அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர்
அவர்களின் மனைவியாவார். ஏழு ரிஷிகளும்,வானில் நட்சத்திரங்களாக ஒளி
வீசுகிறார்கள்.இதைத்தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம். ஏழு
நட்சத்திரங்களில்,ஆறாவதாக(நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால்,சப்த ரிஷி
மண்டலத்தை காணலாம். ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை
கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும்
பார்க்கலாம். மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,ஊர்வசி,மேனகை இவர்களிடம்
சபலபட்டவர்கள். அதேபோல் அவர்களுடைய மனைவிகளும்,இந்திரனனின் மேல்
சபலப்பட்டவர்கள். ஆனால் வசிஷ்டரும்,மனைவியும் ஒன்று சேர்ந்து,மற்றவர்களின்
மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.
அருந்ததி
நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும்,நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக
தெரிகிறது. அதேபோல் மணமக்கம் இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்கவேண்டும். மணமகளும் அருந்ததியைபோல் கண்ணியமாகவும்,கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.