சீரான மாதவிடாய் சுழற்சி இல்லையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க... மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் பிரண்டை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:30 PM | Best Blogger Tips

பொதுவாக இறுதி மாதவிடாயானது 45-55 வயதுள்ள பெண்களுக்குத் தான் ஏற்படும். இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம், பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன்களின் உற்பத்தியானது குறைந்து, இனப்பெருக்க மண்டலமானது மாதவிடாய் சுழற்சியை குறைத்துவிடும். இவ்வாறு ஹார்மோன்களில் மாற்றம் உண்டாவதால், மனதில் அழுத்தம், உறவில் ஈடுபாடின்மை, சோர்வு, தூக்கமின்மை, தலைவலி போன்றவை ஏற்படும்.

ஆனால் அத்தகைய மாதவிடாய் சுழற்சியானது இளம் வயதிலயே சரியாகவும், சீராகவும் நடைபெறாவிட்டால், பின் அது பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது பிரச்சனையை உண்டாக்கும். எனவே இத்தகைய பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட வேண்டும். இதற்காக மருந்து மாத்திரைகள் போன்றவற்றை மேற்கொள்வதை விட, இயற்கை முறைகளைப் பின்பற்றி சரிசெய்து விடலாம்.
 

 

பொதுவாக இந்த பிரச்சனை இளம் வயதில் ஏற்படுவதற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால், மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம். அதுமட்டுமின்றி வேறு சில போதிய சத்துக்கள் உடலில் இல்லாததும் மற்றொரு காரணம். இப்போது அந்த மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதற்கு எந்த மாதிரியான உணவுகளை உண்டால், சீராக்கலாம் என்பதைப் பார்ப்போமா!!!


மீன்கள்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இதனை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், இதய நோய் ஏற்படுவதை தடுப்பதோடு, மார்பக புற்றுநோய் உண்டாவதையும் தடுக்கலாம். மேலும் இந்த மீனை பெண்கள் உணவில் அதிகம் சேர்த்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். குறிப்பாக சால்மன், ஹெர்ரிங் மற்றும் சூரை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

பால்

பாலில் அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. ஆகவே பெண்கள் தினமும் பால் குடிப்பது நல்லது.

தயிர்

எலும்புகளில் நோய்கள் எதுவும் தாக்காமல் ஆரோக்கியமாகவும் வலுவோடும் இருப்பதற்கு, பால் பொருட்களில் ஒன்றான தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறும்.

 
* பிரண்டைச் செடியின் இலைகளும், இளம் தண்டுத் பகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

* வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மாதவிடாய் வயிற்றுவலி மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில்- பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.


thanks to retham