தமிழர்கள் கலாச்சாரத்தில் தாலி...!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:59 PM | Best Blogger Tips
தமிழர்கள் கலாச்சாரத்தில் தாலி...! 

சங்க காலத்தில் தாலி அணிந்த பெண்களை வெள்ளிவீதியார் ‘வாலிழை மகளிர்’ என்று குறிப்பிடுகிறார். குறுந்தொகை 386 இந்தத் தாலியைப் ‘புதுநாண்‘ என்றனர். (அள்ளூர் நன்முல்லையார் – குறுந்தொகை 67)

தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் புனித நிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாளச் சின்னமாகும்.

தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணைப் பார்க்கும்பொழுது, கழுத்தில் தாலியைப் பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கிப் போய்விடுவார்.

'தாலம் பனை' என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.

பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.

பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.

விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள். தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.

திருமணநாளன்று சுபமுகூர்த்த நேரத்தில் கூறைச்சீலை உடுத்து மணமகனின் வலது பக்கத்திலே கிழக்கு நோக்கி மணமகள் அமர மணமகன் எழுந்து மணமகளின் வலதுபக்கம் வந்து வடக்குத் திசையை நோக்கி நின்று பெரியோர் ஆசீர்வதித்துக் கொடுத்த மாங்கல்யத்தை எடுத்து, மாங்கல்யம் தந்துநாநே நமஜீவன ஹேதுநா கண்டே பத்தாமி ஸுபுகே சஞ்ஜிவசரதசம்' என்ற மந்திரத்தை உச்சரிக்க, கெட்டிமேளம் முழங்க (அபசகுன வார்த்தைகள் எதுவும் காதில் கேட்காவண்ணம்) பெரியோர்கள் அர்ச்சதை, மலர்கள் தூவ மணமகன் மேற்குத் திசை திரும்பி நின்று மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவான்.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.

தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை,தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற போன்பது குணங்களும் ஒரு ப்[எண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது. 

கணவன் வாழும்வரை மனைவி மார்பில் எப்பொழுதும் இத்தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறு இத்தாலி அணியப்பட்ட நிலைமை மாறி இப்போது அழகுசாதனமாக்கப்பட்டு விட்டது. தமிழர் கலாசார சின்னத்துள் ஒன்றாகக் கருதப்படும். இத் தாலிக்கு ஒரு மகத்துவமும் உண்டு. மார்பிலே உயிரோட்டம் உள்ள இதயத்தில் இத் தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபக்சர் முறைபோல் தொழிற்படுகின்றதாம். எனவே, தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரம் அன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்ல வேண்டும். கலாசார விழுமியங்கள் காரணம் இல்லாமல் தோன்றவில்லை. அது கால சூழலுக்கேற்ப கட்டிக் காக்க வேண்டியதும் அவசியமே.

தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.

Via FB தமிழ் தந்த சித்தர்கள்

வயிற்று நோயும், தேனின் பயனும்-பாட்டி வைத்தியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 PM | Best Blogger Tips
வயிற்று நோயும், தேனின் பயனும்-பாட்டி வைத்தியம்:-

* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.

* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.

* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.

* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.

* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.

* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.

* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.

* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.

குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். "ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்" என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல் வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.

* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.

* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.

* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.

* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.

* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.

* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.

* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.

குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். "ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்" என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல் வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
 
Via FB Karthikeyan Mathan

குழந்தை வளர்ப்பு !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 PM | Best Blogger Tips
* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.

* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.

* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.

* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.

* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.

** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள். —
சுபா ஆனந்தி* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.

* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.

* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.

* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.

* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.

** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

Via FB சுபா ஆனந்தி

ஓம் என்னும் ப்ரணவம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:56 PM | Best Blogger Tips

ஓம் என்பது ப்ரணவம்
ப்ரணவம் என்பது எந்த ஒரு ஒலிக்கும் காரணமாக இருப்பது ப்ரணவம் எனப்படும். படைப்பு அனைத்தும் ஓம் என்ற சொல்லில் அடங்கும் ஓம் படைப்பின் ரகசியம் ஆகும் ஓம் என்பதை பிரித்தால் அ + உ + ம் என்று பிரிக்கலாம்.

அ என்பது படைத்தல் / பிரம்மா / இறந்தகாலம்.
உ என்பது காத்தல் / விஷ்ணு / நிகழ்காலம்
ம் என்பது அழித்தல் / சிவன் / எதிர்காலம்

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் மூன்று தொழிழுக்கு உட்பட்டு இருக்கும். அதாவது உலகத்தில் தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்தே ஆக வேண்டும் என்பது நியதி . அதனை விளக்குவதே ஓம் என்றும் ப்ரணவம்.

இந்த பிரபஞ்சமும் ஓம் என்பதில் அடங்கும் அ வில் தோன்றி உ வில் இருந்து ( வாழ்ந்து) ம் ல் முடியும் ( மறையும் ). அதனால் தான் நமது ரிஷிகள் ஓம் என்னும் பிரணவமே மொத்த பிரபஞ்சமாக இருக்கிறது என்று கண்டார்கள் .

நாம் சாதாரணமாக எந்த ஒரு சத்தத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த மூன்று தொழில்கள் வருவதை அறியலாம் . மூன்று தொழில்கள் என்பது பிரணவமே. பிரம்மத்தின் நாதம் ப்ரணவம். பிரபஞ்சத்தின் இயக்கத்தை சப்தத்தில் குறிப்பது தான் ஓம்

ஓம் என்கிற ப்ரணவ மந்திரம் இல்லாமல் எந்த ஒரு மந்திரமும் இல்லை ஓம்-ன் சிறப்பை நமது வேதங்களும் புராணங்களும் கூறியிருக்கின்றன.

கந்த புராணத்தில் பிரம்மன் ( படைப்பு கடவுள்) பிரணவ மந்திரத்தையும் அதன் பொருளையும் மறந்தான் அதனால் கந்தன் அவனை சிறையில் அடைத்தான். பிரம்மன் சிறைப்பட்டதால் படைப்பு தொழில் நடைபெறவில்லை. ஈஸ்வரன் பிரம்மனை விடுவிக்க கோரி கந்தனிடம் கேட்டான் கந்தன் ப்ரணவ மந்திரத்தின் பொருளைக்கேட்டான் ஈஸ்வரன் நீயே சொல் என்று கூற கந்தனே தந்தையாகிய ஈஸ்வரனுக்கு தகப்பன் சாமியை ப்ரனவமந்திரத்தின் பொருளை உபதேசித்தான். இது ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தின் பொருளையும் அதன் சிறப்பையும் விளக்கும் ஒரு சிறு நிகழ்வு ஆகும்.

Via FB   தர்மத்தின் பாதையில்

காயத்ரீ மந்திரம் - உலகம் உணரும் அருமை !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tips

தினமும் காலை 7 மணி முதல் 15 நிமிட நேரத்திற்கு Republic of Suriname நாட்டில் ரேடியோ பரமரிபோவில் காயத்ரீ மந்திரம் ஒளிபரப்ப படுகின்றது. கடந்த இரு வருடங்களாக இது நடை பெற்று வருகின்றது.

இதுபோலவே ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டர் டேம் நகரலிருந்து கடந்த 6 மாதமாக காயத்ரீ மந்திரம் ரேடியோவில் ஒளிபரப்பி கொண்டு வருகின்றது.

இது தவிர டாக்டர். ஹோவார்டு ஸ்டீம் கிரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி உலகத்தில் உள்ள எல்லா மதங்களின் மந்திரங்களையும் சேகரித்தார். ஹிந்துக்களின் வேத மந்திரமான காயத்ரீ மந்திரம் தான் மிக சிறந்த பலன் கிடைகிறது என்பது இவர் ஆராய்ச்சி முடிவு. ஒரு வினாடிக்கு 1,10,000 ஒலி அலைகளை காயத்ரீ மந்திரம் எழுப்புகின்றது: இது தான் உலகிலேயே மிகச் சக்தி வாய்ந்த மந்திரம் என்று இவர் கூறுகின்றார்.

காயத்ரீ மந்திரம் உடலுக்கும் மனதுக்கும் தரும் நன்மைகளை ஹாம்பர்க் பல்கலை கலக்கம் ஆராய்ச்சி ,மூலம் கண்டறிந்து வருகிறது .

அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார்.
வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது
ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத்
தூய்மைப்படுத்துகிறது!

க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி.
மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.

Via FB தர்மத்தின் பாதையில்

மாபெரும் நீதிமான் மனு நீதி சோழன் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tips
சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.நீதி வழுவாது ஆட்சி செய்து வந்த மன்னனை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர். மனுநீதிச் சோழன் வெகு நாட்களாக மக்கட்பேறு இல்லாமல் வாடினான். இறைவனது அருளால் அழகே உருவான ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மக்களும் மனம் மிக மகிழ்ந்தனர். வீதி விடங்கன் என்னும் பெயரிட்டு அருமையுடன் வளர்த்து வந்தான் மன்னன். வீதிவிடங்கன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அறிவிலும் நற் பண்புகளிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.குறித்த வயதில் மன்னர் அவனுக்கு யானை ஏற்றம் குதிரைஎற்றம் தேர் ஓட்டுதல் வாட்பயிற்சி ஆகிய கலைகளைக் கற்பித்தார். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தான் வீதிவிடங்கன்.
நீதி தவறாத மன்னன் மனுநீதிச் சோழன். நாட்டு மக்கள் மன்னனான தன்னை எந்தவிதத் தடையும் இன்றி நேரில் காணவேண்டும் என்று சிந்தித்தான்.
அதற்காக சபை கூட்டி ஆலோசனை செய்தான். மக்கள் அனைவரும் மகிழும்படி ஒரு காரியம் செய்தான். தன் அரண்மனை வாயிலில் ஒரு பெரிய மணியைக் கட்டி வைத்தான். மன்னனைக் காண விரும்பி வருபவர் யாராயினும் அந்த மணியை அடித்து ஒலி எழுப்பினால் மன்னன் நேரிலே வந்து குறைகளைக் கேட்பார். நேரில் கேட்டுக் குறைகளைக் களைவார்.என்று பறையறைவித்தார். மக்கள் தங்கள் மன்னனின் எளிமை கண்டு மகிழ்ந்ததோடு அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். காட்சிக்கு எளியனாக உள்ள மன்னனை யார்தான் விரும்பமாட்டார்கள்.
ஆண்டுகள் கடந்தன. மனுநீதிச் சோழனால் கட்டப் பட்ட அந்த ஆராய்ச்சி மணியை யாரும் அடிக்கவேயில்லை. மக்கள் எந்தக் குறையும் இன்றி நாட்டில் வாழ்ந்து வந்தனர். காலம் ஒரே மாதிரி செல்லுமா. சோதனை மன்னன் மகன் வீதிவிடங்கன் உருவில் வந்தது.
ஒருநாள் மாலைவேளை வீதிவிடங்கன் உல்லாசமாக தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. உல்லாசத்தின் உச்சியில் இருந்த இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி அங்கேயே அக்கன்றின் அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன். மன்னன் மீதிருந்த அன்பாலும் அவன் மகன் இந்நாட்டின் ஒரே வாரிசு என்ற எண்ணத்தாலும் யாரும் இச்செய்தியை மன்னனுக்குச் சொல்ல விரும்பவில்லை.
மக்கள் சொல்லாவிட்டாலும் அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து அகன்றது. மக்களும் அப்பசுவின் பின் சென்றனர்.அது எங்கு செல்கின்றது என யாருக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் பொருட்டே அதன் பின்னே கூட்டமாகச்சென்றனர். அப்பசு மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது.
அந்தப்புரத்திலிருந்த மன்னன் திடுக்கிட்டான். மந்திரி பிரதானியர் புடைசூழ ஓடிவந்தான் வாயிலுக்கு. ஒரு மனிதனை எதிர்பார்த்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்று இறுமாந்திருந்த மன்னனுக்கு இது பேரிடியாக இருந்தது. என்ன நடந்தது எனக் கேட்டபோது யாரும் எதுவும் பேசாது நின்றனர். மன்னன் அந்தப் பசுவின் பின்னே நடந்து சென்றான். அப்பசு மன்னனைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் நாவால் தான் ஈன்ற கன்றினை நக்கிக் காட்டியது. மன்னன் அக்காட்சியைக் கண்டு கண்கள் கலங்க நின்றான்.பின் கண்கள் சிவக்க மந்திரியாரைப் பார்த்து "இப்பாவ்த்தைச் செய்தவன் யாவன்? உடனே அவனை என்முன் கொணர்ந்து நிறுத்துங்கள் " எனக் கட்டளையிட்டான். அனைவரும் அமைதியாயிருந்தனர்.
"நீங்கள் கூறாவிட்டால் நீதி தவறிய மன்னனாக நான் ஆவேன். அவ்வாறு நான் உயிர் வாழ விரும்பவில்லை.என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்." என்ற மன்னனைத் தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும்.
என்று முடிவு செய்தான்.
உடனே ஒரு மன்னனாக நின்று சேவகருக்குக் கட்டளையிட்டான். "உடனே தேரைப் பூட்டுங்கள். அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்துங்கள்.அவன் மீது தேரை ஏற்றிக் கொல்லுங்கள். தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்." என்று கூறினான்.ஆனால் அவன் கட்டளையை யாரும் ஏற்க முன்வரவில்லை. வருங்கால மன்னனை நாட்டின் இளவலைக் கொலை செய்ய யாரும் விரும்பவில் லை .
.மனுநீதி தவறாத மாமன்னன் மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டு த தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது. மந்திரி முதலியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.மக்களோ தங்கள் நிலைமறந்து அலறிக் கூக்குரலிட்டனர். எதையும் கவனத்தில் கொள்ளாத சோழமன்னன் தேரை விரைவாகச் செலுத்தினான்.
என்ன அதிசயம்? தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.
விண்ணிலிருந்து ஒரு அசரீரியின் குரல் கேட்டது. "சோழ மன்னா! தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக." என்று வாழ்த்தி மறைந்தது.மன்னன் மனம் மகிழ்ந்து தன் மகனை அணைத்துக் கொண்டு உச்சி மோந்தான்.

நீதி என்று வரும்போது துலாக் கோல்போல் இருந்து நீதிவழங்கிய சோழ மன்னனை நம் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாதல்லவா!.
தொல்காப்பியரை பற்றி அறிவோம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:32 PM | Best Blogger Tips

இவர் காலம் 12,000 ஆண்டுகளுக்கு மிக முற்படுமன்றிப் பிற்படாது.

தொல்காப்பிய மென்னும் இப்பேரிலக்கண நூலைச் செய்த தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவரியற்பெயர்
திரணதூமாக்கினியார் என்பதும் இந் நூற்பாயிரத்துள் "சமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை
வாங்கிக்கொண்டு," என்று நச்சினார்க்கினியர் கூறுதலானே அறியக்கிடக்கின்றன. இன்னும், அப்பாயிரத்துள் 'தொல்காப்பியன்' என்பதற்குப் 'பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று
பெயராயிற்று' என்று கூறுதலானே காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும், சமதக்கினி புதல்வ ரென்பதனானே அந்தண குலத்தவ ரென்பதும்
அறியத்தக்கன. சமதக்கினி புதல்வரென்றதனானே பரசுராமர் இவர் சகோதரராவா ரென்பதும் பெறப்படும். இராமயணத்துள்ளே பரசுராமர்
இராமரோடு போரை விரும்பிச் சென்று அவருக்குத் தோற்றதாகவும், அவருக்கு மிக முந்தினவராகவும் அறியப்படுதலினாலும், இராமராற் சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட குரங்குப்படை இடைச்சங்க மிருந்த கபாடபுரத்தை யடைந்து சென்றதாக அறியப்படுதலினாலும், இடைச்சங்கப் புலவர்களா யிருந்தோர் அகத்தியருந் தொல்காப்பியரும் முதலாயினோர் என்று இறையனா ரகப்பொருளுரை முதலியவற்றா னறியப்படுதலினாலும்,
தொல்காப்பியரும் இராமர் காலத்துக்கு மிக முந்தியவ ரென்பதும், தொல்காப்பியரிருந்து பல்லாயிரம் யாண்டுகள் சென்றனவென்பதும்
அறியத்தக்கன. ஆயினும் இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரருட் சிலர், மூவாயிரம் ஆண்டு என்றும் ஆறாயிரம் ஆண்டு என்றும் இப்படிப்
பலவாறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் அப் பொருளதிகாரப்
பதிப்புரையில் பன்னீராயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதென்று கூறியிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய சுப்பிரமணியபிள்ளை யவர்கள் கி.மு. 700 ஆண்டுகளுக்குப் பிற்படா
தென்கின்றனர். எவ்வாறு கூறினும் இவர் காலம் 12,000 ஆண்டுகளுக்கு மிக முற்படுமன்றிப் பிற்படாது.

இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந் துணரத் தக்கது.

இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது 'ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்' என்பதனா னறியத் தக்கது. இவர் அகத்தியரோடு
தென்னாடு புக்கபின் அவர்பாற் செந்தமிழ் இலக்கிய விலக்கணங்களைக் கற்று அவருடைய முதன் மாணாக்கராய் விளங்கினர். அகத்தியர்பால்
இவருடன் கற்றவர்கள் அதங்கோட்டாசிரியர் பனம்பாரனார் செம்பூட்சேய் வையாபிகர் அவிநயனார் காக்கைபாடினியார் துராலிங்கர் வாய்ப்பியர்
கழாரம்பர் நற்றத்தர் வாமனர் என்னும் பதினொருவருமாவர். தொல்காப்பியர் முதலாகப் பன்னிருவர் அகத்தியர் பால் ஒருங்கு கற்றனர்
என்பது,

"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த"

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளாலும்,

இவரா லியற்றப்பட்ட இத் தொல்காப்பிய மென்னும் நூலுக்கு உரைசெய்தோராகத் தெரியப்பட்டவர் இளம்பூரணர், கல்லாடர்,
பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் என்னும் அறுவராவர். சேனாவரையரும் தெய்வச்சிலையாரும் சொல்லதிகாரத்திற்கு மாத்திரமே உரை செய்தனர்.

இத் தொல்காப்பிய மொன்றே முன்னோரால் எமக்குக் கிடைத்த மிகப் பழையதொரு நிதியாம். இதன்கண் சில சூத்திரங்களுக்குக்
கடைச்சங்க நூல்களிற்கூட உதாரண மில்லாமையை நோக்கும்போது இதன் பழைமை எத்துணை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். பன்னிரு
படலத்துள் ஒரு படலமும் இவராற் செய்யப்பட்ட தென்பர். இவரைப்பற்றிய பழைய உண்மைச் சரிதங்கள் கிடையாமையால் இஃது மிகச் சுருக்கி
எழுதப்பட்டது என்க.
Via FB தர்மத்தின் பாதையில்
 
கடமை தரும் சக்தி - ஒரு கதை அறிவோம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:27 PM | Best Blogger Tips

கொங்கனவர் என்னும் முனிவர் காட்டில் அமர்ந்து தவத்தில் அமர்ந்திருந்தார். அப்போது மரக்கிளையில் இருந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டது. அதனால் தவம் கலைந்த அவர் கோபத்துடன் அந்தக் கொக்கை பார்த்தார். உடனே அந்த கொக்கு எரிந்து சாம்பலானது. தனது தவத்தின் சக்தி இந்து என்று கொண்கனார் நினைத்தார்.

ஒரு நாள் ஒரு வீட்ட்ரிகுச் சென்று வாசலில் நின்று உணவு கேட்டார். இவருடைய குரலுக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. சட்ட்று நேரம் களித்து அந்த வீட்டில் இருந்த பெண்மணி உணவு கொண்டு வந்தால். உணவுக்காக தன்னை காக்க வாய்த்த அந்த பெண்மணியை கோபமாக பார்த்தார் . உடனே அந்த அம்மையார் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா ? என்றார்.

இதை கேட்டவுடன் கொங்கனாருக்கு தான் கொக்கை எரித்தது எப்படி இந்த அம்மையாருக்கு தெரிந்தது என்று ஆச்சர்யத்துடன் பார்த்தார். அந்த அம்மயாரிடமே விசாரித்தார்.

"ஐயா, நீங்கள் உணவு கேட்டு வந்த நேரத்தில் நான் எனது கணவருக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தேன். எனது கணவரையே தெய்வமாக போற்றி வழிபட்டதன் காரணமாக எனக்கு கிடைத்த ஞானதிருரசுடியில் உங்களை பற்றி தெரிந்து கொண்டேன் என்றார்.

கடமை தரும் சக்தி அபாரம் அல்லவா ?

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள் !!

Via FB தர்மத்தின் பாதையில்

கலியுகம் 5115 ம் ஆண்டு விஜய வருடம் சித்திரை 1 ம் நாள். தமிழர் தின வாழ்த்துக்கள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:26 PM | Best Blogger Tips

சித்திரையின் சிறப்புகளும் நாம் செய்யவேண்டியவையும் !!

வீட்டின் மூத்தோர் புதிய பஞ்சாங்கத்தை பூஜையறையில் வைத்துப் பூஜித்து அனைவர் முன்னிலையிலும் படிப்பார். பூஜை முடித்து ஆலயம் சென்று வழிபட்டு பின் வீட்டில் அறுசுவை உணவு உண்பர். அதில் வசந்த காலத்தில் பூக்கும் வேப்பம் பூவும் முக்கனி களும் கண்டிப்பாக இடம்பெறும். கோவில் களிலும் இந்த பஞ்சாங்கம் படித்தல் நடை பெறும்.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு விழா, ஆதிசங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, மச்சாவதார ஜெயந்தி, வராக ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, வாசவி ஜெயந்தி, ரமணர் ஆராதனை விழா, காமன் பண்டிகை, ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம், தேர்த் திருவிழா, சமயபுரம் மாரி பூச்சொரிதல் விழா, காரைக்குடி கொப்புடையம் மன் தேர்த் திருவிழா, சித்திரை அன்னா பிஷேகம், சப்த ஸ்தான விழா, ராசிபுர திருமணம், தேர்விழா, மகாலட்சுமி அவதார தினம், பாபநாசம் சிவ- பார்வதி திருமணக் கோல காட்சி, தங்கத்தேர், சித்திரகுப்த பூஜை, குருவாயூர் விஷுக்கனி, நெல்லுக்கடைமாரி செடல் விழா, கூத்தாண்டவர் விழா, கன்னியா குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் கண்டு நிலாச்சோறு என்ற சித்திரான்னம் உண்ணும் விழா, அட்சய திரிதியை கனகதாரா யாகம், மகாலட்சுமி எட்டு நாள் காட்சி தரும் விழா என பற்பல விழாக்களைக் காணலாம். எதைப் பார்ப்பது எதை விடுவது? எல்லாமே நன்மை தரும் விழாக்கள்!

அக்னி நட்சத்திரம் என்ற கொடிய வெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும். இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். இது சித்திரை மாத இறுதி பத்து நாட்களும்; வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும். சில வருடங்களில் 25 நாட்கள்கூட இருக்கும்.

இந்நாட்களில் சூரியனுக்கு மிக அருகே பூமி இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி. கார்த்திகை நெருப்பைக் கக்கும் நட்சத்திரம். எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.

இந்த அக்னி நட்சத்திர நாட்களில், வெயிலில் இருந்து விடுபட மகா விஷ்ணுவையும், மகா மாரியம்மனையும் சாந்தப்படுத்த வேண்டும். மகாவிஷ்ணுவின் திருநாமங்களை ஜெபித்து வழிபட வேண்டும். நாராயண மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். மாரியை பால், தேன், சந்தனத்தால் அபிஷேகம் செய்து குளிர் விக்க வேண்டும்.

இந்நாட்களில் தான- தர்மம் செய்வது சிறந்த பலனைத் தரும். தண்ணீர்ப் பந்தல் அமைக்கலாம். நீர் மோர், பானகம் விநியோகம் செய்யலாம். விசிறி, காலணி கொடுக்கலாம். சீதாஷ்டக சுலோகம் சொல்லலாம்.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதைமுன்னொரு காலத்தில் சுவேத யாகத்தை 12 வருடங்கள் இடைவிடாது செய்தனர். தொடர்ந்து அக்னி குண்டத்தில் நெய் ஊற்றப் பட்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. நோயினின்று விடுபட, காண்டவ வனத்தை எரித்து உண்ண திட்டமிட்டான் அக்னி.

ஆரோக்கியமே, ஆனந்தம் மருத்துவ கேள்வி-பதில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:45 AM | Best Blogger Tips

டாக்டர் என் வயது 50, எனக்கு பல வருடங்களாக நீரிழிவு நோய் இருக்கிறது. மாத்திரைகள் பயன்தராததால் தற்போது MIXTARD இன்சுலின் ஊசி போட்டு வருகிறேன். ஆனால் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும், என் இடது காலின் பாதத்தில் புண் ஏற் பட்டு புரையோடி இப்போது அந்த காலை இழந்து விட்டு அல்லல்படுகிறேன். காலைத் துண்டிக்கும் அளவுக்கு புண் எப்படி உண்டாணது என்பது எனக்கே தெரியவில்லை, கால்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்பதை தெரிந்தவன் நான். வீட்டினுள் கூட சிலிப்பர்தான் அணிவேன். அப்படி இருந்தும் எங்கோ எனக்கே தெரியாமல் இடித்துக் கொண்டதால் வலி தெரியாமலேயே புண் ஏற்பட்டது. முறையாகத் தான் தினமும் கட்டு போட்டுக் கொண்டேன். ஆனால் எல்லாமே தோல்வியுற்று தற்போது ஒரு காலை இழந்து போனேன். என்னைப் போன்ற வியாதி உள்ளவர்களுக்கு இது குறித்து நீங்கள் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

பதில்

நீரிழிவு நோயின் பின்விளைவுகளில் மிகவும் ஆபத்தானது கால் புண்கள். இதனால் பலர் கால்களை இழந்து போக நேரிடுகின்றது. 25 சதவிகித நீரிழிவு நோயாளிகள் கால் புண்ணுக்காகவே மருத்துவமனைகளில் சேர நேர்ந்து விடுகிறது.

காலில் புண் ஏற்படுவதால் இவ்வாறு கால் துண்டிக்க நேர்வதற்கு முக்கிய காரணம் கால் தோலில் புண் உண்டாவதே! இதை உடனடியாக தக்க சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம். இதன் மூலம் 85 விழுக்காடு கால் துண்டிப்பதை தவிர்க்கலாம். இவ்வாறு கால் புண் காரணமாக காலை துண்டிக்க நேர்வதற்கான முக்கிய காரணங்கள் வருமாறு;

நரம்பு தளர்ச்சி காரணமாக கால் பாதங்களில் மதமதப்பு உண்டாகி உணர்ச்சி இன்றி போகும். இதனால் காலில் கல், முள், குத்தினாலும் அல்லது இடித்துக் கொண்டு அடிபட்டாலும் வலி ஏற்படாது. வலி இல்லாத காரணத்தினால் அதை அலட்சியம் செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. நோய்க்கிருமி தொற்று எளிதில் உண்டாகி காலில் சீழ்பிடித்து புரையோடிப் போகிறது.

· இரத்த ஓட்டம் குறைபாடு. இது இரத்த குழாய்கள் சுருக்க முறுவதால் உண்டான அடைப்பால் ஏற்படுகிறது. இரத்த ஓட்டம் குறைந்த தோல் பகுதியில் புண் ஆறுவது சிரமம்.

· பாதத்தில் தோல் தடிப்பது, கால் ஆணி உண்டாவது, அழுத்தத்தால் ஏற்படும் மாற்றங்கள்.
· தோல் நரம்புகள் பாதிப்பதால், தோல் உலர்ந்து போய் வெடிப்புகள் ஏற்படுவது.
· கால் மூட்டுகள் இறுக்கம் காரணமாக அசைவு குறைவது.
· உடல் பருமன் அதிகம்.
· இனிப்பின் கட்டுப்பாடு இல்லாதது.
· அளவான காலணிகள் அணியாதது. காலணிகளினால் ஏற்படும் புண்கள். புதிய காலணிகள் அணியும் போது இது ஏற்படலாம். அடுத்தவர் காலணிகளை அணிந்துக்கொள்வது தவறு. இதனால் ஒருவர் காலில் உள்ள காளான் தொற்று மற்றவருக்கு பரவும் வாய்ப்புள்ளது. இவை விரல்களின் இடுக்குகளில் உண்டாகும் ‘சேற்றுப்புண்’என்பது.
PERIPHERAL ARTERIAL OCCLICIVE DISEASE [வெளிப்புற தமனி ஒக்கலிசிவு நோய் ]

நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களைவிட நான்கு தடவை அதிக இந்த பாதிப்பு உண்டாகிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு வரும் டிபியல்(TIBIAL), பெரோனியல் (PERONEAL) எனும் தமனிகள் (ARTERIES) பாதிக்கப்பட்டு அவற்றில் அடைப்பு ஏற்படுவதால் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது.
இது உண்டாவதற்கு முக்கிய காரணமாக புகைத்தல், உயர் இரத்த அழுத்தம், அதிகமான கொழுப்பு எனக்கூறப்படுகிறது. இது உண்டானால் கால்களில் குடைச்சல் உண்டாகும். நடந்தால் வலி உண்டாகும். இரவில் வலி அதிகமாகும். கால்களில் உள்ள முடிகள் உதிரும். கால் நகங்கள் தடிப்பாகும். கால்கள் தரையில் பதியும் போது சிவந்தும், உயர்த்தினால் வெளிறிப் போகும்.
இதுபோன்று தமனி பாதிக்கப்பட்ட்டுள்ளதா என்பதை டாப்ளார் (DOPPLER) கருவி மூலம் அறியலாம். வேறு சில இரத்த பரிசோதனைகளும் தேவைப்படும்.

புண் வராமல் தடுப்பது எப்படி?

நீரிழிவு நோயாளிகள் தங்கள் கால்களை முகத்தைப் போன்று பராமரிக்க வேண்டும். முகத்தை நாம் ஒரு நாளில் எத்தனை முறைகள் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு அழகு படுத்துகிறோமோ, அதுபோன்ற நம்முடைய கால்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருளாகும். சிறு காயம், கீரல் அல்லது தடிப்பு, அரிப்பு ஏற்பட்டாலும் அதை அலட்சியப் படுத்தாமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுயமாகவே தினமும் கால்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்லுமுன் கால்களைக் கழுவி, துண்டால் துடைத்து விட்டு படுக்கச் செல்ல வேணடும். முடிந்தால் ஈரப்பசை கொண்ட திரவகத்தை (MOISTURIZER) தடவிக் கொள்ளலாம். காலணிகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். மிகவும் இறுக்கமான வற்றை தவிர்க்கலாம்.

சிறு சிறு காயங்கள், கீறல்கள், கொப்புளங்கள், சேற்றுப்புண் முதலியவற்றை சொந்தமாக வீட்டில் சிகிச்சை செய்து கொள்வதைக்கூட தவிர்த்து மருத்துவரிடம் சென்று சுத்தமான முறையில் கட்டு போட்டுக் கொள்வதும் நல்லது. அதிக சூடான நீரில் காலை நனைப்பது. ஒத்தடம் கொடுப்பதும் கெடுதியே. அதிக வீரியமிக்க களிம்புகளைத் தடவிக் கொள்வதும் தவறு. இவை புண் உண்டாவதைத் துரிதமாக்கும்.

ஆனால் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் கூட ஒரு சிலருக்கு இறுதியில் காலில் புண் ஏற்படவே செய்கிறது. புண்ணில் வெகு எளிதில்ல கருமித் தொற்று ஏற்பட்டு புண் ஆழமாகிவிடும். நார்த்தசைகள் அதன் மேல் மூடிவிடுவதால் புண் ஆறுவதும் சிரம்ம்மாகிறது. நரம்புகள் பாதிக்கப்படுவதால் வலியும் இருக்காது. நோய்த் தொற்று அதிகமாக புண் மேலும் ஆழமாகி விடும். சீழ் உண்டாகி துர்நாற்றம் வீசும். அதன் பின்பு எலும்புகளும் பாதிப்புக்கு உள்ளாகி தசைகளும், இதர திசுக்களும் பாதிப்புக்கு உள்ளாகி கால் வீங்கி தோல் கருநிறமாகிவிடும். இதை கேங் கிரீன் (GANGRENE) என்பர். இது உண்டானபின் அந்தக் கலை வைத்திருப்பது உயிருக்கே ஆபத்தாகும். அதனால்தான் உயிரைக் காக்க பாதிக்கப்பட்ட கால் அகற்றப்படுகிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய கால்களை கவனமாக கண்காணிப்பது நல்லது.Via ஆரோக்கியமான வாழ்வு

ட்ரைகிளிசரைடு (ட்ரைஜி) என்றால் என்ன ?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 AM | Best Blogger Tips

நம் உடலில் வெறும் இரு நாளுக்கு தேவையான ஆற்றலை மட்டும் தான் குளுகோஸ் ஆக தேக்கி வைக்க உடலால் முடியும். ஆனால் மனித உடலின் கொழுப்பை சேமிக்கும் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஏராளம். ஆக நம் உணவில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருந்தால் அதை என்ன செய்வது என தெரியாமல் நம் உடல் அதை லிவருக்கு அனுப்புகிறது. லிவர் அந்த சர்க்கரையை ட்ரைஜி வடிவில் கொழுப்பு ஆக மாற்றி நம் ரத்தம் மூலம் அதை சேமிப்புக்கு அனுப்புகிறது. அது நம் தொப்பையாகவும், உடல் கொழுப்பாகவும் சேமிக்கபடுகிறது. ஆக ட்ரைஜி இல்லையெனில் நமக்கு தொந்தி, தொப்பை, உடல் கொழுப்பு ஆகியவை இல்லைவை இல்லை

ட்ரைஜி எப்படி உருவாகிறது?

இரு விதங்களில்...ஒன்று போலிச்சர்க்கரையான ப்ருக்டோஸ் (பழ சர்க்கரை) மூலம். அடுத்து நேர்மையான சர்க்கரையான குளுகோஸ் மூலம். உதாரணமாக அரிசி முழுக்க குளுகோஸ். நீங்கள் ஒரே நாளில் ஒரு குண்டா அரிசி சோற்றை உண்கிறீர்கள். அப்புறம் ஒரு மராத்தான் பந்தயம் ஓடுகிறீர்கள். ஆக நீங்கள் உண்ட அரிசியில் இருந்த குளுகோஸ் முழுக்க மராத்தான் பந்தயத்துக்கு செலவாகி விட்டது. சேமிக்க எந்த கூடுதல் சர்க்கரையும் இல்லை.ட்ரைஜி ஏறாது.அதே மராத்தான் ஓடாமல் ஒரு குண்டா அரிசியை தின்றால் உடலுக்கு தேவைக்கு அதிகமான குளுகோஸ் சேர்ந்து அந்த அதிகபட்ச குளுகோஸ் லிவருக்கு சென்று ட்ரைஜி ஆக மாறும். ஆக குளுகோஸ் ட்ரைஜி ஆகும் விதம் இது.

ஆனால் நீங்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீகள் என வைத்துகொள்வோம். ஆரஞ்சு ஜூஸ் முழுக்க போலிசர்க்கரையான ப்ருக்டோஸ் தான் உள்ளது. ப்ருக்டோஸ் ரத்தத்தில் கலந்ததும் அது குளுகோசை போல இன்சுலின் அளவை ஏற்றுவது இல்லை. நேரடியாக லிவருக்கு சென்றுவிடுகிறது. அங்கே லிவர் அதை ட்ரைஜி ஆக மாற்றி அனுப்பும். ஆக ப்ருகொடோஸ் நேரடியாக ட்ரைஜி அளவை கூட்டும். வெள்ளை சர்க்கரை, அனைத்துவகை பழங்கள், அனைத்துவகை ஜூஸ்கள் ஆகியவற்ரில் ட்ரைஜி உள்ளது

ட்ரைஜி நமக்கு தொப்பையை மட்டும் தான் கூட்டுமா? வேறு என்ன கெடுதலை ஏற்படுத்தும்?

ட்ரைஜி நமக்கு தொப்பையை கொடுப்பதுடன் ஓய்வது இல்லை. நம் ரத்தம் முழுக்க ட்ரைஜி நிரம்பினால் அது தற்கொலைபடை மாதிரி மாறிவிடும். எல்.டி.எல் கொலஸ்டிராலில் மோதி வெடித்து எல்.டி.எல்லினுள் ட்ரைஜி புகுந்துவிடும். இது நிகழ்கையில் எல்.டி.அல் ஆக்சிடைஸ் ஆகி, ஆபத்தான வகை எல்டி.எல் ஆகி நம் ரத்தகுழாயில் அடைத்து மாரடைப்பி ஏற்படுத்தும். ட்ரைஜி 150 தான்டி இருந்தால் நம் எல்.டி.எல்லுக்கு அது மிக,மிக மோசமான விஷயம். நம் இதயத்துக்கும் தான்.

ட்ரைஜியை குறைப்பது எப்படி?

ட்ரைஜியின் பீடிங் மெக்கானிசம் ப்ருக்டோசும், குளுகோசும். இது இரண்டின் சப்ளையையும் துண்டித்தால் ட்ரைஜி தானே குறைந்துவிடும்.

ட்ரைஜி எத்தனை இருக்கணும்?

150க்கு கீழ் என்பது பரிந்துரை. ஆனால் நூறுக்கு மேல் ட்ரைஜி இருந்தால் அது உங்கள் எல்.டி.எல்லை பாதிக்கும். 100க்கு கீழ் ட்ரைஜியை கொண்டுவரவேண்டும்.

அப்ப என்ன சாப்பிட்டால் ட்ரைஜி குறையும்?

பழங்களை சுத்தமாக நிறுத்தவேண்டும். ஜூஸ், வெள்ளை சர்க்கரை பக்கமே போக கூடாது. தானியத்தில் குளுகோஸ் உண்டு. அதனால் அதை லிமிட் செய்யவேன்டும், முடிந்தால் சுத்தமாக நிறுத்தணும். துவக்கத்தில் ஒரு நாளைக்கு நூறு கிராம் நட்ஸ் சாப்பிடணும். இது பசியை குறைத்து, ட்ரைஜியையும் குறைக்கும். நிலக்கடலை, பாதாம், வால்நட்ஸ் முதல்லியவற்றை உண்ணலாம். மாமிசம், முட்டை ஆகியவற்றை உண்ணலாம்.பிரேக்பாஸ்டுக்கு சீரியல்/ இட்லி, தோசை சாப்பிட்டால் குளுகோஸ் ஏறி ட்ரைஜி ஏறும். அதுக்கு பதில் ஒரு 3 எக் ஆம்லட் சாப்பிட்டால் ட்ரைஜி துளியும் ஏறாது. காரணம் முட்டை, மாமிசத்தில் ஒரே ஒரு கிராம் சர்க்கரை கூட கிடையாது.

via: ஆரோக்கியம் & நல்வாழ்வு

பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 AM | Best Blogger Tips
ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார். மேலும் மேலும் சாய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் எடையைத் தாங்க முடியாமல் மீசைக்காரர் உடலை உலுக்கியபடி விழித்துக் கொள்கிறார். வெள்ளைச் சட்டைக்காரகும் விழித்துக் கொண்டு சுதாரித்துக் கொள்கிறார்.

பூகம்பம் கிட்டத்தட்ட இப்படித் தான் ஏற்படுகிறது. ஒரு சில்லு அடுத்த சில்லை மேலும் மேலும் நெருக்குகிறது. அடுத்த சில்லு ஒரு கட்டம் வரை இதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது. நெருக்குதல் ஒரு கட்டத்தை எட்டும் போது சில்லுக்கு அடியில் உள்ள பாறைப் பாளம் பெரிய உலுக்கலுடன் நகருகிறது. அதுவே பூகம்பம்.

இமயமலை அடிவாரத்தில் பூகம்பம் நிகழக்கூடிய இடங்கள்:

இந்திய துணைக் கண்ட சில்லு ஆண்டுக்கு 5 செண்டி மீட்டர் விகிதம் வட கிழக்கு திசையில் நகருகிறது. யுரேசிய சில்லு மிக மெதுவாக வடக்கு நோக்கி நகருக்கிறது. எனவே இந்தியச் சில்லு யுரேசிய சில்லுவை மேலும் மேலும் நெருக்குகிறது. இதன் விளைவாகவே பாகிஸ்தானின் வட பகுதியில் தொடங்கி அஸ்ஸாம் வரையில் இமயமலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் அடிக்கடி பூகம்பம் நிகழ்கிறது. துருக்கியிலும் இவ்விதம் நிகழ்கிறது. ஆகவே துருக்கி நாட்டில் பூகம்பம் அதிகம்.

சில்லுகள் உரசும் இடங்களிலும் பூகம்பம் நிச்சயம். அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் இரண்டு சில்லுகள் எதிரும் புதிருமாக உரசிச் செல்கின்றன. ஆகவே அங்கு பூகம்பங்கள் நிக்ழ்கின்றன.

ஒரு சில்லு மற்றொரு சில்லுக்கு அடியில் புதையும் இடங்களிலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. இந்தோனேசியாவுக்கு அருகே கடலுக்கு அடியிலும், ஜப்பானுக்கு கிழக்கே கடலுக்கு அடியிலும் இவ்விதம் சில்லுகள் புதைகின்றன. நியூசிலந்திலும் இதே காரணத்தால் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

நீங்கள் மாவு மில்லில் அரைபட்டு வந்து டின்னில் வந்து விழும் மாவைத் தொட்டால் மாவு மிகவும் சூடாக இருக்கும். சில்லுகளின் விளிம்புகள் புதையுண்டு போகும் போது பிரும்மாண்டமான பாறைப் பாளங்கள் இதே போல அரைபட்டு பூமிக்குள் செல்கின்றன. பாறைப் பாளங்கள் இப்படி அரைபடும் போது அவை பயங்கமாகச் சூடேறி நெருப்புக் குழம்பாக மாறுகின்றன. இந்த நெருப்புக் குழம்புதான் எரிமலை வாய் வழியே வெளியே வருகிறது.

இந்தோனேசியத் தீவுகளில் உள்ள எரிமலைகள்
பூமியில் மிக ஆழத்தில் நெருப்புக் குழம்பு உள்ளது. ஆனால் எரிமலைகள் வழியே வெளி வருவது பூமியில் ஆழத்தில் உள்ள குழம்பு அல்ல. சில்லுகள் அரைபடும் போது தோன்றும் நெருப்புக் குழம்புதான் எரிமலைகள் வழியே வெளிப்படுகிறது. ஆகவே சில்லுகள் புதையுண்டு போகும் இடங்களில் எரிமலைகள் உண்டு.

சில்லுப் பெயர்ச்சி விஷயத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தோனேசியா என்று சொல்லலாம். இந்த நாட்டில் பூகம்பம், எரிமலை, சுனாமி ஆகிய மூன்றுமே உண்டு. இந்தோனேசியாவின் தென் பகுதியில்(இந்திய) ஆஸ்திரேலிய சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் பசிபிக் சில்லு இதே போல யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. 17,600 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் 150 எரிமலைகள் உள்ளதில் வியப்பில்லை. ஜப்பானுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியிலும் இதே நிலைமை தான். ஆகவே ஜப்பானிலும் பூகம்பம், எரிமலை, சுனாமி ஆகிய மூன்றும் உள்ளன.

ஜப்பானில் மட்டுமன்றி அலாஸ்கா, வட அமெரிக்காவின் மேற்குக் கரை, தென் அமெரிக்காவின் மேற்குக் கரை, நியூசிலந்து ஆகியவற்றில் எரிமலைகள் உள்ளன. வேறு விதமாகச் சொல்வதானால் பசிபிக் கடலைச் சுற்றி உள்ள நிலப் பகுதிகளில் எரிமலைகள் உள்ளன. இதை நெருப்பு வளையம் (Ring of Fire) என்று சொல்வதுண்டு (கீழே படம் காண்க).

நிலப் பகுதியில் மட்டுமன்றி கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் உண்டு. இந்த கடலடி பூகம்பங்கள் தான் சுனாமியைத் தோற்றுவிக்கின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்டதே.

பூகம்பத்திலிருந்து மனிதன் ஓடி ஒளிய வாய்ப்பில்லை. ஆனால் கடும் பூகம்பத்தையும் தாங்குகின்ற கட்டடங்களைக் கட்டுவதற்கான தொழில் நுட்பத்தை மனிதன் உருவாகியிருக்கிறான. ஆகவே உயிர்ச் சேதம் பொருட்சேதத்தைப் பெரிதும் குறைத்துக் கொள்ள இயலும்.

பூகம்பத்தை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய இதுவரை வழி கண்டுபிடிக்கப்படவில்லை. குறிபிட்ட பிராந்தியத்தில் தோராயமாக சில ஆண்டுகளில் பூகம்பம் ஏற்படலாம் என்று இப்போது அறிய முடிகிறது. எதிர்பார்க்கப்படுகின்ற அந்த பூகம்பம் சில ஆண்டுகளில் நிகழலாம் அல்லது 40 அல்லது 50 ஆண்டுகள் கழித்தும் ஏற்படலாம். இப்போதுள்ள தொழில்நுட்பத்தைக்கொண்டு என்றைக்கு, எப்போது, எந்த அளவுக்குக் கடுமையான பூகம்பம் தோன்றும் என்று அறிவதற்கு வாய்ப்பே இல்லை.

எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்பதும் தெரியாது. ஆனால் நோயாளியின் மார்பில் டாக்டர் ஸ்தெதாஸ்கோப் வைத்துப் பார்ப்பது போல எரிமலைச் சரிவுகளில் உணர் கருவிகளைப் பதித்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். எரிமலைகள் அனைத்தும் தொடர்ந்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பதில்லை.(இத்தாலியில்
உள்ள ஸ்டிராம்போலி எரிமலை இதற்கு விதிவிலக்கு). எரிமலைகள் நீண்ட காலம் ஓய்ந்திருக்கும். பின்னர் உறுமல்களுடன் நெருப்பைக் கக்க ஆரம்பிக்கலாம். அப்படி நெருப்பைக் கக்கினாலும் அந்த நெருப்புக் குழம்பு மனிதன் நடக்கின்ற வேகத்தில் தான் வழிந்தோடும். தப்பி ஓட அவகாசம் உண்டு. மிக அபூர்வமாக எரிமலைகள் மிக பயங்கரமாக வெடித்து பெரும் உயிர்ச் சேதத்தை உண்டாக்கும்.

சுனாமிக்களைப் பொருத்தவரையில் ஒரு விசித்திர நிலைமை உள்ளது. சுனாமி தாக்கலாம் என்று கண்டறிந்து கூற முடியும். கடலில் இதற்கான கருவிகளை நிறுவுகின்றனர். சுனாமிக்குக் காரணமான கடலடி பூகம்பம் ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளவர்கள் எளிதில் உயிர் தப்ப இயலும். அதாவது இந்தோனேசியா அருகில கடலடி பூகம்பம் ஏற்பட்டால் சுனாமி அலைகள் தமிழகத்தின் கரைக்கு வந்து சேர சுமார் 2 மணி நேரம் ஆகும். ஆகவே தக்க நேரத்தில் எச்சரிக்கை வந்தால் தமிழகத்தின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல போதுமான அவகாசம் கிடைக்கும். 2004 ஆம் ஆண்டில் இவ்வித எச்சரிக்கை ஏற்பாடு இல்லாமல் போய் விட்டது.

ஆனால் கடலடி பூகம்பம் நிகழும் இடத்துக்கு மிக அருகில் வாழ்பவர்களைப் பொருத்த வரையில் எச்சரிக்கை விடப்பட்ட சில நிமிஷங்களில் சுனாமி அலைகள் வந்து தாக்கும் நிலை உள்ளது. மக்கள் தப்பிச் செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்காமல் போய் விடுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது இந்தோனேசியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

சில்லுகள் சந்திக்கும் இடங்களில் பூகம்பம் ஏற்படுவதாகக் கூறினோம். ஆனால் ஒரு சில்லின் நடுவே பூகம்பங்கள் நிகழத்தான் செய்கின்றன. 2001 ஆம் ஆண்டில் குஜராத்தில் பூஜ் என்னுமிடத்தில் ஏற்பட்ட பூகம்பம் இதற்கு உதாரணம். இந்த இடம் சில்லுகள் சந்திக்கும் இடத்திலிருந்து தொலைவில் உள்ளது. இவ்வித பூகம்பங்கள் Mid-Plate Earthquakes எனப்படுகின்றன. நிபுணர்கள் இதற்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். எனினும் இதுவரை பூகம்பத்திற்கான திட்டவட்டமான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

சில்லுகள் புதையுண்டு போகிற இடங்களில் எரிமலைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டோம். ஆனால் சில்லுகள் சந்திக்காத, புதையுண்டு போகின்ற நிலைமை இல்லாத, இடங்களிலும் அபூர்வமாக எரிமலைகள் உண்டு. பசிபிக் சில்லின் நட்ட நடுவே அமைந்திருக்கும் ஹவாய் தீவுகளில் இப்படியான எரிமலைகள் உள்ளன.

ஹவாய் தீவு எரிமலை:

இவை Intra-plate volcanoes அல்லது Hot Spots என வருணிக்கப்படுகின்றன. பூமியில் மிக ஆழத்திலிருந்து நெருப்புக் குழம்பு செங்குத்தாக மேலே வருவதால் இவை உண்டாவதாகக் கூறப்படுகிறது. இவ்வித எரிமலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள Yellowstone எரிமலையும் இந்த வகையைச் சேர்ந்ததே.

சில்லுப் பெயர்ச்சியின் விளைவாக ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள், சுனாமிக்கள் ஆகியவை பூமியில் மனிதனை அடியோடு அழித்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை.அப்படி நடப்பதாக இருந்தால் மனித இனம் என்றோ அழிந்து போயிருக்க வேண்டும். கால்ம காலமாக பூகம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. எரிமலைகளில் ஏதோ ஒன்று தான் எப்போதாவது பெரிய அளவில் பொங்கி நாசத்தை உண்டாக்குகிறது. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற சுனாமிக்கள் மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன

ஆனால் ஒரு பெரிய எரிமலை வெடிப்பதால் ஏற்படும் துணை விளைவுகள் மனித குலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.அடுத்த பதிவில் அதைக் கவனிப்போம்.

Via தமிழ் -கருத்துக்களம்-