உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்....!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:37 PM | Best Blogger Tips
http://2.bp.blogspot.com/_fuuM7GXx7cE/TKnL_pDgzNI/AAAAAAAAAnU/D3Q4NQwmusg/s1600/Fruit-Vegetable-Box-by-karimian.jpg
இன்றைய மக்களுள் சிலர் எடை அதிகமாக உள்ளது என்பதற்காக அதை குறைக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதே சமயம் சிலர் எடை அதிகமாகவில்லை என்று அதற்காக பல முயற்சிகளை எடுக்கின்றனர்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான் உடல் எடை அதிகமாவது, குறைவது போன்றவை ஏற்படுவதோடு உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும்.


வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன் தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

முட்டை

அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடையும் அதிகரிக்கும்.

வெண்ணெய்

அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான்.

ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.


ஜூஸ்

உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும் சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.

கோதுமை பிரட்

தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பிரட் வாங்கும் போது, கோதுமை பிரட்டை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.

தயிர்

பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

உருளைக்கிழங்கு

கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.
 Via  இயற்கை உணவும் இனிய வாழ்வும்