இல்லறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இல்லறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இல்லறம் சிறக்க..!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:35 AM | Best Blogger Tips

 

Pin di rajsabari su arts

நீதிக்கதை.

இல்லறம் சிறக்க..!

கணவனும் மனைவியும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். ஏனென்றால்,  அன்று அவர்களின் 25 ஆவது ஆண்டு திருமண நாள். முன்பு போல் இல்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து,  நேரத்தை  செலவிடுவது குறைந்து போய் விட்டது.
இல்லறம்! – புன்னகை!
அவர்களுக்கு இடையே ஏன்? இடைவெளி அதிகரித்து வருகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை. 

தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது மனைவி மௌனத்தை கலைத்து, " உங்களிடம் நான் நிறைய சொல்ல வேண்டும்.  இப்போதெல்லாம் நாம் இருவரும் சேர்ந்து  உட்காரக்கூட நேரம் இல்லை" என்றாள். 

" இதைப் பற்றி நான் நிறைய யோசித்து இந்தச் சூழ்நிலையை சமாளிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளேன். நீங்கள் ஒப்புக் கொண்டால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்."
Relationship Saved by SRIRAM
 கணவர் தலையை அசைத்தார். 

மனைவி மேசையின் மீது இரண்டு டைரிகளைக் கொண்டு வந்து வைத்தாள்.

இந்த இரண்டு டைரிகளில் ஒன்று உங்களுக்கு, மற்றொன்று எனக்கு. 
இனிமேல் நம் இருவருக்குள் ஏதேனும் புகார்கள் இருந்தால் அவற்றை நம் சொந்த டைரிகளில் எழுதி வைப்போம்" என்றாள். 

மேலும், " அடுத்த  ஆண்டு நமது திருமண நாள் அன்று அவற்றை நாம் திறந்து படிப்போம்.
ஒருவருக்கொருவர் பிடிக்காத விஷயங்களைப் புரிந்து கொள்ள இது உதவும்.
மேலும் அவற்றை மேம்படுத்தவோ அல்லது தீர்வு காணவோ நாம் பணியாற்றலாம்."

கணவருக்கு மனைவியின் யோசனை பிடித்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் டைரிகளில் எழுத தொடங்கினர். காலம் விரைவாக சென்றது. 

அன்று அவர்களின் 26 ஆவது ஆண்டு திருமண நாள். 

கணவன் மனைவி இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களின் டைரிகள் அருகில்  வைக்கப்பட்டு, அவற்றை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர். 

தேநீர் அருந்தி முடிப்பதற்கு முன் கணவர் தனது மனைவியின் டைரியைப் படிக்கத் தொடங்கினார். அதில் பல புகார்கள் எழுதப்பட்டிருந்தன.
Husband and Wife Painting
 " என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தீர்கள். ஆனால். அதை நிறைவேற்ற வில்லை" என்பது போல...

" இன்று என் பெற்றோரின் வீட்டிலிருந்து விருந்தினர்கள் வந்தார்கள். நீங்கள் அவர்களிடம் நன்றாக பேசவில்லை." என்று மற்றொரு புகார் கூறப்பட்டிருந்தது. 

" பல  மாதங்களுக்குப் பிறகு , நீங்கள் எனக்கு ஒரு புடவையை வாங்கி வந்தீர்கள். ஆனால் அது பழைய வடிவமைப்பைக் கொண்டிருந்தது. "

" இன்று நான் எனக்கு பிடித்த டிவி சீரியலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் செய்தி சேனலை மாற்றினீர்கள்." 
Pin by DEBASISH SAMANTA on Art painting | Digital painting portrait, Female  art painting, Old book art
" இன்றைக்கு சோபாவில் ஈரமான டவலை விட்டுட்டு போயிட்டீங்க..."

டைரியில் இது போன்று பல புகார்கள் இருந்தன. 

கணவர் அவற்றை படிக்கும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. 
Oviyar Maruthi
அவர் மனம் திருந்தி தனது மனைவியிடம், " இந்தத் தவறுகளை நான் முன்பு உணரவில்லை. ஆனால், இப்போது நான் அவற்றை மீண்டும் செய்ய மாட்டேன் " என்று உனக்கு உறுதியளிக்கிறேன் என்றார். 

Pin on Beautiful moon

இப்போது மனைவி தன் கணவரின் டைரியைத் திறக்கும் முறை வந்தது.  பல பக்கங்களைப் புரட்டினாள் மனைவி. ஆனால், அந்த டைரி முற்றிலும் காலியாக இருப்பதைக் கண்டாள். அதில் ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. 
Pin on art
ஆச்சரியப்பட்ட மனைவி, " நீங்கள் டைரியில் எதுவும் எழுதவில்லையா?" என்றாள்.

கணவர், " கடைசி பக்கத்தை பார். நான் அங்கே ஏதோ எழுதினேன் " என்று பதிலளித்தார். 
இல்லறம் இன்பமயமா இருக்க நீங்க இந்த 8 ...
அந்தப் பக்கத்தில் அவர் எழுதியிருந்தது...

"இத்தனை வருடங்களாக நீ எனக்காகவும், நமது குடும்பத்திற்காகவும் நிறைய தியாகம் செய்துள்ளாய். எங்களுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்து இருக்கிறாய். 
இல்லறம் நல்லறமாக நாம் செய்ய ...
இந்த டைரியில் உனக்கு எதிராக எதையும் எழுத முடியாது. மேலும் உன்னிடம் எந்த குறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு இருந்ததில்லை. 
Pin by Rehab Rashid on romantic | Indian art paintings, Female art ...
உன்னிடம் எந்த குறைகளும் இல்லை என்பதல்ல.. ஆனால் உன் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுடன் ஒப்பிடும்போது உன் குறைகள் எதுவும் அற்பமானவை. 
Pin on art
என்னுடைய எண்ணற்ற தவறுகளைப் பொருட்படுத்தாமல் இந்த சவாலான வாழ்க்கையில், என் பக்கத்தில் ஒரு நிழலை போல நின்று கொண்டிருக்கிறாய். எப்படி ஒருவர் தன் நிழலில் தவறுகளைக் கண்டுபிடிக்க முடியும்? " 
Pin on Painting
இப்போது மனைவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. அவள் தன் கணவனின் கையில் இருந்த தன் புகார் டைரியை  வாங்கி கிழித்து அதை எரித்தாள்.
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTC0A7BILAnzRCR26yLR-DwfoV7-ADx347AIA&s
பாடம்:
கணவன் மனைவி இடையேயான உறவு, நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. அதுதான் அதை வலிமையாக்குகிறது. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கணவன் மனைவி புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தவறுகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக தங்கள் துணைவர் தங்களுக்காக எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொண்டால், அவர்களின் உறவு இன்னும் வலுவாகும்.

❤️❤️❤️❤️❤️❤️❤️

அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டுமே
சிரமப்படுவது போலவும்
சில பேருக்குப் பிரமை..
ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள். பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை.
கண்ணதாசன்.


good morning 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

திருமண வாழ்க்கையில் காதல் மட்டும் போதாது,.......

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips

 May be a black-and-white image of 3 people and text


கணவன்-மனைவி ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். 
 
கோபமாக இருக்கும்போது ஒருபோதும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். 
 
பல சமயங்களில், அதிக அன்பு இருந்தபோதிலும், ஒரு சிறிய தவறு உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும். 
 
இந்த விரிசலில் மூன்றாவது நபரை உள்ளே அனுமதிக்காதீர்கள்...
 
காதல் எப்போதும் இருக்கிறது என அடிக்கடி வெளிப்படுத்துவதை தவிர்க்காதீர்கள். 
 
இதனால் இருவருக்கும் இடையில் இடைவெளி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
 
எனவே இருவரும் வெளியில் செல்வது, மனம் திறந்து பேசுவதற்கு எல்லாம் தனிப்பட்ட நேரம் கொடுக்க மறந்துவிடாதீர்கள்
 Nanjil Nadu (நாஞ்சில் நாடு) - தொல்காப்பிய களவியல்! காதல் வாழ்க்கையைக்  கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ...
திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருந்தாலும், அல்லது பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை எப்போதும் குறையக்கூடாது. 
 
இது இருவருக்கும் இடையே பரஸ்பரம் நம்பிக்கையை உருவாக்கும்.
பல நேரங்களில், திருமணத்திற்குப் பிறகு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வது, அசிங்கமான சொற்களை பயன்படுத்துவது எல்லாம் விளையாட்டாக செய்துவிடாதீர்கள். 
 
இது இருவருக்கும் இடையிலான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது....
 
ஒருவரையொருவர் அச்சுறுத்திக் கொள்ளவே கூடாது. வீட்டை விட்டு போகிறேன் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் கூறி தன் துணையை அச்சுறுத்தக்கூடாது. இது ஒருகட்டத்தில் ஆபத்தில் முடிய வாய்ப்பு இருக்கிறது..
 Love Marriage Planet Responsible Astrology In Tamil : காதல் திருமணம்  யாருக்கு அமையும்? - உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
அன்பு செலுத்துங்கள், எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அமர்ந்து பேசுங்கள். நிதானமாக விவாதிக்கும்போது வாழ்க்கை சூழல் அமைதியாக இருக்கும். அழகாகவும் இருக்கும்.
 உங்கள் காதல் திருமணம் வெற்றிகரமாக அமைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
சிறிய விஷயங்களே பெரிய பிரச்சனைகளுக்கு, கடினமான முடிவுகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதால் அதனை நினைவில் வைத்து வாழ்க்கையை அழகாக வாழுங்கள். 
 UNICEF Pakistan - A wonderful illustration of a nutritious life? A healthy  planet? A happy mother Earth with its little friends? Tell us in the  comments what comes to your mind looking
பூமியில் வாழும் வாழ்க்கை கொஞ்சம் காலம் தான் அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.,

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

 

 

"வீட்ல சும்மா தான இருக்க"

மணக்கால் அய்யம்பேட்டை | 10:43 AM | Best Blogger Tips
Image result for ilayaraja painting 

எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

" நீ சும்மா தான மா இருக்க..
இது செஞ்சி குடுத்திடு மா..."

'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.
வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.

அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து விட்டேன்.
இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.

மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

"அம்மா பசிக்குது மா..
Image result for ilayaraja painting
எதாவது எடுத்துட்டு வா மா,"

" எனக்கும் தலைவலிக்குது ஒரு காபி போட்டு தா மா", என்று சொல்லிக் கொண்டே உள்ள நுழைந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வாசல் முழுவதும் குப்பையால் நிறைந்து இருக்கிறது.

வீட்டின் உள்ளே சென்றால் காலையில் செல்லும் பொழுது இரைத்த பொருட்கள் எல்லாம் அனைத்தும் கிழே இருக்கின்றன.

காலையில் துடைத்த ஈரமான துண்டுகள் அனைத்தும் நாற்காலியில் கூளமாக இருக்கின்றன.

ஷுபாலிஷ் செய்யும் டப்பா திறந்தே இருக்கு.

தலைக்கு தடவும் ஜெல்லும் ஓபன் பண்ணி இருக்கு.

பசங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் புத்தகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.

விளையாட்டு பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.

சீருடைகள் தோய்க்காமல் அப்படியே போடப்பட்ட இடத்தில் இருக்கின்றன.

இவ எங்க தான் போனான்னு சமையல் அறைக்குள் சென்று பார்த்தால்,

பாத்திரங்கள் கழுவாமல் நாற்றம் அடித்து கொண்டு இருக்கின்றன.

'எங்க தான் போனாலோ.. உடம்பு சரி இல்லையோ?'

ரூமிற்கு சென்றால், இரவு உபயோகபடுத்திய தலையணை, போர்வை எல்லாம் மடித்து வைக்காமல் இரைந்து கிடக்கின்றன.

'சரி பாத்ரூமில் இருப்பாள் கதவு தட்டி பாக்கலாம்'னு திறந்தா, காலையில் போட்ட சோப் டப்பா முழுவதும் தண்ணீரில் முழுகிக் கரைந்து போய் தரை முழுவதும் கொழ கொழனு ஆகிடுச்சு.

அழுக்கு துணிகள் அசிங்கமாய் தொங்கி கொண்டு இருந்தன.

ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் மாடியில் உள்ள அறைக்குள் சென்றார்கள்.

கையில் ஒரு நாவல் புத்தகம் ஒன்றுடன், நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்தாள்.

"என்னடி ஆச்சு உனக்கு ?

வீடு என் இப்படி இருக்கு? அம்மா என்ன ஆச்சு மா உனக்கு?"

பதட்டமான கேள்விகள்.

"நீங்க எல்லோரும் தான் சொல்லிட்டு போனீங்க, 'வீட்ல சும்மா தான இருக்க'ன்னு.

அதான் சும்மா இருக்கலாம்னு!!

கணவனுக்கு தன் தவறு உணர்ந்தது.

இந்த வார்த்தையை சொல்வது தவறு.

அவ எதுவும் செய்யவில்லை என்றால் வீடு வீடாகவே இருக்காது.

"என்னை மன்னித்து விடு" என்று கூறினார்.

பிள்ளைகளும் தம் தவறை உணர்ந்து "அம்மா மன்னிச்சிடு மா.இனி அப்படி சொல்ல மாட்டோம். நீ இல்லைனா வீடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்."

நான் சொல்வதால் தான் என் பசங்களும் இந்த வார்த்தையை அவ கிட்ட சொல்லி கஷ்டபடுத்தறாங்கனு அவருக்கு புரிந்தது.

இனி எப்பொழுதும் தன் மனைவியை பிள்ளைகளிடமோ, வெளி ஆட்களிடமும் தாழ்த்தி பேசமாட்டேன் என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தார்.

"நீ இங்கயே இரு நா போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்" கணவர் கிளம்பினார்.
 Image result for ilayaraja painting
பசங்களும் "நாங்க உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரோம் மா நீங்க வெயிட் பண்ணுங்க மா".

"யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் போய் டிவி பாருங்க. நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க" என்றாள்.

மனதில் சந்தோஷத்துடன் சமையல் அறைக்கு சென்றாள்.

இது தான் அம்மா ! ! ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ அம்மா ஒரு வரம் ! !



நன்றி இணையம்