சுப காரியங்களின் போது வலதுகாலை எடுத்து வைத்து வரச் சொல்வது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips

பெண் வலது கால் க்கான பட முடிவு
உணவு உட்கொள்ள வலதுகரம் பயன்படுகிறது. கொடை வழங்க வலதுகை முந்துகிறது. பிறருக்கு உதவ வலதுகரத்தை நீட்டுகிறோம். மனைவியை வலதுகரத்தால் ஏற்றுக் கொள்கிறோம். அறத்தை செயல்படுத்தும் வேளையில், மனைவியை வலது பக்கம் இருத்துகிறோம். வில்லில் தொடுத்த அம்பை வலதுகரம் இயக்குகிறது. கடவுளுக்கு வலதுகரத்தால் பணிவிடை செய்கிறோம். வரவேற்பிலும் விடையளிப்பதிலும் வலதுகரம் செயல்படுகிறது. இப்படி, செயல்பாடுகளில் இயல்பாகவே வலதுகரம் முந்திக்கொள்ளும்.

இயற்கைக்கு மாறாக இடதுகையைப் பயன்படுத்துவர்களும் உண்டு. அது விதிவிலக்கு. மூளையின் உத்தரவை இடதுகை முந்திக்கொண்டு செயல்படுத்த, பிறகு அதுவே பழக்கமாகி நிலைத்துவிடும். இப்படிதான் இடதுகை, வலதுகையின் இடத்தைப் பிடித்திருக்கிறது எனலாம். இடதுகையைப் பயன்படுத்துவதை அநாகரிகமாகக் கருதுபவர்களும் உண்டு. சுத்தம் செய்ய இடதுகை பயன்படுவதால், மற்ற காரியங்களில் அதற்கு முன்னுரிமை இல்லை என்று எண்ணுபவர்களும் உண்டு.

கால்களது செயல்பாடு, கைகளைப் போல் அல்ல. வலதுகாலும் இடதுகாலும் இணைந்துதான் நடக்கவேண்டும். ஒன்றை பூமியில் அழுத்தி, மற்றதை முன்னே வைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. 'நல்ல காரியங்களில் முதல் அடி எடுத்து வைப்பது வலதுகாலாக இருக்கவேண்டும்!" என்று சாஸ்திரம் கூறுகிறது.

பல முன்னேற்றங்களுக்கு வலதுகையைப் பயன்படுத்திய அனுபவம் நமக்கு இருப்பதால், 'முதலில் வலதுகாலை எடுத்து வைப்பது முன்னேற்றத்துக்கு உதவும்!" என்று நம் மனம் நம்பிவிடுகிறது.
பெண் வலது கால் க்கான பட முடிவு
உடலின் இரு கூறுகளில் இடது கூறைவிட, வலது கூறு பலம் பொருந்தியது என்று வேதம் கூறும் பக்கவாதம் தாக்கும்போது உடலின் வலதுபக்கம் வீழ்ந்தால், அது நம்பிக்கையை இழக்கச் செய்யும். பலமான பகுதி வீழ்ந்ததாக ஆயுர்வேதம் கூறும். வலது கூறுகளுக்கு வேதம் பெருமை அளிக்கிறது. எனவே, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளில், முதலில் நுழைய வேண்டியது காலாக இருப்பதால், 'வலதுகாலை எடுத்து வைத்து நுழைய வேண்டும்" என்று கூறுகிறது தர்மசாஸ்திரம்.


 நன்றி இறைவன்!

இறைவனுக்கு நன்றி ! மிக பொியவன் இறைவன் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:25 PM | Best Blogger Tips
Image may contain: 1 person

" ஓரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து . . . . . .
இறைவன்
எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்கலோடு வைத்திருக்கிறான் ,ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன் . .
" இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை.. என்று சலித்துக் கொண்டான் . .
மனிதன் 2 : " நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு . .
மனிதன் 1 : " இல்லை " முடியாது . .
மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன்.உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.
மனிதன் 1 : " இல்லை " முடியாது . .
மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு . .
மனிதன் 1 : " நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது . .
மனிதன் 2 : இறைவன் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த நியமத்துகனை தந்துயிருக்கிறான் , ஆனால் அதற்கு நன்றி செலுத்தாமல் , இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை... என்று சலிக்கின்றாயே ? ? ?
" எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள் .
" அவன் தான் 
இறைவன்
"
பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கு உணவு வழங்குபவன் . .
கடலில் உள்ள திமிங்கலதிற்கு ஒரு நாளைக்கு 33 டன் " அதாவது, 36,960 கிலோ " மீன்களை " உணவு வழங்குகிறான் . .
" உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள் , . .
" இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றான் . .
" இன்னும் சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான் . .
god images க்கான பட முடிவு
" ஆக , ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள் . .
"நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவா சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று . .
" இறைவனுக்கு நன்றி செலுத்து . .
" நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய் . .
" எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர் . .
" இறைவனுக்கு நன்றி செலுத்து . .
"நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய் . .
" எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர் . . இறைவனுக்கு
நன்றி செலுத்து . .
" நீ உடல் " ஆரோக்கியத்துடன் " உலா வருகின்றாய் . .
" எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர் . .
இறைவனுக்குநன்றி செலுத்து . .
" நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய் . .
" எத்தனையோ மண்ணறைவாசிகள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர் . .
" நீ உனது தேவைகளை முறையிட்டு வணங்குவற்கு உனக்கொரு இறைவன் இருக்கின்றான் . .
" எத்தனையோ பேர் கல்லுக்கும் மண்ணுக்கும் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர் . .
இறைவனுக்கு
நன்றி செலுத்து . .
"நீ நீயாக இருக்கின்றாய் . .
" எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர் . .
" இறைவனுக்கே நன்றி செலுத்து . .
" எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இரு . .
" இறைவனுக்கு நன்றி செலுத்து . .
" பிறரை மகிழ்வி . , , .


நன்றி இணையம்