பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் பற்றி ...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 AM | Best Blogger Tips

May be an image of 3 people and text 

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு அவர்களுடைய வழக்கு ஒன்று உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தது..
 
அதை ஒரு வழக்கறிஞராக நின்று முடித்துக் கொடுத்தவர் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள்..
 
அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறையா பணத்தை கொண்டு போய் பாபாசாகேப்புக்கு கொடுத்திருக்கிறார் ஜி.டி.நாயுடு..
 
பாபாசாகேப் சொன்னாராம் “இந்தப் பணம் எனக்கு வேண்டாம்; அதற்கு பதிலாக நான் எப்போதும் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயணச்செலவையும்; அங்கே நான் தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறார்..
 
ஜி.டி.நாயுடு-வும் மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்..
 
பாபாசாகேப் டெல்லியிலிருந்து வருவதாக இருந்தால் தமிழகத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரூம் புக் பண்ணுவாராம் ஜி.டி.நாயுடு..
 
'பாபாசாகேப் என் விருந்தாளி, அத்தோடு அவரை வரவேற்று விருந்து உபசரிப்பதில் நாம் பெருமை கொள்கிறேன். அவரை நான் சிறப்பாக கவனிக்க வேண்டும்' என்று அருகே இருந்தே பார்த்துக்கொள்வாராம்..
 
ஒரு முறை நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தவரை ஹிந்து பத்திரிக்கை ரிப்போர்ட்டர் பேட்டி எடுக்க வந்திருக்கிறார்..
பேட்டி எடுக்கும் முன்னரே கேட்டிருக்கிறார்..
“டாக்டர் அம்பேத்கர், காந்திஜி அவர்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார், கதர் ஆடை உடுத்துகிறார், மேல் ஆடையே உடுத்துவதில்லை.
 
ஆனால் நீங்களோ ஏன் இவ்ளோ ஆடம்பரமான இடத்தில் தங்கியிருக்கிறீர்கள்; அத்தோடு எப்போதுமே கோட் சூட் போட்டு வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே ஏன்?"
பாபாசாகேப் சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம்..
 
"காந்தி அவர்கள் பல்வேறு வகையில் உளவியலாக பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியலாக தாக்குகிறார், காந்தியே சட்டை இல்லாமல் இருக்கிறார், நாம சட்டை போடாவிட்டால் என்ன என்று ஏற்கனவே சட்டை போடாத எம் மக்கள் அதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்; அப்புறம் எப்படி அவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்..
 
நான் கோட் சூட் போடுகிறேன், விலையுயர்ந்த ’டை’ மட்டும் ’சூ’ போடுகிறேன். மிகவும் ஆடம்பரமான இடத்திலிருந்து கொண்டு எம்மக்களை இங்கே வரச்சொல்லி சந்திக்கிறேன்;
 
என்னை இந்த இடத்தில் பார்க்க வருகிறவன், நல்ல உடை உடுத்த முயல்வான், அதற்காக சம்பாதிக்க உளவியலாக அவனின் மனம் தயாராகும்; 
 
உழைப்பான்; சட்டையே போடாமல் திரிந்தவன் புத்தாடை உடுத்துவான் என்றிருக்கிறார். வெற்று உடம்பிலிருந்து நல்ல உடைக்கு மாறுவான்…"
 
வாயடைத்துப் போய் நின்றிருக்கிறார் அந்த ஹிந்து பத்திரிக்கை ரிப்போர்ட்டர்..
 
படம்: கோவை ஜிடி நாயுடு இல்லத்தில் அண்ணல்..

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

இந்தியாவின் அழகான ரயில் பாதை 🌴🌊

மணக்கால் அய்யம்பேட்டை | 11:48 AM | Best Blogger Tips

 May be an image of train, railway and text

🚆✨ கோவா – மும்பை ரயில் பயணம் : இந்தியாவின் அழகான ரயில் பாதை 🌴🌊
 
இந்திய ரயில்வேயின் மிக அழகான பாதைகளில் ஒன்று கோவா – மும்பை (கொங்கண் ரயில் பாதை)🥰
.
பகல் நேரத்தில் இந்த பாதையில் பயணம் செய்தால், இயற்கையின் உண்மையான அழகை முழுமையாக ரசிக்க முடியும் 🥰
 
• இந்தப் பாதையில் மொத்தம் 2000க்கும் மேற்பட்ட பாலங்கள், 90க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. இதில் செல்லும் போது லேசாக மூச்சு விட சிரமம் வரும் (ஒரு சில இடங்களில்)
 
தூத்சாகர் அருவி (Dudhsagar Falls) மாதிரி பெரிய நீர்வீழ்ச்சி மட்டுமல்ல, மழைக்காலத்தில் நூற்றுக்கணக்கான சிறிய அருவிகள் கூட கண்ணுக்கு படும்.
 
•ரயில் சில இடங்களில் அரேபியக் கடல் (Arabian Sea) கரையை ஒட்டி பயணம் செய்கிறது 🌊
 
• இந்தப் பாதை 1998-இல் தான் முழுமையாக திறக்கப்பட்டது. அதற்கு முன்னால் கோவா – மும்பை ரயில் பயணம் சாத்தியமில்லை. 🚧
 
• பாலம் கடக்கும் போது → கீழே ஆறு, மேலே மலை + பசுமை 🔥 உங்கள் மனதில் இன்பம் ஆறாய் ஓடும் 🥰
 
• மழைக்காலத்தில் → முழு பாதையும் பச்சைப் போர்வை போர்த்திய மாதிரி இருக்கும்.
 
10104 Mandovi Express தினமும் காலை 8.30 மணிக்கு madgaon (மட்கான்) ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்…
 
இதில் பயணம் செய்தால் அருமையாக இருக்கும் 🥰

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷

 

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மனைவியை நேசித்துப்பார்❤️💕💜💖💖❤️💜💖💕

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips

 கானல் நீர் (சிறுகதை) - ✍ ருக்மணி வெங்கட்ராமன் - sahanamag.com

எழுபத்தைந்து வயதில் ஆதரவு
இன்றி நிக்குது மனசு...
 
நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
 Pin by Harshna Sharma on Owns in 2025 | Village scene drawing ...
என் கோபத்தை தள்ளுபடி செய்து
ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
 ab7dd6090a77475441eb4e51b15b41bf.jpg
அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்..
 Anant Patil (patilanant88) – Profile | Pinterest
ஒரு நாளாவது நான் சமையல் செய்து
அவளுக்கு ஊட்டி இருக்கலாம்..
 
ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து
துவைத்து இருக்கலாம்..
 உங்கள் குடும்பத்தில் வீசுவது ...
ஒரு நாளாவது TV யையும்,
Mobil லையும் அணைத்துவிட்டு,
 
அவளை கொஞ்சி இருக்கலாம்..
 
ஒரு நாளாவது வேலை தளத்தின்
கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...
 
ஒரு நாளாவது- என் விடுமுறை நாட்களில் - அவளை சினிமாவுக்கு அழைத்து சென்று இருக்கலாம்..
 https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSwL3c4hOZzGgT_btnNB7PCbMQfdWH0W6Rrgg&s
ஊர் ஊராய் சுற்றி அவளை
உற்சாகப்படுத்தி இருக்கலாம்...
 
அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து
இருக்கலாம்.
 
ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து 
 
இருக்கலாம்....
 
ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...
 கணவனும், மனைவியும் சந்தோஷமாக ...
நீ சாப்பிட்டியா என்று அவளை
ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...
 
நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு
என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்..
 
அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...
 Husband And Wife Silhouette Images – Browse 65,026 Stock Photos, Vectors,  and Video | Adobe Stock
அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை கவனித்து இருக்கலாம்..
 
அவள் நோயில் விழுந்த போது
நான் கடன் பட்டேனும் அவளை
காப்பாற்றி இருக்கலாம்...
 
என் தாயே! என் தாரமே ! − நீ
என்னுடன் இருந்த போது
நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...
 
நீ என்னை விட்டு போனதும்
நான் பலமுறை கால் தடுக்கி
விழுகிறேன்...
 32,000+ Romantic Couple Silhouette Stock Photos, Pictures & Royalty-Free  Images - iStock | Elegant couple
என்னை தூக்கி விடவும்
மூத்தவனுக்கு நேரம் இல்லை...
 South indian family painting...........
தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கும்
சினம் வருது...
 
என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும் ...
 
நான் தவறுகள் இழைத்ததற்கு
என்னை நீ மன்னித்து விடு...
 
ஒரு முழப் பூவாவது ஒரு நாளாவது
உனக்கு வாங்கி தராதவன் நான்...
 
மூச்சு இழந்த - உன்
புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
 
மனைவியே! 
 
என்னை மன்னித்து விடு..
 
என்னுடைய இடத்தில் இருந்து உன்னை பார்க்கையில் கோபங்கள் எனக்குள் அதிகம்.. 
 Couple Lovers Silhouette Sunset Stock Footage Video (100% Royalty-free)  23476960 | Shutterstock
ஆனால் உன்னுடைய இடத்தில் நான் சேரும் போது தான் எவ்வளவு வலியில் எனக்கு புன்னகை செய்தாய்.. 
 
மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு. நான் உன்னை கொண்டாட வேண்டும்..
 
எழுபத்தைந்து வயதில்.....
 
இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....
உங்கள் மனைவியை தினமும்
நீங்கள் நேசியுங்கள்!!!
 
வாழ்க்கை வசந்தமாகும்

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 
 

 
 

1800ல்.. OLD TANJORE ... பழைய டாஞ்சூர்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:26 AM | Best Blogger Tips

 May be a black-and-white image of the Tiber River and the Arno River

1800ல்.. OLD TANJORE ... பழைய டாஞ்சூர்.. தஞ்சாவூர் கோட்டை கீழக்கு வாசல்... 
 
தஞ்சாவூர் கோட்டை, அகழி.. கிழக்கு வாசல் .... 
 
கீழவாசல் இப்படிதான் இருந்தது 1800ல் ..
 
இந்த உண்மை ஓவியம் வெள்ளைக்கார ஓவியர் சாமுவேல் டேவிஸ் அவர்களால் 1777 - 1808 காலகட்டத்தில் இந்த தஞ்சையின் கிழக்கு வாயிலின் ஓவியம் வரையப்பட்டது. கூர்ந்து கவனித்தால்... இப்போதுள்ள பீரங்கி மேடு கோட்டையினுள் தெளிவாக தெரிகின்றது.
 
இப்போதுள்ள ஈஸ்ட் போலீஸ் ஸ்டேஷன் இடத்தில் இருந்து பார்க்கும் போது ... அந்த காலத்தில் இப்படி தான் இருந்தது.
 
இப்போதுள்ள கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் தான் தஞ்சையில் இரண்டாவது காவல் நிலையம் .. 
 
முதன் முதலாக வெள்ளைக்காரர்களால் இப்போதுள்ள தாலுக்கா போலீஸ் ஸ்டேஷன் தான் முதல் ஸ்டேஷன். போலீஸ் நிர்வாக அமைப்பு 1859ல் ஆரம்பிக்க பட்ட பின் உருவானது ... அந்த கால கட்டத்தில் இப்போதுள்ள கீழவாசல் போலீஸ் நிலையமும் உருவாக்கப்பட்டது. "தஞ்சாவூர் நாடு" (தஞ்சை கோட்டை பகுதி நீங்கலாக) 1799ஆம் வாக்கில் ஆங்கிலேயர் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு "டாஞ்சூர் டிஸ்ரிக்ட்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
 
அதாவது கோட்டை சுவர் உள்ளே மராட்டா ராஜியம்.. கோட்டை சுவர், அகழி வெளியே வெள்ளையர்கள் நாடு !! 
 
அதன் பிறகு 1855ஆம் ஆண்டு முதல் கோட்டை பகுதியும் ஆங்கிலேயர் வசம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது ..
 
கீழவாசல்: கிழக்கு வாசல் கோட்டை நுழைவு வாயில் .. மற்றும் கோட்டை கதவு .. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது ..
 
நாயக்க மன்னர்கள் தான் இப்போது உள்ள அரண்மனை, கோட்டை, மற்றும் அகழி, அமைப்புகளை 1535 முதல் 1560 வரை ஏற்படுத்தினார்கள் .
 
பழைய சோழர் கால அரண்மனை வடவாற்றின் தென் கரையில், சீனிவாசபுரம் மற்றும் மேலவெளி பகுதிகளில் இருந்தது. அது 1279 ஆம் ஆண்டில் பாண்டிய மன்னரால் எரித்து அழிக்கப்பட்டது என்பதினை வரலாற்று அறிஞர்கள் /ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். சோழர் கால சிறு அரண்மனை, "பொன்னியின் செல்வன்" நூலில் கல்கியின் கற்பனையில் வரும் அரண்மனை போன்று இருந்திருக்க கூடும்.
 
இரண்டு வகையான கோட்டைசுற்று சுவர்கள் தஞ்சையில் நாயக்கர்களால் கட்டப்பட்டன .. ஒன்று.. நான்கு வீதிகளையும் உள்ளடக்கிய பெரிய கோட்டை ... இரண்டாவது ... பெரியகோவிலையும், சிவகங்கை தோட்டத்தையும், குளத்தையும் உள்ளடக்கிய சிறிய கோட்டை. இவை இரண்டும் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. சிறிய கோட்டை தஞ்சையின் பெரிய கோட்டையை விட பழமையானது. சீனிவாசபுரத்திற்கு அருகே இடிந்து விழுந்து கிடந்த, அழிக்கப்பட்ட சோழர் அரண்மனையின் கற்களை கொண்டு, கோட்டை கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. 
 
இவைகளை தஞ்சையின் பிரபல ஆராய்ச்சியாளரும் முன்னாள் சரஸ்வதி மஹால் சீனியர் லைப்ரரியன் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் போதிய ஆதாரங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
 
கோட்டை உருவாக்கப்பட்டபோது இரண்டு பெரிய நுழை வாயில்கள் தான் இருந்தன .. இவைகள் அகழியின் மீது பால அமைப்புகளுடன் இருந்தன. ஒன்று ... பழைய ராஜாகாலத்து ரோடு... திருவாடி சாலை .. (இப்போதய ராஜ கோரி ரோடு) கோட்டையை வந்து அடையும் இடத்தில்.. 
 
வடக்குவாசல் .. ... மற்றும் மாரியம்மன் கோயில் பழைய ரோடு , விளார் ரோடு, நாஞ்சிகோட்டை ரோடு இணைக்கும் வகையில் கீழவாசல். தெற்கிலும் மேற்கிலும் இன்ஸ்பெக்ஷன் கதவு போன்ற மிக சிறிய வாயில்கள் .. இதற்கு அகழி பாலம் கிடையாது .
 
கீழவாசல் ... சிவகங்கை பூங்கா கோட்டை வளாகம் நுழைவு கோட்டை வாயில் போல இருந்தது. 1994ல் . வெளியூர் அதிகாரிகள் அதன் அருமை தெரியாமல் .. நகரை மேம்படுத்துவதாக நினைத்து ...அதனை இடித்து தள்ளி விட்டார்கள் ..
 
அதனை அப்படியே பாதுகாத்து .. இப்போது அங்கு அமைக்கப்பட்ட பெரிய ரௌண்டானாவில் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக வைத்து இருந்தால் ... அதன் வரலாறு பெருமை தஞ்சையின் இளையதலைமுறையினருக்கு தெரிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் ..இப்போது அந்த வாய்ப்பு இல்லாமல் போயிற்று .
 
**
Abdul Jaleel அவர்கள்: "..தஞ்சை "கீழவாசல் கேட் வாசலை இடிப்பது 1958வாக்கில் தொடங்கியது .. கோட்டை வாசல் மட்டும் விட்டு விட்டு சுவரை இடித்து... வெள்ளய்ப்பிள்ளயார் கோயில் பக்கம் இருந்து வரும் பேருந்துகளுக்கு வழி அமைக்கப்பட்டது ... அதன் பிறகு சிறிது சிறிதாக கோட்டை வாசலும் இடிக்கப்பட்டது ...
 
நான் அருகில்,அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் போது .... இந்தக்கோட்டை வாசலை மூன்றாண்டுகள்... தினமும் 4 முறை கடந்துசெல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது....
இன்றும் அந்த பாதையைக்கடந்து செல்லும்போது மனது கனக்கிறது..... "
 
 

🙏🌹 நன்றி             🌹🙏

 
 
(Picture: Painting of The East Gate at Tanjore (S. India). By Samuel Davis, between 1777 and 1808).
 

🙏🌹 நன்றி             🌹🙏

(தொகுப்பு : AYS பரிசுத்தம் அந்தோனிசாமி M.A., B.L.,. தஞ்சாவூர்
// S.P.Anthonisamy, Senior Advocate, Thanjavur)

 

எதிர்பார்பில்லாத தர்மமே

மணக்கால் அய்யம்பேட்டை | 11:23 AM | Best Blogger Tips

 No photo description available.

இரக்க குணமுள்ள பெண்மணி ஒருத்தி
தினந்தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச்சுவர் மேல் வைப்பாள்...🍃
 
அவ்வழியே திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
 
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.💐
 
ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
அந்த கூன் முதுகுகிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்.🍂
 
அவன் முனகியது, இதுதான்:
 
" நீ செஞ்ச பாவம் உன்னிடமே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்."🌷
 
தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
 
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
 
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழலைனாலும்,
 
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டலனாலும்;
 
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
 
ஏதோ,... "செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்;
 
செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.🌸
 
'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
 
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
 
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
 
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
 
மதில் மேல் வைக்கப் போனாள்....🌱
 
மனம் ஏனோ கலங்கியது;
 
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
 
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
 
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.☘️
 
வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
 
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
 
"நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும் ;
 
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
 
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.🌴
 
அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
 
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.🍁
 
வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.🌾
 
"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
 
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
 
கண் முழிச்சு பாத்தப்போ...
 
யாரோ ஒரு கூனமுதுகு கிழவர்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னார்.🎋
 
நான் சாப்பிட்டு முடிச்சிட்டு அவனுக்கு நன்றி சொன்னேன்.. அதுக்கு அவர் உன் நன்றி அந்த புண்ணியவதிக்கு போகட்டும் என்று யாரையோ சொன்னார் என்றான். 🥀
 
தினமும் இதை யாருக்காவது கொடுப்பேன். 
 
இன்றைக்கு உனக்கு வாய்த்திருக்கிறது என்று அவர் சொன்னார்மா.. என மகன் கூறினான். 🌺
 
இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது! என்றான்.. 🌼
 
இதைக் கேட்டதும், அந்தப் பெண்மணி பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!☘️
 
'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்.அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
 
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..🌴
 
"நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்
 
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது! உண்மைதான் ...💐
 
எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...💐💐💐
 
புரியும் போது வாழ யாரும் இருப்பதும் இல்லை....🌸🌸🌸
 
தெரியாமல் செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும், ஆனால்
தெரிந்து செய்த பாவம்,
 
ஏழ ஜென்மத்திற்கும், நம் தலைமுறைகளையும் தாக்கும் ..🍁🍁🍁
 
ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்வோம் 🌿
 
*வாழ்வில் சிறக்க, ஒரே வழி முகம் கோணாத*
 
*எதிர்பார்பில்லாத தர்மமே..* ஸ்ரீ கோபாலசாமி கோயில் 🙏

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷