பொதுஅறிவு 1!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:33 PM | Best Blogger Tips
*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

உறுதியான எலும்பு பலவீனமடைய காரணம் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:31 PM | Best Blogger Tips
நமது எலும்பின் உறுதியில் புரோட்டீன் ஆஸ்டியோகால்சின் என்ற ஒரு பொருளின் பங்கு குறித்து இதுவரை சரியான புரிதல் ஏற்படவில்லை என்று கூறும் அமெரிக்க ஆய்வாளர்கள் தங்களது புதிய ஆய்வில் எலும்புகள் தேய்மானம் அடைவதற்குக் காரணம் என்ன என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவரின் தலைமையில் ரென்சீலர் பாலிடெக்னிக் இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் எலும்புத் தேய்மானம் அல்லது ஆஸ்டியோ பொரோசிஸ் என்ற எலும்புத்துளை நோய்க்கு புதிய மருத்துவ உத்திகள் கண்டறியப்படலாம் என்று தெரிகிறது.

அமெரிக்க சுகாதார தேசிய நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆரோக்கியமான, உறுதியான் எலும்புகளில் கண்ணுக்குத் தெரியாத துளைகள் ஏற்படுகிறது என்றும் எலும்பின் கனிம அமைப்பில் 500 அணுக்களே சுற்றளவு கொண்ட இந்த ஓட்டைகள்தான் எலும்புத் தேய்மானத்திற்கும் எலும்பு முறிவிற்கும் பெரிய காரணமாக அமைந்துள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.

கீழே விழுதல், வழுக்கி விழுதல், அல்லது நொடி போன்றவற்றில் தவறி விழுதல் போன்றவற்றினால் ஆஸ்டியோபான்டின், மற்றும் ஆஸ்டியோகால்சின் என்ற இரண்டு புரோட்டீன்களில் தாக்கம் ஏற்படுகிறது. இது கண்ணுக்குப் புலப்படா துளைஅக்ளை ஏற்படுத்துகிறது. இந்த துளைகள் உண்மையில் எலும்பை பாதுகாக்க ஏற்பட்டாலும், கீழே விழும்போது தாக்கம் அதிகமிருப்பதால் ஆஸ்டியோகால்சின், ஆஸ்டியோபான்டின் இல்லாத எலும்புகளை கடுமையான சேதத்திற்கு உள்ளாக்குகிறது.

தீபக் வஷிஷ்த் என்ற இந்திய வம்சாவளி ஆய்வாளர் இது போன்ற நுண்ணிய பாதிப்புகளை தற்போது அடையாளம் கண்டுள்ளார்.

எலும்பு முறிவு ஏற்படுவது ஆஸ்டியோகால்சினில்தான் எனும்போது ஆஸ்டியோகால்சினை மேலும் பலப்படுத்தினால் எலும்பு முறிவை தடுக்கலாம் என்று வாஷிஷ்த் கூறுகிறார்.

ஆஸ்டியோகால்சின் தற்போது டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் குழந்தைப்பேறு சுகாதாரம் போன்றவற்றிலும் தாக்கம் செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் கே- ஆஸ்டியோகால்சினை பலப்படுத்துமா என்பதை எதிர்கால ஆய்வுகள் உறுதி செய்யவேண்டும் என்றார் வஷிஷ்த்.

இதுவரை எலும்பு தொடர்பான சிகிச்சையில் கால்சியம் முக்கியப் பங்கு வகித்தது. இனி வைட்டமின் கே புதிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பச்சை காய்கனிகளில் வைட்டமின் கே சத்து உள்ளது. கீரைகள், பசலை வகை கீரைகள் எலும்ப்பை உறுதிப்படுத்துமா என்பதை எதிர்கால ஆய்வுகள் கண்டறியும் என்கிறார் விஞ்ஞானி வஷிஷ்த்.

இவரது ஆய்வு முடிவுகள் தேசிய அகாடமி ஆஃப் சயன்சஸில் வெளியாகியுள்ளது.
 
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது. 
 
Thanks to FB-நலம், நலம் அறிய ஆவல்.

உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:20 PM | Best Blogger Tips
உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்

உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகிவிட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங் களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கும், கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சிறுதானியங்கள்
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடு பவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல்பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.

கம்பு, சோளம்
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

வரகு, ராகி
வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ள து. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

ஆண்மைக்கு சாமை
சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

சம்பா அரிசி
நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி என பலவகை உள்ளது.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

கோதுமை, பார்லி
அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.

நன்றி: Karthikeyan Mathanஉணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகிவிட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங் களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கும், கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சிறுதானியங்கள்
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடு பவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல்பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.

கம்பு, சோளம்
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

வரகு, ராகி
வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ள து. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

ஆண்மைக்கு சாமை
சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

சம்பா அரிசி
நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி என பலவகை உள்ளது.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

கோதுமை, பார்லி
அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.

நன்றி: Karthikeyan Mathan

கிரேப் ஜூஸ்!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:18 PM | Best Blogger Tips
அக்னியை எதிர்கொள்ள அசத்தல் ஜூஸ்! கிரேப் ஜூஸ்

200 கிராம் கறுப்பு திராட்சை, தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்துத் துணியில் வடிகட்டிக் குளிர்ந்த நீர் விட்டு மீண்டும் அரைத்துப் பருகவும்.

பலன்கள்: குளுகோஸ் அளவு இதில் அதிகம். வைட்டமின் சி, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மேங்கனீஸ் போன்ற தாது உப்புகள் சிறிதளவு இருக்கின்றன. கார்போஹைட்ரேட் இருப்பதால் நல்ல சக்தி கொடுக்கும். திராட்சை விதையில் மருத்துவக் குணம் அதிகம் இருப்பதால் ஜூஸ் தயாரித்து வடிகட்டாமல் அருந்துவது நல்லது. இதனால் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் கிடைக்கும். திராட்சையில் பூச்சி மருந்து தெளித்து வருவதால் நன்றாகக் கழுவிவிட்டு உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்துப் பயன்படுத்துவது நல்லது.

சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் அருந்த வேண்டாம். இதய நோயாளிகளுக்கு நல்லது. ஏதாவது உடல்ரீதியான பிரச்னைகளுக்கு மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், இந்த ஜூஸ் பருகியதும், உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
 
Thanks to FB  -நலம், நலம் அறிய ஆவல்
அக்னியை எதிர்கொள்ள அசத்தல் ஜூஸ்! கிரேப் ஜூஸ்

200 கிராம் கறுப்பு திராட்சை, தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்துத் துணியில் வடிகட்டிக் குளிர்ந்த நீர் விட்டு மீண்டும் அரைத்துப் பருகவும்.

பலன்கள்: குளுகோஸ் அளவு இதில் அதிகம். வைட்டமின் சி, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மேங்கனீஸ் போன்ற தாது உப்புகள் சிறிதளவு இருக்கின்றன. கார்போஹைட்ரேட் இருப்பதால் நல்ல சக்தி கொடுக்கும். திராட்சை விதையில் மருத்துவக் குணம் அதிகம் இருப்பதால் ஜூஸ் தயாரித்து வடிகட்டாமல் அருந்துவது நல்லது. இதனால் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் கிடைக்கும். திராட்சையில் பூச்சி மருந்து தெளித்து வருவதால் நன்றாகக் கழுவிவிட்டு உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்துப் பயன்படுத்துவது நல்லது.

சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் அருந்த வேண்டாம். இதய நோயாளிகளுக்கு நல்லது. ஏதாவது உடல்ரீதியான பிரச்னைகளுக்கு மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், இந்த ஜூஸ் பருகியதும், உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

வொர்க் அவுட்ஸ் - சில தவறான கருத்துக்களும் விளக்கங்களும்....

மணக்கால் அய்யம்பேட்டை | 6:07 PM | Best Blogger Tips
தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது வயிற்றுப் பகுதிக்கு அதிக பயிற்சி கொடுக்க வேண்டும்.

இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.

இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
 
Thanks to FB Doctor Vikatan

இந்து தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:26 PM | Best Blogger Tips
பொங்கல்

இந்து மதம் இயற்கை மதம்.

தைப் பொங்கல் என்பது பூமியில் விளைந்த இயற்கையான காய்கறிகள் , நவதானியங்கள் , பொங்கல் , கரும்பு மற்றும் பலவற்றை
சூரியபகவானுக்கு படைத்து வழிபடுகின்றனர்.
சூரியன் என்பது இயற்கை. அதனால் இயற்கையில் விளைந்த பொருள்களை வழிபடுபது என்பது பொருள்.
தீபாவளி தீபாவளி என்பது நரகாசூரனை வதம் செய்வது.
அதாவது கெட்ட சக்தியினை அழிப்பது என்பது தான் உண்மை. அதைப்போல் கெட்ட எண்ணங்களை அகற்றி
நன்மை வர வேண்டும் என்று மனதில் நினைத்து
தீபத்தை ஒளியேற்றி வணங்குவது ஆகும்.
ஆயுதப்பூஜை செய்யும் தொழில் நல்ல முறையில் இருக்கனும் என்று நினைத்து நேர்மையான முறையில் தொழில் செய்யனும் என்பது தான் பொருள்.
நாம் அவ்வாறு வேலை செய்யும் இயந்திரங்கள் ,
மற்றும் பொருள்களை வைத்து வழிபடுவது தான் ஆயுதப்பூஜை ஆகும்.

கார்த்திகை தீபம்.

“ கார்த்திகைப் பொழுது கால் பொழுது “ எனறு முன்னோர்கள் சொல்வார்கள். ஏனென்றால் இதன் விளக்கத்தினை கீழே பார்க்கலாம். சூரியன் ஐப்பசி மாதம் நீசமாகி கார்த்திகை மாதம் பிரபலிக்கிறார் என்பது ஜோதிடத்தின் உண்மை. இதனால் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி சூரியனை வரவேற்கின்றோம் என்பது தான் உலக உண்மை ஆகும்.- ஸ்ரீ கிருஷ்ணா கால்ரேகை ஜோதிடம் காலின் பெருவிரல் ரேகையை வைத்து கணித்து சொல்லப்படும் . இதன் மூலம் ஒருவருடைய வாழ்க்கை வரலாறு தௌளத்தெளிவாக தெரியும்.
திருமணவாழ்க்கை தடை வாழ்க்கையின் பிரச்சனைகள்
போன்ற தீர்க்கமுடியாத பல பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
இந்த கால்ரேகை ஜோதிடம் கிருஷ்ணருடைய பாதத்தை மையமாக வைத்து சொல்லப்படும்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது
தனது இடது கையினால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு. தனது இடது கையினால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்.

தனது இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.ஜோதிடர்,குரு,நோயாளி,கர்ப்பிணி,
மருத்துவர்,சந்நியாசி முதலியவர்களுக்கு
அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும். சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்
அவர்களுக்கு உதவ வேண்டும் . அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்
பசு, தேர் , நெய்குடம் , அரசு , வில்வம்,
அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால் வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது. துணியில்லாமல் குளிக்கக்கூடாது.
சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.
கன்றுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது.
மழை பெய்யும் போது ஓடக்கூடாது தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது. நெருப்பை வாயால் ஊதக்கூடாது மலஜலம் கழிக்கும் போது , இரவில் தெற்கு முகமாகவும் , மற்ற நேரங்களில் வடக்கு முகமாகவும் கழிக்க வேண்டும். கிழக்கு , மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக்கூடாது.
பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டாலோ ,
புண்ய நதியில் 3 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும். குழந்தையில்லாதவன், பெண் குழந்தைகளை மட்டும் பெற்றவன் , திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவன் , மனைவியை இழந்தவன் இவர்களை சுபகாரியங்களில் முன்னிறுத்தக்கூடாது.
சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும். சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.
பெண்கள் ஆண்களுடன் அருகருகே அமர்ந்து உண்ணக்கூடாது. கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும். திருமணத்திலும், பந்தியிலும் பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம். கோவணமின்றி , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது. இருட்டில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்துவிட்டு
மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் .
சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டியது வெற்றிலையில் நுனியில் பாவமும், மூலையில் நோயும் , நரம்பில் புத்திக்குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விடவேண்டும்.
சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனையோ , வெறும் பாக்கை மட்டும் போடக் கூடாது.

வெற்றிலையின் பின்பக்கம்தான் சுண்ணாம்பு தடவவேண்டும். மனைவி, கணவனுக்கு வெற்றலை மடித்துக் கொடுக்கலாமே தவிர , கணவன் மனைவிக்கும் , மகன் தாய்க்கும் , பெண் தந்தைக்கும் மடித்து தரக்கூடாது. குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது தலையையோ , உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும்.

இரண்டும் கைகளாலும் சொறியக்கூடாது. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது
வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும். தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.
வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு , உமி, ஒட்டாஞ்சில்லி

இவற்றின் மீது நிற்கக் கூடாது.

பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது. ஈரக்காலுடன் படுக்கக்கூடாது. வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது
.நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.
ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் , கெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது.

பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.

அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் , முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை
குத்திக் காட்டிக் பேசக்கூடாது.

ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் ,
மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை இவற்றை பற்றி
வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ஆசனம் இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.
பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது. பசுமாட்டினை காலால் உதைப்பது,
அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும்.
பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு புல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும்.

தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது. பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது. தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது.
அண்ணன் - தம்பி , அக்காள் - தங்கை , ஆசிரியர் - மாணவர் ,கணவன் - மனைவி, குழந்தை - தாய் , பசுவும் - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக்கூடாது.
நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது. வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும். கையால் மோரைக் குழப்பக்கூடாது.

நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.

மங்கையர்கள் கவனிக்க வேண்டியவை

பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு எழவேண்டும்.

சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து , முற்றத்தில் பெருக்கி சாணந் தெளித்துகோலமிட வேண்டும்.
கோலமிடுவதற்கு , மஞ்சள் கலந்த அரிசிமாவு , பச்சிலைப்பொடி , குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும். சுபகாரியங்களுக்கு ஒரு கோடும் , அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது.
பூஜையறை , சமையலறை , சாப்பிடுமிடத்தை நாள் தோறும் கழுவுதல் வேண்டும்
அமாவசை , பௌர்ணமி , கார்த்திகை , மாதப்பிறப்பு ,
வெள்ளிக்கிழமை , பிறவிசேஷதினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்.
மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது.
தாமிரப் பாத்திரங்களை புளியினாலும் ,
வெங்கலம், பித்தளைப் பாத்திரங்களை சாம்பலாலும்
ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும் ,எவர்சில்வர் , பீங்கான் பாத்திரத்தை அரப்புப் பொடியினாலும் சுத்தப்படுத்த வேண்டும். குளித்த பினபு தான் குடிநீர் எடுக்க வேண்டும்.

தண்ணீர்குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும்.

தோளிலும், தலையிலும் சுமக்கக்கூடாது.

சூரிய அஸ்தமன சமயமான மாலை நேரங்களில் ,

கைகால் கழுவி விளக்கேற்றி வைக்க வேண்டும்.

உரல் , அம்மி , முறம் , வாசற்படி , உலக்கை இவற்றின் மீது உட்காரக்கூடாது.

வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்டாது. 4 வது நாளில் கணவனை வணங்கிவிட்டு , 5ம் நாள் குளித்து விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம். அன்று கணவனோடு சேர்வது சிறப்பு வாழை, புன்னை, மா, பலா இலைகள் சிறந்ததாயினும், உணவு படைப்பதற்கு வாழையிலையே மிகச்சிறந்தது. வாழையிலையில் அடியில் சிறிது அறிந்துரிட்டு, கழுவிவிட்டு இலையை போட வேண்டும். சாப்பிடுபவர்களின் வலது கைப்பக்கம் இலையின் அடிப்பாகமும், இடக்கைப்பக்கம் நுனிப்பாகம் இருக்கும்படி போடவேண்டும். எதையும் கையால் படைக்கக்கூடாது. அப்பளம் போன்றவற்றை கையை கழுவிவிட்டு போட வேண்டும். சோறு, கறி முதலியவற்றை மண்பாண்டத்தில் வைத்தோ அல்லது
அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது. வீட்டுக்கு வந்த புது மருமகளையும், நோயாளிகளையும் கர்ப்பிணிப் பெண்களையும். குழந்தைகளையும் வயதானவர்களையும் முதலில் சாப்பிடச் சொல்ல வேண்டும். சாப்பிடும் போது நீர் குடிக்கக்கூடாது.உண்ட பின்பு குடிக்க வேண்டும்.
உணவு அருந்திய பின் குளிக்கக் கூடாது. மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை கழித்து(2மணி நேரம்) குளிக்கலாம். ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது. தலையில் சூடிய மலரை தானே எடுத்தெறிய கூடாது. பெண்கள் விரதமிருக்க வேண்டும். கணவனுடைய அனுமதி பெற்றே விரதமிருக்க வேண்டும்.

தீபம் ஏற்றும் நேரம் தீபம் ஏற்றும் நேரம் : பிரம்ம முகூர்த்தம் காலையில் உஷத் காலத்திலும் ,
மாலையிலும் சூரிய அஸ்தமனத்தக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும் எவர்சில்வர் விளக்கு ஆகாது.
2 திரியை சேர்த்த முறுக்கி, ஏற்றுவது உத்தமம்.
தீபத்தை கிழக்கு திசையிலும் , மேற்குத்திசை நோக்கயும், வடக்கு திசை நோக்கியும் தீப மேற்ற வேண்டும். தெற்கு எமனுடைய திசையாதலால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது. ஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும். இடுகையிட்டது அமிர்தகௌரி நேரம் வியாழன், ஏப்ரல் 07, 2011 லேபிள்கள்: அறியவேண்டியவை

இந்து தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள் !!

Thanks to FB தர்மத்தின் பாதையில்

தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டுமா?....

மணக்கால் அய்யம்பேட்டை | 4:08 PM | Best Blogger Tips

இப்போதெல்லாம் தினமும் நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று நிறையப்பேர் வற்புறுத்துகிறார்கள் .

அதற்கான காரணங்களையும் பல விதமாகச் சொல்கிறார்கள்...

அதிலும் அமெரிக்கர் அல்லது ஜப்பானியர் யாராவது சொன்னால் அது வேத வாக்காகவே ஆகிவிடுகிறது!...

நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறதே தவிர யார் குடிக்கவேண்டும் யார் குடிக்கவேண்டியது இல்லை என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை!

எதனால் தண்ணீர் குடிக்க வேண்டும்?

தாகம் எடுத்தால்!

தாகம் எதனால் எடுக்கிறது?

நாம் உண்டது கரைக்கப்பட்டுச் செரிமானம் ஆகவும் நமது உடம்பில் வெப்பத்தாலும் வேறு காரணங்களாலும் வெளியேறும் நீரை ஈடு செய்வதற்காகவும்..

அப்படியானால் தாகம் இல்லாவிட்டால் தண்ணீர் குடிக்கவேண்டியது இல்லை அல்லவா?..

நிச்சயம் இல்லை!

அப்படியானால் தாகம் இல்லாமல் ஏன் தண்ணீர் குடிக்கவேண்டும்?

தேவை இல்லை!

குடிக்கச் சொல்கிறார்களே!

அப்படியானால் சம்பந்தப்பட்டவர் ஒரு நோயாளியாக இருக்க வேண்டும்.

ஆம்! ஒருவருக்குத் தாகம் ஏற்ப்படாமேலே தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்!

அந்தக் காரணத்துக்குப் பெயர்தான் நோய்!

தண்ணீர் நிறைய அருந்துவது ஒரு மருத்துவமாக மட்டும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கருத்து!..

அதற்கான தேவை இருக்கவேண்டும்.

அப்படி அதிக அளவு தண்ணீர் குடித்துக் கரைத்து வெளியேற்றவேண்டிய அளவு உடலில் கழிவுகள் இருக்க வேண்டும்...

தண்ணீர் நிறையக் குடிப்பதன்மூலம் கழிவுகளைச் சுத்தப்படுத்தி நோய் குணப்படுத்தப்படுகிறது!

ஆதாவது தண்ணீர் தேவைக்கு அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் தீமையை விட அங்கு நன்மை அதிகமாக கிடைக்கிறது!

அப்படி இல்லாமல் உடல் நலத்துடன் இருப்பவர்கள் தாகம் எடுக்காமல் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் அருந்துவதால் நன்மை எதுவும் இல்லை!

மாறாகத் தேவையின்றிச் சிறுநீரகங்கள் உட்படப் பல பாகங்களுக்கும் வேலை கொடுக்கிறோம். அது உண்மையில் மறைமுகமாக நமக்கு நாமே தீங்கு விளைவித்துக்கொள்வதே ஆகும்.

ஆதாவது நோயில்லாமல் மருந்து உண்பதற்குச் சமம் ஆகும்.

ஆகையால நோயற்றவர்கள் தாகம் எடுக்குமளவு தாகம் எடுக்கும் நேரத்தில் மட்டும் தண்ணீர் குடித்தால் போதும் என்பதே சரியான முறை ஆகும்!

ஆகையால் நோயற்றவர்கள் தாகம் எடுக்குமளவு தாகம் எடுக்கும் நேரத்தில் மட்டும் தண்ணீர் குடித்தால் போதும் என்பதே சரியான முறை ஆகும்!

http://www.drumsoftruth.com/2013/05/57.html

Thanks to FB Subash Krishnasamy

நோய் எதிர்ப்பு சக்தி(Immunity)என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:04 PM | Best Blogger Tips
நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)

என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.

அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது? நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய் எப்போது ஏற்படுகிறது?உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:

1. பலகீனமான உடலமைப்பு

2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்

3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது

4. மது, போதைப்பொருள் பழக்கம்

5. புகைப்பழக்கம்

6. தூக்கமின்மை

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.
 
Thanks to  தமிழ் களஞ்சியம்

நெருக்கடி - வாய்ப்புச் சுளைகள்....

மணக்கால் அய்யம்பேட்டை | 1:16 PM | Best Blogger Tips
நெருக்கடி என்கிற சூழலை யாரும் விரும்புவது இல்லை. ஏனெனில், நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் பரம சௌக்கியமானது என்ற மனப்போக்கு நம்முடையது.

ஆனால் நெருக்கடி என்பது ஒரு நல்ல விசயமாகும். எப்படி? இந்தச் கதையைப் படியுங்கள்.

ஜப்பானியர்களுக்கு ‘ஃப்ரெஷ்’ மீன் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால், ஜப்பானியக் கடல் பகுதியில் மீன்கள் அவ்வளவாக இல்லை. படகுகள் கடலுக்குள் வெகுதூரம் சென்று மீன்பிடித்துக் கொண்டு திரும்ப வேண்டியிருந்தது.

நீண்ட தூரம் சென்று மீன்பிடித்து வருவதால் எப்படி ஃப்ரெஷ்ஷாக மீன் இருக்கும். ஜப்பானியர்களுக்கு அந்தச் சுவை பிடிக்கவில்லை.

யோசித்தார்கள். மீன்பிடித்து அதனை ஐஸ்பெட்டியில் போட்டுப் பதப்படுத்தி கரைக்குக் கொண்டு வந்தார்கள்.

இந்தச் சுவையும் ஜப்பானியர்களுக்கு விருப்பமானதாக இல்லை. எப்படியாவது ஃப்ரெஷ்ஷாக கரைக்கு மீனைக் கொண்டுவர வேண்டும் என்ன செய்வது?

மீன்பிடிக் கப்பலுக்குள் ஒரு பெரிய தொட்டி அமைத்து, பிடித்த மீனை அதனுள் விட்டார்கள். உயிரோடு கரைக்குக் கொண்டு வந்தார்கள். சமைத்தார்கள். பிரச்சனை தீர்ந்ததா? ம்ஹும். தீரவில்லை. இப்போதும் மீன் ருசியாக இல்லை.

எங்கேயோ நடுக்கடலில் பிடித்த மீன் உயிரோடு தானே கரைக்கு வருகிறது. இதற்கு மேல் ஃப்ரெஷ்ஷாக மீனை எப்படிக் கொண்டு வருவது?

பிரச்சனை என்னவென்றால், மீன்தொட்டியும், கடலும் ஒன்றில்லை. அந்த வித்தியாசம் மீன்களுக்குப் புரிந்ததும், அவை அலுத்துப் போய் சும்மா இருந்துவிட்டன. சோர்ந்துபோன மீன்களின் சுவை ஜப்பானியர்களுக்குப் பிடிக்கவில்லை.

எப்படியாவது தொட்டிகளில் உள்ள மீன்களைச் சுறுசுறுப்பாக்க வேண்டும். என்ன செய்யலாம்? நடுக்கடலில் மீன்கள் நடமாடும் தொட்டிக்குள் ஒரு சிறிய சுறாவை விட்டார்கள். சுறா, மீன்களைத் துரத்தி வேட்டையாட முயன்றது. மீன்கள் முன்பைவிட அதிக சுறுசுறுப்புடன் தொட்டியைச் சுற்றிவந்தன. சில மீன்கள் சுறாவிடம் அகப்பட்டு உயிர் இழந்தன. ஆனால் பெரும்பான்மையான மீன்கள் மிகவும் ஃப்ரெஷ்ஷாக இருந்தன. அதன் ருசி ஜப்பானியர்களுக்கு முழு திருப்தியைத் தந்தது.

ஆக, தொட்டியில் சும்மா சுற்றிவருகிற மீன்கள் இலக்கு இல்லாமல், நெருக்கடி எதுவும் இல்லாமல், சமாளிப்பதற்கு சவால் ஏதும் இல்லாமல் போரடித்துப் போய் சோர்ந்துவிட்டன. அந்த மீன்கள் மீண்டும் சுறுசுறுப்பாவதற்கு சுறாக்குட்டி என்கிற நெருக்கடி தேவைப்பட்டது.

சராசரி மனிதர்களும் இப்படித்தான். நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் சௌகரியம் என்று சுகமாக சுருண்டு கொள்கிறார்கள். ஆனால் நிஜத்தில், நெருக்கடிகள் தான் நம்மை மேலும் வலுவாக்குகின்றன. போராடத் தூண்டுகின்றன. நம்மிடம் இல்லாத திறமைகளைக் கூட வெளிக்கொண்டு வருகின்றன.

Thanks to FB Thannambikkai

அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips
அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு..

ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும். 

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்.. 

அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல். 

தூசி அலர்ஜி & சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்.ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும்.

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்..

அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல்.

தூசி அலர்ஜி & சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்.

Thanks to FB மருத்துவக் குறிப்பு Health Care in Tamil

மவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:42 PM | Best Blogger Tips
கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.

1.முதலாவதாக மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான்,மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.

3.மவுஸ் இயக்கப்படுகையில் உங்களுடைய மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல் பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக் கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.

4. உங்களுடைய நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மவுஸ் பிடிக்கும் உங்கள் கரத்தை, பெரும்பாலும் வலது கரம், சற்றுத் தூக்குங்கள். உங்கள் கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள். மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். கீ போர்டுக்கு 1 அல்லது 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். இந்த மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழாக சரிவாக இருக்கும்படியாகவும் அமைக்கலாம்.

5. நீங்கள் மணிக்கட்டின் அமைப்பைச் சற்று சிரத்தையுடன் கவனித்தால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் உள்ளது. தட்டையான ஒரு தளத்தில் மணிக்கட்டை வைத்துப் பாருங்கள். வளைவான மணிக்கட்டின் கீழாக ஒரு சிறிய பேனாவினை நுழைத்து எடுக்கும் அளவிற்கு, அது வளைவாக இருக்கும். இதனுடன் எந்த தள அழுத்தமும் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்து வது இயற்கைக்கு முரணானது.

6. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மணிக்கட்டின் தோலுக்குச் சற்று அடியிலேயே ரத்த நாளங்கள் செல்லும். அதனால் தான் நாடித் துடிப்பினை இங்கு பார்க்கிறோம். எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அது ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இங்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

7. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதிக்கென தனியே ஒரு சப்போர்ட் அமைத்து இயக்குவார்கள். கைக்குட்டையைக் கூட மடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள். இது கூடவே கூடாது. இது பிரச்சினையை மேலும் பெரிதாக மாற்றி, ஏற்கனவே நாம் கம்ப்யூட்டர் மலரில் எழுதிய கார்பல் டனல் பிரச்சினையை உருவாக்கும்.

8. ஒரு சிலர் கரங்களுக்கு மெதுவாக இருப்பதற்கென மென்மையான சப்போர்ட் ஒன்றை நாற்காலியின் கரங்களில் வைத்துப் பயன்படுத்து வார்கள். இவ்வாறு பயன்படுத்துகையில் கரங்களை அதிலிருந்து எடுக்க மாட்டார்கள். ஒரு வகையில் கரங்கள் கட்டிப் போட்டது போல மாறுகிறது. இதனால் மணிக்கட்டிற்கு அதிக வேலை கிடைக்கிறது. இது மிகவும் பிரச்னையைத் தரும்.

9. ஒரு சம தளத்தில் கையை வைத்து இயக்குகையில், நம் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் அதனை அமர்த்தி இயக்க வேண்டும். கீ போர்டினை இயக்குகையில் இது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் மவுஸ் பயன்பாடு கீ போர்டு பயன் பாட்டிலிருந்து மாறுபட்டது. கீ போர்டில் கரங்களை உள்ளங்கை சப்போர்ட்டில் வைத்துப் பின் விரல்களை மட்டுமோ, கரங்களையோ இயக்கிப் பின் அவ்வப்போது உள்ளங்கை அடிப் பகுதியில் வைத்து ஓய்வளிக்கலாம். ஆனால் மவுஸ் இயக்கம் அப்படிப் பட்டதல்ல. இங்கு ஒரு தளத்தின் மீது முழு மவுஸ் சாதனமும் நகர்த்தி இயக்கப் படுகிறது. மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கையை இயக்கத்தின் நடுப் புள்ளி யாக வைத்து இயக்கப்பட வேண்டும். மணிக்கட்டு நடு இயக்கப் புள்ளியாக அமையக் கூடாது. முன்கை, கை மற்றும் மவுஸ் இயங்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பாடு எது இருந்தாலும், அது பிரச்சினையைக் கொடுக்கும்.

10. இப்போது ஸ்டைல் என்ற பெயரில் பல வடிவங்களில், பெரும்பாலும் தேவையற்ற வளைவுகளில் மவுஸ் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இது போன்ற வளைவான மவுஸ் பயன்பாட்டிற்குச் சரியானதல்ல. இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியான ஒன்று. சில நிறுவனங்கள் இது குறித்து மருத்துவ ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சற்றுப் பெரிய அளவில் மவுஸ்களைத் தருகின்றன. இவை மணிக்கட்டிற்கு வேலையைக் குறைத்து கரங்கள் வழி மவுஸ் பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றன.

11. மவுஸை இடது கரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் செட் செய்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏன் வலது கை, இடது கை என நம் வேலையை மாற்றி சில காலம் மவுஸைப் பயன்படுத்தக் கூடாது. இது ஒரு சிந்தனைதான்

நன்றி FB Karthikeyan Mathan

தென்காசி !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:37 PM | Best Blogger Tips
தென்காசி (Tenkasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

தென்காசி நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.

முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர்.வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர்.அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார்.அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது. முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பல முறை வென்றதாக கல் வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

"தமிழகம் ஒரு உலா" - தென்காசி 

நன்றி : ஐ லவ் நெல்லை

To know about all flowers of the world step in and like this page 
https://www.facebook.com/Flowersonearth 
 
நன்றி : ஐ லவ் நெல்லை

புருஷ சூக்தம் மத்திரம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips
வேத சம்ஹிதைகளின் மிகப் பிரபலமான மந்திரங்களில் ஒன்று புருஷ சூக்தம் எனலாம். எல்லா வைதீக சடங்குகளிலும், வேள்விகளிலும், வழிபாடுகளிலும், பூஜைகளிலும் ஓதப் பெறும் ஒரு சூக்தம் இது. முதன்முதலில் ரிக்வேத சம்ஹிதையில் தோன்றும் இந்த சூக்தத்தின் மந்திரங்கள் சில இணைப்புகளுடன் யஜுர், சாம, அதர்வ வேதங்களிலும், சில உபநிஷதங்களிலும் மீண்டும் மீண்டும் வருகின்றன. அனைத்திலும் ஊடுருவி நிற்கும் பரம்பொருளை புருஷன் என்ற பெயரால் சுட்டி, அந்தப் பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்த சூக்தம். பிரார்த்தனை, சடங்கு, தத்துவம் என்ற மூன்று அம்சங்களையும் கொண்டு தன்னளவில் ஒரு முழுமையான சாஸ்திரமாகவே புருஷ சூக்தம் அமைந்துள்ளது எனலாம்.

புருஷன் என்ற சொல்லில் இருந்தே தொடங்கலாம்.

முன் செல்பவன் புருஷன் (புரதி அக்ரே கச்சதி ய:)
அனைத்தையும் தன் சக்தியால் நிரப்புபவன் புருஷன் (பிப்ரதி பூரயதி பலம் ய:)
அனைத்தையும் நிறைத்தும், மறைந்திருப்பவன் புருஷன் (புரி சே’தே ய:)
ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: )
அழியாத இன்பத்தால் நிறைந்தவன் புருஷன் (புரு+ஷ:)

இவ்வாறு இந்தச் சொல்லுக்கு வேத அகராதிகள் மற்றும் பிராமணங்களின் துணை கொண்டு பல்வேறு அர்த்தங்கள் தரலாம்.

புருஷனின் ”முக்கால் பகுதி விண்ணில் உறைகிறது” என்பதன் பொருள் நமக்கு வெளிப்பட்டு நிற்கும் இயற்கையை விடவும், வெளிப்படாது நிற்கும் பேரியற்கை மிகப் பெரியது என்பதாம். நாம் வசிக்கும் பூமி போல, அது அமைந்துள்ள சூரியக் குடும்பம் போல, அந்த சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வீதி போல, அந்தப் பால்வீதி சுழல்கின்ற பிரபஞ்சம் (universe) போல, ஏராளமான கிரகங்களும் சூரியக் குடும்பங்களும், பால்வீதிகளும், பிரபஞ்சங்களும் கொண்டது பேரியற்கை. நவீன அண்டவியல் (cosmology) கூறும் இந்த பிரம்மாண்டத்தின் அதிசயத்தையே கவித்துவ மொழியில் இந்த மந்திரமும் கூறுகிறது.

”புருஷனிடமிருந்து ‘விராட்’ தோன்றினான்; பின்னர் ’விராட்’டிலிருந்து பல்லுயிர்களாக புருஷன் தோன்றினான்” என்கிறது அடுத்த மந்திரம். இங்கு முதலில் கூறப்பட்ட புருஷன் என்பது வெளிப்படாத பேரியற்கை (அவ்யக்தம்). இரண்டாவதாகக் கூறப்பட்டது வெளிப்பட்ட இயற்கை (வ்யக்தம்). விராட் என்பது இந்த வெளிப்பாட்டிற்கான சாதனம் அல்லது சக்தி. பிற்காலத்தில். சாங்கிய தரிசனத்தின் ஆதாரமாக விளங்கப் போகும் பிரகிருதி-புருஷ தத்துவத்தின் விதைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம்.

இதுவே சைவ மரபில் பின்னர் சிவ-சக்தி தத்துவமாக மலர்கிறது. வேத சொற்பொருள் விளக்கங்களில் “விராட்” என்பது பெண்பாற் சொல்லாகக் கொள்ளப் படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
அடுத்து வரும் மந்திரங்கள் பிரபஞ்ச சிருஷ்டியை ஒரு மகத்தான வேள்வியாக உருவகம் செய்கின்றன. அக்னி, நெய், சமித்துக்கள், அவி ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்தப் படுபவை வேள்விச் சடங்குகள். இச்சடங்குகள் இயற்கை இடர்களிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் காக்கவும், லௌகீக தேவைகளை நிறைவேற்றவும் தெய்வங்களை வேண்டும் ஒரு பழங்குடித் தன்மை கொண்ட பிரார்த்தனைகள் மட்டுமே என்பதாக நவீனத்துவ அடிப்படையில் பல இந்தியவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள். ஆனால், வேத ரிஷிகள் அத்துடன் நின்றுவிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்தச் சடங்கு உடனடியாக ஒரு பிரபஞ்சம் அளாவிய குறியீடாக மாறுகிறது. அந்த கணத்தில் அங்கு ஒரு மகத்தான தத்துவப் பாய்ச்சல் நிகழ்கிறது.

யக்ஞம் என்பது sacrifice என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு, பின்னர் அந்தச் சொல் மூலமாகவே எல்லா வேத மொழியாக்கங்களிலும் பொருள் கொள்ளப் பட்டது. இது மூலச் சொல்லின் ஒரு அம்சத்தைக் குறிக்கின்றதே அன்றி அதன் முழுமையை அல்ல. அடிப்படையில் யக்ஞம் என்பது வஸ்துக்களை ஒன்றிலிருந்து வேறொன்றாக மாற்றும் ஒரு செயல்பாடாகும். பிரபஞ்ச சக்திகளான தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கூட்டுச் செயல்பாடு யக்ஞம். இந்தக் கருத்தையே கீதையிலும் (3.10-11) நாம் காண்கிறோம் –

தொடக்கத்தில் புருஷன் ஒருவரே இருக்கிறார். இந்த ஒன்று பலவாக ஆவதே சிருஷ்டி. அதை நிகழ்த்துவது காலம். எனவே, காலத்தின் மூன்று பரிமாணங்களான வசந்தம், கோடை, சரத்ருது ஆகியவை முறையே நெய், விறகு, அவி என்று ஆகி இந்த வேள்வி நிகழ்வதாக மந்திரம் கூறுகிறது. வேத அழகியலின் படி இந்த மூன்று பருவகாலங்களும் முறையே இந்திரன், அக்னி, வாயு ஆகிய மூன்று தேவதைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அடுத்துள்ள மந்திரங்கள் பிரபஞ்சத்தை புருஷனின் உடலாகப் போற்றிப் பாடுகின்றன. சந்திரனை மனத்துடனும், சூரியனைக் கண்களுடனும், முகத்தை இந்திரன் – அக்னியுடனும், காற்றை மூச்சுடனும் தொடர்புறுத்தும் கவிதை உருவகங்கள் ஆழமானவை.

முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல். இதையே மேலும் விரித்து, விஷ்ணு நாபியிலிருந்து மலர்ந்தெழும் தாமரையில் அமர்ந்து படைப்புக் கடவுளான பிரமன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்குவதாக பிற்காலத்திய புராணங்கள் அற்புதமான கலைநயத்துடன் விவரிக்கின்றன.

“குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார்”

என்று ஆண்டாள் சிலிர்ப்புடன் பாடுகிறாள். உடலியல் ரீதியாக, தாயின் கருவில் இருந்து உதிக்கும் ஒவ்வொரு உயிரின் சிருஷ்டியும் தொப்புள் கொடி வழியாகவே நிகழ்கிறது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

நன்றி வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

வ.உ.சி !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:33 PM | Best Blogger Tips

கப்பல் நிறுவனம் சுதேசிய நாவாய் சங்கம்-1906
 
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.
வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ. 2,00,000 கொடுத்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.
ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ். எஸ். லாவோ" என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.
இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.
ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.

நன்றி தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture