பவுர்ணமி தினத்தில் துர்க்கா வழிபாடு...!

மணக்கால் அய்யம்பேட்டை | முற்பகல் 11:25 | Best Blogger Tips

சிறப்பான திதிகளில் ஒன்று பவுர்ணமி. இந்த நாளில் சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாவது ராசியில் சந்திரன் இருந்து இருவரும் பார்த்துக் கொள்வதால் இந்த பவுர்ணமி யோகம் உண்டாகிறது. சந்திரன் அம்பாளின் அம்சமாக ஜோதிட, வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
கிரகங்களின் அதிர்ஷ்டம் பெற்ற நாள் பவுர்ணமி. அன்றைய தினம் கடல் தன் இயல்பு நிலையில் இருந்து மாறி சீற்றத்துடன் கொந்தளிக்கும். அதுபோல நம் மனமும் அமைதியில்லாமல் அலை பாயும். மனோ வியாதி உள்ளவர்களுக்கு அன்றைய தினம் சற்று கடினமான தினமாக இருக்கும். சந்திரன் மனோகாரகன், மனத்தை ஆள்பவன். அதனால் பவுர்ணமியில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்கின்றன சாஸ்திரங்கள்.
பவுர்ணமி தினத்தில் அம்பாள் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஸ்ரீசக்கர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு அம்சங்களாக மகா திரிபுர சுந்தரியாக பவுர்ணமியன்று அருள்பாலிப்பதாக ஐதீகம். மேலும் ஸ்ரீ சந்திரிகா என்ற அவதாரத்திலும், துர்க்கையின் அம்சத்திலும் அம்பாள் இருப்பதாக சித்தர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர். பவுர்ணமி தினத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் சத்திய நாராயணன் பூஜை செய்வது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சித்தர்களின் கூற்றுப்படி, நம் துக்கங்களையும், தடைகளையும், இடையூறுகளையும், நோய், நொடிகளையும், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீவினைகளையும், கிரக தோஷங்களையும் போக்கும் வழிபாடு ஸ்ரீதுர்க்கா தேவி வழிபாடு. துர்க்கா தேவியை ஒவ்வொரு பவுர்ணமி வரும் கிழமைக்கேற்ப வழிபடுவதால் அந்த கிரக தோஷ அவஸ்தையில் இருந்து விடுபடலாம்.
ஞாயிற்றுக்கிழமையில் வரும் பவுர்ணமி, சூரியனுக்கு ஏற்றதாகும். சூரிய திசை நடப்பவர்கள், சூரிய தோஷம் உள்ளவர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள், 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு சிகப்பு புடவை அல்லது சட்டைத் துணி சாற்றி, செந்தாமரை மலர் வைத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்களுக்கு வழங்கலாம். தீராத நோய்கள் தீரும். மன அமைதி ஏற்படும்.
திங்கட்கிழமையில் வரும் பௌர்ணமி சந்திரனுக்கு ஏற்ற தினமாகும். சந்திர திசை நடப்பவர்கள், ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கடக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு வெண்பட்டு, ஆரஞ்சு புடவை சாற்றி மல்லிகை பூ மாலை சூட்டி அர்ச்சனை செய்ய வேண்டும். அனைத்து பழவகைகளுடன் கல்கண்டு சாதம் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். மன அமைதியும், சுபகாரிய விஷயங்களும் கூடிவரும். வெளிநாட்டு பயணங்களில் இருக்கும் தடை விலகும்.
செவ்வாய்க்கிழமையில் வரும் பவுர்ணமி, அங்காரகன் எனும் செவ்வாய்க்கு ஏற்ற தினமாகும். செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், மிருக சீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள், 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மேஷம், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு சிகப்பு நிற புடவை அல்லது துணி சாற்றி செவ்வரளி, சிகப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்து பழங்கள், சித்ரான்னம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். எதிர்ப்புகள் மறையும். சகோதர உறவுகளால் நன்மை ஏற்படும். நிலம் சொத்து சேர்க்கை ஏற்படும்.
புதன்கிழமையில் வரும் பவுர்ணமி புத பகவானுக்கு ஏற்ற தினமாகும். புதன் திசை நடப்பவர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள், 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு பச்சைநிற புடவை சாற்றி மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகையால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், பஞ்சாமிர்தம் படைத்து பக்தர்களுக்கு தரலாம். கல்வி தடை விலகும், ஞாபக சக்தி அதிகரிக்கும். மாமன் வகை உறவுகள் பலப்படும்.
வியாழக்கிழமையில் வரும் பவுர்ணமி வியாழன் என்ற குருவிற்கு ஏற்ற தினமாகும். குரு திசை நடப்பவர்கள், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தனுசு, மீனம் ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் இந்நாளில் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு மஞ்சள் நிற புடவை அல்லது ஜாக்கெட் துணி சாற்றி, சாமந்தி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை சுண்டல், தயிர் சாதம், பழங்கள் படைத்து பக்தர்களுக்கு வழங்கினால் சுபகாரியத் தடைகள் விலகும். தோஷங்கள் நீங்கும். செல்வாக்கு, பொன், பொருள் சேர்க்கை உண்டு.
வெள்ளிக்கிழமையில் வரும் பவுர்ணமி சுக்கிரனுக்கு ஏற்ற தினமாகும். திருமணத் தடை, களத்திர தோஷம் உள்ளவர்கள் சுக்கிர திசை நடப்பவர்கள் பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்கள், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம் ராசியில் பிறந்தவர்கள், ஆகியோர் வழிபட, சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு வெண்பட்டு புடவை சாற்றி மல்லிகைப்பூ, கதம்ப பூமாலை, பழ வகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பிரிந்த தம்பதியர் சேருவார்கள். தடைபட்ட கட்டிட வேலைகள் நிறைவேறும். கையில் பணம் புரளும்.
சனிக்கிழமையில் வரும் பவுர்ணமி, சனீஸ்வரருக்கு ஏற்ற தினமாகும். நாவில் சனி, அஷ்டம சனி, ஏழரை சனி மற்றும் சனி திசை நடப்பவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மகரம், கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு நீலநிற புடவை அல்லது நீலத்துணி சாற்றி மரிக்கொழுந்து, சங்கு பூ, கதம்ப மாலை அர்ச்சனை செய்து காய்கறி கலந்த சாதம், எள் சாதம், தயிர் சாதம், பாலில் தேன் கலந்து படைத்து பக்தர்களுக்கு தந்தால் தீராத நோய், நொடிகள் தீரும். மன அமைதி ஏற்படும். கிரக தோஷம் விலகும்.
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய  வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -
என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran


இராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | முற்பகல் 11:14 | Best Blogger Tips


நாசா கூறும் விளக்கம்



இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அதற்கு நமது தஞ்சை பெரியக்கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பலவன அறிந்து வைத்திருப்போம். ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள்
நாசா விண்வெளி மூலம் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தை0க் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல. மற்றும் இது வெறுமென கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது. என கூறியிருக்கிறார்கள்

இராமாயணம் சொல்வது உண்மை
இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது. அதனால் இராமாயணம் சொல்வது உண்மை தா
உபயோகத்தில் இருந்த இராம சேது
இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.
மனிதர்களால் கட்டப்பட்டதா?
இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர். இராமாயணம் மட்டுமல்லாமல் மற்றும் பல கூற்றுகள் இதை உண்மை என தான் சொல்கிறது.

மிதக்கும் கற்கள்
மிதக்கும் கற்கள் பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது. இது நலா மற்றும் நீலின் கைகரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தொடக்கமும், முடிவும்
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதாட்ட 1 மீட்டர் ஆழம் மட்டுமே இங்கு கடலின் ஆழம் உள்ளதாய் கூறுகின்றனர்.
இராம சேதுவின் அளவு
இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இராம சேது பாலம் என கூறப்படுகிறது. இதை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம் தான்
இராம சேது பாலத்தின் வயது
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது இராம சேதுவின் வயது 17 லட்சம் ஆண்டுகள்!!!
ஐந்தே நாட்களில்
வெறும் ஐந்தே நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நலா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது இராம சேது பாலம்.
ஆதாம் பாலம்
இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இது இராவணனிடம் இருந்து சீதையை மீட்க இராமர் செல்லும் போது அவர் கடல் கடந்து செல்ல வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும்.
நன்றி இணையம்


என் தோழனாக வரபோகும் கணவனே..

மணக்கால் அய்யம்பேட்டை | முற்பகல் 11:03 | Best Blogger Tips















நன்றி  ரிலாக்ஸ் ப்ளீஸ்

விழுந்தாய் . . .எழுந்திரு !!ll

மணக்கால் அய்யம்பேட்டை | முற்பகல் 10:35 | Best Blogger Tips

llபத்து தடவை கீழே விழுந்தால்ஆயிரம் தடவை எழுந்திரு . . .
ஐம்பது தடவை ஏமாந்துபோனால்பத்தாயிரம் தடவை ஏமாறாமலிரு . . .
நூறு தடவை தோற்றுப்போனால்லக்ஷம் தடவை ஜெயித்துவிடு . . .
ஆயிரம் தடவை அவமானப்பட்டால்கோடி தடவை மரியாதையை அடைந்துவிடு . . .
கோடி தடவை பயந்துபோனால்பலகோடி தடவை தைரியமாயிரு . . .விடாதே . . .
உன்னை நீயே பலவீனமாக்காதே . . .மறந்துவிடாதே . . .
உனக்குள் இருக்கும் சக்தியைமறந்துவிடாதே . . .
தொலைத்துவிடாதே . . .உன்னுள் புதைந்திருக்கும் திறமையைதொலைத்துவிடாதே . . .
விட்டுக்கொடுக்காதே . . .உன் முயற்சிகளைவிட்டுக்கொடுக்காதே . . .
நீ விழுந்ததைக்கணக்குப் பண்ணாதே . . .
நீ எழுந்ததை மட்டுமேநினைவில் வைத்திரு . . .
நீ தோற்றதைஎண்ணிப் புலம்பாதே . . .
நீ ஜெயித்ததை எண்ணிஇன்னும் ஜெயிக்கப்பார் . . .
நீ அவமானப்பட்டதைநினைத்து அழாதே . . .
நீ பெருமையடைந்ததைநினைத்து வென்றுகாட்டு . . .
யாருக்கும் இங்கே நேரமில்லை !
உன்னுடைய புலம்பலைக் கேட்டுஉனக்குச் சமாதானம் சொல்ல . . .
உன்னுடைய தோல்விகளில்உனக்குத் தோள் கொடுக்க . . .
உன்னுடைய பலவீனங்களுக்காகஉனக்கு உதவி செய்ய . . .
யாருக்கும் இங்கே நேரமில்லை . . .
இது வெல்பவர்களின் உலகம் !இது வெல்பவர்களுக்கான உலகம் !
இங்கே தோற்றவரைக் கொண்டாடுவதில்லை!இங்கே புலம்புவர் மதிக்கப்படுவதில்லை !
இங்கே அழுபவர் பெருமையடைவதில்லை !
உனக்கு உதவிக்கு யாரும் வேண்டாம் !
இந்த மனிதரை நம்பி நேரத்தை வீணாக்காதே !
நீயே விழுந்தாய் . . நீயே எழுந்திரு !நீயே தோற்றாய் . . .நீயே வெல் !நீயே அவமானப்பட்டாய் . . .
நீயே மரியாதை அடை !நீயேதான் எழ வேண்டும் . . .?
உன்னை கைதூக்கி விடஇந்த உலகிற்கு நேரமில்லை . . .
நீயேதான் வெல்லவேண்டும் . . .உனக்கு வழிசொல்லிக் கொடுக்கஇந்த உலகிற்கு பொறுமையில்லை . . .
நீயேதான் மரியாதையைப் பெறவேண்டும் . . .உனக்கு மரியாதை தரஇங்கு யாரும் தயாராகயில்லை . . .
முயல் . . .அடைவாய் . . .
போராடு . . .பெறுவாய் . . .
தீர்மானி . நிரூபிப்பாய் . . .
🌺ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே !!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணகிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!🌺
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய  வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -
என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran