவித்தார்.
 
சில்வாசாவில் நடைபெற்ற வன்வாசி கல்யாண் ஆஸ்ரமின் ஒன்றுகூடலில், சுமார் ஐம்பது புத்தகங்களை மேற்கோளிட்டு பழங்குடியின கலாச்சாரம் குறித்து அவர் நிகழ்த்திய உரை, அன்றைய ஜனாதிபதி ஜெயில் சிங்கை ஆழமாக கவர்ந்தது.
 
பின்னர் பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்தபோது, புதிய பழங்குடியின தலைவர்களை உருவாக்கி வழிநடத்தினார்.
 
1995 ஆம் ஆண்டில் குஜராத்தின் முதல் Tribal Haq Patra (பழங்குடியினர் உரிமைப் பிரகடனம்) வெளியிட்டார். இதில் வீடு, உடல்நலம் மற்றும் பழங்குடியின மக்களின் கண்ணியமான வாழ்க்கை முக்கியமாக வலியுறுத்தப்பட்டன.
 பிரதமர் நரேந்திர மோதியின் தொட்டுத் தொடரும் தலைப்பாகை பாரம்பரியம் - BBC News  தமிழ்
இந்த அனுபவங்கள் அவருக்கு, பழங்குடியினர் மீது கருணை மட்டுமல்ல, வாய்ப்புகளும் தேவையெனும் நம்பிக்கையை உருவாக்கின.
 
அதன் பின்னரும், ஒவ்வொரு பழங்குடியினர் குடும்பமும் தகுதியான மரியாதையும், சுயநிறைவு கொண்ட வாழ்வையும் பெற வேண்டும் என்ற அவரது உறுதி தொடர்ந்து வலுத்தது.
 
அந்த உறுதி வாழ்நாள் முழுவதும் இன்று வரை பின்பற்றி வருவதை நாடறிந்த உண்மை.
 
Bhartiya Janata Party.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

இந்திய மார்க்கெட்டை குறிவைக்கும் GST 2.0

மணக்கால் அய்யம்பேட்டை | 10:55 AM | Best Blogger Tips

 

 May be an image of 7 people and text that says "Modi promises big Diwali gift! InTOA 24X7 24X In a big cheer for the middle class and common man, Prime Minister Narendra Modi announced upcoming Goods and Services Tax (GST) reforms. Speaking from Red Fort on the occasion of the 79th Independence Day, PM Modi promised a Diwali gift for people in the form of GST reforms and lower tax burden. While speaking the PM said, "This Diwali, am going to make it double Diwali oryou." LAUNDRIMAGIC A'S FIRST 3in1 3 2HOUR WASH+ DRY SDRYINO MODLS IFB &VOICE ENABLED STEAM REFRESH 73วิก"

 

 Double Diwali Gift': PM Narendra Modi Announces Next-Gen GST Reforms From  Red Fort | Republic WorldPM Modi Announces Major GST Overhaul, Says It Will Be a ‘Double Diwali’ for  Citizens

இந்திய மார்க்கெட்டை குறிவைக்கும் GST 2.0 - சோலி முடிஞ்ச மேற்கத்திய மார்க்கெட்!
PM Modi Promises Diwali Gift A GST Overhaul: A Bold Move Towards Economic  Reform
 சில நேரங்களில் நண்பர்களை விட எதிரிகள் நமது வளர்ச்சிக்கும், சாதனைக்கும் ஒரு போட்டியை விதைத்து, கிரியா ஊக்கியாக இருப்பதுண்டு. அமெரிக்கா இந்தியாவின் நண்பராக இருந்துகொண்டே எதிரான செயல்களை ரகசியமாக செய்து கொண்டிருந்ததால், இந்தியா அவர்களை நேரடியாக எதிர்ப்பதில் சிக்கல் இருந்தது. 

அதனால் பல முடிவுகளை அரைகுறையாக கையாள வேண்டியிருந்தது.   அது இந்தியாவின் நோக்கத்தை, வளர்ச்சியின் வேகத்தை குறைக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது.

இப்போது நண்பர் ட்ரம்ப் இந்தியாவிற்கு எதிரானதால், இப்போது இந்தியா முழு வீச்சில் உத்வேகத்தை கொடுத்துள்ளது. பல நேரங்களில் இந்தியாவின் வளர்ச்சி என்பது நம் நாடு பிரச்சினைகளை சந்தித்தபோதே சாதித்தோம் என்று சொல்லும் வரலாற்றில் மிகையில்லை.
Prime Minister Narendra Modi says, “This Diwali, I am going to make it a  double Diwali for you. Over the past eight years, we have undertaken major  reforms in GST. We are
அமெரிக்க, ஐரோப்பிய சந்தையை மையமாக வைத்து நம் தொழில்களும், இண்டஸ்ட்ரிகளும் இயங்கிய வேளையில், அவை எட்டாக்கனியாகி, ஏற்றத்தாழ்வுடன், நிரந்தரமல்ல என்று மாறி வருவதால், இந்தியாவின் சந்தைக்கு முக்கியத்துவத்தை கொடுக்க துவங்கியுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு சந்தை வளர்ச்சியை பாதித்த ஒரு விஷயம், மிக அதிகமாக போடப்பட்ட வரிகள். அதில் இரண்டு விஷயங்கள் நடந்தது, ஒன்று கடுமையான வரியை செலுத்தி அந்த பொருளை வாங்க விருப்பமில்லாமல் பர்மா பஜார் போன்று க்ரே மார்கெட்டில் வாங்க தூண்டியது. ஆம் ₹50,000 டிவிக்கு ₹14,000 வரி செலுத்தினால் வலிக்காதா? அதனால் வரி இழப்பு ஏற்பட்டது.

இரண்டாவதாக அந்த வர்த்தகம் கணக்கில் வரவில்லை என்பதால் அது இந்தியாவின் GDP யில் வரவில்லை. உபியில் ஒரு வருவாய் துறையின் கீழ் இருந்த ஒரு மாவட்டத்தில் எடுத்த சர்வேயில், கணக்கில் வந்த வியாபாரத்தை விட, கிரே மார்க்கெட்டில் 3.7 மடங்கு அதிகம் விற்பனை நடந்தது தெரிய வந்தது. 
A Double Diwali: PM Modi's GST 2.0 Promise and Vision for a Developed India  - News Tap One
அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது அளவுக்கு அதிகமான வரியும், எளிமைப்படுத்தப்படாத சட்டங்களும் முக்கியமான காரணமாக இருந்தது. இதில் வரியை குறைத்து, கிரே மார்க்கெட்டில் நடக்கின்ற வியாபாரத்தின், ஒரு மடங்கை உயர்த்தினாலே இந்தியாவின் GDP 8 ட்ரில்லியனை தாண்டிவிடும். இன்னும் இரண்டு பங்கு தொடரவே வாய்ப்புண்டு.

வரிவிதிப்பை குறைக்க காரணம் தேடும்போது வரிக்கான காரணத்தையும் ஆராய வேண்டும். வரி என்பது இரண்டு காரணத்திற்காக செய்யப்படும் செலவுகளுக்கான மூலாதாரம். அதில் இரண்டு விதமான வரிகள் உள்ளது.
Modi Hints At GST Overhaul: Diwali Gift Of Lower Taxes Coming Soon - BT TV  BusinessToday
ஒரு கிராமத்தில் ரோடு பராமரிப்பது, எலெக்ட்ரிசிட்டி, சுகாதாரம், ஊழியர்கள் சம்பளம், கொடுப்பது என்பது போன்ற தவிர்க்க முடியாத செலவுகள், இதை Operational Expenses (OpEx) என்று சொல்வார்கள். 

வருடா வருடம் இந்த செலவுகள் கூடிக்கொண்டே போகும். அப்போது மக்களுக்கு எந்த புதிய வருமானமும் இல்லாதபோது, அந்த கூடுதல் செலவு, அவர்களின் பணவீக்கத்தால் அதிகரிக்கும் செலவுகள், தேவை அதிகரிப்பு என்று செலவினம் அதிகமாகும். 

அப்படியெனில் அந்த கிராமத்து மக்களின் வருமானத்தை பெருக்கவும், செலவுகளை குறைக்கவும் புதிய முதலீடுகளை செய்ய வேண்டும்.  உதாரணமாக, நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், விவசாய நிலப்பரப்பு குறைந்துவிட்டது. 

அதற்காக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, அமராவதி ஆற்றில் இருந்து உபரி நீரை ஏற்றம் செய்து ஏரிகளை நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது என்று செய்யப்படும் திட்டத்தால், விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். அதனால் அவர்கள் கூடுதல் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதால் வருமானம் உயரும். 

அந்த முதலீடுகள் கூடுதல் வருமானத்தை மக்களுக்கு கொடுப்பதால், கூடுதல் வரியை பஞ்சாயத்துக்கும் கொடுப்பதில் சிரமமில்லை. 

முந்தய அரசுகள் அப்படி வருமானத்தை பெருக்கு வரிகளை பயன்படுத்தாமல், வெறும் செலவினங்களையும், பேருக்காக சில கட்டமைப்பு திட்டங்களையும் போட்டது. ஆனால் அவை சரிவர செயல்படுத்தாததாலும், அந்த பணம் ஊழலால் திட்டத்தை சரியாக முடிக்காததாலும் அது பயன்தரவில்லை

அதனால் இந்திய அரசு, கட்டமைப்புகளை மேம்படுத்தி வருமானத்தை பெருக்க, மக்களிடம் இருந்து வரியை பெற, கடந்த பத்தாண்டுகளாக கூடுதல் வரியை போட்டது. இந்தியாவில் கட்டமைப்பு என்பது பல ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டுவிட்டதால் அதற்கான பெரிய தொகை தேவைப்பட்டது.

அந்த முதலீடுகள் இப்போது அரசுக்கும், மக்களுக்கும் பயன்களை தர ஆரம்பித்தாலும், இன்னும் போதுமானதாக இல்லை. அதனால் மக்கள் வருமானத்தை உயர்த்த இந்த வரிகளை குறைக்கிறது அரசு.
அதில் இதுவரை 5%, 12%, 18%, 28% என்று இருந்த வரிகளை 
6%/12% என்றும் 18% என்றும் இரண்டே இரண்டு ஸ்லாப் மட்டுமே இருக்கும். கூடுதலாக சின் டேக்ஸ் என்று ஒரு வரியுண்டு, அது மது, சிகெரெட், ஆன்லைன் கேம்ஸ் போன்று 7 வகையான செலவுகளை அதன் கீழ் கொண்டு வருகிறார்கள்.

அப்படி கொண்டு வருகிறார்கள் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக்  வருமானம் மத்திய அரசின் GST க்கு கீழே நேரடியாக வந்துவிடும். அப்படியெனில் கணக்கில் வராமல் ஏமாற்றும் லீக்கேஜுகள் குறைக்கப்படுவதால், அரசுக்கு வருமானம் உயரும். 

அதே சமயம், பல பொருட்களுக்கு டேக்ஸ் என்பது மிக அதிகம். உதாரணமாக இன்சூரன்ஸ் எடுப்பது என்பது, ரிஸ்க் கவரேஜுக்காக, அதற்கு 18% வரி போடுவதும், வாகன பராமரிப்பு செலவுககுக்கு 18% வரி போடுவதும் மிக அதிகம். அதனால், மக்கள் லோக்கலாக உள்ளவர்களிடம் பராமரிப்பை செய்வதால் வரி செலுத்துவது இல்லை. 

இதனால் வரி செலுத்தும் நிறுவனங்களுக்கும் வருமான இழப்பு, அரசுக்கும் வரி இழப்பு. இந்த வரியை 6% ஆக குறைக்கும்போது, சர்வீஸ் செண்டர்களுக்கு பராமரிப்பிற்கு கூடுதல் வாகனம் வரும், வருமானம் பெருகும், அரசுக்கு வரியும் அதிகமாகும். ஆனால் வரி குறைத்ததால் ஏற்பட்ட இழப்பை கூடுதல் வால்யூம் மூலம் ஓரளவிற்கு சரி செய்வார்கள். 

அதுமட்டுமல்ல, ஒரு Innova காரின் லாபத்தோடு, அடக்க விலை 14 லட்சம், ஆனால் வரிகளால அதன் விலை 29 லட்சம். அதாவது அதன் வரிகளால் அதன் விலை இரண்டு மடங்காகிவிட்டது. அந்த அடக்க விலையிலேயே பல பொருட்களின் வரியும் அடங்கியுள்ளது. அப்படியெனில் அதன் மீதான வரியை குறைப்பதால்,  காரின் விலை குறையும். 

குறைந்தால் பழைய  வாகனங்களுக்கு பராமரிப்பிற்காக கூடுதல் செலவு செய்வதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குவார்கள். பழைய வாகனங்கள் விலை குறைவதால், புதியதாக சிலர் கார் வாங்குவார்கள். ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரிகள் மூலம் இந்தியா உலகின்னிரண்டாவது பெரிய சாலைகளை கொண்டிருப்பதால், இன்னும் புதிய ரோடுகள் போடப்படுவதால், அந்த கூடுதல் வாகனங்கள் மூலம் மற்ற வருமானங்களும் அதிகரிக்கும். 

இப்போது அமெரிக்க சந்தை மூடப்பட்டால் அதை சமாளிக்க, புதுப்பிக்க, புத்துணர்வு கொடுக்க இந்தியாவின் வரி குறைப்பின் மூலம் மக்களின் செலவினம் அதிகரிக்கும். அதற்காக முக்கிய வரிகளான GST 2.0 என்ற வரி குறைப்பின் மூலம் பெரிய மாற்றத்தை கொண்டுவருகிறது. 

மேலும், நம் மக்கள் ஏன் வெளி நாடு செல்கிறார்கள்? கூடுதல் வருமானம் மட்டுமல்ல, அங்கே இருக்கின்ற உயர்தர கட்டமைப்புகள், வாழ்க்கையின் மேம்பட்ட தரம் போன்றவையால்.  அவை இங்கேயே கிடைத்தால் ஏன் அங்கே செல்ல வேண்டும்?

அதுமட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களால்,  பெரிய சந்தையாக பார்க்கிறார்கள். ஆனால் நாம் மேலை நாடுகளின் மார்க்கெட் பின்னால் அலைகிறோம். 

நாம் மூலப்பொருட்களையும், உதிரி பாகங்களை மேலை நாடுகளுக்கு அனுப்புகிறோம். அவர்கள் அதை பொருளாக்கி அதிக விலைக்கு நம்மிடம் விற்கிறார்காள். இப்போது அமெரிக்கா கூடுதலாக வரி விதிப்பதால், அந்த பொருட்களின் விலை உயரும். அப்போது நாம் அதே பொருளை விலை குறைவாக, நல்ல தரத்தோடு விற்றால், யார் பொருளை வாங்குவார்கள். 

இது ஏற்கனவே மத்திய அரசின் திட்டத்தில் செயல்படுத்த இருந்தாலும், நாம் இன்னும் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் ட்ரம்பரின் மூடிய அமெரிக்க சந்தையால், இந்தியாவின் வருமானம் குறையும் என்பதால், லோக்கல் சந்தைக்கு புத்துணர்வு கொடுக்க போகிறது இந்த வரிகுறைப்பு.

அதன் மூலம் இப்போது இருக்கும் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு வரி விதிப்புகள், 6% , 18% என்று இரண்டே அடுக்காக மாறுகிறது. அதன் மூலம் விலைவாசிகள் பெருமளவில் குறையும் என்பதால் வாங்கும் திறன் உயரும். அதில் சின் டேக்ஸ் என்பது 40% ஆகும், அது சிகெரெட், மது, சூதாட்டம் போன்ற 7 பொருட்களுக்கு மட்டுமேயானது.

Breakup of Tax Components (FY 2024-25)  22 Lakhs Crores - Thanks to Perplexity

The gross GST revenue collected in FY 2024-25 consisted of the following components: 

1) Central Goods and Service Tax (CGST): ₹4,13,776 crore

2)State Goods and Service Tax (SGST): ₹5,16,448 crore

3) Integrated Goods and Service Tax (IGST): ₹11,25,335 crore 

அதில் ஸ்லாப் வாரியாக

18% slab: ~70–75% of GST revenue
28% slab: ~13–15%
12% slab: ~5–6%
05% slab: ~6–8%

இதில் எல்லாவற்றையும் குறைக்கு மாட்டார்கள், சிலவற்றை உயர்த்தவும் வாய்ப்புண்டு. அதன் மூலம் ஒரு பக்கம் இழப்பை கூட்ட, மறுபக்கம் வருமானத்தை உயர்த்த, வரி ஏய்ப்பை தடுக்க என்பதன் மூலம் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுகு வரி விதிப்பார்கள். அதனால் அவர்களின் செலவினம் அதிகரிக்கும். 

அப்போது அமெரிக்க, ஐரோப்பாவில் இருக்கும் தொழில்கள் நசிவடையும், அமெரிக்க கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே நோக்கம் என்பதால், அவை இந்தியாவை நோக்கி. படையெடுப்பார்கள்.

அதனால டாலர் வருமானம் இழப்பு ஏற்படுமே? நாம் டாலருக்கு மாற்றாக ஒரு கரண்சியை நோக்கி செல்கிறோம். இந்திய ரூபாயையே டாலருக்கு மாற்றாக்கலாம்..

இதை தீபாவளி பரிசாக மோடி நமக்கு கொடுக்க அவரது நண்பர் ட்ரம்பின் அழுத்தங்கள் காரணம் என்றால் அதில் தவறில்லை. ஆனால் இதில் மாநில அரசும் முடிவெடுக்கு வேண்டுமே? அதை எப்படி தன்னிச்சையாக மோடி இப்போதே அறிவிக்கலாம்?

இப்போது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது என்பதால், அதை தடுக்கு முடியாது. மாறாக மாநிலங்கள் தங்கள் வருமானத்தை பெருக்காவிட்டால், மற்ற மானிலங்களோடு போட்டியிட்டு அதனால்  நிர்வாகம் செய்ய முடியாது. அதற்கு ஒரு பக்கம் வருமானத்தை கூட்ட வேண்டும், மறுபக்கம், ஊழலை குறைத்தாக வேண்டும்.

எனவே இந்திய சந்தையும், பங்கு மார்க்கெட்டும், தீபாவளி முதல் ஒரு பெரிய உயர்வை சந்திக்கும்

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

 

👇நேரம் ஒதுக்கி படியுங்கள்👇

மணக்கால் அய்யம்பேட்டை | 4:02 PM | Best Blogger Tips
May be an image of 2 people

1. இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது.

2. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது.

3. உலகின் மிகப்பெரிய சிலை கட்டப்பட்டது.

4. உலகின் மிக நீளமான ரயில் நிலையம் கட்டப்பட்டது. 5. உலகின் மிக உயரமான ரயில் பாலம் கட்டப்பட்டது.

6. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை கட்டப்பட்டது.

7. உலகின் மிக நீளமான நதி பயணக் கப்பல் கட்டப்பட்டது.

8. உலகின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை கட்டப்பட்டது.

9. உலகின் மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டது (சூரத் டயமண்ட் போர்ஸ்)

10. 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன.

11. 262* மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.

12. 7*ஐஐடிகள்

13. 15*எய்ம்ஸ்

14. ராமர் கோயில் கட்டப்பட்டது.

15. ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி அலகு கட்டப்பட்டது.

16. இந்தியாவின் முதல் அரை-அதிவேக ரயில்கள். (வந்தே பாரத்)

17. இந்தியாவின் மிகப்பெரிய மாநாட்டு மாநாட்டு கண்காட்சி அரங்குகள். (யஷோபூமி மாநாட்டு மையம்.)

18. இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். (மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.3%)

19. தொடர்ந்து 105 மணி நேரம் 33 நிமிடங்களில் பிட்மினஸ் சாலையை (75 கி.மீ) அமைத்ததற்காக கின்னஸ் உலக சாதனை.

20. 2014 இல் கட்டப்பட்ட சாலைகள் ஒரு நாளைக்கு (2 கி.மீ) இருந்தன, அதே நேரத்தில் 2023 இல் - (68 கி.மீ)

21. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தொலைபேசி உற்பத்தியாளராக மாறியது

22. இந்தியாவை உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியது.

23. கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் இந்தியாவை மிகப்பெரிய நாடாக மாற்றியது.

24. மிகவும் வெற்றிகரமான G20 உச்சிமாநாட்டை நடத்தியது

25. ஆப்பிரிக்க ஒன்றியம் G20 இல் சேர்க்கப்பட்டு அதை G21 (வரலாற்று சிறப்பு) ஆக்கியது

26. 2014 இல் தொடக்க நிறுவனங்கள்- (98 மட்டுமே) 2023 க்குள் தொடக்க நிறுவனங்கள்- (1 லட்சம் +)

27. கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுகள், இளைஞர் விளையாட்டுகள், பல்கலைக்கழக விளையாட்டுகள் இந்தியா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டன.

28. இதன் விளைவாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது (107)

29. மகளிர் இடஒதுக்கீடு மசோதா (வெற்றிகரமாக) நிறைவேற்றப்பட்டது

30. பிரிவு 370 நீக்கப்பட்டது (வெற்றிகரமாக)

31. முத்தலாக் நீக்கப்பட்டது (வெற்றிகரமாக)

32. பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ (வெற்றிகரமாக)

33. மேக் இன் இந்தியா (வெற்றிகரமாக)

34. டிஜிட்டல் இந்தியா (யுபிஐ) (வெற்றிகரமாக)

35. சார் தாம் திட்டம் (வெற்றிகரமாக)

36. ஸ்வச் பாரத் அபியான் (வெற்றிகரமாக)

37. லால்பதியில் விஐபி கலாச்சாரம் ஒழிக்கப்பட்டது. (வெற்றி)

38. பாரத் மாலா (வெற்றி)

39. சாகர் மாலா (வெற்றி)

40. சோஜிலா சுரங்கப்பாதை (வெற்றி)

41. மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (வெற்றி)

42. பணமதிப்பிழப்பு (குறிப்பு பந்தி) படம்

43. அடல் சேது (இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்)

44. சுதர்சன் சேது - இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்

45. OROP செயல்படுத்தப்பட்டது

46. GST போர் விமானங்கள் - 36

47. ஆயுஷ்மான் பாரத் - 30 கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம்.

48. கிராமப்புற தொழில் விற்பனை 128000 கோடி - 4 மடங்கு அதிகரித்துள்ளது

49. பல்கலைக்கழகங்கள் - 723 இலிருந்து 1180 ஆக

50. இஸ்ரோ பட்ஜெட் - 12600 கோடி -

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and monument 🌷 🌷🌷 🌷