வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ - வாழ்வியல் நீதி!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:59 PM | Best Blogger Tips

எமதர்மராஜன் ஒரு குருவியை
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த
கருடபகவான்,
உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.
அந்த பொந்தில் வசித்து வந்த
ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில்
அந்த குருவியை விழுங்கிவிட்டது.
குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த
குருவிக்கே எமனாகி விட்டோமே என்று நினைத்து
கருடபகவான்,
குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.
நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்"
நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம்,
"அந்த குருவி சில நொடிகளில்
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்
வசித்த ஒரு பாம்பின் வாயால்
இறக்க நேரிடும்" என எழுதப்பட்டிருந்தது;
அது எப்படி நிகழப் போகிறது?
என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்.
அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.
Image may contain: one or more people, sunglasses and closeup
*_"வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே வாழ்வியல் நீதி!"_*
*- மகிழ்ச்சி*

 நன்றி இணையம்

அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 8:30 PM | Best Blogger Tips

அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்
இக்கோயில் 1000- 2000ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.
இங்கு பெருமாள் தங்கையை கள்ளத்தனமாக எட்டிப்பார்த்தார். இதனால் இவருக்கு "கள்ளப்பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது.
இங்கு காமாட்சி அம்பாளே பிரதானம் என்பதால் அவளுக்கு படைக்கப்படும் நைவேத்யங்களே கள்வப்பெருமாளுக்கும் படைக்கப்பட்டு, அதே பூஜைகளே இவருக்கும் நடக்கிறது.
சாம்பிராணி தைலத்தால் மட்டும் அபிஷேகம் செய்கிறார்கள். தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் நடத்தும் முன்பே இங்கு வந்து காமாட்சியையும், இப்பெருமாளையும் வணங்கிச் சென்றுள்ளார்.
தனது ராம அவதாரத்திற்கு தன்னிடமே வந்து தசரதரை வேண்டச் செய்தவ பெருமாள் இவர். சிவபக்தரான துர்வாசர் இவரை வணங்கிச் சென்றுள்ளார்.
கருவறைக்கு முன்புள்ள காயத்ரி மண்டபத்தின் அமைப்பு போலவே அதற்கு கீழே ஒரு மண்டபமும், அதன் மத்தியில் காமாட்சி அன்னையும் இருக்கிறாளாம்.
அதாவது தங்கைக்கான கோயிலே என்றாலும் அண்ணனுக்கு பணிந்து அவருக்கு கீழே அம்பாள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இதனால் இம்மண்டபத்திற்குள் செல்பவர்கள் நிற்காமல் அமர்ந்த நிலையிலேயே தரிசிக்க வேண்டும்.
அண்ணன், தங்கைகள் இங்கு ஒரேநேரத்தில் காமாட்சியையும், கள்வப்பெருமாளையும் வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும் என்பது நம்பிக்கை.
வரலாறு:
வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் அவர்களது பேச்சு அழகு பக்கம் திரும்பியது. அப்போது மகாலட்சுமி தான் மிகவும் அழகாக இருப்பதாகவும், தன்னைக் கண்டாலே மக்கள் செழிப்புற்று வாழ்வர் என்றும் பெருமையாக பேசினாள்.
அதோடு விடாமல் மகாவிஷ்ணு, "கருமை நிறக் கண்ணனாக' இருப்பதையும் சுட்டிக்காட்டினாள். அவரோ "அகத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு, புறத்தில் இருப்பது மாயையில் சுழல வைப்பது' என்று அமைதியாக சொல்லிப் பார்த்தும் அவள் கேட்பதாக இல்லை.
அழகு மீது கர்வம் கொண்டிருந்த மகாலட்சுமிக்கு பாடம் கற்பிக்க எண்ணினார் விஷ்ணு. ""பெண்ணுக்கு அழகு இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் இருக்கக் கூடாது. எந்த அழகு மீது அளவு கடந்த பற்று வைத்துவிட்டாயோ அந்த அழகு இருக்கும் உருவமே இல்லாமல் அரூபமாக போவாயாக!'' என சாபம் கொடுத்து விட்டார்.
கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து தன்னை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டாள். ""பூமியில் எங்கு ஒரு முறை செய்யும் தவத்திற்கு ஒரு கோடி முறை தவம் செய்த பலன் கிடைக்குமோ, அங்கு சென்று தவம் செய்தால் உமது பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும்'' என்றார் விஷ்ணு.
சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதிதேவி, தன் சாபம் நீங்க காஞ்சியில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி விமோசனம் பெற்றாள். அவளது பாவத்தை போக்கிய இத்தலத்திற்கு வந்த மகாலட்சுமி அரூபமாக தங்கி விஷ்ணுவை வணங்கி வந்தாள்.
கொஞ்சம், கொஞ்சமாக அரூப வடிவம் மாறி உருவம் பெற்றாள். தவத்தின் பயனால் முன்னைவிட அழகு மிகுந்தவளாக இருந்த மகாலட்சுமியை பார்க்க வேண்டுமென விஷ்ணுவுக்கு ஆசை எழுந்தது.
எனவே, அவளை கள்ளத்தனமாக எட்டிப்பார்த்தார். இதனால் இவருக்கு "கள்ளப்பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தலத்தில் உள்ள பஞ்சதீர்த்தக் கரையில் லட்சுமியும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்ததை இவர் ஒளிந்திருந்து கேட்டதால் பார்வதி இவரை, "கள்வன்' என்று அழைத்ததால் இப்பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு உண்டு.
முகவரி:
அருள்மிகு கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,
திருக்கள்வனூர்- 631 502
(
காஞ்சி காமாட்சி அம்மன்கோயிலின் உள்ளே) காஞ்சிபுரம் மாவட்டம்.

 நன்றி இணையம்