நீங்கள் பெண் குழந்தையின் அப்பாவா?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:08 PM | Best Blogger Tips
நீங்கள் பெண் குழந்தையின் அப்பாவா?

நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டு விடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறு வார்கள். அம்மாவுடன் கூட்ட ணி அமைத்துக்கொண்டு அவர் கள் ஒதுங்கிவிடுவதால் அவர் கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரி யாமல் போய்விடும். பெண் குழந்தை களுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்க ள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்

போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத் தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார் கள். அதைப்போல முக்கியமான விஷய ங்களை கேட் டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷய ங்கள் தெரிய வரும்.
2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கி யம் அல்லவா?
3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி மறு க்கப்பட்டது. தற்போது கல்வி யில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்க ளை கேட்டு விளக்கம் கொடுங்கள்.
4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர் களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைக ளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!
5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என் னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையு டன் நீங்கள் அவருக்கு உதவு வது எப்படி என்று திட்டமிடு ங்கள்.
6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார் கள், ஆண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக் கொடு ங்கள்.

7. பெண்களென்றால் வீட்டில் தான் சாப்பிடுவார்கள் என்றில் லை. வித விதமாக நாம் உண் பதைப்போல் மகளுக்கும் சிற ந்த உணவகங்களுக்கு அழைத் துச்செல்லுங்கள். உணவு வகை களை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷ யமெல்லாம் தெரிந்துகொள் ளட்டும்.

8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப் பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இ து அவர்களுக்கு தன்னம்பிக் கையையும் மன உறுதியை யும் கொடுக்கும்.

9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல் லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொ ர்களின் சிறப்புக்களை யும் பற்றி அவர் அறியட்டும்.

10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப் படி, எங்கு படித்தீர்கள், உங்க ள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந் தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெ ளிவாக சொல்லுங்கள்.

11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தக ங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்க ள். வீட்டில் புத்தகங்களை சேர் த்து சிறு நூலகமாக உருவாக் குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டு வந்து கொடுங்கள்.

12. உடலளவிலும் மனதளவி லும் பலசாலியாக உருவாக்கு ங்கள். எந்த மாதிரி பிரச்சி னைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினை களுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வர வேண்டும் என்று காத்திரு க்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடு வது, வண்டி டயரை மாற்றுவது, போன் ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.

14. இவை எல்லாவற்றையும் விட நீங் கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வா ழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப் படட்டும். உங்கள் மனைவி யை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செய ல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல் வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்.

பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு...?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:02 PM | Best Blogger Tips
பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு...?

1.நெற்றி நடுவே -புகழ்,பதவி,அந்தஸ்து

2.நெற்றி வலது புறம்- தைரியம்,பணிவு இல்லாத போக்கு

3.நெற்றி இடது புறம்- அற்பகுணம்,டென்ஷன்,முன்கோபம்

4.மூக்கின் மேல்-செயல்திறன்,பெறுமைசாலி

5.மூக்கின் இடது புறம்-கூடா நட்பு,பெண்களால் அவமானம்

6.மூக்கின் நுனி-வசதியான வாழ்க்கை,திடீர் ஏமாற்றம்

7.மேல் கீழ் உதடுகள்-ஒழுக்கம், உயர்ந்த குணம்

8.மேல் வாய்ப்பகுதி-அமைதி,அன்பான கணவர்

9.இடது கன்னம்-வசீகரம்,விரும்பியதை அடையும் போக்கு

10.வலது கன்னம்-படபடப்பு,ஏற்ற இறக்கமான நிலை

11.வலது கழுத்து-பிள்ளைகளால் யோகம்

12.நாக்கு-வாக்கு வாதம்,கலைஞானம்

13.கண்கள்-கஷ்ட நஷ்டம்,ஏற்றம்,இறக்கம்

14.இடது தோள்-சொத்து சேர்க்கை,தயாள குணம்

15.தலை-பேராசை,பொறாமை குணம்

16.தொப்புளுக்கு மேல்-யோகமான வாழ்க்கை

17.தொப்புளுக்கு கீழ்-மன அமைதியின்மை
பொருள் நஷ்டம்

18.தொப்புள்-ஆடம்பரம்,படாடோபம்

19.வயிறு-நல்ல குணம்,நிறைவான வாழ்க்கை

20.அடிவயிறு-ராஜயோக அம்சம்,உயர்பதவி

21.இடது தொடை-தடுமாற்றம்,ஏற்றம் இறக்கம்

22.வலது தொடை-ஆணவம்,தற்பெருமை,எடுத்தெறிந்து பேசுதல்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பனம்பழம் (பனங்காய் ) சுவை மிகுந்தவை !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:33 PM | Best Blogger Tips

பனம்பழம் (பனங்காய் ) சுவை மிகுந்தவை !!!

பனை மரத்தின் பழம் பனம் பழம் மற்றும் பனங்காய் என்றும் கூறுவார்கள் இவை சுவை மிகுந்தவையாக இருக்கும் நாம் சிறுவயதில் நிறைய நண்பர்களுடன் சுட்டு அதை சுவைத்து இருப்போம் . நகரில் வாழ்ந்த நண்பர்கள் இந்த அனுபவத்தை பெற்று இருக்க கொஞ்சம் வாய்ப்பு குறைவு தான் இந்த பணங்காயே உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது இதற்க்கு நிறைய காரணங்கள் சொல்லலாம் ஓன்று தோட்டங்கள
் அனைத்தும் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது மக்கள் தொகை பெருக்கத்தினால் காடுகள் எல்லாம் வீட்டடி நிலமாக மாறிவருகிறது .நிறைய பனைமரங்கள் வேட்டபடுகிறது சில பயன்பாட்டிற்காக இப்படியே போய்கொண்டு இருந்தால் நம்மலுடைய அடுத்த தலைமுறைக்கு இவ்வகை பனம்பழம் பற்றி தெரியாமலே போய்விடும்

15 சமீ (6 அங்குலம்) தொடக்கம் 20 சமீ (8 அங்குலம்) வரை விட்டம் கொண்ட இவை குலைகளாகக் காய்க்கின்றன. நார்த் தன்மை கொண்ட இதன் தோல் கரு நிறமானது. இப் பழத்தில் இரண்டு அல்லது மூன்று விதைகள் இருக்கும். ஏறத்தாள 10 சமீ வரை அகல நீளங்களைக் கொண்ட சதுரப் பாங்கான வடிவம் கொண்ட இவ்விதைகள், அண்ணளவாக 2.5 சமீ தடிப்புக் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் நீண்ட தும்புகள் காணப்படுகின்றன. இத் தும்புகளிடையே களித் தன்மை கொண்ட, உணவாகக் கொள்ளத்தக்க, செம்மஞ்சள் நிறப் பொருள் உள்ளது. இது பனங்களி எனப்படுகின்றது. ஏனைய பழங்களைப் போல் இப்பழத்தை நேரடியாக உட்கொள்வதில்லை. இதனை நெருப்பில் சுட்டே உண்பது வழக்கம். நெருப்பில் சுட்ட இப் பழத்தின் தோலை உரித்து எடுத்தபின், களியைப் பிழிந்து உண்பார்கள்.

இக்களி கசப்புக் கலந்த இனிப்புத் தன்மை கொண்டது. இதை நேரடியாக உண்பது மட்டுமன்றி, இக் களியைப் பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருள்களையும் செய்வது உண்டு. இக்களியைப் பிழிந்து, பாய்களிற் பரவி, வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படுவது பனாட்டு எனப்படுகின்றது. இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது. இப் பனாட்டிலிருந்து பாணிப் பனாட்டு என்னும் ஒருவகைப் உணவுப் பண்டமும் தயாரிக்கலாம்.

இக்களியை அரிசி மாவுடன் கலந்து பிசைந்து, உருண்டைகளாக்கிப் எண்ணெயில் பொரித்து எடுப்பர். இது யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப பணியாரம் எனப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் பாமன் ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இவகையான பனாட்டுகள் செய்யபடும் . இப்பொழுது இந்த பனாட்டுகள் உற்பத்தி குறைவாகவே காணபடுகிறது

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்ப
ூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

மருத்துவப் பயன்கள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க:

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு:

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

இஞ்சி 5 கிராம்

பூண்டு பல் 5

நல்ல மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 5 இணுக்கு

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.