அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:11 PM | Best Blogger Tips

 No photo description available.

*_அகத்தியரின் அபூர்வ மந்திரங்கள்_*
அகத்தியர் மந்திர வாள்
என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:
 அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 974 - ஸ்ரீ அகத்தியர்  கோவில் பாலராமபுரம், திருவனந்தபுரம் - திருநட்சத்திர விழா!
(1) "நசி, மசி" என்றிட எமனையும்
வெல்லலாம்.
 
(2) "மசி, நசி" என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.
 
(3) "நங், நங்" நன்மைகள் உண்டாகும்.
 
(4) "அங் அங்" என்றால் மண்டலத்தில் இடி விழாது.
 
(5) "சிங், சிங்" என்றால் மிருகங்கள்
ஓடும்.
 
(6) "வங், வங்" என்றால் உலகமெல்லாம்
வசியமாகும்.
 
(7) "வசி, வசி" என்றால் பீடைகள்
விலகும்.
 
(😎 "மசி, மசி" என்றால் சகல
விஷங்களும் இறங்கும்.
 
(9) "அசி, அசி" என்றால்கேட்பவை
அமோகமாக பெருகும்.
 
(10) "உசி, உசி" என்றால் கேட்பவை
யாவும் ஒழிந்து போகும்.
 
(11) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.
 
(12) "சிவ, சிவ" என்றால் தீவினைகள்
அழியும்.
 அகத்திய-முனிவர் | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan
இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.
 
(1) மோகன மந்திரம்: "ஓம் ரீங் மோகய! மோகய!"
 
(2) சத்ருக்கள் வசியம்: "ஓம் ரீங் வசி!வசி!"
 
(3) நோய்கள் தீர: "ஓம் ரீங் நசி நசி"
 
(4) துஷ்ட மிருகம் ஓட "ஓம் ரீங் அங்"
 
(5) இகபர சித்தி: "ஓம் ரீங் சிவயவசி"
 
(6) தம்பனம்: "ஓம் ரீங் ஸ்தம்பய!
ஸ்தம்பய!"
 
(7) அகர்ஷனம்: "ஓம் ரீங் ஆகர்ஸ்ய!
ஆகர்ஸ்ய!"
 
(😎 உச்சாடனம் நோய்கள் தீர – "ஓம் ரீங்
உச்சாடய! உச்சாடய!"
 
(9) செளபாக்கியம் பெற: "ஓம் ரீங்
சிவசிவ!"
 
(10) தெய்வ அருள் பெற: "ஓம் சிவ சிவ
ஓம்!"
 
(12) சத்ரு சம்ஹாரா மந்திரம்: "ஓம் ரீங்
மசி நசி நசி மசி"
 
(13) நெற்றிகண் மந்திரம்: "ஓம் லம்
சூஷ்மூநாயா நமக"
 
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும்.
 
மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று.....
 
உலக சிவ சித்தர்கள்.
 

 

கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”Dr.ABJ.அப்துல் கலாமின்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips

 May be an image of 2 people and hospital

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக  நாளிதழில் படிக்க நேரிட்டது.... 
 
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :
 Childhood picture of Dr APJ Abdul Kalam with family goes viral on ...
"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...
 
என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...
 Dr. A. P. J. Abdul Kalam Bio
சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... 
 
ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....
 Abdul kalam brother, If there is a definite determination to achieve a goal
‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
 
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..
 
என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
 
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....
 
சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
 
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"
 
சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
 
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
 Achievements and awards of APJ Abdul Kalam • ShareChat Photos and ...
களைத்துப் போய் இருப்பார் ... 
 
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
 
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
 
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”
 Kalam's elder brother Janab Haji Maraikayar turns 104 | Nation | Manorama  English
# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
 
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...
 
ஆம்..
 
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”
 
# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
 
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
 
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...
 
மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...
 Rare picture of late President of India, Dr.APJ Abdul Kalam | Indian  history facts, Rare pictures, History facts interesting
# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
 
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!
 
# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... 
 APJ Abdul Kalam's Childhood Picture
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...3 விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...👌👇📢👊
👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்
 
2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...
 👉நகை
👉பணம்
👉சொத்து
 
3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...
👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்
 
4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...
👉உண்மை
👉கடமை
👉இறப்பு
 
5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...
👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்
Dr. A. P. J. Abdul Kalam Bio
6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...
👉தாய்
👉தந்தை
👉இளமை
 
7.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...
👉தாய்
👉தந்தை
👉குரு
 
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
 
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
 
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
 
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
 
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
 
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
 
கவனிக்க ஏழு விஷயங்கள்
 
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..
 
சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்
இனி உங்கள் கையில்....👌👆👊👊👊