நல்லெண்ணெய்,
தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்களில் கொழுப்பு சத்தும், கலோரியும்
அதிகமாக இருப்பதால் இதை பயன்படுத்தாதீர்கள் என்று
மருத்துவர்களால் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக
பெரும்பாலான வீடுகளில் மேற்கண்ட
எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை விட்டு விட்டு சர்க்கரை இல்லாத,
கொழுப்பும் இல்லாத, குறைவான கலோரி கொண்ட சத்தே இல்லாத பாமாயில்
போன்ற பத்திய எண்ணெய்களை பயன்படுத்தி வருகிறோம். குழந்தைகளின்
உணவிலும் இது போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின்
உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து கிடைக்காததால் நம் குழந்தைகளை நாமே
ஆரோக்கியமற்ற குழந்தையாக மாற்றுகிறோம்.
அல்சர் நோயாளிகளுக்கு காரமே இல்லாத சமச்சீர் உணவு முறை, நீரழிவு நோயாளிக்கு இனிப்பே சேர்க்கப் படாத உணவு முறை, ஆரோக்கியமானவர்களுக்கும், குணப்படுத்த தெரியாத நோய்களிடம் மாட்டி கொள்ளாமல் இருக்க எண்ணெய்களை, காரத்தை, உப்பை, இனிப்பை தவிர்க்க அல்லது குறைத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இதனை உணவு கட்டுபாடு என்றும் சமச்சீர் உணவு என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.
சமச்சீர் உணவு என்றால் அது அறுசுவை கொண்டதாக தான் இருக்க வேண்டும். இது வேண்டாம் அது வேண்டாம் என்று சொல்வதற்கு பெயர் சமச்சீர் உணவாம்.
சமச்சீர் உணவு என்றால் என்ன?
இஸ்லாமியர்களின் உணவு முறையில் கொழுப்பு மிக்க உணவுகள் வகைகள் அதிகமாக இருக்கும். அத்தோடு இவர்கள் உணவில் இஞ்சி, வெள்ளைப்பூடும் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும். வெள்ளைப்பூடு, பல்லாரி, கொண்டைக்கடலை ஆகியவைகளுக்கு இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை திறக்கச் செய்யும் வல்லமையை இறைவன் வழங்கியுள்ளான். இப்போது புரிந்திருக்கும் இஸ்லாமியர்களின் உணவில் அதிக அளவில் பூண்டு சேர்த்துக் கொள்ளப்படுவதன் நோக்கம்.
மிக்சர் காரச்சேவு முதலியவகைகள் கடலை மாவையும், கடலெண்ணெயையும் கொண்டு தான் தயாரித்தார்கள். ஏனென்றால் கடலை மாவும், கடலெண்ணெயும், கொண்டை கடலையின் வழி தோன்றல்கள், கொண்டை கடலைக்கும் இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை திறக்கச் செய்யும் வல்லமையை இறைவன் வழங்கியுள்ளான். இதுவல்லவா சமச்சீர் உணவு.
விருந்து என்றால் சற்று அதிகமாக சாப்பிடுவது மனித இயல்பு. அவ்வாறு விருந்து உண்டால் தாம்பூலம் தரிக்கச் சொல்கிறது நம் மரபு. தாம்பூலம் தரித்தல் என்றால் புகையிலை அல்லாத வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்ந்த கலவை. இதை சாப்பிடுவதால் அதிகப்படியாக உமிழ்நீர் சுரக்கப்பட்டு முறையாக ஜீரணம் நடைபெற உதவும். விருந்துக்கு செல்லுமிடத்தில் குடி தண்ணீர் மாற்றத்தினால் தொண்டை சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் இந்த வகையான நோய்களையும் வெற்றிலை குதப்புவதால் தடுக்கலாம். தொண்டை பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காவே பாகவதர்கள் வெற்றிலையை குதப்பி வந்துள்ளார்கள். இதுவல்லவா சமச்சீர் உணவு முறை.
சைவம் மட்டுமே சாப்பிடுகிறவர்கள் கொழூப்பு சத்திற்காக நெய் சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும் தயிர் போன்ற கொழுப்பு மிக்க உணவுகளையும் தங்களது உணவோடு உண்டு வருகிறார்கள். சைவ உணவில் கொழுப்பு சத்து குறைவாகத் தானிருக்கும். ஆகையால் நெய்யையும், தயிரையும் சேர்த்து சாப்பிடுவதால் கொழுப்பு சத்து உடலுக்கு கிடைத்து விடும். கொழுப்பு சத்தின் முக்கியத்துவத்தை இதன் மூலம் நாம் புரிந்துக் கொள்ளலாம்.
வேர்கடலை தின்றால் பித்தம், ஆகையால் வேர்கடலை தின்றபின் சிறு துண்டு கருப்பு கட்டியாவது சாப்பிட்டு விட வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவதை கேட்டுள்ளோம். இதுவல்லவா சமச்சீர் உணவு.
சமச்சீர் உணவு என்பது சத்தில்லாத உணவல்ல. எல்லா சத்துக்களும் அளவோடு இருப்பது தான் சமச்சீர் உணவு. உதாரணத்திற்கு பிரியாணி போன்ற கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ளதை சாப்பிடும் போது வெங்காய சம்பல் தருகிறார்கள், அந்த சம்பலில் பல்லாரி சேர்க்கப்பட்டிருக்கும். பல்லாரி இரத்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புகளை நீக்கும் சக்தி கொண்டது. இதே சம்பலை அதிகமாக உட்கொண்டால் ஜீரணக் கோளாறு ஏற்படும். ஆகையால் இது பித்தம், அது காமாலை, மற்றது சுகர் என்று ஒதுக்காமல் வேதிப் பொருட்கள் கலப்பில்லாதா உணவுகளை பசிக்கும் போது தேவைக்கு புசிப்பது நல்லது.
எந்த உணவு சத்தானது?
எதை சாப்பிடுகிறோம் என்பதை விட எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். முறை தவறி உட்கொள்ளும் உணவால் உடலுக்கு எந்த பயனும் இல்லை. அப்படியென்றால் எப்படி சாப்பிடுவது என்ற கேள்வி வரும். எளிதான சுருக்கமான பதில் தான். அதாவது நாம் உண்ணும் உணவை அவரவர் உமிழ்நீரை கொண்டு நன்றாக கூழாக்கி சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகி முழுமையான சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
முன் பக்கங்களில் குறிப்பிட்டுள்ள பிளேடு மற்றும் கவராயத்தின் ஊசி சம்பவங்களிலிருந்து உடல் தேவையற்ற பொருளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றி விடும் என்பதை புரிந்து கொண்டோம். ஆனால் நாம் உண்ணும் உணவை மென்றது போக நம் உடல் உறுப்புகளும் நன்றாக கூழாக்குகின்றன. இதிலும் நமக்கு ஒரு படிப்பினை உள்ளது. அதாவது உணவு பொருட்களை மட்டும் நம் உடல் இனம் கண்டு அதனை கூழாக்கி அதிலிருக்கும் சக்திகளை நம் உடல் உறிஞ்சிக் கொள்கின்றன. மாறாக உடலிலுள்ள அசுத்தங்களையும், உடலுக்கு ஒவ்வாத பொருட்களையும், கிருமிகளையும் உடலுக்கு தேவையற்ற பிளேடு, கவராயம் போன்ற பொருட்களை உடல் பாதுகாப்பாக வெளியேற்றி விடுகிறது.
நாம் உண்ணும் போது அந்த உணவில் நமது உமிழ் நீர் கலந்துவிடும். ஆனால் நண்பன் விழுங்கிய கவராயம், பிளேடில் உமிழ்நீர் எவ்வகையிலும் கலக்க இயலாததால் அதை உடல் உறுப்புகள் இனம் கண்டு ஜீரணத்திற்கு உட்படுத்தாமல் பாதுகாப்பாக வெளியேற்றி விடுகின்றன. இதிலிருந்து உமிழ் நீர் கலக்கப்படாத எந்தப் பொருளையும் உடல் ஜீரணத்திற்காக எடுத்துக் கொள்ளாது என்பது தெளிவாகிறது. அரைகுறையாக உமிழ்நீர் கலக்கப்பட்ட உணவு பொருட்களும் சரியாக ஜீரணம் செய்யப்படாததால் தரக் குறைபாடுள்ள குளுக்கோஸ் அந்த உணவுகளிலிருந்து கிடைக்கிறது.
தற்காலத்தில் நாம் அதிக வேகத்தில் செயல்பட்டு வருவதால் சாப்பாட்டை கூட முறையாக உட்கொள்ள நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நேரமில்லை. ஆகையால் அவசர கதியில் உணவை உட்கொள்வதால் நாம் உண்ணும் உணவுடன் கலக்க வேண்டிய உமிழ் நீர் தேவையான அளவிற்கு கலக்கப் படாததால் முறையாக செரிமானம் செய்யப்படாததால் நாம் உண்ட உணவு வீணாகி கொண்டிருக்கின்றன. நாம் சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகி முழுமையான சத்துக்களும் உடலுக்கு கிடைக்க வேண்டுமென்றால் இதற்காக சில எளிய நடைமுறைகளை நம் வாழ்வில் கடைபிடித்தால் போதும் நமது குடும்பத்தின் மாதந்திர மருத்துவ பட்ஜெட்டை இல்லாமல் ஆக்கி விடலாம்.