மனிதர்களை இனம் கண்டு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:56 PM | Best Blogger Tips
மனிதர்களை இனம் கண்டு DOG க்கான பட முடிவு

ஒரு மனிதன் தன் நாயுடன் ஒரு நீண்ட சாலையில் நடந்து கொண்டிருந்தான்.
அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே சென்று கொண்டிருந்தான்.
திடீரென அவன் உணர்ந்தான்,தான் இறந்துவிட்டோம் என்பதை!
தன் இறப்பும்,அதற்கு முன்பே நிகழ்ந்த அவன் நாயின் இறப்பும் அவனுக்கு நினைவு வந்தது.
அந்தச் சாலை எங்கு போகிறதோ எனச் சிந்தித்தான்.
கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஒரு பக்கத்தில் உயரமான சலவைகல்லாலான மதிற்சுவரைக் கண்டான்.
சிறிது தூரத்தில் மலை மேல் அந்த மதிற்சுவரில் அழகிய நுழைவாயில் ஒன்றைக் கண்டான்.
அருகில் சென்று பார்த்தபோது, அந்த வாயிலின் கதவில் ரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருப்பதையும்,,அந்த வாயிலை நோக்கிச் செல்லும் பாதை தங்கத்தால் போடப் பட்டிருப்பதையும் கண்டான்.
அந்த வாயிலை நோக்கித் தன் நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.அருகில் செல்லும்போது அந்த வாயிலின் உள்ளே ஒரு மனிதன் தங்க மேசையின் முன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.
அருகில் சென்ற அவன் அந்த மனிதனிடம் கேட்டான்இந்த இடத்தின் பெயர் என்ன?”
அந்த மனிதன் சொன்னான்சொர்க்கம்
அவன் கேட்டான்குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”
நிச்சயமாக!உள்ளே வாருங்கள் குளிர்ந்த நீர் வரவழைக்கிறேன்சொல்லியவாறே அவன் கதவைத் திறக்கலானான்!
வழிப்போக்கன் தன் நாயைக் காட்டிக் கேட்டான்என் நண்பனும் என்னோடு வரலாம் அல்லவா?”
மன்னிக்கவும்!நாய்களுக்கு இங்கு அனுமதி இல்லை
வழிப் போக்கன் யோசித்தான்.பின் தன் வந்த பாதையில் சாலையை நோக்கி நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.
நீண்ட தூரம் நடந்தபின் மற்றொரு வாயிலைக் கண்டான்.துருப்பிடித்த கதவு.அதை நோக்கி ஒரு மண்பாதை சென்று கொண்டிருந்தது.
அந்த வாயிலை அவன் நெருங்கியதும் ஒரு மனிதன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அவனிடம் கேட்டான்குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?”
உள்ளே ஒரு குழாய் இருக்கிறது,வாருங்கள்
நாயைக் காட்டிக் கேட்டான்என் தோழனுக்கும் நீர் வேண்டும்
அந்த மனிதன் சொன்னான்குழாயடியில் ஒரு குவளை இருக்கிறது.எடுத்துக் கொள்ளலாம்
அவன் உள்ளே சென்றான்.குழாயையும் குவளையையும் கண்டான்.தண்ணீர் எடுத்து நாய்க்கும் கொடுத்துத் தானும் அருந்தினான்.
தாகம் தீர்ந்தது.
மரத்தடி மனிதனை அணுகிக் கேட்டான்இந்த இடத்தின் பெயர் என்ன?”
அவன் சொன்னான்சொர்க்கம் என்றழைக்கப் படுகிறது
வழிப் போக்கன் திகைத்தான்,
குழப்பமாயிருக்கிறதே!நான் வரும் வழியில் ஒருவர் வேறு இடத்தையும் சொர்க்கம் என்று சொன்னாரே!”
!இந்த ரத்தினக்கல் பதித்த கதவுள்ள இடத்தைச் சொல்கிறீர்களா?
அது---நரகம்!!”
அப்படியென்றால் சுவர்க்கம் என்று அவர்கள் சொல்லிக் கொள்வது உங்களுக்கு எரிச்சலாக இல்லையா?”
இல்லை .மாறாக *மகிழ்ச்சியடைகிறோம்*
தங்கள் தாகம் தீர்க்கத் தங்கள் *உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு நிறுத்துவதற்காக!

இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

 Image may contain: 1 person, smiling, sunglasses, phone and outdoor
நன்றி இணையம்
பெ.சுகுமார்*

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:51 PM | Best Blogger Tips
POST OFFICE க்கான பட முடிவு

இது வேடிக்கையான ஒரு சொல்லாடலாக மாறிவிட்ட இன்றைய சூழலில், இது ஒரு உண்மையான நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் செய்தி.
இப்படி ஒரு சூழலை நினைத்துப் பாருங்கள், உங்கள் கணவரோ மனைவியோ வெளியூர் சென்றுள்ளார், அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார், நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது.
மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுபவேண்டும் என்று சொல்லுங்கள்.
விண்ணப்பத்தில், பெறுனர் அனுப்புனர் விபரம் மற்றும் அனுபவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும்.
வெளியே வந்து அந்த கவரை பிரித்தால் உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அந்த நம்பரை உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு SMS செய்யுங்கள், அந்த எண் என்ன என்று அந்த கவரை உங்களுக்கு கொடுத்த தபால்நிலைய ஊழியருக்கு கூட தெரியாது.
உங்கள் கணவர் அல்லது மனைவி தாங்கள் இருக்கும் ஊரில் உள்ள பெரிய தபால் நிலையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த 16 இலக்க எண்னை கொடுத்தால் உடனே பணம் கொடுக்கப்படும்.
ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம்
Western Union Money Trasfer
இது போல தானே உனு நீங்கள் கேட்கலாம், ஆனால் Western Union கிளைகள் இல்லாத இடங்களிலும் அஞ்சல்துறை அலுவலகம் உள்ளது
இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1500 கிளைகளில் இந்த சேவை கிடைக்கும்.