🥛 பால் பாக்கெட்டின் நிறம் சொல்லும் ரகசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips

 
🥛 பால் பாக்கெட்டின் நிறம் சொல்லும் ரகசியம்! 👀


நம்ம வீட்டுல தினமும் வாங்குற ஒரு சாதாரண பொருள் — பால். ஆனா அந்த பால் பாக்கெட்டில் இருக்கும் நீல, பச்சை, ஆரஞ்சு நிறங்கள் சும்மா design இல்லன்னு தெரியுமா? 🤔


அது உள்ளே இருக்கும் பாலை பற்றி ஒரு முக்கியமான தகவலை சொல்லுது!

---

🔍 நிறங்களின் அர்த்தம் என்ன?

🔵 நீல நிறம் (Blue)
👉 Toned Milk
👉 சுமார் 3% கொழுப்பு
👉 லைட் & ஹெல்தி
👉 டீ, காபி, தினசரி பயன்பாட்டுக்கு perfect

🟢 பச்சை நிறம் (Green)

பால் பாக்கெட் நிறங்களுக்குப் பின்னால் இப்படியொரு ரகசியமா...? எந்த நிறம்  யாருக்கு நல்லது..? - இனி குழப்பமே வராது! - Seithipunal
👉 Standardised Milk
👉 சுமார் 4.5% கொழுப்பு
👉 சுவை கொஞ்சம் ரிச்சா இருக்கும்
👉 குடிக்கவும், சாதாரண cooking க்கும் நல்லது

🟠 ஆரஞ்சு நிறம் (Orange)
👉 Full Cream Milk
👉 சுமார் 6% கொழுப்பு
👉 ரொம்ப ரிச்சான பால்
👉 பாயசம், ஸ்வீட்ஸ், தயிர், குழந்தைகளுக்கு நல்லது

🟣 மஜெண்டா / லைட் நிறங்கள் (சில brands)
👉 Double Toned Milk
👉 சுமார் 1.5% கொழுப்பு
👉 Diet / weight control க்கு பயன்படுத்தலாம்

---

⚠️ ஒரு பெரிய தவறான நம்பிக்கை!

பலர் நினைப்பது —
👉 “ஆரஞ்சு நிறம் தான் best quality பால்” ❌

ஆனா உண்மையில்:
👉 நிறம் qualityயை காட்டாது
👉 அது கொழுப்பு அளவையே (fat content) மட்டும் காட்டும்

✔️ லைட் பால் வேண்டுமா?
✔️ ரிச்சா பால் வேண்டுமா?
அதுக்குத்தான் இந்த Colour System!

---

💡 ஏன் இந்த Colour Coding Use பண்ணுறாங்க?

🛒 பால் ஒரு Daily Product — யாரும் லேபிள் படிக்க நேரம் எடுத்துக்கொள்ள மாட்டாங்க


👉 நிறம் பார்த்தாலே உடனே தேர்வு செய்ய முடியும்

👨‍👩‍👧‍👦 குடும்பத்துல கூட:


👉 “Blue Packet Vaanga”ன்னா போதும் — எல்லாருக்கும் புரியும்

📦 Brand Change ஆனாலும்:
👉 Colour Same இருந்தா confusion வராது

---

🧠 நம்ம வாழ்க்கையோட ஒரு பழக்கம்!

நம்மலால fat percentage நினைவில் வைக்க முடியாமல் இருக்கலாம்…
ஆனா “நீல பாக்கெட் தான் வாங்கணும்”ன்னு நாம நினைவில் வைத்திருப்போம் 😄

👉 இதுதான் இந்த system-oda Success!

---

✨ சின்ன Design… பெரிய உதவி!

இந்த Colour Coding:
✔️ வேகமான முடிவு எடுக்க உதவும்
✔️ குழப்பம் குறைக்கும்
✔️ நம்ம daily life-ஐ easy ஆக்கும்

---

“சின்ன சின்ன அறிவு விஷயங்கள் தான் நம்ம வாழ்க்கையை smart ஆக்குது!” 🌟

--- 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷
🌷 🌷

 

🌿"தெரியாததை தெரியாது என்று ஒத்து

மணக்கால் அய்யம்பேட்டை | 10:49 AM | Best Blogger Tips

 

🌿"தெரியாததை தெரியாது என்று ஒத்து கொள்வதற்கு பெயர் தான் அறிவு"...

☘️நம்மவர்களுக்கு, தெரியாததை சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா... தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை.

☘️தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அசிங்கமாம், கேவலமாம், அவமானமாம், தர்மசங்கடமாம், மானக்கேடாம்! ஆனால், இப்படி இல்லவே இல்லை.

☘️எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாகக் கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர்.

☘️அறியாமை, வெட்கப்பட வேண்டியதே அல்ல; அதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்குத் தான் வெட்கப்பட வேண்டும்.

☘️மேற்குத் தொடர்ச்சி மலையில், தெற்கு, வடக்காக ஓடுகிறது கொங்கண் ரயில் பாதை.

☘️இந்த ரயிலில் பயணிப்போர், மேற்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், கடற்கரை காட்சிகளை மட்டுமே அதிகமாகக் காணலாம்.

☘️கிழக்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், மலைத் தொடர்ச்சிகளை மட்டுமே காண முடியும்.

☘️மறுபுறம் பார்க்கத் தவற விட்ட இந்த ரயில் பயணிகளை குறை சொல்ல முடியுமா...

☘️இப்படித் தான், நம் அறியாமைகளும்! நாம் பயணிக்கிற வாழ்வின் பாதையில், மறுபுறம் உள்ளவை, நமக்குத் தெரிய வராமலேயே போகின்றன. இது ஒரு பெரிய குறையா?

☘️கடற்கரைப் பகுதியைப் பார்த்தவரும், மலைத் தொடர்ச்சிகளைப் பார்த்தவரும், தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எப்படித் தவறு இல்லையோ,,

☘️அதேபோல, நாம் அறியாத மறுபக்கங்களை பிறர் கூறுகிற போது, தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமலும்,

☘️'எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது என்று நடித்து, பாவ்லா காட்டாமலும், சொல்லுங்க... 'எனக்கு இதெல்லாம் புதுசு...' என்று கேள்வி கேட்கும் குழந்தையாக மாறி விடுவது நல்லது;

இது, புத்திசாலித்தனமும் கூட!..

🍀ரொம்ப நாட்கள் கழித்து இரண்டு பள்ளி நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.. ஒருவர் தமிழ்நாட்டில் இருப்பவர். இன்னொருவர் வெளிநாட்டில் வசிப்பவர். தமிழ்நாடு வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது...

☘️அவர்கள் உரையாடிக் கொண்டு இருந்த போது வெளிநாட்டு நண்பர் திடீரென, 'புராக்காஸ்டினேஷன்'' என்று ஒரு சொல்லைக் கூறினார்.,

☘️அவர் பேசி முடித்ததும், 'புராக்காஸ்டினேஷன்னு ஒரு வார்த்தை பேசும் போது சொன்னாயே ; அதுக்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டார் நம்மவர்...

☘️அட இது கூடத் தெரியாதா. உனக்கு..' என்று இளக்காரப் புன்னகை சிந்தினார். அதற்கு நம்மவர் எனக்குத் தெரியாது என்றார்...

☘️நாம் இருவரும் படிச்சது எல்லாம் தமிழ்வழிக் கல்வியில் தான்.       அதில் ஏதாவது தெரியலன்னா தான் தவறு...'என்றார் நம்மவர்.

☘️புன்னகை மாறாமல், மன்னிக்க வேண்டும் நண்பா.,' என்று இறங்கி வந்து , 'புராக்காஸ்டினேஷன்னா,' தள்ளிப் போடுவது, தாமதப்படுத்துவது என்றார்.

🍀மேலைநாட்டவர்கள் தெரியாததை தெரியாது என்று சொல்ல வெட்கப்படுவதே இல்லை...

🍀எல்லாம் தெரிந்த மேதாவி என்று காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடே இல்லை.

🌹அறிவுத் தேடலில் உள்ளவர்கள்,இந்தத் தவறை செய்வதே இல்லை...!👍

🌹🌹🌹🌹🌹🌹 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷