கொத்தமல்லி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:27 PM | Best Blogger Tips

தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM.
தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)

கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும்.
இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.

வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.

கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்

ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.

இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.

பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.

தோல் நோய்களை குணமாக்குகிறது

மன அமைதி, தூக்கம் கொடுக்கும்

4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.

வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்க்கலாம்.

தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.

தினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
 
கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:22 PM | Best Blogger Tips

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:05 PM | Best Blogger Tips

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

வயிற்றின் தன்மையறிந்து சாப்பிடலாமே.....!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:04 PM | Best Blogger Tips

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சினை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சினை நீளும்.

எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.

அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்­ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.

நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீ­ர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.

சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீ­ர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.

சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீ­ர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.

சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்­ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.

பரங்கிக்காய், பெரிய காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:01 PM | Best Blogger Tips

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் வாகனம் ஓட்டிச் செல்வது, கடின உடல் உழைப்பு, வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்கள் உடலில் தோன்றும் போது வாந்தி, காய்ச்சல், பசியின்மை, இடுப்புப் பகுதியில் தாங்க முடியாத வலி, சிறுநீரில் ஒரு வித துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, சிறுநீரக கற்கள் சிறுநீர்ப்பையில் உராயும் பொழுது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை உருவாகும்.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேமல் மறைய....

மணக்கால் அய்யம்பேட்டை | 1:00 PM | Best Blogger Tips

மலச்சிக்கல்: செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி: மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு: கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில்(Olive Oil) காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு: சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்: வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்: கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்: வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு: ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்: எலுமிச்சம் பழசாறு(Lemon Juice), தேன்(Honey) கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

வெண்படையை குணமாக்கும் சோற்றுக்கற்றாழை!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:56 PM | Best Blogger Tips

இந்தியா முழுவதும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரும் அளவு உபயோகப்படுத்தப்படுகின்றது.

தாவரவியல் பெயர்: Aloe vera

வேறு பெயர்கள்: கற்றாழை, கத்தாழை, குமாரி, கன்னி.

வேறு மொழிப் பெயர்கள்: ஆங்கிலம்: Indian Aloes, தெலுங்கு: கலபந்தா

மலையாளம்: கட்டுவாளா, கன்னடம்: கதளிகிடா

சமஸ்கிருதம்: குமாரி, இந்தி: Ghikavar

மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்:

கற்றாழையின் சோற்றை எடுத்துப் பல முறை கழுவி, இதில் சிறிது படிகாரம் அல்லது சீனாகற்கண்டு சேர்த்து, சிறு துண்டில் முடிந்து தொங்கவிட அதில் நீர் வடியும். இதை கண்ணில் விட, கண் நோய், கண் சிவப்பு, தீரும்.

இதன் சாறு வெப்பத்தைத் தணிக்கும்.

இந்தச் சாற்றுடன், வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகுத் தூள் சேர்த்துண்ண நீர்சுருக்கு, உடலரிப்பு நீங்கும்.

கற்றாழையை உலர்த்தி முறைப்படி பொடியாகச் செய்து உண்ண, இளமையாக நூறாண்டு வாழலாம்.

மலச்சிக்கல் தீர:

இலையின் சதைப் பகுதியைச் சேகரித்து, காய வைத்து பொடி செய்து, அதே அளவு மஞ்சள் பொடியுடன், கால் கோப்பை தண்­ணீரில் கலந்து பருக வேண்டும். 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

வெட்டுக்காயங்கள் குணமாக:

இலையைக் கீறி சதைப்பகுதியை வெளியே தெரியுமாறு செய்து, அதைக் காயத்தின் மீது வைத்துக் கட்டுப்போட வேண்டும். காயம் ஆறும் வரை தினம் இருமுறை செய்யவும்.

வெண்படை குணமாக:

கற்றாழையின் சோற்றை எடுத்து புதிதாக தினமும் மேலே பூசிவர வெண்படை குணமாகும்.

மூலநோய் தீர:

இலைத்தோலை நீக்கி, சதையை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு பிடி முருங்கைப் பூ சேர்த்து, அம்மியில் அரைத்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சை அளவு சாப்பிட்டு வர வேண்டும். தினம் காலை மட்டும் 1 வாரம் வரை இவ்வாறு செய்ய வேண்டும். உப்பு, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலி குறைய:

சோற்றுக்கற்றாழை சாறு 6 தேக்கரண்டியுடன் 1 சிட்டிகை அளவு பொரித்த பெருங்காயமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும், தேவையான அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 1/2 கிராம் அளவிற்கு தினமும் 2 வேளை, சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

இதன் சாறு எடுத்து, இதே அளவு நல்லெண்ணெய் எடுத்து கலந்து காய்ச்சி தலையில் தடவி வர தூக்கம் உண்டாகும். முடி வளரும்.

சிற்றாமணக்கு எண்ணெய் 340 கிராம், கற்றாழைச் சோறு 85 கிராம், ஊற வைத்து அரைத்த வெந்தயம் 81/2 கிராம், சிறுக அரிந்த வெள்ளை வெங்காயம்-1, சேர்த்து காய்ச்சிய பதத்தில் இறக்கி வடிகட்டி, அதை 1 வேளை மட்டும் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் சூடு நீங்கும். உடல் பெருகும். மேக அனல் மாறும்.
 
தேநீர் – ஒரு சுவையான பானம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tips

சுவையாக தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க, அரை கப் நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை போட்டு, நன்கு கொதி வந்ததும், அத்துடன் அரை கப் பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான, சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளையும் பார்ப்போம்.

மசாலா டீ:

ஏலக்காய் – 6, கிராம்பு – 6, சோம்பு – 1 தேக்கரண்டி, தனியா – அரை தேக்கரண்டி, ஜாதிக்காய் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, பட்டை போன்றவற்றை பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்ததும், இந்த பொடியையும், தேயிலையுடன் சேர்த்து போட்டு கொதி வந்ததும், சர்க்கரை, பால் சேர்த்து, வடிகட்டி அருந்தவும். இது, குளிர்காலத்தில் உடம்பிற்கு சூடு கொடுக்கும்; அருமையான தேநீர்.

ரோஸ் டீ:

தேநீர் கொதிக்கும் போது, புத்தம் புதிய ரோஜா இதழ்களை போட்டு தேநீர் தயாரிக்கலாம். ரோஜாப்பூ இதழ்களை காயவைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ டீ:

குழந்தைகள், சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். இந்த டீயை தயாரிக்கும் போது, தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு அருந்தவும்.

இஞ்சி டீ:

அஜீரணம், வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை நீக்கி, நன்கு இடித்து, டீ கொதிக்கும் போது போட்டால், இஞ்சி டீ ரெடி!

ஏலக்காய் டீ:

ஏலக்காயை தோலுடன் பொடி செய்து, தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். பலகாரங்கள் செய்ய, ஏலப்பொடி செய்யும் போது, ஏலக்காய் தோலை எறியாமல், சேகரித்து வைத்து உபயோகிக்கலாம்.

எலுமிச்சை டீ:

நீரை கொதிக்க விட்டு, தேயிலையை போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி வடிகட்டவும். ஆறியதும், அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து, சில ஐஸ்கட்டிகளைப் போட்டு, பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா டீ:

சில புதினா இலைகள், துளசி இலைகளோடு, சிறுதுண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டு, 5 மிளகையும் பொடி செய்து போட்டு, நீரை கொதிக்க விடவும். பின், தேயிலை, சர்க்கரை, பால் கலந்து, வடிகட்டி அருந்தவும். இது, ஜலதோஷம், இருமல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

குறிப்பு:

தேநீர் நம் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் பலமளிக்கும். நரம்பு, தசை மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி, புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதை விட, தேநீர் அருந்துவது நல்லது. அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் நரம்புகளையும், வயிற்றையும் பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர், வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.

நன்றி: செந்தில்வயல் தளம்
 
நன்றி: செந்தில்வயல் தளம்

சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:23 PM | Best Blogger Tips

பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம்.

முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும்.

பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று பராசக்தியாய் விளங்கும் கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிஷேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து,அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, அங்கு நின்று சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று, பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து தேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து பின்னரே சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

இதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும். இது அனைத்துப் பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்துவிதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது.

என்ன புரியவில்லையா? இந்த நடைமுறையை தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி மக்களின் வழக்கத்தில் இருக்கும் ஒன்று. உங்களுக்கு இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் அவரோடு ஒரு முறை சிவாலயம் சென்றுவருக!!!

ஓம்சிவசிவஓம்

மாரடைப்பை குணப்படுத்தும் வெந்தயக் கீரை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:19 PM | Best Blogger Tips

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒருபாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே

அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.