இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:59 PM | Best Blogger Tips

Photo: இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்

நம் அன்றாட சமையலில் எண்ணெய்யின் பயன்பாடு பற்ற உங்களுக்கு சொல்லத் தெரியவேண்டியதில்லை. எண்ணெய் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம் சமையல் முறையில் அசைக்கமுடியாத இடம் பிடித்திருக்கிறது எண்ணெய்.

சமையல் கலைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய தகவல்கள் எல்லாம் மாறி மருத்துவப் புத்தகத்துக்கு வந்துவிட்டதா என நினைக்காதீர்கள். எண்ணெய் பற்றி இங்கு பேசுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
நாம் பயன்படுத்துகிற எண்ணெய்க்கும் இதய நலனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எண்ணெய் பற்றி சில விஷயங்களைச் சொன்னால்தான் உங்களால் அந்தத் தொடர்பு பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

எண்ணெய்யைச் சமையலில் பயன்படுத்துவதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

நாம் சாப்பிடும் உணவுக்கு அது சுவையையும், நறுமணத்தையும் கூட்டுகிறது.

சமையல எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம் என்று சொல்லலாம். மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய்.

கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது.

உணவுக் குழல், இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணை புரிகிறது.

மேலே சொன்னவை போன்ற பல காரணங்களுக்காகத்தான் எண்ணெய்யை நாம் உபயோகிக்கிறோம்.
நம்மில் பலர் எண்ணெய்யும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு. கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய் (A fat is a solid oil and an oil is a liquid fat). கொழுப்பும், எண்ணெய்யும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

பொதுவாக ஒரு மனிதனுக்குத் தினமும் தேவைப்படும் சக்தியானது 1800 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். இந்த மொத்தக் கலோரிகள் தேவையில் சுமார் 4 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெய்யைப் பாதுகாப்பாக அன்றாடம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 72 கலோரிகள் அளவு வெப்பத்தைத் தரக்கூடிய சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கிராம் அளவில் கணக்கிட்டால் 9 கிராம் அளவு உள்ள எண்ணெய் போதும்.

சமையலுக்கு எந்த எண்ணெய்யைப் பயன்படுத்துகிறோம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அந்தந்த மாநிலத்தில் பயிர் செய்யும் எண்ணெய் வித்துகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே இது தீர்மானிக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் கடுகு எண்ணெண்யையும், தென் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய், நெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். 

17ம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்ச்சுகீசியர்களின் உபயத்தால் கடலை எண்ணெய்யைப் பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், தவிட்டு எண்ணெண், பருத்திகொட்டை எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.
பொதுவாக சமையல் எண்ணெய்யின் தன்மை, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு எண்ணெய்யில் எந்த அளவு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளனவோ அதை அடிப்படையாகக் கொண்டு செறிவுற்ற, கொழுப்பு செறிவற்ற என எண்ணெய் வகைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். 

கொழுப்பு எந்தவிதமான சிதைவு மாற்றங்களும் இல்லாமல் கெட்டியான நிலையில் இருக்கும்.
வெண்ணெய், நெய், விலங்கினங்களின் கொழுப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை செறிவுற்ற கொழுப்புச் சில உதாரணங்கள். 

இவற்றில் தேங்காய் எண்ணெய்யும், பாமாயிலும் திரவ நிலையில் இருந்தாலும், வேதியியல் அடிப்படையில் செயல்படும் போது மற்றவகையான சேறிவுற்ற கொழுப்புபோலவே இருக்கும்.
இந்தக் கொழுப்பு வகையில் வருகிற சமையல் எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிக்க கவனம் தேவை. 

ஏனென்றால், இவ்வகையான சமையல் எண்ணெய்கள் ஓரளவு நன்மை தந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் இதயம் மற்றும் இதயம் தொடர்புடைய ரத்தக் குழாய்களுக்குப் பலவகையான சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடும்.

இவ்வகையான சமையல் எண்ணெய்கள் தோலுக்குத்தான் சிறந்தவை. இதயத்துக்கு அல்ல என்று சொல்வதுண்டு (Oil is good for the skin but bad for the heart).

அளவுக்கு அதிகமாக தினசரி சமையலில் செறிவுற்ற எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இதயத்தில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதயத் தமனிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இவ்வகையா எண்ணெண் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலாக அளவுக்கு அதிகமாகச் சேர்ந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகப் படியும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள்விட்டத்தை முழுமையாக அடைப்பதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபட்டு இதயத் தமனி நோய் ஏற்படுகிறது.
செறிவுய்ய கொழுப்பு (Unsaturated Fat)
கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்கள் முழுமையாக இல்லாமல், குறைவான அளவில் இருக்கும் கொழுப்பு வகை எண்ணெய்களை செறிவற்ற கொழுப்பு எண்ணெய் (Unasturated Fatty oils) என்று சொல்வார்கள்.

ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவற்றைப் பொதுவாக மியூஃபா எண்ணெய் என்றும் பியூஃபா எண்ணெய் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

பியூஃபா கொழுப்பு
கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையை பியூஃபா என்பது (PUFA) எண்ணெய் என்று சொல்வார்கள். (பியூஃபா என்பது Poly Saturated Fatty Acid  என்பதன் சுருக்கம்).

பியூஃபா எண்ணெய்யை ஒமேகா 3 இன்றியமையா கொழுப்பு அமிலம் (Omega-6 Essential Fatty Acid) என்றும் பலவகைகளாகப் பிரித்துள்ளனர்.

பெயருக்கு ஏற்றார்போல் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவது இவைதான்.
ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இவ்வகை அமிலங்கள், பிராஸ்டாகிளாண்டென் (Prosta Glanden) என்ற ஹார்மோன் சுரக்கத் துணைபுரிகிறது.
ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாகவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒமேகா கொழுப்பு அமிலங்களை, தேவையான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை கல்லீரல் அதிகமாக்குகிறது. நன்மைதரும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள் பகுதியில் படியும் கொழுப்புத் துகள்களை அகற்றி, ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால்தால் இவற்றை ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே ரத்தத்தில் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதால் இதயத் தமனி அடைப்புகளில் இருந்து இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.

ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய்கள், மீன் வகை உணவுகளிலும், சோயா, மொச்சையில் இருந்து தயாரிக்கப்படம் எண்ணெய்யிலும் மிக அதிகமாக உள்ளன. இதுபோல் ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய் போன்றவற்றில் மிக அதிகமாக உள்ளது.

ஒரு தனி மனிதனின் அன்றாட எண்ணெய்த் தேவையில் பியூஃபா வகை கொழுப்பு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

மியூஃபா கொழுப்பு
கொழுப்பு அமில சங்கிலித் தொடரில் ஒரு இணை ஹைட்ரஜன் அணுக்கள் குறைந்தால் அவ்வகையான சமையல் எண்ணெய்களை மியூஃபா எண்ணெய்கள் என்று சொல்வார்கள். MONO UNASATURATED FATTY ACID  என்பதன் சுருக்கம்தான் மியூஃபா (mufa)  என்பதாகும்.

மியூஃபா வகைக் கொழுப்பாலும் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.

நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் அமைப்பைச் சிதைவுறாமல் நிலை நிறுத்துகிறது.

நமது ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது.
நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கத் துணைபுரிகிறது.
மியூஃபா வகை கொழுப்பு கடுகு எண்ணெய்யிலும், கடலை எண்ணெய்யிலும் அதிக அளவில் உள்ளது.

எண்ணெய்யில் பல வகைகள் இருந்தாலும், இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil)  சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நம் நாட்டுச் சூழலுக்கு இந்த எண்ணெய் 
ஒத்துவருவதில்லை. மேலும் இதன் மனமானது நம்முடைய சுவைக்கு ஏற்றதாகவும் இல்லை. நம் நாட்டில் பெரும்பாலும் பலவகையான சாலடுகள் தயாரிக்கத்தான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில் ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் நம் நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப, நமது அன்றாடத் தேவைக்கு ஏற்ப, நமது சமையல் முறைக்கு ஏற்ப நமது உடல் நலத்துக்கு ஏற்ப, குறிப்பாக இதயத்தின் நலம் காக்கும் தன்மையுள்ள சிறந்த சமையல் எண்ணெய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தொன்று தொட்டு நம் நாட்டில் பலவகையான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தாலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் சில சிறப்புத் தன்மைகளும் சில தீய தன்மைகளும் இயற்கையாகவே ஒரு சேர இருக்கும். எனவே நாம் அன்றாட சமையலுக்கு ஒரு குறிப்பிட்ட சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால், முழுமையான பயனைப் பெற இயலாது.

எனவே நம் நாட்டில் பயன்படத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்றாட சமையலுக்கு ஏற்றபடி கலவையாகப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.

செறியுற்ற கொழுப்பு என்றும் பியூஃபா கொழுப்பு என்றும் மியூஃபா கொழுப்பு என்றும் சமையல் எண்ணெய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த மூன்று வகையான கொழுப்பு வகைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை 1: 1 : 1 என்ற அளவில் தினசரி சமையலுக்கு அளவாகப் பயன்படுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதாவது நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை இதயத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நாம் தேர்வு செய்யலாம். இந்த எண்ணெய்களைத் தினசரி சமையலுக்கு மாறி மாறி தனித்தனியாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மூன்று எண்ணெய்களையும் 1: 1: 1:  என்ற சம அளவில் கலந்து தினமும் சமையலுக்குப் பயன்படுத்துவதால் இதயத்தின் நலனைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு மூன்று வகையான எண்ணெய்களையும் கலந்த கலவை எண்ணெய் இனிமையான எண்ணெய் (ஷிஷ்மீமீt ஷீவீறீ) என்று அழைக்கப்படுகிறது.
சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது உடல் அமைப்பு அன்றாட உடல் உழைப்பு, நமது அன்றாட தேவை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய்யை அளவோடு பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இந்தக் கணக்கைப் பற்றிக் கவலைப் படாமல், சுவைக்காக அளவுக்கு அதிகமாக எண்ணெய்களைப் பயன்படுத்துவது இதய நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடும். An oil is an oil is an oil.

நன்றி ஆரோக்கியமான வாழ்வு