பிரதோஷம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | Best Blogger Tips
பிரதோஷம்:
----------------
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக மாதமிருமுறை பிரதோஷம் வரும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை மட்டும்தான். திரயோதசி நாளில் சூரியன் மறையும் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ காலமாகும்.

பொதுவாக வளர்பிறையிலோ, தேய்பிறையிலோ, மாலை வேளையில் திரயோதசி வந்தால் அது மஹாபிரதோஷம் ஆகும். அதுவே சனிக்கிழமைகளில் வந்தால் அது சனிப் பிரதோஷமாகும்.

தேவர்களின் துன்பம் போக்க நஞ்சை உண்ட சிவபெருமான், அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ கயிலாய மலையில் பிரதோஷ காலத்தில்தான் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையில் திருநடனமாடி மகிழ்வித்தார். அதனால் பிரதோஷ காலத்தில் தவறாமல் சிவாலயத்திற்குச் சென்று நந்தி தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து சிவபெருமானை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நடமாடும் கோலத்தில் வழிபடுதல் சிறப்பு.

மேலும் சிவபெருமான் நடனமாடும்போது அந்த உக்கிரத்தை பொறுக்கமுடியாமல்,தேவர்களும்,மற்றவர்களும் சிதறி ஓடினார்களாம்.அதனால்தான் பிரதோச தினத்தன்று கோயிலை வலம் வரும்போது எப்போதும் மாதிரி வராமல் எதிர்மறையாக சுற்றுவார்கள்.

பிரதோஷமானது நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று 5 வகைப்படும்.

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும் . எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

இன்று பிரதோச தினமாகும்..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.