கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:18 PM | Best Blogger Tips



பொது மக்களை நீண்டகாலமாக அச்சுறுத்தி வரும் கொசுத்தொல்லைக்கு ஒரு புதிய தீர்வை முன்வைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி.

கொசுவை விரட்ட ரசாயன கொசு விரட்டிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், தற்போதுள்ள கொசுக்கள் அவற்றை சமாளித்து வாழ பழகி விட்டன.

ரசாயன கொசு விரட்டிகளை எதிர்கொள்ளத் தேவையான திறனைப் பெற்று விட்டன கொசுக்கள். இது போன்ற கொசு விரட்டிகளுக்கு மாற்றாக நேற்று அறிவிக்கப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில் நீர் வழித்தட ஓரங்களிலும் வீடுகள் தோறும் மருத்துவ குணம் வாய்ந்த நொச்சிச் செடிகளை வளர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மகத்துவம் மிக்க நொச்சிச் செடி: இந்த நொச்சி என்பது ஒன்றும் புதிய செடி வகை அல்ல. சங்க காலம் தொட்டு தமிழரின் வாழ்வில் ஒன்றாக கலந்தது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று- என்கிறது திருக்குறள். காலத்தின் வேகத்தில் நகரத்து மக்களால் மறக்கப்பட்டிருக்கும் இந்த நொச்சியின் மகத்துவம் சொல்லில் அடங்காதது.


காலத்திற்கேற்ற மாற்றம்: இந்த பாரம்பரிய மருத்துவ அறிவு நவீன காலத்திற்கு ஏற்ப இயைந்து பூச்சிக்கட்டுப்பாட்டு உபகரணங்களாகவும் வெளிவர தொடங்கியிருக்கிறது. சங்க காலம் தொட்டு தமிழ் இலக்கியங்களில் இடம் பிடித்து வரும் நொச்சி இனி தமிழர் இல்லங்களிலும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.




நன்றி:- புதிய தலைமுறை.. மாலை மலர்..