🌹இது தான் வாழ்க்கை ! இது தான் பயணம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

 May be an illustration of 2 people and text


🌹இது தான் வாழ்க்கை ! இது தான் பயணம் !
 
🌹ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
 
🌹அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
 
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
 
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
 
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.
 
தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.
அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ "நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
 
பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் "சாரி, என்னால் உன் கல்லறை வரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது" என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.
 
அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. 
 
"நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன்"’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.
 
"நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன்" என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே இறந்து போனான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு. 
 
எப்படி ?
 
1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
 
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
 
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
 
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
 
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
 
திருத்தப்பட்ட பகிர்ந்த பதிவு !

 

#நன்றி  🙏🌹இணையம்            🌹🙏

♥தன் மண் தன் தேசம் தன் நாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:30 AM | Best Blogger Tips


♥தேசம் தேசம் தன் தேசம்.

♥ தான் பிறந்த தேசம்.

♥தன் மண் தன் தேசம் தன் நாடு.

♥ என்ற கொள்கை பிடிப்புடன் இருப்பவர்களால் மட்டுமே இதே போல் சாதனையை நிகழ்த்தி காட்ட முடியும்.

♥ திரு வாஜ்பாய் அவர்களுக்கு பின்பு உலக நாடுகள் அனைத்தும் தற்போதுதான் மோடி அவர்ளின் சீறிய சிந்தனையால் இந்தியாவை ஐநாவில் நிரந்தர உறுப்பினராக்க பாடுபடுகின்றனர்.

♥ ஒரு காலத்தில் ஐநா பக்கமே நம்மால் நெருங்க முடியவில்லை.

♥ தற்பொழுது நிலைமை அப்படி அல்ல.
PM Modi condoles passing away of former PM Shri Atal Bihari Vajpayee
♥ ஆண்மகன் ஆண்டாள் தேசம் நன்றாக இருக்கும்.

♥ தற்பொழுது மூன்றாவது முறையாக பதவியேற்று வழி நடத்தும்  வாஜ்பாய் அவர்களின் சீடர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.

♥கட்சி பாகுபாடின்றி  செயல்படுவது தான் நாட்டு பற்று..!
Narendra Modi (@narendramodi) • Instagram photos and videos
♥எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை
நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி அரசியல் வேறுபாடுகளை கடந்து
காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாக செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய்.

♥இந்திய பிரதமராக நரசிம்மராவ்
செயல்பட்ட போது
எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் செயல்பட்டார்.

♥அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில் ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக செயல்பட்டது.
20 Atal bihari vajpayee ideas | atal bihari vajpayee, hd ...
♥அப்போது..

♥காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டு''மென்ற மசோதாவை ஐநாவில் வல்லரசு நாடான அமெரிக்கா பாக்கிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது..!

♥அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர்.

♥ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால்.

♥அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும் அடுத்த இருநாட்கள் ஐநா-விற்கு விடுமுறையாக இருப்பதால் அதற்குள்ளாக வலிமையான கருத்துக்களையுடைய இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்னும் தகவல் இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.

♥இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவும் பிரதமர் நரசிம்மராவும் ஆலோசித்தனர்.

♥ஐநா விவாதத்தில் பங்கேற்பதற்கு எதிர்கட்சித் தலைவரான வாஜ்பாயே சிறந்தவர்'' என்னும் நரசிம்மராவின் முடிவை ஏற்று...

♥குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வாஜ்பாயை தனி விமானத்தில் ஐநா கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

♥வல்லரசு நாடுகளில் அமெரிக்கா மற்றும்
சீனா மசோதாவிற்கு ஆதரவு.

♥ரஷ்யா மட்டுமே
மசோதாவிற்கு எதிர்ப்பு.

♥ பிரான்சும் பிரிட்டனும்
முடிவெடுக்காத நிலை.

♥இந்த நிலையில் ஐநா விவாதத்தில் பங்கேற்க வருகின்ற வாஜ்பாயின் வருகையை அமெரிக்க பத்திரிகைகள் முக்கியத்துவமாகக் கருதியது.
In pics: Narendra Modi, Atal Bihari Vajpayee's special moments - PANORAMA  BusinessToday
♥பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின..

♥அமெரிக்காவில் வந்திறங்கிய வாஜ்பாயிடம் அமெரிக்க பத்திரிகைகள் பேட்டி எடுக்க போட்டியிட்டன...

♥வாஜ்பாயி -

♥எனது நாட்டிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக எங்கள் அரசு நடவடிக்கை எடுப்பதை வல்லரசு நாடுகள் எதிர்ப்பது தவறு...

♥அமெரிக்காவால் கொண்டுவரப் பட்டிருக்கின்ற மசோதாவை வல்லரசு நாடுகள் ஆதரித்தால்...

♥இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு காரணமாக இருக்கும் நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
♥எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை
நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி அரசியல் வேறுபாடுகளை கடந்து
காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாக செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய்.

♥இந்திய பிரதமராக நரசிம்மராவ்
செயல்பட்ட போது
எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் செயல்பட்டார்.

♥அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில் ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக செயல்பட்டது.
Narendra Modi - Simple English Wikipedia, the free encyclopedia
♥பத்திரிகைகள் -

♥எதிர்கட்சித் தலைவரான உங்கள் முடிவை இந்திய அரசு ஏற்குமா??

♥என்று வாஜ்பாயிடம் கேள்வி எழுப்பினர்...

♥வாஜ்பாயி -

♥நான் எதிர்கட்சித் தலைவராக இங்கு வரவில்லை...

♥ இந்தியாவின் தலைமைப் பிரதிநிதியாக வந்துள்ளேன்...

♥ஏற்கனவே இங்கு வந்துள்ள இந்திய அமைச்சர்கள் எனக்கு கட்டுப்பட்டவர்கள்...

♥எனது முடிவே இந்தியாவின் முடிவு என்று கூறினார்.

♥வாஜ்பாயின் பத்திரிகை பேட்டி வெளியான சில மணி நேரங்களில்...
PM Modi tweets video of old images in memory on Atal Bihari Vajpayee |  Indiablooms - First Portal on Digital News Management
♥ பிரான்சும், பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டின.

♥ காரணம்  அவ்விரு நாடுகளிலும் அப்போது தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது.

♥அடுத்த நாள்..

♥இந்தியாவிற்கு எதிராக தான் கொண்டுவந்த மசோதா தோல்வியடைந்து விடுமென்பதை உணர்ந்த அமெரிக்கா அந்த மசோதாவை வாபஸ் வாங்கியது.

♥மாபெரும் வெற்றியாளராக இந்தியா திரும்பிய வாஜ்பாயை....

♥♥ வழக்கத்திற்கு மாறாக விமான நியைத்திற்கு சென்று இந்திய ஜனாதிபதி வரவேற்றார்.

♥இந்தியாவை எந்த கட்சி வேண்டும் என்றாலும் ஆட்சி செய்யலாம்...
BJP
♥அந்த ஆட்சியை குறை சொல்லலாம் ஆனால் ஆளும் கட்சியை விமர்சிப்பதற்காக இந்தியாவை விமர்சிக்க கூடாது...

♥பாஜக அரசை பாசிச அரசு என்று நீ தரம் குறைக்கும் போது வருத்தம் இல்லை...

இந்திய அரசை ஒன்றியரசு என்று தரம் குறைக்கும் போது வேதனையாக உள்ளது...

♥பாஜவை விமர்சிக்கலாம்.

♥மோடியை விமர்சிக்கலாம்.

♥ஆனால்
ஜெய்ஹிந்த் என்ற வீரமுழக்கத்தை விமர்சிக்க கூடாது.

♥மோடி அரசை விமர்சிக்கும் போது
நீ எதிர்கட்சி...

♥ஜெய் ஹிந்த் முழக்கத்தை விமர்சிக்கும் போது நீ தேச துரோகி....

♥ஜெய் ஹிந்த்..!

♥பாரத் மாதா கி ஜெய்..!
ஆழ்ந்த கருத்து உடைய பதிவு 🇮🇳🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏