முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:14 PM | Best Blogger Tips
 


தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி.
இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

ஊட்டச்சத்து குறைவு


நமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும்.
அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும்.

பரம்பரை


ஒருவேளை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதுகு வலி இருப்பின், அது பரம்பரையாக தொற்றிக் கொண்டிருக்கும். இவற்றால் கூட காரணமின்றி வலி ஏற்படும்.
ஆகவே அப்போது அந்த வலியைப் போக்குவதற்கு சரியான நிலையில் உட்கார்ந்து வந்தால், சரிசெய்யலாம்.

அதிக எடை


நாம் சரியான நிலையில் எப்போதும் இல்லாததற்கு காரணம் உடல் எடையும் தான்.
ஏனெனில் இதனால் அவர்களது வயிற்றில் அதிகமான அளவில் கொழுப்புகள் சேர்ந்து, தொப்பையாக வருவதோடு அந்த தொப்பை நேராக உட்காரவிடாமல், முன்புறமாக இழுக்கிறது.
இதனால் முதுகு வளைந்து கூன் உண்டாகி இறுதியில் வலியை அதிகமாக்குகிறது.

பழக்கம்


சில நேரங்களில் நடக்கும் நிலை கூட, முதுகு வலியை ஏற்படுத்தும்.
உதாரணமாக நடக்கும் போது தலையை குனிந்து கொண்டு நடக்கும் போது, தன்னை அறியாமலே தோள்பட்டையும் வளையும் நிலை ஏற்படுகிறது.
மேலும் ஏதாவது ஒரு எடையுள்ள பொருளை ஒரே பக்கத்தில் தூக்கும் போது அல்லது படுக்கும் போது சரியான நிலையில் படுக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் கூட முதுகு வலி வருதற்கு காரணமாகும்.

கணனி வேலை


முதுகு வலி பெரும்பாலான கணனி முன் வேலை பார்ப்பவர்களுக்கே ஏற்படுகிறது.
ஏனெனில் கணனி முன்பு வேலை செய்யும் போது கழுத்து மற்றும் தலை சற்று முன்னரும், தோள்பட்டை சற்று வளைந்தும் தான் இருக்கும்.
இதனால் முதுகை நேராக வைக்காமல் நீண்ட நேரம் வளைந்தே வைத்திருப்பதால் அந்த நிலை பெரும் வலியை உண்டாக்கும்.

ஃபேஷன்


ஃபேஷன் என்ற பெயரில் வந்துள்ள உடைகள் மற்றும் செருப்புகள் கூட இந்த வகையான வலிக்கு முக்கிய காரணங்களாகும்.
அதிலும் பெண்களுக்கு பென்சில் ஹீல்ஸ், ஹை ஹீல்ஸ், டைட்டான ஆடைகள் என்றும், ஆண்களுக்கு என்றால் நல்ல எடையுள்ள பூட்ஸ், பெல்ட் என்றும் வந்து அவர்களின் முதுகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் தாங்க முடியாத வலியை கொடுக்கிறது.