கிர்ணிப்பழம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:28 | Best Blogger Tips


என்ன சத்துக்கள் உள்ளன?

வைட்டமின் "A", "B" மற்றும் பொட்டாசியமும் உள்ளது.

எப்படி சாப்பிடலாம்?

இதை ஜூஸாகப் பருகலாம். அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம். இல்லையென்றால் இதன் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது சர்க்கரையைத் தூவி அப்படியே சாப்பிடலாம். கிர்ணிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் “அக்கி அம்மை’ நோயைத் தவர்க்கலாம்.

கிர்ணி சாலட் செய்முறை:

தேவையானவை :

கிர்ணிப்பழம் - ஒன்று
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி சாறு - 1/2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை:

• தோலை நன்றாகச் சீவி, விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
• இஞ்சியை கழுவி தோல் சீவி சாறு எடுத்து கொள்ளவும்.
• கிர்ணிப்பழ துண்டுகளுடன், இஞ்சி சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
• கோடைக்காலத்திற்கு ஏற்றது இந்த குளிர்ச்சியான கிர்ணிப்பழ சாலட்.

கிர்ணிப்பழம் சரும அழகையும் மேம்படுத்துகிறது.

1) இளமையாக இருக்க - பால் பவுடர், கிர்ணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் முகத்தை கழுவுங்கள். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிப்பதை காணலாம்.

2) முகம் பொலிவாக - கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து அதை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.

3) கால் பாதங்களுக்கு - கடுகு எண்ணெயுடன், கிர்ணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் பஞ்சு போல் மிருதுவாகும்