'சிறிய செயலும் பெரிது செய்யும்..’’..

மணக்கால் அய்யம்பேட்டை | 4:05 PM | Best Blogger Tips

 
...........................................

 

'சிறிய செயலும் பெரிது செய்யும்..’’..

...........................................

 

சிறிய செயல்களை ஒழுங்காகச் செய்பவர்கள் பெரிய செயல்களிலும் திறமையாக விளங்குவார்கள்..

 

சிறிய செயல்களுக்கு நாம் தரும் முக்கியத்துவம் நாம் எப்படி நிதானமாக செயல்படுகின்றோம் என்பதைப் பல நேரங்களில் மற்றவர்களுக்குக் காட்டுகிறது..

 

தொழிலதிபர் பிர்லா தனது இரண்டாவது மகளுக்கு வரன் தேடிக் கொண்டு இருந்தார்.. அச்சமயம் பிர்லாவை சந்திக்க நரேந்திர தபாரியா என்பவர் வந்து இருந்தார்..

 

பிர்லா வரும் வரை அவரது வீட்டு வரவேற்பறையில் இருந்த செய்தித்தாளைப் படித்துக் கொண்டு இருந்தார்..அப்போது பிர்லா அந்த இடத்திற்கு வந்து கொண்டு இருந்தார்..

 

அவர் வருவதைக் கண்ட நரேந்திர தபாரியா தான் படித்துக் கொண்டு இருந்த செய்தித்தாளை மிக அழகாக மடித்து இருந்த இடத்தில் வைத்தார்..அதில் ஓர் ஒழுங்கு இருந்தது..

 

இந்த சிறிய சம்பவம் பிர்லாவை கவர்ந்தது. பேச்சின் மூலம் அந்த இளைஞனின் நல்ல பண்புகளைக் கண்டு கொண்டார்..

 

அந்த இளைஞரை நன்கு அறிந்து கொண்ட பின்பு அவரையே தன் மகளுக்குப் பல எதிர்ப்புகளுக்கு இடையே மணம் முடித்து வைத்தார்..

 

ஆம்.,நண்பர்களே..,

 

எவ்வளவு சிறிய வேலையாக இருந்தாலும் அதை நேர்த்தியாகவும்,

சிறப்பாகவும் செய்யுங்கள்..

 

மற்றவர்கள் பாராட்டுவார்கள் என்ற எண்ணத்தில் அல்ல. உங்கள் திருப்திக்காக..

 

நீங்கள் பிரதிபலன் பார்க்காமல் செய்யும் செயல் உங்களை மற்றவர்கள் மனதில் உயர்வான எண்ணத்தை உருவாக்கும்.

 

உங்களை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும்.நன்றி இணையம்


மல்லிசாறு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 PM | Best Blogger Tips

 இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்....

 

அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:-....

 

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,...

 

தேங்காய் - 1 ,...

 

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு ...

 சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்....

 

இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்....

 

இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது....

 

(1). வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு, உப்பும், மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்....

 

(2). கொத்துமல்லி இலைச்சாறுடன், பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்....

 

(3). கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்....

 

இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்....

 

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்....

 

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்....

 

கல்லீரலை பலப்படுத்தும். பித்தம் கட்டுக்குள் இருக்கும்....

 

இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.....

 

இதை அனைவரும் பருகலாம்,....

 

தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.....

 

கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து  உபயோகிக்கலாம்....

 

ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.....

 

எழுதியவருக்கு... நன்றி...

நன்றி இணையம்


எல்லோருக்கும் முதலிலே தெரிந்த விஷயம் அவனுக்கு கடைசியில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:38 PM | Best Blogger Tips

 


எங்கள் ஊர் பக்கம் ஒரு கதை உண்டு

ஒரு பைத்தியகாரன் இருந்தானாம் ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியாதாம், மிக அழகான உடை அணிந்து சவரமெல்லாம் செய்து மிக அலங்கார தோற்றத்துடனேதான் இருப்பாராம்

ஊரில் யாராவது இறந்துவிட்டால் முதல் ஆளாக வீட்டுவாசலில் நின்று வருவோரை எல்லாம் வரவேற்பாராம், விழுந்து விழுந்து கவனிப்பாராம், அது துக்கவீடு எனும் ஒரு சிந்தனையே அவரிட்ம இராதாம், அவர் போக்கில் வளையவந்து எல்லோரிடமும் கலகலப்பாக பேசிகொண்டே இருப்பாராம்


சடலத்தை குளிபாட்டி பெட்டியில் வைத்து ஊரும் சொந்தமும் கதறும் பொழுது அவர் போக்கில் இருப்பாராம்

கடைசியில் மயானத்தில் கடைசியாக எல்லோரும் சடலத்தின் முகத்தை நோக்கும் பொழுது இவரும் நோக்கி, "என்னடே இங்க கிடக்கா, எழும்புடே" என கையினை பிடித்து இழுப்பாராம், சடலம் எழும்பாது

"அய்யய்யோ, அவன் செத்துட்டான் போலிருக்கே" என மிகுந்த வருத்தபட்டு அழுவாராம், அவரை பற்றி தெரிந்ததால் யாரும் இதை பெரிதாக எடுப்ப்பதில்லை

எல்லோருக்கும் முதலிலே தெரிந்த விஷயம் அவனுக்கு கடைசியில்டான் தெரியும்


இந்த கதைக்கு இப்பொழுது மிக பொருத்தமானவர் பிரசாந்த் கிஷோர், எல்லோரும் எவ்வளவோ சொன்னார்கள், பாஜக இனி குறைந்தது 25 வருடத்துக்கு அசையாது, மோடியினை ராகுல் நெருங்கவே முடியாது என சொல்லிகொண்டே இருந்தார்கள்

ஆனால் மேற்குவங்கத்தில் பாஜக் 2 சீட் தேறாது, அடுத்தது மோடி வெல்லமுடியாது என என்னென்னவோ சொல்லிகொண்டிருந்தார் கிஷோர்

"அப்பனே அறிவாலயத்தில் வாங்கிய காசுக்கு மட்டும் பேசினால் போதும்" என எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை

அந்த பிரசாந் கிஷோருக்கு மயானத்தில் சடலத்தை நோக்குபவன் போல காங்கிரஸ் செத்துகிடக்கும் காட்சி இப்பொழுதுதான் கண்ணில் பட்டிருக்கின்றது

மோடி பலமானவர் அடுத்த 10 ஆண்டு பாஜக அசையாது, ராகுல் மோடியாக முடியாது என கிளம்பிவிட்டார்

ராகுலை ஒரு காமெடியனாக இந்த தேசம் கண்டதே தவிர தலைவனாக நோக்கியதே இல்லை

மோடி விவரம் அறிந்த நாளில் இருந்து நாட்டுக்கு உழைத்தவர் இருமுறை குஜராத் முதல்வராக தன்னை நிரூபித்தவர், பிரதமர் பதவியிலும் அவர்மேல் எதிரி கூட ஒரு குற்றசாட்டை வைக்கமுடியாது

அதனால்தான் தேசம் அவருக்கு மாபெரும் பொறுப்பை கொடுத்தது

ராகுல் கட்சிக்கு உழைத்தவர் அல்ல, ஒரு வார்டு கவுண்சிலராக கூட இருந்தவர் அல்ல, பிறப்பால் உயர்த்தபட்ட வெற்று பிம்பம்

காங்கிரஸில் மன்மோகன் சிங் முதல் கபில்சிபல், சிதம்பரம் வரை பெரும் தலைகள் உண்டு, ஆனால் அவர்களையெல்லாம் டம்மியாக்கி ராகுலார் என முன்னிறுத்துவது மக்களுக்கு அலுப்பான விஷயம்

ஒரே குடும்பம் எனும் பிம்பம் கட்சி தலமை தொடங்கி வார்டு கவுன்சில் வரை எனும் கொள்கையால் காங்கிரஸ் அழிந்துவிட்டது, இன்னும் அதன் இந்துவிரோதம் அதீதமான சிறுபான்மை ஆதரவு என அது வலுவிழ்ந்துவிட்டது


பாஜக பல ஆச்சரியங்களை கொண்ட கட்சி, அங்கு சாமான்யனும் தலைவராகலாம் அமைச்சராகலாம் அதே நேரம் பதவியினை விட்டு போ என்றால் தயக்கமின்றி செல்கின்றார்கள்

மிக முக்கிய விஷயமாக அங்கு கோஷ்டி பூசலே இல்லை, மோடிக்கு ஒரு கோஷ்டி அமித்ஷாவுக்கு ஒரு கோஷ்டி என்பதெல்லாம் அங்கு இல்லை

அவர்கள் சித்தாந்தத்தை நம்புகின்றார்கள், ஏன் மோடியே இல்லையென்றால் கூட அவர்கள் சித்தாந்தம் ஆயிரம் மோடிகளை உருவாக்கும்

ஆரவாரமில்லை, ஆர்பாட்டமில்லை, கோஷ்டி இல்லை, லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை, வாரிசு அரசியல் இல்லை என மிகபெரிய பலம் பாஜகவுக்கு உண்டு

அவர்கள் வாக்குறுதி கொடுத்ததை நிறைவேற்றவும் செய்கின்றார்கள், காஷ்மீர் முதல் ராமர்கோவில் வரை அவர்கள் நிறைவேற்றினார்கள், வன்முறை இன்றி சிக்கல் இன்றி செய்தார்கள்

உண்மையில் இந்த தேசத்தின் பெருவாரி மக்களும், தேசபற்றாளர்களும் என்ன எதிர்பார்தார்களோ அதை பாஜக நிறைவேற்றியது இதோ அசைக்கமுடியா இடத்தில் நிற்கின்றது

இன்னும் 10 ஆண்டு அல்ல 50 ஆண்டுகளுக்கு அக்கட்சி அசையாது, அதை உடைக்கவும் முடியாது. ராகுல் அல்ல இனி மோடியினை நெருங்க இன்னொரு தலைவரால் இந்தியாவில் முடியாது என்பதுதன் நிஜம்

உலகுக்கே தெரிந்த இந்த உண்மை பிரசாந்த் கிஷோருக்கு இப்பொழுதுதான் புரிந்ததிருக்கின்றது பாவம்

ஆனால் அரசியலில் எல்லாமே சந்தேகத்துகுரியது, திடீரென ஏன் திமுக ஆதரவாளரான கிஷோர் பாஜகவினை சிலாகிக்க வேண்டும், அதுவும் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வருமுன் சிலாகிக்க வேண்டும்?

ஆக அறிவாலயம் கிஷோரின் முதுகு மூலமாக டெல்லிக்கு கைநீட்டுகின்றது, காங்கிரஸை கழட்டி விட்டு பாஜகவிடம் அடைக்கலமாக திட்டமிடுகின்றது

சென்னை கமலாலயம் மூலம் முன்பு இதை சாதித்தது திமுக, ஆனால் இப்பொழுது கமலாலயத்தில் அண்ணாமலை இருக்கின்றார், அவர் காலில் செருப்பும் இருக்கின்றது

அரசியலில் உச்சபீடம் நிலையாக இருக்கும்பொழுது சிற்றரசுகள் பணிவதும், அரசுகள் தடுமாறும் பொழுது அவை "சுயாட்சி" "தனிநாடு" என கிளம்புவதும் காலம் காலமான நடைமுறைகள்

அதில் டெல்லியில் வலுவான அரசு இருப்பதால் திமுக பம்ம நினைக்கின்றது

இது இந்திரா காலத்தில் திமுக பதுங்கியபொழுது "அப்படியே இருந்துகொள்" என இந்திரா அனுமதித்தது போலாகுமா? இல்லை "பதுங்கி கிடக்கும் உன்னை பிடிப்பது எளிது" என காதை பிடித்து பாஜக தூக்கி செல்லுமா என்பது தெரியவில்லை

ஒலித்திருப்பது பிரசாந்த் கிஷோரின் குரலாக தெரியவில்லை, அதன் பின்னணியில் அறிவாலய சமிக்கைகள் இருக்கலாம்

நிதியமைச்சர் தியாகராஜன் முதல் பலரின் அப்பட்டமான திராவிட குரல், இந்திய எதிர்ப்பு குரல் முழுக்க அடங்கிய நிலையில், திமுகவினரின் சுதியும் அவர்களின் கூட்டணியினரின் சுதியும் வெறும் ஐந்துமாதத்திலே அடங்கிவிட்ட நிலையில் கிஷோரின் இந்த "வெள்ளை கொடி" சாதாரணமாக கடந்து செல்ல கூடியது அல்ல

 


நன்றி இணையம்

*"போனஸ்" என்றால் என்ன..?*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:07 AM | Best Blogger Tips

 இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது...!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்)

ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்...!!(12×4=48 வாரங்கள்)

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.

.

இந்தியர்னா சும்மாவா?

அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.

அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்...!!


.

அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது...!!

பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.

*_ஆக போனஸ் என்பது விடுபட்ட-கொடுக்கப்படாத- நமக்குரிய (சேர வேண்டிய) ஒரு மாத சம்பளம்_*

இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. !

 

நன்றி இணையம்

சித்தர்கள்_திருநீறு தயாரிக்கும்_முறை !

மணக்கால் அய்யம்பேட்டை | 10:06 AM | Best Blogger Tips

 


சித்தர்கள்_திருநீறு தயாரிக்கும்_முறை !

திருநீறு_என்பது ஆன்மிக_சம்பந்தப்பட்டது மட்டுமல்ல_இது மிகச்சிறந்த_மருந்து.

நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்கள் அவர்கள் முறையில் உருவாக்குகிறார்கள் இந்த திருநீறை.

மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.

திருநீறு தயாரிக்கும் முறை

1. பசுமாட்டுச் சாணம்

2. திருநீற்றுப் பச்சிலைகள். (திணுத்திப் பச்சை இலை)

3. வில்வப்பழ ஓடுகள்

மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.

நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.

இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.

எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.

நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும்.

இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள்.

பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் #தந்திரமாவது_நீறுஎன்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.

மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப் பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை...

புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்

மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு

என்று குரு அகத்தியர் கூறுகிறார்.

இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்தி வந்த மூலிகை மருத்துவப் பொருளாகும் . எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் ...

 

நன்றி இணையம்