தலைவலி அடிக்கடி வருதா? அதை தடுக்க சில டிப்ஸ்....

மணக்கால் அய்யம்பேட்டை | 6:31 PM | Best Blogger Tips
 
        

அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.
இப்போது எந்த செயல்கள் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றிஈரமான கூந்தல்

காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.
அளவுக்கு அதிகமான வெப்பம்

வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

வாசனை திரவியங்கள்

உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.


கம்ப்யூட்டர் திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

தொலைக்காட்சி திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

படுக்கையில் படித்தல்

படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.


அதிக குளிர்ச்சி

அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.

ஆல்கஹால்

ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கல் சாப்பிட்டாலே, மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

சரியான தூக்கம்

தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


நீண்ட தூர பயணம்

பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தில் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது தான் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். அவ்வாறு பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத்தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும். 

எரிச்ச்சலுடன் கூடிய சிறுநீர் கழிப்பை தவிர்க்க சில டிப்ஸ்......

மணக்கால் அய்யம்பேட்டை | 6:22 PM | Best Blogger Tips
 


        
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்
எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
* சிறுநீர் பாதை தொற்றுநோய்
* உடலில் நீர் வறட்சி
* சிறுநீரக கற்கள்
* கல்லீரல் பிரச்சனை
* அல்சர்
* பிரசவத்திற்கு முன்னோ அல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது
* விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்
* பால்வினை நோய்
* பெரிதான புரோஸ்டேட்
* நீரிழிவு
* ஊட்டச்சத்துக் குறைவு
* குறுகிய சிறுநீர் பாதை
எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்:
* அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
* குருதிநெல்லிக் கனியின் (cranberry) ஜூஸை சாப்பிட வேண்டும். பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் மற்றும் குறுகிய சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.
* நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.
* தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். வேண்டுமென்றால் அத்துடன் வெல்லம் மற்றும் மல்லி தூளை சேர்த்து குடிக்கலாம். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
* ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.
* எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம்.
* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேறும். ஆகவே பீர் குடித்தால், அந்த கற்கள் கரைந்துவிடும். அதையே காலையில் குடித்தால், உடலில் வறட்சி ஏற்படும். ஆகவே அப்போது அத்துடன் தேங்காய் நீர் மற்றும் அதிக தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும். வேறு என்னவெல்லாம் செய்தால், சரியாகும் என்பது உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியானம் செய்ய வேண்டும் என்பது இல்லை

மணக்கால் அய்யம்பேட்டை | 6:20 PM | Best Blogger Tips
 


ஒருவர் ஓஷோவிடம் கேட்டார். ”என்னுடைய நேரத்தைச்செலவு செ ய்து தியானம் செய்வதால் எனக்கு என்ன லாபம்?” ”தியானம் அமைதி ஏற்படுவதற்கானச் சூழ லை உருவாக்குகிறது. அமைதி ஏற்பட்டுவி ட்டால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட் டு விடும். சோகமாக இருக்க மாட்டீர்கள். உலகைத் தவிர்க்க நினைக்க மாட்டீர்கள். தியானத்தின் மூலம் சூழல் என்ற நிலத்தை த் தயார் செய்கிறோம். சூழலை உருவாக்கிவிட்டால், உங்கள் கை வசம் இருக்கும் விதைதுளிர்விட்டுவிடும். நீங்கள் வளர ஆரம்பிப்பீர் கள்” என்றார் ஓஷோ. இதுதான் தியானம். மனமும் உடலும் ஆரோக் கியமாக இருப்பதற் கான சாவியைத் தியானம் உங்கள் கையில் தருகிறது.

சரி தியானத்தால் அறிவியல்பூர்வமாக நன்மைக ள் இருக்கின்றனவா? அதற்கு என்ன ஆதாரம்? எத்தனை பேர் சாட்சி?ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான ‘மைண்ட்- பாடி மெடிக்கல் இன்ஸ்டிடியூட்’ என்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஹெர் பெர்ட் பென்சன் இதுபற்றி ஒரு ஆய்வு செய்திருக்கிறார். ஒருவரை தியானம் செய்யவைத்து ‘உடலுக்குள் என்ன நட க்கிறது?’ என்று நடத்தப்பட்ட ஈஈஜி (Electro Encephalography (EEG) பரி சோதனையை ஹெர்பெர்ட் பென்சன் தலைமையில் டாக்டர்கள் குழு ஒன் று கண்காணித்தது.

ஆய்வின் முடிவில், ‘தியானம் செய்யும்போது பல வேதியியல் மாற்ற ங்கள் நடந்து உடலைத் தளர்வாக்குகின் றன. இந்த ரிலாக்ஸேஷன் மூலம் இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம், மூளையி ன் வேதியியல் செயல்கள் எல்லாமே சீரா கின்றன’ என்ற முடிவுக்கு வந்து அறிக் கை சமர்ப்பித்து இருக்கிறார். உலகம் முழுவதும் இதுபோல் இன்னும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆய்வுகள் நட ந்து வருகின்றன. கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகள் குறைகின்றன, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது, போதைப் பழக் கங்களை மறக்க வைக்கிற து, வயதாவதை த்தாமதப்படுத்தி இளமையோடு இருக்க வை க்கிறது, சுய மரியாதையை அதிகமாக்குகி றது, இயல்பான தூக்கம் வர உதவுகிறது, விழிப்புணர்வு அதிகமாகிறது என்று ஒவ் வொரு மருத்துவக் குழுவும் தனித்தனியாகத் தங்களது ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பி த்து இருக்கின்றன. ”நோயைக் குணப்படுத்துவதைவிடவும், நோய்பற்றிய புரிதலை ஏற்ப டுத்துவதுதான் நல்ல மருத்துவம். நோய் ஏன் வருகிறது, மீண்டும் வ ராமல் தடுப்பது எப்படி என்று சிகிச்சை அளி க்கும் மருத்துவம் தியானம்” என்கிறார் அவ சர சிகிச்சை நிபுணரான தவப்பழனி. ”டென்ஷன், மன அழுத்தம் இரண்டும்தான் எல்லா வியாதிகளையும் நமக்கு வரவழை க்கின்றன. தியானம் செய்யும்போது, மனம், உடல் இரண்டும் அமைதியாகி விடுகின்றன .

சாதாரணமாக, ஏதாவது ஒரு பிரச்னை என்றால், 10 முதல் 1 வரை பின்னோக்கி மெதுவாக எண்ணுங்கள் என்று சொல்வதைக்கேள்விப்பட்டு இருப்பீ ர்கள். இதில் உள்ள சூட்சுமம், பின்னோக்கி எண்ணும்போது சுவா சம் சீராகி, அப்பதற்றத்தைக் குறைத்து விடும். தியானமும் இப்படித்தான் நமக்குள் வே லை செய்கிறது. இது தவிர, தேவை இல் லாத பதற்றம், கோபம் எல்லாவற் றையும் சாந்தப்படுத்திவிட்டால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என்று எதுவுமே வராது. தியானத்தின் மூலம் போபியாக்கள் என்று சொல்லப்படும் தேவை யற்ற பயங்களைப்போக்க முடியும், அலர்ஜியைக்கூட தெரபி மூலம் சரி பண்ணலாம். தியானத்தால் நிச்சயமாக மருத்துவப் பலன் கள் உண்டு” என் கிறார் தவப்பழனி. சரி.. தியானம் எப்படிச்செய்வது? யோ கா ஆசிரியை மேனகா தேசிகாச்சார் இதுபற்றி விளக்குகிறார். ”தியானம் என்பது ஒரு தொடர்ச்சியா ன நிகழ்வு. அதை உடனே செய் துவிட முடியாது.

முதலில் ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்து பழகவேண் டும். பத்மாசனத்தில் அமர்ந்துதான் தியானம் செய்ய வேண்டும். அதற்கு உடலும் மனதும் உடன்பட வேண்டும். தியானத்துக்கு ஒருவ ரைத் தயார்ப்படுத்தும் விதமாகத் தான் முதலில் யோகாசனம், இரண் டாவது கட்டமாக, பிராணாயாம ம் அஷ்டாங்க யோக என்கிற மூச்சுப்பயிற்சி, நிறைவுக் கட்டமாக த்தான் தியானம் செய்ய முடியும். இதனால் தான், தியானம் என்பது அஷ்டாங்க யோகத் தில் கடைசியில் வருகிறது. அதுவும் தியானம் செய்யும்போது, உடலைப் பற்றியும் மனதைப் பற்றியும் வேறு எந்த நி னைவுகளும் வரக்கூடாது. ஆனால், ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தியானம் செய் யும்போது எதைப்பற்றியாவது சிந்தனை வந் தால்… நினைவுகளை விரட்ட வேண்டிய அவ சியம் இல்லை. அந்த நினைவுகளை நாம் விலகி நின்று கவனிக்க வேண்டும். தியானம் செய்ய ஆசனங்களும் மூச்சுப் பயிற்சி யும் உதவு கின்றன.

ஆசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நாம் மூச்சுவிடுவ தும் சீராக இல்லாமல் இருக்கிற து, அந்தக் குறைபாட்டைப்போக்க த்தான் மூச்சுப் பயிற்சி. சந்நியாசிகள் 24 மணி நேரமும் சமாதி நிலையிலேயே இருப்பார்க ள். சம்சார வாழ்க்கை வாழும் நம் மால் அப்படிச் செய்ய முடியாது.

அதனால், ஒரு நாளைக்குக் குறைந் தபட்சம் 10 நிமிடங்களாவது தியானம் செய்தால், மருத்துவரீதியாக நல்ல பலன் கிடைக்கும். தியானம் செய் ய விரும்புபவர்கள், முறையாக ஆசிரியர் ஒருவரிடம் கற்றுக்கொண்டு செய்வதே சரியானது” என்கிறார். நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஏ.வி. ஸ்ரீனி வாசன் இன்னும் கொஞ்சம் நுட்பமாக இதை விளக்குகிறார்… ”இதயத்தின் துடி ப்புகளை ஈ.சி.ஜி. மூலம் அளப்பதுபோல், மூளையின் செயல்பாட்டை ஈ.ஈ.ஜி. மூல ம் ‘சைக்கிள்ஸ் பெர் செகண்ட்ஸ்’ (Cycles per seconds) என்று அளப்பார்கள்.

தியானத்தின்போது மூளையில் இருக்கும் ஆல்ஃபா அலைகள் தீட்டா அலைகளாக (பீட்டா அலைகள் அல்ல) மாறுகின்றன. ஒரு வினாடிக்கு 9 முதல் 13 சைக்கிள்ஸ் என்ற அளவில் இருக்கும் ஆல்ஃ பா அலைகள், 4 முதல் 8 என்று தீட்டா அலைகளாகக் குறை யும். இன்னும் ஆழ்ந்த தியானத்துக்குச் செல்லும் போது, படிப்படியாக 1.5 என் கிற டெல்டா நிலைக்கு வரும். இதற்கு ‘எப்ஸிலான் நிலை’ என்று பெயர். நம் உடலில் இருக்கும் லட்சக்க ணக்கான நரம்புகளின் சங்கமம் மூளை என்பதா ல், இந்த ‘எப்ஸிலான் நிலை’யில் நரம்பு மண்டலம் முழுவதும் நம் கட்டுப்பாட்டில் வந்து விடும். தியானம் செய்வதால் ரத்த அழுத்தம், உடல் வலி மற்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவற்றை முதலிலேயே வராமல், தடு க்க முடியும்.

வந்துவிட்டாலும் நோய்க ளின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்களும் ஆய்வாளர்க ளும் கூறுகிறார்கள்” என்கிறார். முக்கியமான ஒரு விஷயம், கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியான ம் செய்ய வேண்டும் என்பது இல்லை. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தியானம் கற்றுக்கொ டுக்கச் சென்றார் டி.கே.வி.தேசிகாச்சார். ”நாராயண நமஹ என்று தியானியுங்கள்” என்று அவர் சொல்ல, ”ஞாயிறு போற்றுதும் – என்று தியானிக்கலாமா?” என்று கேட்டிருக்கிறார் முன்னாள் முத ல்வர். ‘இரண்டும் ஒன்றுதான்’ என்று சம்மதம் சொல்லி இருக் கிறார் தேசி காச்சார். எனவே,உங்களுக்குப்பிடித்த ந ல்ல விஷயத்தைத் தேர்ந்தெடுக் க வேண்டும் என்பதுதான் ஒரே ய ரு இனிய விதி! ஓகே.. இப்போதே ஒரு குட்டி தியானத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா? மெது வாகக் கண்களை மூடுங்கள்…

கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:18 PM | Best Blogger Tips
 


        

உடற்பயிற்சி என்பது எத்தனை அவசியம் என்று நமக்கு தெரியும். யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற விஷயங்களை செய்து உடலை சரியாக வைத்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கண்களுக்கும் சரியான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியானது கண்களை ஆரோக்கியமாக வைத்து கண்களில் ஏற்படும் களைப்புகளை குறைக்கும்.

இந்த உடற்பயிற்சி இழந்த பார்வையை மீண்டும் கொண்டு வருவதற்கு அல்ல, கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கு தான். சரி இப்போது கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கண்களுக்கு பயிற்சி செய்ய வேண்டிய முறைகள்:

1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை மூடி, உள்ளங்கையால் கண்களை மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும். முக்கியமாக கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால், அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.

2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.
3. கண் மசாஜ்:

   * வெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்: குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.

   * முழு முக மசாஜ்: சூடான நீரில் ஒரு துண்டை ஊற வைத்து, கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும் கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும்.

  * கண்ணிமை மசாஜ்: கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.

4. மெதுவாக மூன்று விரல்களால் இரண்டு கைகள் கொண்டு மேல் கண் இமைகள் மீது அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.

5. அமைதியாக உட்கார்ந்து, பின்னர் கண்களை இடஞ்சுழியாகவும் பின் வளஞ்சுழியாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.

6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.

7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.

8. எதிரில் உள்ள சுவர் மீது நோக்கியபடியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தல், பின் பழகிவிடும்.

9. கண் அசைவுகளை கீழ், மேல் என செய்யவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.

10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது.
நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.

வாயுத் தொல்லை அதிகமா இருக்கா? ஈஸியாக தடுக்கலாம்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:18 PM | Best Blogger Tips
இன்றைய காலத்தில் நிறைய மக்கள் வாயுப் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தான். ஏனெனில் உணவை உண்ணும் போது எவ்வாறு உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல், நடந்து கொள்கின்றனர். இதனால் பல இடங்களில் வலிகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாயுத் தொல்லை ஒரு பெரிய பிரச்சனை இல்லை தான் என்றாலும், சிலர் இவற்றிற்கு அளவு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் வயிற்று உப்புசம், வயிற்று வலி, ஏப்பம் போன்றவை அடிக்கடி ஏற்பட்டால், அது உடலில் அதிக அளவில் வாயு உள்ளது என்பதற்கான அறிகுறிகள் ஆகும். சிலர் எப்போது பார்த்தாலும், ஏப்பம் விட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த மாதிரியான நிலை வந்தால், உடனே அதற்கான காரணத்தை அறிந்து, அவற்றை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.


இப்போது அந்த செயல்கள் என்ன, எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை பட்டியலிட்டுள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி, வாயுத் தொல்லை ஏற்படாமல் தடுக்கலாமே!!!


உண்ணும் முறை

 
உணவை உண்ணும் போது அவசரமாக சாப்பிடாமல், மெதுவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும். இல்லையெனில் உணவுப் பொருட்களை அவசரமாக சாப்பிடும் போது, உணவுப் பொருட்கள் இரைப்பையில் காற்றையும் உள்ளே தள்ளிக் கொண்டு சென்றுவிடும். பின் வாயுத் தொல்லை ஏற்படும். ஆகவே மெதுவாக சாப்பிட்டால், உமிழ்நீர் சுரப்பிகள் உணவுப் பொருட்களை கரைப்பதோடு, மென்மையாக்கி, எளிதில் செரிமானமடைய வைக்கிறது. மேலும் உடலில் வாயுத் தொல்லையும் ஏற்படாமல் இருக்கும்.சோடா மற்றும் ஜூஸ்

நாம் சோடா சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கி, வயிற்று வலி சரியாகும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் கார்போனேட்டட் பானங்கள் அனைத்தும் வாயுத் தொல்லை ஏற்படும். ஏனெனில் அதிலிருந்து வரும் சிறு சிறு முட்டைகள் மற்றும் ஜூஸில் இருக்கும் சர்க்கரை வாயுப் பிரச்சனையை உண்டாக்கும். அதனால் தான் இவற்றை சாப்பிட்டப்பின் வயிறு உப்பியது போல் இருக்கிறது.
சூயிங் கம்

தேவையில்லாத காற்று உடலில் புகுவதால் தான் வாயுத் தொல்லையோடு, செரிமானப் பிரச்சனையும் ஏற்படுகிறது. அதிலும் சூயிங் கம் சாப்பிடும் போது, தேவையில்லாத காற்று வாயின் வழியாக உடலில் நுழைந்து, வாயுப் பிரச்சனையை உண்டாக்குகிறது. எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
நடத்தல்

உணவு உண்டப் பின் ஒரே இடத்தில் உட்காராமல், சிறிது தூரம் நடக்க வேண்டும். இதனால் செரிமான மண்டலம் நன்கு இயங்குவதோடு, இரைப்பையில் இருக்கும் கடினமான உணவுப் பொருட்களும் உடைந்து செரிமானமாகிவிடும். மேலும் உடல் எடையும் குறையும். செரிமான மணடலம் நன்கு இயங்கினால், வாயுத் தொல்லை நீங்கும்.
புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் அதில் உள்ள நிகோட்டின் என்னும் பொருள் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதிலும் இந்த சிகரெட் உடலில் வறட்சியை ஏற்படுத்துவதோடு, வாயுத் தொல்லையையும் உண்டாக்கும். ஆகவே உடலில் பிரச்சனைகள் வராமலிருக்க புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது.
கார உணவுகள்

வயிற்றில் ஏற்படும் உப்புசம், வாயுத் தொல்லை போன்றவற்றை சரிசெய்ய நிறைய கார உணவுப் பொருட்கள் இருக்கின்றன. அதிலும் கிராம்பு, சோம்பு, ஏலக்காய் விதைகள் மற்றும் பல பொருட்கள், இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கும். ஆகவே இவற்றை சூடான நீருடன் சாப்பிட்டால், வயிற்று வலி மற்றும் வாயுத் தொல்லையை தடுக்கலாம்.

தண்ணீர்

ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, இரைப்பையிலிருந்து வாயுவும் வெளியேறிவிடும்.


தலைவலி – காரணங்களும், தீர்வுகளும்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:14 PM | Best Blogger Tips
 

        

இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில் லை. நாம் செய்யும் செயல்களால்தான் அந்த தலைவலியானது வரு கிறது.
இதற்காக நாம் நிறைய மாத்திரை கள், வீட்டு மருந்துகள் என்று பல வலி நிவாரணிகளை எடுத்துக் கொ ண்டாலும், அவை மீண்டும் மீண் டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்தி ரைகளும் உடலும் பெரும் கெடுத லைத்தான் ஏற்படுத்தும். ஆகவே அத் தகைய வலி நிவாரணிகளைப் பய ன் படுத்தி சரிசெய்வதைவிட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந் த தலைவலி ஏற்படுகின்ற தென்ற காரணத்தை தெரிந்துகொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

ஈரமான கூந்தலோடு உலாவருதல்:

 காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலி யை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலை யை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற் காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்த லை உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான வெப்பம்

வேலையாக வெளியே செல்லும்போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வ து நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிக மான வெப் பம் ஸ்கால்ப்பில் படும்போது, தலை வலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென் றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண் டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலை க்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்துதல்

 உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிக மாக வாசனை திரவியங்களை உடலி ல் பூசிக்கொண்டு செல்கின்றனர். இத னால் அந்த செண்ட் வாசனை, அதிக தலை வலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

படுக்கையில் படுத்துக்கொண்டே படித்தால்

 படுக்கும்போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழு த்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண் டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந் து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக குளிர்ச்சி யான பானங்களை அருந்துதல்

அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளி ர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல் லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பதுபோல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வை த்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொரு ளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பி ட்டால் நல்லது.

ஆல்கஹால் குடித்தல்

ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியா க சாப்பிடுவர். சாதாரணமாக ஆல் கல் சாப்பிட்டாலே, மூளை மிகவு ம் தளர்ந்து இருக்கும். அதில் குளிர் ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள்தான் உண் டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப் பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

சரியான தூக்கம் இல்லாமை

தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றிய மையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர் ச்சியுடன் இருக்கும்.

பைக்கிலேயே நீண்ட தூரம் செல்லும்போது

பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தி ல் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களி ல் செல்வதுதான் பெரும் பிரச்ச னையை உண்டாக்கும். அவ்வா று பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத் தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்

கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க


        

அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது. நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள். இவ்வாறு தலை வலி வந்தால், உடனே அதனை போக்க பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள்

. சில நேரங்களில் இந்த தலைவலியால் மயக்கம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். பின் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு உடலானது பலவீனமடைந்துவிடும். பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம். அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும். இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது.

சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது. எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது என்று பார்ப்போமா!!!


 

முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:14 PM | Best Blogger Tips
 


தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி.
இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

ஊட்டச்சத்து குறைவு


நமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும்.
அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும்.

பரம்பரை


ஒருவேளை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதுகு வலி இருப்பின், அது பரம்பரையாக தொற்றிக் கொண்டிருக்கும். இவற்றால் கூட காரணமின்றி வலி ஏற்படும்.
ஆகவே அப்போது அந்த வலியைப் போக்குவதற்கு சரியான நிலையில் உட்கார்ந்து வந்தால், சரிசெய்யலாம்.

அதிக எடை


நாம் சரியான நிலையில் எப்போதும் இல்லாததற்கு காரணம் உடல் எடையும் தான்.
ஏனெனில் இதனால் அவர்களது வயிற்றில் அதிகமான அளவில் கொழுப்புகள் சேர்ந்து, தொப்பையாக வருவதோடு அந்த தொப்பை நேராக உட்காரவிடாமல், முன்புறமாக இழுக்கிறது.
இதனால் முதுகு வளைந்து கூன் உண்டாகி இறுதியில் வலியை அதிகமாக்குகிறது.

பழக்கம்


சில நேரங்களில் நடக்கும் நிலை கூட, முதுகு வலியை ஏற்படுத்தும்.
உதாரணமாக நடக்கும் போது தலையை குனிந்து கொண்டு நடக்கும் போது, தன்னை அறியாமலே தோள்பட்டையும் வளையும் நிலை ஏற்படுகிறது.
மேலும் ஏதாவது ஒரு எடையுள்ள பொருளை ஒரே பக்கத்தில் தூக்கும் போது அல்லது படுக்கும் போது சரியான நிலையில் படுக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் கூட முதுகு வலி வருதற்கு காரணமாகும்.

கணனி வேலை


முதுகு வலி பெரும்பாலான கணனி முன் வேலை பார்ப்பவர்களுக்கே ஏற்படுகிறது.
ஏனெனில் கணனி முன்பு வேலை செய்யும் போது கழுத்து மற்றும் தலை சற்று முன்னரும், தோள்பட்டை சற்று வளைந்தும் தான் இருக்கும்.
இதனால் முதுகை நேராக வைக்காமல் நீண்ட நேரம் வளைந்தே வைத்திருப்பதால் அந்த நிலை பெரும் வலியை உண்டாக்கும்.

ஃபேஷன்


ஃபேஷன் என்ற பெயரில் வந்துள்ள உடைகள் மற்றும் செருப்புகள் கூட இந்த வகையான வலிக்கு முக்கிய காரணங்களாகும்.
அதிலும் பெண்களுக்கு பென்சில் ஹீல்ஸ், ஹை ஹீல்ஸ், டைட்டான ஆடைகள் என்றும், ஆண்களுக்கு என்றால் நல்ல எடையுள்ள பூட்ஸ், பெல்ட் என்றும் வந்து அவர்களின் முதுகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் தாங்க முடியாத வலியை கொடுக்கிறது.

பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:12 PM | Best Blogger Tips
 
 http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/09/piles-225x170.jpg                                            

அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல.

 அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான்.

குறிப்பாக பைல்ஸ் வந்துவிட்டால், அதனை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான மருந்துகளையும் உட்கொள்ளலாம். இல்லையெனில் ஒருசில வீட்டு மருந்துகளைக் கொண்டும் சரிசெய்யலாம். இப்போது அந்த பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் காராமணி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

2.வாழைப்பழம்

 தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதிலும் இதை இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மறுநாள் காலையில் எந்த ஒரு கஷ்டமுமின்றி கழிவுகளை வெளியேற்றலாம்.

3.மஞ்சள்

மசாலா பொருட்களில் காயங்களை குணப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. எனவே மஞ்சளை சூடான நீரில் கரைத்து, தினமும் குடித்து வந்தால், பைல்ஸ் இயற்கையாக சரியாகிவிடும்.

4.உடற்பயிற்சி

மலச்சிக்கலை தடுத்து, இரத்த சுழற்சியை சீராக்க, தினமும் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் மிகவும் கடினமாக இருக்கும் உடற்பயிற்சியான எடை தூக்குதல் போன்றவற்றை செய்யவே கூடாது. அதற்கு பதிலாக வாக்கிங், ஜாக்கிங், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

5.வெங்காயம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.

6.அத்திப்பழம்

அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.

7.மாதுளை தோல்

சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.

8.முள்ளங்கி ஜூஸ்

பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.

முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:06 PM | Best Blogger Tips
 


        

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார
்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? “முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? “பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”

மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இயற்கை வைத்தியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:05 PM | Best Blogger Tips
 
       

சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும்.

சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் இவைகளைப் பொடித்து ஓரளவில் எடுத்து அதே அளவு சர்க்கரை சேர்த்து காலை, மதியம் இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வாயுவினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.


வாயு தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.


வயிற்று வலி: வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:29 PM | Best Blogger Tips


மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது.

எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் பலரிடம் பதிலிருக்காது. வாழ்க்கையில் பல பேர் பத்து சதவிகிதமாவது எதிர்மறை எண்ணங்களை (negative thinking) கொண்டிருப்பர்.

எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து வளர்த்துக் கொள்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுவர். ஆனால் நேர்மறை எண்ணங்கள் நம்பிக்கையை ஆதாரமாக பயன்படுத்தி மன அழுத்தத்தை போக்க பேருதவி புரிகிறது.

நேர்மறை எண்ணங்களால் பல நல்ல விஷயங்கள் ஒருவரது வாழ்வில் நடைபெறுகின்றன. நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. துன்பங்களை தாங்கும் உந்துசக்தி கிடைக்கிறது. நல்வாழ்வு அமைகிறது.

இதயநோயினால் ஏற்படும் இறப்பு ஆபத்து குறைகிறது. கஷ்டமான காலங்களில் கஷ்டங்களை தாங்கி, மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை அளிக்கிறது.

இப்படி நேர்மறை எண்ணங்களை பற்றி பல சிறந்த விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். இனி எவ்வாறெல்லாம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

1. நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வரவும்:

தினசரி நிகழ்வுகளில் ஒரு நகைச்சுவையான விஷயத்தை நாட வேண்டும். வாழ்க்கையில் சிரிக்க முடிந்த அளவில் சிரித்தால், குறைந்த மன அழுத்தத்தை உணர்வோம்.

2. நேர்மறை எண்ணங்களை கொண்ட மனிதர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்:

வாழ்க்கையில் வரும் மனிதர்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஆதரவாக நல்ல பல அறிவுரைகளை தந்து, உங்களது கருத்துக்களை காது கொடுத்து பொறுமையுடன் கேட்பவராக இருப்பவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும். இதனால் அவர்கள் மூலம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் எதிர்மறை எண்ணங்களை உடையவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், அவர்கள் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். இதனால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.

3. சுய சிந்தனை மூலம் நேர்மறை எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்:

நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சில வழிகளை பின்பற்றலாம். உதாரணத்திற்கு ‘இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை' என்று ஒரு விஷயத்தை யோசிப்பதை விட, ‘புதிதாக ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.

அதேபோல் ‘இந்த செயலை செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது' என்று எண்ணாமல், நேர்மறையாக ‘நான் வேறொரு கோணத்தில் இதை அணுகி சமாளிப்பேன்' என்று சிந்திக்க வேண்டும். இப்படி எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

4. மற்றவர்களுக்கு உதவலாம்:

மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட மற்றொரு நபருக்கு ஏதாவது நன்மை செய்ய முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது உங்களது தவறான எண்ணங்களிலிருந்து கவனத்தை வேறு நல்ல விஷயத்தில் திசை திருப்ப முடியும். மற்றவருக்கு செய்யும் நன்மைகளால் மனத்திருப்தியும் ஏற்படும். இதனால் நல்ல எண்ணங்கள் மனதில் உருவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

5. நேர்மறையான மேற்கோள்களை படிக்கவும்:

நேர்மறையான மேற்கோள்களை உங்களது கணிணியில், பிரிட்ஜ் கதவுகளில் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியில் காகிதத்தில் எழுதி ஒட்டி வைக்கலாம். இதனால் ஒவ்வொரு முறையும் இவற்றை பார்க்கும் போது அவற்றை படித்து நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கலாம்.

6. தியானம் செய்யவும்:

மனதை அமைதிப்படுத்தி நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் தியான முறையை பின்பற்றலாம். அதற்கு அமைதியாக கண்களை மூடிக் கொண்டு ஒரு மணி நேரம் எந்த கவலை தரும் விஷங்களை பற்றி சிந்திக்காமல் ஒரே விஷயத்தை நேர்மறையாக சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்து வர நேர்மறையான எண்ணங்களால் மனம் சூழப்பட்டு எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் வாழலாம்.Thanks to

 

பெண்களுக்கு கால் வலி வர காரணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:31 PM | Best Blogger Tips
        
     பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள். ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது. ஆனால் இப்போது இருக்கிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம்.

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கினற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி என்பது அதிலேயே எல்லாம் கிடைத்து விடுகிறது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றிற்கும் மிஷின் வந்து விட்டது.

இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் இருந்து எடுத்து காய போட சோம்பேறி தனமாக இருக்கிறது. சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சில‌ பேர் தான் கிச்ச‌னில் சேர் போட்டு கொண்டு கொஞ்ச‌ம் நேர‌த்திற்கொருமுறை உட்கார்ந்து கொள்வார்க‌ள்.

ஆனால் வேலைக்கு போகும் பெண்க‌ள், அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா ச‌மைப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் இருக்காது. தகுந்த உடற்பயிற்சியின் மூலம் இது போன்ற வலிகளை தவிர்த்து கொள்ளலாம். முடிந்தவர்கள், நான்கு முறை மாடிப்படி ஏறி இரங்கலாம். ஸ்கிப்பிங் ஆடலாம். நீந்துதல் உடற்பயிற்சி செய்யலாம்.

நீந்துதல் உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான முதுகுவலி, இடுப்புவலி ,கால் வலி கூட சரியாகும். மன அழுத்தத்தையும் குறைக்கலாம். முடிந்த அளவு நடைபயிற்சி செய்யுங்கள். தினம் ஒருமணி நேரம் நடப்பதன் மூலம் சர்க்கரை வியாதி பிரஷரை கூட கட்டுபடுத்தலாம்.

சீரான மாதவிடாய் சுழற்சி இல்லையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க... மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:30 PM | Best Blogger Tips

பொதுவாக இறுதி மாதவிடாயானது 45-55 வயதுள்ள பெண்களுக்குத் தான் ஏற்படும். இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம், பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன்களின் உற்பத்தியானது குறைந்து, இனப்பெருக்க மண்டலமானது மாதவிடாய் சுழற்சியை குறைத்துவிடும். இவ்வாறு ஹார்மோன்களில் மாற்றம் உண்டாவதால், மனதில் அழுத்தம், உறவில் ஈடுபாடின்மை, சோர்வு, தூக்கமின்மை, தலைவலி போன்றவை ஏற்படும்.

ஆனால் அத்தகைய மாதவிடாய் சுழற்சியானது இளம் வயதிலயே சரியாகவும், சீராகவும் நடைபெறாவிட்டால், பின் அது பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது பிரச்சனையை உண்டாக்கும். எனவே இத்தகைய பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட வேண்டும். இதற்காக மருந்து மாத்திரைகள் போன்றவற்றை மேற்கொள்வதை விட, இயற்கை முறைகளைப் பின்பற்றி சரிசெய்து விடலாம்.
 

 

பொதுவாக இந்த பிரச்சனை இளம் வயதில் ஏற்படுவதற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால், மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம். அதுமட்டுமின்றி வேறு சில போதிய சத்துக்கள் உடலில் இல்லாததும் மற்றொரு காரணம். இப்போது அந்த மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதற்கு எந்த மாதிரியான உணவுகளை உண்டால், சீராக்கலாம் என்பதைப் பார்ப்போமா!!!


மீன்கள்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இதனை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், இதய நோய் ஏற்படுவதை தடுப்பதோடு, மார்பக புற்றுநோய் உண்டாவதையும் தடுக்கலாம். மேலும் இந்த மீனை பெண்கள் உணவில் அதிகம் சேர்த்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். குறிப்பாக சால்மன், ஹெர்ரிங் மற்றும் சூரை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

பால்

பாலில் அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. ஆகவே பெண்கள் தினமும் பால் குடிப்பது நல்லது.

தயிர்

எலும்புகளில் நோய்கள் எதுவும் தாக்காமல் ஆரோக்கியமாகவும் வலுவோடும் இருப்பதற்கு, பால் பொருட்களில் ஒன்றான தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறும்.

 
* பிரண்டைச் செடியின் இலைகளும், இளம் தண்டுத் பகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

* வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மாதவிடாய் வயிற்றுவலி மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில்- பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.


thanks to rethamநமது மூளை பாதிப்படைந்தால் . . . .

மணக்கால் அய்யம்பேட்டை | 2:29 PM | Best Blogger Tips
 
        
மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகு  ம். நமது மூளை பாதிப்படைந்தால் அனைத்து செயல்களும் பாதிப்படையு ம்.
1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண் ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக் கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத் துக்களையும் கொடுக்காமல் மூளை மெல்ல மெல்ல செயல் இழக்கும் அபாயம் ஏற்படும்.

2. மிக அதிகமாகச்சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாள ங்கள் இறுகக்காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரண  மாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:இது புரோட்டின் நமது உடலில் சேர்வ தைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

4. தூக்கமின்மை: நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்ட காலம் தேவையான அளவு தூங்கா மலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற் படுத்தும்.
5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக் குத் தேவையான ஆக்ஸிஜனை நாம்பெறுவதில் இருந்து தடை செய் கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படை  யும்.
6. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் கார ணமாகிறது.

7.மூளைக்கு வேலைகொடுக்கும் சிந்த னைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உரு வாகின்றன. அதனால் மூளை வலிமை யான உறுப்பாகிறது.
8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இதுநீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜ  னை குறைக்கிறது. குறை வான ஆக்ஸிஜன் மூளை யைப் பாதிக்கி றது.

9.நோயுற்றகாலத்தில் மூ ளைக்கு வேலைகொடுப்பது:உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிர மாகப் படிப்பதும் மூளையை ப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொ டுப்பதே சிறந்தது.
10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற் கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது
thanks to retham

எலும்பு நோய்களில் இருந்து தப்பிக்க

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips
 
  
எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவி த்துள்ளனர். பெண்களுக்கு மாத விலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ் டி யோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற் படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தி யில்லாமல் எளிதில் உடையு ம் நிலையை அடைகின்றன.
இளைய தலைமுறையினர் பாதிப் பு சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில்வயதானவர்களுக்கு காணப் பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கா ர்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற் சி செய்யாதது போன்ற காரணங்களா ல் ஆஸ்டியோபோ ரோசிஸ் நோய் இளைஞர்களை தாக்கி வருகிறது.

கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும் இந்த நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் வை ட்டமின் டி குறைபாடினாலும் முதுகெ லும்பை தாக்கும் ஆஸ்டியோபோரோ சிஸ் நோய், பின்னர் கை கால் எலும்பு களையும் பாதிக்க செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்நோய் பாதிப்பிலிருந்து தப்ப லாம் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான உணவுகளை பரிந்துரைத்  துள்ளனர்.

பால் மற்றும் பால் பொருட்கள்குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிடவேண்டும். சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க்பவுடர் போன்றவற்றில் கால் சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிட லாம். இதனால் எலும்புகள் பலமடையும்.

பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீ சியம், மாங்கனீஸ், பாஸ் பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன.  இவற்றை உணவில் சேர்த்துக்கொள் வதன் மூலம் எலும்புகள் பாதிப்படை யாமல் தப்பிக்கலா ம்.

புருக்கோலி, முட்டைக்கோஸ், காலி ப்ளவர், பீட்ரூட், ஓக்ரா போன்ற காய் கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வத ன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந் த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப் பழம், ஆப்பில் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக  வைத்திருக்கும்.

ராகி சாப்பிடுங்களேன்100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவ தன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

பேரிச்சை நல்லதுபேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ள து. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகி ன்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட் டமின் டி சத்து நிறைந்த உண வுகளை உட்கொள்வது அவ சியம். சூரிய ஒளியில் வைட் டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம்.

 கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேபோல் சோயபீன், கொ ள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதே போல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவி யல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்க ளில் இருந்து தப்பிக்கலாம்
 

மூச்சு இருக்கும் வரை....

மணக்கால் அய்யம்பேட்டை | 2:26 PM | Best Blogger Tips
 
        
மூச்சு விடுவதை நாம் மிகவும் சுலபமானதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மூச்சு விடுவதை நாம் உணர்வதே இல்லை. பொதுவாக, அன்றாட வேலைகளில் மூழ்கியிருக்கும் போதும், தூங்கிக் கொண்டிருக்கும் போதும் மூச்சு விடுகிறோம் என்ற நினைப்பே நமக்கு இருப்பதில்லை.

மூச்சு விடுவது ஒரு இச்சை செயல் அல்ல. இருப்பினும் மூச்சு விடுவதை எப்போதும் நாம் உணராத ஒரு முயற்சியற்ற செயலாக ஆக்குவது நம்முடைய மூச்சு மண்டலத்தின் பிரத்தியேக அமைப்புதான்.

மூச்சு மண்டலத்தின் பிரதான உறுப்பான நுரையீரல்கள் மார்பறைக்குள் மிகவும் பாதுகாப்பாக அமைந்திருக்கின்றன. நுரையீரல்கள் பிரத்தியேக குழாய் மூலம் மூக்குத் துவாரம் வழியாக வெளியுலகிற்கு திறக்கின்றன.

மார்பறை அதன் பிரத்தியேக அமைப்பின் காரணமாக ஒரு காற்று புக முடியாத அறை போல செயல்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மார்பறையின் அடியில் அமைந்துள்ள உதரவிதானம்தான். இந்த உதரவிதானம் கீழ் நோக்கி தள்ளப்படும்போது (அல்லது இழுக்கப்படும் போது) மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து மூக்குத் துவாரம் வழியாக வெளிக்காற்று உள்ளிழுக்கப்படுகிறது.

உதரவிதானம் மேல்நோக்கி அழுத்தப்படும்போது மார்பறையின் கொள்ளளவு சுருங்கி நுரையீரல்களில் நிரம்பியிருக்கும் காற்று வெளியேற்றப்படுகிறது. மார்பறையின் இது போன்ற அமைப்பு காரணமாக மூச்சுக் காற்றை உள்ளிழுப்பதற்கு மட்டும்தான் நாம் சிறிதளவு முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், மூச்சுக் காற்று வெளியேறுவதற்கு நமது முயற்சி தேவையில்லை.

இதனால்தான் மூச்சு விடுவது நமக்கு மிகவும் சுபலபமானதாகத் தோன்றுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் மூச்சு விடுவதை உணர்வதே இல்லை. ஆனால் ஏதாவது மூச்சு மண்டல நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்குத்தான் தெரியும் மூச்சு விடுவது எவ்வளவு கஷ்டமானதாக இருக்க முடியும் என்று.

சாதாரண தடுமம் கூட நம்மை 24 மணி நேரமும் மூச்சு விடுவதை உணரச் செய்து விடும். சில சமயங்களில் கெட்டியான சளியினால் மூக்கு நன்றாக அடைத்துக் கொண்டு, நாம் எவ்வளவு முயன்றாலும், மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாகி விடும்.

இந்த நிலையில், ஆஸ்துமா போன்ற கடுமையான மூச்சு மண்டல நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் கதி பற்றி சொல்லவே வேண்டாம். நோய் தாக்குதலின் போது, மூச்சு விடுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சியும், அந்த முயற்சியின் காரணமான சிரமத்தால் அவர்கள் துடிக்கும் துடிப்பும் மிகவும் பரிதாபமானதாக இருக்கும்.

பொதுவாக ஆஸ்துமா, மூச்சுக் குழாய் வீக்கம், நுரையீரல் நுண்ணறை வீக்கம் போன்ற மூச்சு மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், மாரடைப்பு நோயாளிகளும், விபத்து காரணமாக மார்பறையில் ஓட்டை ஏற்பட்டவர்கள் அல்லது வேறு மூச்சு மண்டல பாதிப்பு ஏற்பட்டவர்களும் மூச்சு விடுவது எவ்வளவு கஷ்டமானதாக இருக்க முடியும் என்பதை நன்கு அறிவர்.

இவர்களோடு, உரிய காலத்திற்கு முன்னர் பிறந்த குழந்தைகளும், நுரையீரல் கட்டி, நுரையீரல் புற்றுநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், எயிட்ஸ் நோயாளிகளும் மூச்சு விடுவதற்கு மேற்கொள்ளும் முயற்சி காரணமான சிரமத்தால் அவதிப்படுவதை நாம் காணலாம்.

ஆக்சிஜன் தேவை

நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. குளுக்கோஸ் பிரத்தியேக முறையில் ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும்போது வெளிப்படும் ஆற்றலைத்தான் செல்கள் அவற்றின் இயக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றன. இதுபோல, நமது உடல் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது. ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கின்றது?

உடலின் இந்த ஆக்சிஜன் தேவைக்கு வெளிக்காற்றில் உள்ள ஆக்சிஜனைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். வெளிக்காற்று மூக்குத் துவாரங்களின் வழியாக புகுந்து மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களை அடைந்து அங்குள்ள எண்ணற்ற நுண்ணறைகளை நிரப்புகின்றது. அந்த நுண்ணறைகளின் சுவர்களில் இரத்தக் குழாய்கள் பின்னிக் கிடக்கின்றன.

அந்த இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தில் மிதந்து கொண்டிருக்கும் இரத்த சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபின் காற்றிலுள்ள ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறது. பின்னர், இந்த ஹீமோகுளோபின் இரத்த ஓட்டத்தின் மூலம் உடல் செல்கள் அனைத்துக்கும் தேவையான ஆக்சிஜனைக் கொண்டு கொடுக்கிறது.

இதுபோல, செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குவது மட்டும் மூச்சு மண்டலத்தின் வேலை இல்லை.

அதோடு, வளர்சிதை மாற்றச் செயல்களின் போது ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவது, மூச்சுக் காற்றின் வழியாக உடலுக்குள் புக முயலும் நோய்க் கிருமிகளை வடிகட்டித் தடுத்து நிறுத்துவது, நாம் பேசும்போது ஒலியை எழுப்புவதற்குத் தேவையான காற்றை வழங்குவது போன்ற வேலைகளையும் மூச்சு மண்டலம் கவனித்துக்கொள்கிறது.

நமது மூச்சு மண்டல உறுப்புகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக நீடிக்கக்கூடிய வகையில்தான் உருவாகியுள்ளன. இருப்பினும், பல்வேறு காரணிகளாலும், கோளாறுகளாலும் அவற்றின் செயல்பாடு பலவகைகளில் பாதிக்கப்படுகிறது. முக்கியமாக, காற்றில் உள்ள மாசுகளும், புகை பிடிப்பதும், நுரையீரலைக் கடுமையாக பாதிக்கின்றன. வேறு சில கோளாறுகளாலும் நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

நமது மூச்சு மண்டல உறுப்புகளை முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கும் இது போன்ற கோளாறுகள் அல்லது நோய்களில் சில தற்காலிகமானவை. அவை பெரிய அளவிலான கேடு அல்லது தொந்தரவு எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், மற்றவை உயிருக்கே இறுதிகட்டக் கூடிய அளவிற்கு மிகவும் ஆபத்தானவை.

பொதுவாக, மூச்சு விடுவதை நாம் அதிக அளவில் உணரத் தொடங்கி விட்டாலே அல்லது மூச்சு விடுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டியதிருப்பது போலத் தோன்றினாலே நமது மூச்சு மண்டலம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

எப்போதாவது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் அதற்கான காரணம் அதிகம் கவலைப்பட வேண்டியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீடித்த மூச்சுக் கோளாறுகளை நாம் அதுபோல அலட்சியப்படுத்த முடியாது. அதேபோல, காறி உமிழ்வதில் இரத்தம் காணப்பட்டாலோ அல்லது நீடித்த இருமல் இருந்தாலோ நாம் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நம்முடைய நுரையீரல்களை நாம் நல்ல முறையில் கவனித்துக் கொண்டால் அவை நம்முடைய ஆரோக்கியத்தை சிறந்த முறையில் கவனித்துக்கொள்ளும்.

thanks to retham

காலை உணவைத் தவிர்க்காதீர்! அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:25 PM | Best Blogger Tips
 
        

பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.காபி, டீ குறையுங்கள்!காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.உடற்பயிற்சிஅலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

     களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!

காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்

வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்

டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!


பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!

காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்

வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்

டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!
 

உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:25 PM | Best Blogger Tips
 
        

உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1. உடற்பயிற்சி:
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:
“அப்படித்தான் செய்கிறேன்” என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!

3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:
“நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்” என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4. தண்ணீர் தண்ணீர்:
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5. உட்கொள்ளும் அளவு:
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6. ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.

7. “நான் குண்டு” என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.

இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!

வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:24 PM | Best Blogger Tips
 
    
    வயதாகி விட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம்.

ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம்.

* இன்றைய அவசர மார்டன் வாழ்க்கை முறையில் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் உள்ள பிரச்சனை தான் நரை முடி.

ஏனெனில் அவர்கள் நிறைய டென்சன், மனஅழுத்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தான் விரைவிலேயே நரை முடி வருகிறது.

உங்களுக்கு தெரியுமா? வயதானவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், டென்சனுடன இருப்பதால் தான், அவர்களுக்கு நரை முடி ஏற்படுகிறது.

ஆகவே அத்தகைய டென்சனை சிறுவயதிலேயே வந்தால், நரை முடியும் வந்துவிடும். எனவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்.

* தற்போதைய ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும்.

* நரை முடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வரும். அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது வருகிறது.

* கூந்தல் வெள்ளையாவதற்கு உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் காப்பர் தான் உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது.

ஆகவே இத்தகைய சத்து குறைபாட்டினால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து வெள்ளை முடி ஏற்படுகிறது.

மேலும் இந்த காப்பர் சத்து கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. அதிலும் நண்டில் அதிகம் உள்ளது. சைவ உணவு என்றால் எலுமிச்சை மற்றும் காளானில் இந்த சத்து உள்ளது.

* சிலசமயங்களில் எந்த காரணத்தினால் வெள்ளை முடி வருகிறது என்று சொல்ல முடியவில்லை என்று இருப்பவர்கள் அதனை நீக்க ஒரு இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ளலாம்.

அது பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்கு அரைத்து, தேங்காய் எண்ணெயில் ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் அதனை கூந்தலுக்கு தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கருமையான கூந்தல் வெள்ளையாவதை தடுக்கலாம்.


thanks reetham

இயற்கையாக பித்தப்பை கற்களை தடுப்பது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:23 PM | Best Blogger Tips
 
        
பித்தப்பை கற்கள் என்பது சிறிய கூழாங்கல் வடிவில் பித்தப்பையில் படியக் கூடியவை ஆகும். இந்த நிகழ்வு ஏற்படுவதற்கு பல வருடங்கள் ஆகின்றது. இந்த பித்தப்பையானது நாம் உண்ணும் உணவை செரிக்க பெரிதும் உதவுகிறது. இவ்வாறு செரிமானத்திற்கு உதவும் பித்தப்பையிலிருந்து பித்த நீர் சரியாக வெளியேறாமல் இருந்தால், அவை நீண்ட நாட்கள் பித்தப்பையில் தங்கி கற்களை உண்டாக்கும். அந்த கற்கள் பித்தப்பையில் இருந்தால், அதற்காக அறிகுறியே தெரியாது. ஆனால், 10 சதவீத பித்தக்கற்கள், பித்தப்பை அல்லது பித்த நாளங்களில் தடையை ஏற்படுத்திவிடும். இவ்வாறு தடை ஏற்பட்டால், வயிற்று வலி, மஞ்சள் காமாலை, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறியின் மூலம் அறியலாம்.

இத்தகைய அறிகுறி தெரிந்தால், உடனே அதை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது அவசியமாகும். நிறைய பேரின் பித்தப்பையில் உள்ள பித்தக்கற்களை, வயிற்றை பரிசோதிக்க உதவும் அல்ட்ராசவுண்ட் மூலமாகவும் கண்டுபிடிக்கலாம். எனவே பித்தக்கற்கள் இருப்பது தெரிய வந்தால், அப்போது என்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? அவற்றை இயற்கை முறையில் தடுக்க முடியுமா? என்பதற்கான பதில் இதோ!!!

பித்தப்பைக் கற்களை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:


1. இறைச்சியால் செய்யப்படும் உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அத்தகைய முழுமையான கொழுப்பு கொண்ட இறைச்சி, வெண்ணெய் மற்றும் பால் போன்ற பொருட்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தூண்டி, பித்தப்பை பாதிப்பை ஆரம்பித்து வைக்கும்.

2. கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணை நிறைந்த அல்லது வறுத்த உணவுகளை பித்தக்கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த உணவு பொருட்கள் பித்தப்பையை கடினமான வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. பின் ஒரு நாள் திடீரென்று, அந்த கற்கள் பித்தநீர்பைக்கு தடையை ஏற்படுத்தலாம்.

3. கனோலா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய்கள், உண்மையில் பித்தப்பைக் கற்களை தடுப்பதில் திறன் மிக்கவை. அதுமட்டுமின்றி, நட்ஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.

4. குளிர்ந்த நீரில் கிடைக்கும் மீன் வகைகளான டூனா, கானாங்கெளுத்தி மற்றும் சாலமன் வகைகளை சாப்பிடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா-3, பித்தப்பையின் செயல்பாட்டை அதிகரித்து, பித்தக்கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.
5. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உயர் கிளைசீமிக் கார்போஹைட்ரேட் உணவு பொருட்களை தவிர்க்கவும். உருளைக்கிழங்கு, அரிசி, பாஸ்தா மற்றும் ரொட்டி உணவுகள், உடலினுள் சென்று நமது உடலால் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தாலும், அவை பித்தப்பை கற்களை உருவாக்கும்.
 
6. ஒவ்வொரு நாளும் ஒரு கப் காப்பி குடித்தால், பித்தப்பையில் உள்ள கொழுப்பின் அளவானது குறைத்து, பித்தக்கற்களை தடுத்துவிடும்.

7. காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். இதனால் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் மூலமும் தெரிய வந்துள்ளது.

8. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களான தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைத்து, இயற்கையாக பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும்.

நினைவில் கொள்ள வேண்டியவை…


* உடலில் பித்தக்கற்கள் இருந்து, அதனால் எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றால், அப்போது எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டாம். அந்த நேரம், உணவுகளில் கவனத்தை செலுத்தினாலே அவை கரைந்துவிடும்.

* அதிக பருமன் அல்லது மிக வேகமாக எடை குறைவது போன்றவை பித்தப்பைக் கற்களோடு தொடர்புடையவை. ஆகவே உடல் எடையை குறைக்கும் போது படிப்படியாக மெதுவாக குறைத்தால், இயற்கையாகவே பித்தப்பைக் கற்களை தடுக்கலாம்.

thanks reetham