ஆவணி ஞாயிறு சூரியன் வழிபாடு சிறப்பு ஏன் ?
கண் நோய்கள் குணமடையும் 







அரசு வேலை கிடைக்கும் 







அரசு தொல்லை நீங்கும்







ஸ்ரீ சிவசூரியநாராயணஸ்வாமியே திருவடிகள் சரணம் 







ஸ்ரீ சிவசூரியநாராயணஸ்வாமியே திருவடிகள் சரணம் 








ஸ்ரீ சிவசூரியநாராயணஸ்வாமியே திருவடிகள் சரணம் 









சூரிய காயத்ரி மந்திரம்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
சூரிய பகவான் மந்திரம்
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது மீள் பதிவு சென்ற வாரம் பதிவு மற்றும் சூரியன் போற்றி 108 பதிவு செய்துள்ளோம்
ஆவணி ஞாயிறு சூரியன் வழிபாடு விசேஷங்கள் என்ன ?
ஆவணி ஞாயிறு எப்போதுமே விசேஷம்! சூரிய நமஸ்காரம், சிவா, விஷ்ணு, பிரம்மா வழிபாடு!
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானையும் சிறப்பு : சுபமுகூர்த்த நாள், ஆவணி ஞாயிறு விரதம்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.மங்காத செல்வ கடாக்ஷம் கிடைக்கப் பெறுவீர்கள். ஸ்ரீ சிவசூரியநாராயணஸ்வாமியே திருவடிகள் சரணம் 








இன்று ஆவணி ஞாயிறு விரதம் !
சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க..
இன்று ஆவணி 16,
செப்டம்பர் 01-09-2024

சிறப்பு : ஆவணி ஞாயிறு விரதம்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். இன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது.
ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும்.
ஆவணி ஞாயிறன்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும்.
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆன்மீக அறிவுக்காகவும் தேகநலனுக்காகவும் சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்க்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். வைட்டமின் D க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது. சூரியனுக்காக விரதம் இருந்தால் சரும நோய் நீங்கும்.

தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரிய உதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!" என்று சொல்லி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.
ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

களத்திர தோஷம் நீங்கவும், இனிய திருமண வாழ்க்கை அமையவும் ஞாயிறன்று சூரியனை வணங்க சூரிய தோஷம் நீங்கும்.அரசு வேலை கிடைக்க ஆவணி ஞாயிறு விரதம் இருப்பது அவசியம்.

ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று புற்றுள்ள கோவிலில் பால் ஊற்றி விரதம் இருந்து வழிபடுங்கள்.
சூரிய காயத்ரி மந்திரம்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
சூரிய பகவான் மந்திரம்
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும் பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி
அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். சூரியனை தினமுமே வணங்கலாம். ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்!

நாராயணனின் அம்சமே சூரியன். அரசு வேலை வேண்டும் அரசில் உயர் பதவி வேண்டும். சிறந்த அரசியல்வாதிகளாக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஞாயிறுக்கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் இந்த மந்திரங்களை உச்சரித்து சூரியனை வணங்க நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஆவணி மாதம் மகத்தான மாதம். ஆவணி மாதத்துக்கு முந்தைய மாதம் ஆடி. பிந்தைய மாதம் புரட்டாசி. முந்தைய ஆடி மாதத்திலும் ஆவணிக்கு அடுத்த மாதமான புரட்டாசி மாதத்திலும் சுபகாரியங்கள் நடத்தமாட்டார்கள். மாறாக, இந்த இரண்டு மாதங்களிலும் வழிபாடுகள் வெகுவாக நடத்தப்படும்.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று போற்றுகிறோம். இந்த மாதத்தில், அம்மனுக்கு விழாக்கள், விசேஷங்கள் என அமர்க்களப்படும். அம்மனுக்கு திருவிழாக்கள் நடக்கும். கிராமத்தில் உள்ள பெண் தெய்வங்களுக்கு, குடும்ப சகிதமாகச் சென்று படையலிடுவார்கள். படையலிட்டு வேண்டிக்கொள்வார்கள்.
இதேபோல், புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். பெருமாளுக்கு உரிய மாதம்.
‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னாலும் புரட்டாசி மாதம் முழுவதுமே கோவிந்தராஜனை துதித்துப் போற்றி, வணங்கி வழிபடுவதற்கான மாதமாகவே சொல்கிறார்கள்.
புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளிலும் புதன் கிழமைகளிலும் பெருமாள் கோயில்களில், பக்தர்கள் தரிசனம் மும்மடங்கு இருக்கும். அசைவப் பிரியர்கள் பலரும் கூட, புரட்டாசி மாதத்தில் சைவம் மட்டுமே உண்பார்கள்.
சனிக்கிழமைகளில், ‘வெங்கட்ரமணா கோவிந்தா’ எனும் கோஷத்துடன், வீட்டுக்கு வீடு வந்து அரிசியைப் பெற்றுச் சென்று தங்கள் நேர்த்திகடனைச் செலுத்துவார்கள்.
கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழிக்கும் இந்த வழிபாடு, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் தான தருமங்களையும் வலியுறுத்துவதற்காகவே அமைக்கப்பட்டன என்று சொல்பவர்களும் உண்டு.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். நடுவேயுள்ள ஆவணி மாதம், எல்லா தெய்வங்களுக்குமான மாதம். விநாயகர், கிருஷ்ணர் என்று சைவ - வைணவ பாகுபாடுகள் இல்லாமல், சகல தெய்வங்களையும் வழிபடுகிற அற்புதமான மாதம்.
ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை ரொம்பவே மகத்துவமானது. ஞாயிற்றுக்கிழமையன்று, அதிகாலையில் எழுந்து, சூரிய நமஸ்காரம் செய்து சூரிய பகவானை நமஸ்கரித்து வேண்டிக்கொள்வது, அறிவையும் ஞானத்தையும் வளர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
இதேபோல், மூன்று தெய்வங்களான சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் வணங்கித் தொழுது பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களை வழங்கக் கூடியது. சிவனாரை வணங்கி வேண்டிக்கொண்டால், இல்லத்தில் தம்பதி இடையே ஒற்றுமை உண்டாகும்.
பெருமாளை வணங்கி வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம்.
படைப்புக் கடவுளான பிரம்மாவை வணங்கி வேண்டிக்கொண்டால், இந்த இப்பிறவியில் சகல சம்பத்துகளையும் வழங்கி அருளுவார் பிரம்மா. முதல் குரு பிரம்மாதானே. அதனால்தான் ‘குரு பிரம்மா குரு விஷ்ணு..’ என்று சொல்லி வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்த இப்பிறவியில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்கிற தீமைகளையும் பாவங்களையும் மன்னித்து அருளுகிறார் பிரம்மா.
எனவே, ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் முறையே பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களெல்லாம் அரங்கேறித் தருவார்கள்.
ஒளிக்கடவுள் சூரிய பகவானே திருவடிகள்
சரணம் 


ஒளிக்கடவுள் சூரிய பகவானே போற்றி போற்றி போற்றி 


சூரிய பகவானே போற்றி போற்றி போற்றி


சூரிய பகவானே போற்றி போற்றி போற்றி 


சூரிய பகவானே போற்றி போற்றி போற்றி 



நல்லதே நடக்கும் !சூரிய பகவானே போற்றி போற்றி போற்றி





















சூரியன் பெயர்கள்:
பரிதி
பாற்கரன்
ஆதித்தன்
பனிப்பகை
சுடர்
பதங்கன்
இருள்வலி
சவிதா
சூரன்
எல்
மார்த்தாண்டன்
என்றூழ்
அருணன்
ஆதவன்
மித்திரன்
ஆயிரஞ்சோதியுள்ளோன்
தரணி
செங்கதிரோன்
சண்டன்
தபனன்
ஒளி
சான்றோன்
அனலி
அரி
பானு
அலரி
அண்டயோனி
கனலி
விகர்த்தனன்
கதிரவன்
பகலோன்
வெய்யோன்
தினகரன்
பகல்
சோதி
திவாகரன்
அரியமா
இனன்
உதயன்
ஞாயிறு
எல்லை
கிரணமாலி
ஏழ்பரியோன்
வேந்தன்
விரிச்சிகன்
விரோசனன்
இரவி
விண்மணி
அருக்கன்
சூரிய வட்டம் = விசயம்
சூரிய கிரகணம் = கரம், தீவிரம்.
சூரியன் போற்றி 108
ஓம் அதிதி புத்ரனே போற்றி
ஓம் அளத்தற்கரியனே போற்றி
ஓம் அறுகுப்பிரியனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி
ஓம் ஆன்மாவே போற்றி
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
ஓம் இருள்நீக்கியே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உவமைப் பொருளே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் என்பானவனே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரித் தேரனே போற்றி
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓராழித்தேரனே போற்றி
ஓம் ஓய்விலானே போற்றி
ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி
ஓம் கதிரவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
ஓம் கர்ணன் தந்தையே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கண்ணில் காவலே போற்றி
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
ஓம் காசியபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்பவனே போற்றி
ஓம் காலைமாலைக் கனிவோனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் குந்திக்கருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமைப் பிரியனே போற்றி
ஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலக் காவலே போற்றி
ஓம் சனித் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சித் தேவனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சிம்மராசியதிபதியே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
ஓம் சுயம்பிரகாசனே போற்றி
ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி
ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
ஓம் செந்நிறக் குடையனே போற்றி
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சோழர் மூதாதையே போற்றி
ஓம் சௌரத் தலைவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் நடுவிருப்போனே போற்றி
ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி
ஓம் நலமேயளிப்பவனே போற்றி
ஓம் நளாயினிக்கருளியவனே போற்றி
ஓம் நான்முனித் தந்தையே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நீதித் தேவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பகற் காரணனே போற்றி
ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி
ஓம் பரஞ்சோதியே போற்றி
ஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றி
ஓம் பாலைநிலத் தேவனே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மயூரகவிக்கருளியவனே போற்றி
ஓம் முதல் கிரகமே போற்றி
ஓம் முக்கோணக் கோலனே போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி
ஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் விடியச் செய்பவனே போற்றி
ஓம் வலிவலத்தருள்பவனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சூரியநாராயணனே போற்றி
Devakottai Dolphin AR Ramanathan
🌹🙏
Ramesh


