வல்லாரை கிரையின் மருத்துவ குணங்கள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:49 PM | Best Blogger Tips

வல்லாரை கிரையின் மருத்துவ குணங்கள் !!!

இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப்ப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும். வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து
1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் -: உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.

பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்.
Via இன்று ஒரு தகவல்(பக்கம்)

ஆலிவ் ஆயில்..

மணக்கால் அய்யம்பேட்டை | 6:42 PM | Best Blogger Tips

ஆலிவ் ஆயில்..

இதன் சிறப்பம்சம் மோனோ சாச்சுரேடட் ஃபேட்டி அமிலம்  (Mono Unsaturated Fatty Acid) சுருக்கமாக -  MUFA) 72%  என்ற அளவில் இருப்பது. மேலும் வைட்டமின் E அதிக அளவில் இருகிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL (Low-density lipoprotein  லோ டென்சிடி லைபோபுரோடீன்) அளவை கார்டியா  ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL(High-density lipoprotein  ஹை டென்சிடி லைபோபுரோடீன்)என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது.  

ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.

வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது.
இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்டுகள் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.

சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த 

ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத் திரும்பும்.தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

தினந்தோறும் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு (28 கிராம்)ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால் நல்லது. அன்றாட சமையலில் அனைத்துப் பதார்த்தங்கள் தயாரிக்கவும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். வதக்குவது, பொறிப்பது, தாளிப்பது, பூரி செய்வது போன்றவற்றுடன் இட்லிப் பொடியைக் குழைத்துச் சாப்பிடுவதற்கும் ஏற்றது.

Via Doctor Vikatan

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்....

மணக்கால் அய்யம்பேட்டை | 6:30 PM | Best Blogger Tips

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

நாம் அன்றாடம் கம்ப்யூட்டரை பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால் நமக்கு இன்னமும் கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களில் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும். அதனை மற்றவரிடம் போய் கேட்பது நமக்கே கஷ்டமான விசயம். ஏனென்றால் ஒருவரிடம் இதை போய் கேட்டால் இவ்வளவு நாளாக நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் உங்களுக்கு இது கூட தெரியாத என அவர் கேட்டுவிடுவாரே என்றுதான்.....

சரி... இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்...

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்கள் உங்களுக்கு தெரிந்தவை தெரியாதவை எதுவானாலும் சரி இந்த பதிவின் மூலம் நாம் பகிர்ந்துகொள்வோம்..

1

ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரின் மாடல் நம்பர் என்ன என்று கேட்டால் நீங்கள் உடனே கம்ப்யூட்டருக்கு சென்று CPU ஐ சுற்றி சுற்றி பார்த்துவிட்டு மாடல் நம்பர் எங்கே இருக்கிறது என தெரியாமல் யோசிக்க வேண்டாம்

உங்கள் கம்ப்யூட்டரில் Start Menu ஐ கிளிக் செய்து Run என்ற இடத்தில் msinfo32.exe என டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் மாடல், கம்ப்யூட்டர் உருவாக்கிய நாள் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.....

2

உங்கள் கம்ப்யூட்டரில் 1GB ராம் பொருத்தப்பட்டுள்ளது என வைத்துக் கொள்ளுங்கள். அதோடு இன்னொரு 1GB ராம் பொருத்த வேண்டும் என உங்களுக்கு ஒரு ஆசை உள்ளது. உடனே கம்ப்யூட்டர் கடைக்கு சென்று நீங்கள் என் கம்ப்யூட்டருக்கு 1GB ராம் பொருத்த வேண்டும் அதன் விலை என்ன என்று கேட்பீர்கள். அவர் உங்களிடம் ராம் SDRAM, DDR1, DDR2, DDR3 இதில் எந்த வகை ராம் உங்களுக்கு வேண்டும் என கேட்பார். அதை உங்கள் கம்ப்யூட்டரில் எப்படி பார்ப்பது என்று உங்களுக்கு இதுவரை தெரியாமல் இருக்கிறதா....

இண்டெர் நெட்டில் இலவசமாக உள்ள இந்த CPUZ என்ற மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

இன்ஸ்டால் செய்த பிறகு இதனை ஓப்பன் செய்து Memory என்ற தலைப்பை கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரின் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது எந்த வகை ராம் என தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

3

உங்களிடம் இரண்டு போட்டோ இருக்கிறது. அது இரண்டையும் ஒரே பேப்பரில் பிரிண்ட் எடுத்தால் பேப்பர் மிச்சம் ஆகும். ஆனால் அது எப்படி என்று நமக்கு தெரியவில்லையே என்று கவலையா ? அல்லது அப்படி எடுப்பதற்கு தனியாக ஒரு மென்பொருள் வேண்டுமே என்று இது நாள் வரை நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா ?

உங்கள் போட்டோவை ஓப்பன் செய்வதற்கு முன்பாக அந்த போட்டோ ஐக்கானில் உங்கள் மவுசை வைத்து வலது பக்கம் கிளிக் செய்து வரும் தட்டில் Windows Picture and Fax Viewer என்பதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்கள் போட்டோ Picture and Fax Viewer மூலம் ஓப்பன் ஆகும். அந்த போட்டோவின் கீழ் Print என்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்கலாம். அதனை நீங்கள் கிளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் தட்டில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோவை டிக் செய்துகொள்ளுங்கள்.

அடுத்து Next ஐ அழுத்துங்கள்.

அடுத்தும் Next  ஐ அழுத்துங்கள்.

அடுத்து வரும் இந்த தட்டில் இடது பக்கம் உள்ள Available Layout என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோ உள்ள Layout ஐ தேர்ந்தெடுங்கள்.

அடுத்து Next  .......... Next ஐ அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு இரண்டு போட்டோ ஒரே பேப்பரில் பிரிண்ட் ஆகி வெளியே வரும். இதே முறையில் நான்கு போட்டோ மற்றும் ஒன்பது போட்டோ ஒரே பக்கத்தில் பிரிண்ட் எடுக்கும் Layout ஐயும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் கீபோர்டில் ஏற்படும் திடீர் பிரச்சனையின் காரணமாக சில பட்டன்கள் வேலை செய்யாமல் போகலாம்.  அதனால் ஒரு சில எழுத்துக்களை மட்டும் நாம் கீ போர்டு மூலம் டைப் செய்ய முடியாமல்  சிரமப்படுவோம். அப்படிப்பட்ட  நேரத்தில் கம்ப்யூட்டரில்  ஸ்கிரீன்  கீபோர்டு இருந்தால்  வசதியாக  இருக்குமே என நாம்  நினைப்போம். அதற்கு தனியாக ஏதாவது ஒரு  மென்பொருள் இருக்கிறதா என இணைய  தளத்தில்  தேடிக்கொண்டிருப்போம்.  ஆனால்  விண்டோஸ்  புரோகிராமில் எப்பொழுதும் ஒரு  ஆன் ஸ்கிரீன்  கீபோர்டு உள்ளது என்று  நான் சொன்னால் உங்களுக்கு எவ்வளவு  சந்தோசமாக இருக்கும். ஆம்.  நீங்கள் Start மெனுவை  ஓப்பன் செய்து Run என்ற  பட்டனை  கிளிக்  செய்து அதில்  OSK  என டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உடனே உங்களுக்கு ஒரு ஆன் ஸ்கிரீன்  கீபோர்டு  கிடைத்துவிடும். அதன் மூலம்  நீங்கள்  எளிதாக அவசர தேவைகளுக்கு டைப் செய்துகொள்ளலாம்.

5

உங்கள் கம்ப்யூட்டர் திரையை காப்பி எடுக்க தனியாக ஒரு மென்பொருள்தான் வேண்டும் என்று நீங்கள் இதுநாள் வரை நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு.  ஏனென்றால்  உங்கள் கம்ப்யூட்டர் திரையை நீங்கள் நினைத்த நேரத்தில் காப்பி எழுத்து அதை சேமித்துக்கொள்ள உங்கள் கீ போர்டில் Prt scr என்ற ஒரு பட்டன் உள்ளது.

இந்த பட்டனை அழுத்தி  நீங்கள்  கம்ப்யூட்டர்  திரையை  காப்பி எடுத்ததும்  Clipboard Copy   அதாவது  கம்ப்யூட்டர்  மெமரியில்  காப்பி  ஆகிக்கொள்ளும்.  பிறகு நீங்கள் Paint Brush அல்லது Word, Excel  போன்ற  ஏதாவது  மென் பொருளை  ஓப்பன்  செய்துகொண்டு  அதில்  Past  பட்டனை அழுத்தினால்  நீங்கள் காப்பி செய்த ஸ்கிரீன் அங்கு வந்துவிடும்.

Via  கான்

சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையை உலகிலேயே மிக உயரமான சிலை !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:01 PM | Best Blogger Tips

Photo: இந்தியா, கூடிய சீக்கிரமே ஓரு கலைத் துறையில் சாதனை படைக்கப்போகிறது. குஜராத் மாநிலத்தில் மிகப் பிரமாண்டமான சிலை ஒன்றை நிறுவப்போகிறார்கள். இது உலகில் உள்ள எல்லாச் சிலைகளையும்விட மிகப் பிரமாண்டமாக இருக்கும். 

'இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையை உலகிலேயே மிக உயரமான சிலையாக, நர்மதா அணை அருகில் அமைக்கவிருக்கிறார்கள். 

தற்போதைய உலகின் உயரமான சிலை, சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். இதன் உயரம் 128 மீட்டர். இதை மிஞ்சும் வகையில் சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையின் உயரம் 182 மீட்டராக இருக்கும். குஜராத் அரசு இந்தச் சிலையை நிறுவுகிறது.

இந்தியா, கூடிய சீக்கிரமே ஓரு கலைத் துறையில் சாதனை படைக்கப்போகிறது. குஜராத் மாநிலத்தில் மிகப் பிரமாண்டமான சிலை ஒன்றை நிறுவப்போகிறார்கள். இது உலகில் உள்ள எல்லாச் சிலைகளையும்விட மிகப் பிரமாண்டமாக இருக்கும்.
'இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையை உலகிலேயே மிக உயரமான சிலையாக, நர்மதா அணை அருகில் அமைக்கவிருக்கிறார்கள்.

தற்போதைய உலகின் உயரமான சிலை, சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். இதன் உயரம் 128 மீட்டர். இதை மிஞ்சும் வகையில் சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையின் உயரம் 182 மீட்டராக இருக்கும். குஜராத் அரசு இந்தச் சிலையை நிறுவுகிறது.

நன்றி மைலாஞ்சி ( Mylanchi )
 
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு..!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:59 PM | Best Blogger Tips

Photo: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு..! 

* எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயது வரை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 32 வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயது வரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும். இதற்கு மேல் படித்தவர்கள், 57 வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினை பெறலாம். 

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், அதற்குக் குறைவாக படித்தவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையை வைத்து பதிவு செய்துகொள்ளலாம். ஓட்டுநர் பணி போன்ற பணிவாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.

* பள்ளிப் படிப்பு படிக்காதவர்கள்... பிறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகிய இரண்டையும் வைத்து பதிவு செய்யலாம். இவர்களுக்கு துப்புரவு பணி போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

* மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி ஜனவரி மாதம் ஒருவர் புதுப்பிக்க வேண்டும் என்றால், அவர் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். அடுத்த 18 மாதங்கள் வரையில்கூட இவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அப்படியும் தவறுபவர்களுக்கு... அரசாங்க அறிவிப்பு மூலம் சலுகைகள் தரப்படுகின்றன.

* ஒரு மாவட்டத்தில் பதிவு செய்தவர், வேறு மாவட்டத்துக்கு மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், சென்னை மாவட்டத்துக்கு மாற நினைத்தால்... அவர் சென்னைக்கு குடிபெயர்ந்ததற்கு அத்தாட்சியாக சென்னை வட்டாட்சியரிடமிருந்து பெற்ற குடும்ப குடிபெயர்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகலை, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலரிடம் உறுதிபெற்று பின்னர், சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றிக் கொடுப்பார்கள். இப்படி ஓர் ஆண்டுக்கு ஒருமுறைதான் மாற்றமுடியும். 

* புதிதாக பதிவு செய்பவர்கள், புதுப்பிக்க நினைப்பவர்கள், கூடுதல் தகுதிகளை இணைக்க நினைப்பவர்கள் என அனைவருமே வேலைவாய்ப்பு அலுவலகத்தின்www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவேகூட பதிவு செய்யலாம். நேரில் செல்லத் தேவையில்லை. உங்களுக்கான அனைத்து வழிகாட்டல்களும் இதிலேயே கிடைக்கும். தவறான தகவல்கள் கொடுத்தால், சான்றிதழ் சரிபார்த்தலின்போது பிடிபட்டு, அதற்கான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பதிவு செய்தபின் அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

vikatan* எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயது வரை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 32 வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயது வரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும். இதற்கு மேல் படித்தவர்கள், 57 வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினை பெறலாம்.

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், அதற்குக் குறைவாக படித்தவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையை வைத்து பதிவு செய்துகொள்ளலாம். ஓட்டுநர் பணி போன்ற பணிவாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.

* பள்ளிப் படிப்பு படிக்காதவர்கள்... பிறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகிய இரண்டையும் வைத்து பதிவு செய்யலாம். இவர்களுக்கு துப்புரவு பணி போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

* மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி ஜனவரி மாதம் ஒருவர் புதுப்பிக்க வேண்டும் என்றால், அவர் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். அடுத்த 18 மாதங்கள் வரையில்கூட இவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அப்படியும் தவறுபவர்களுக்கு... அரசாங்க அறிவிப்பு மூலம் சலுகைகள் தரப்படுகின்றன.

* ஒரு மாவட்டத்தில் பதிவு செய்தவர், வேறு மாவட்டத்துக்கு மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், சென்னை மாவட்டத்துக்கு மாற நினைத்தால்... அவர் சென்னைக்கு குடிபெயர்ந்ததற்கு அத்தாட்சியாக சென்னை வட்டாட்சியரிடமிருந்து பெற்ற குடும்ப குடிபெயர்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகலை, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலரிடம் உறுதிபெற்று பின்னர், சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றிக் கொடுப்பார்கள். இப்படி ஓர் ஆண்டுக்கு ஒருமுறைதான் மாற்றமுடியும்.

* புதிதாக பதிவு செய்பவர்கள், புதுப்பிக்க நினைப்பவர்கள், கூடுதல் தகுதிகளை இணைக்க நினைப்பவர்கள் என அனைவருமே வேலைவாய்ப்பு அலுவலகத்தின்www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவேகூட பதிவு செய்யலாம். நேரில் செல்லத் தேவையில்லை. உங்களுக்கான அனைத்து வழிகாட்டல்களும் இதிலேயே கிடைக்கும். தவறான தகவல்கள் கொடுத்தால், சான்றிதழ் சரிபார்த்தலின்போது பிடிபட்டு, அதற்கான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பதிவு செய்தபின் அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Via Vikatan

ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை... ( நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்து விடாதிர்கள் )

மணக்கால் அய்யம்பேட்டை | 5:58 PM | Best Blogger Tips

Photo: ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை...
( நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்து விடாதிர்கள் )

* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

... * தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.

* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

... * தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.

* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.

நன்றி மைலாஞ்சி ( Mylanchi )
 
பொது அறிவு !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:56 PM | Best Blogger Tips

1. "மலைகளும், ஆறுகளும், காற்றுகளும் மழைப் பொழிவுகளும் நாகரிகத்தை
உருவாக்குவதிலும் மனிதப் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு
வகிக்கின்றன" என்ன சொன்னவர் யார்?

A.R.D.
பானர்ஜி.

2.
ஒரு நாட்டின் நாகரிகமும் பண்பாடும் அந்நாட்டின் எந்த கூறுகளால் உருவாக்கப்படுகின்றன?

அறிவியல் கூறுகள்

3.
வடக்கே இருந்து வீசும் குளிர்காற்றைத் தடுத்து இந்தியாவிற்கு இதமான தட்ப வெப்பநிலையை அளிக்கும் மலை எது?

மேற்குத்தொடர்ச்சி மலை

4.
இந்திய நாட்டின் முக்கியத் தொழில் எது?

வேளாண்மை

5.
இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்த போர் எது?

ஆப்கானிய போர்

6.
கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதியதாக கருதப்படும் வரலாற்று நூல் எது?

ராஜதரங்கிணி

7.
காலம் என்ற மணற்பரப்பிலே பழங்கால மனிதன் பதித்துள்ள சுவடுகளே வரலாற்று........ எனப்படும்.

சான்றுகள்.

8.
வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம்?

ஐந்து

9.
வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

ஹெரோடட்டஸ்

10.
இந்தியா பல்வேறு பண்பாடு சார்பான மனித இனங்களின் கண்காட்சிச் சாலை என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்?

ஆல்பரூனி.

11.
மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்?

ஆஸ்திராலாய்டுகள்.

12.
மொகஞ்சதாரோ நகர் நடுவே கட்டப்பட்டுள்ள பொது குளியல்குளம் "நவீன
கடற்கரை ஹோட்டல்களில் அமைந்துள்ள நீச்சல்குளம் போன்றது" என்று ஜான்மார்ஈல்
எந்த நாகரித்தை புகழ்ந்துரைக்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகம்

13.
எகிப்தில் தோன்றிய செமிட்டிக் இனத்தவர்களின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என்று கூறியவர் யார்?

எலியட் ஸ்மித்

14.
இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைப் பண்புகளையும் வரலாற்று சிறப்பு
மிக்க நாகரிகத்தையும் அளித்தவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் யார்?

ஆரியர்கள்.

15.
எந்தநூற்றிண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின.

கி.மு. 4ம் நூற்றாண்டு

16.
சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார்?

மகாவீரர்

17.
மகாவீர்ர் எந்த மரத்தடியில் அறிவொளி பெற்றார்?

சால் மரம்

18.
கயை என்ற இடத்தில் ஞானம் பெற்றவர் யார்?

புத்தர்

19.
கி.மு. 250-ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டதுத?

அசோகர்

20.
அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார்?

முதலாம் சைரஸ்

21.
அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார்?

மாசிடோனியா

22.
எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்?

கி.மு. ஆறாம் நூற்றாண்டு

23.
சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான "தேஜ்பகதூரை" கொன்ற
முகலாயப் பேர்ரசர்

ஔரங்கசீப்

24.
அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி நாம் அறியலாம்?

நிர்வாகம்

25.
மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்?

பிருகத்ரதன்

Via  FB Karthikeyan Mathan