ஆஷா நாத்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:44 | Best Blogger Tips





படத்தை பார்த்தவுடன் இவர் கேரள திரையுலகில் புகுந்த புதிய சினிமா நட்சத்திரம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

இவர் கேரள மாநிலத்தில் மெல்ல மெல்ல படிப்படியாக பிரபலமாகி வரும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆவார்.


திருவனந்தபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ஆவார்.

கேரளாவின் தேஜஸ்வி சூர்யா இவர் தான் என்று பாஜக தொண்டர்கள் பேச தொடங்கி விட்டார்கள்.

விரைவில் கேரள பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆவார் என்று பரவலாக பேசப்படுகிறது.

இவ்வளவு பிரபலமான ஆஷா நாத் ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி அல்ல.

திருவனந்தபுரம் நகரசபையில் பாப்பனம்கோடு வார்டு உறுப்பினர் ஆனார்.


பாப்பனம்கோடு வார்டு இடைத்தேர்தல் 2016ல் நடந்த போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.

திருவனந்தபுரம் நகரசபையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் முதல் இடத்தில் இருக்கும் இடது சாரி கட்சிக்கும் இடையில் கடும் கவுரவ பிரச்சினை இருந்ததால் இந்த கார்ப்பரேஷன் இடைத்தேர்தல் மிகவும் பிரபலம் அடைந்தது.

ஊடகங்கள் இவரை நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சென்றன.


அனைவரும் எதிர்பார்த்து போல் தன்னுடைய அழகிய புன்னகையால் அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கேரளா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

இன்றும் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனை விட இவர் பிரபலமானவர் என்று கூட சொல்லலாம்.

தன்னுடைய வார்டில் அரசு பணிகள் தடை இல்லாமல் நடக்க மிகவும் கடுமையாக அரசு அதிகாரிகளை முடுக்கி விட்டு வேலை வாங்குவதில் கில்லாடி என்று பெயர் வாங்கி உள்ளார்.

இவருடைய வார்டு இடம் பெற்றுள்ள நெமம் சட்ட சபை தொகுதி ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெமம் தொகுதியில் தான் பாரதிய ஜனதா கட்சி பிள்ளையார் சுழி போட்டு கேரளாவில் தன் கணக்கை தொடங்கியது.

அடுத்த சட்ட சபை தேர்தலில் நெமம் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் இவர் தான் என்று மக்கள் இப்போதே பேசத் தொடங்கி விட்டார்கள்.

ஆஷா நாத் கேரள அரசியல் களத்தில் மென்மேலும் வளரவும் அதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் இன்னும் பலம் பெறவும் வாழ்த்துவோம்.

நன்றி இணையம்

இவ்வளவு தொல்லைகள் கொடுத்த பாஜக இங்க வரவுட்டுருவாய்ங்க?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:30 | Best Blogger Tips



இவ்வளவு தொல்லைகள் கொடுத்த பாஜக இங்க வரவுட்டுருவாய்ங்க?

மோடிக்கு ஆதரவா எத்தனை content writers பாருங்க!

#நியுஸ்_7 திருட்டுப்பயலுக்கு

5 வருஷமா இழுத்து மூடி சீல் வெச்சுருக்குற கம்பனியை திறந்து, கனிம மணல் கொள்ளையை திரும்பவும் ஆரம்பிச்சே ஆகணும்ங்குற நிர்பந்தம்.

#புதியதலைமுறை தறுதலைக்கு

மருத்துவ படிப்புக்கு ஒரு சீட்

ஒரு கோடின்னு வித்து காசு பார்க்க, அதற்கெதிராக ஆப்பு மாதிரி இருக்கும் நீட் பிரம்மாஸ்திரத்தை தூக்கியாகணும்.

#ஜெயாடிவி_க்கு ஏற்கனவே கட்சியும் போச்சு, கோட்டைக்கு கிளம்புன சித்தி பெங்களூர் போயாச்சு!

மத்தியில் பா.. இருக்குற வரை பருப்பு வேகாதுன்னு தெரிஞ்சு போச்சு.

#கலைஞர்_டிவி& #சன்_டிவி க்கு திரும்பவும் காங்கிரசோடு கூட்டாக திருடுன பாவத்துக்கு , ரெண்டு பேருல எவன் தனியா போனாலும் கூண்டோடு ஜெயிலுக்கு போக வேண்டிய நிலமை.

#பப்பு மச்சானுக்கு நில அபகரிப்பு,

#சோனியாவுக்கு நேஷனல் ஹெரால்ட்,

ரீ கவுண்டிங் மினிஸ்டருக்கு குடும்பத்தோடு 18 முன் ஜாமின்,

அப்புறம் மறு விசாரணையில் இருக்கும் 2ஜி, ஏர்டெல் மேக்சிஸ், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர், BSNL திருட்டு கனெக்ஷன்... ect... ect



ரோமன் கத்தோலிக்க கூட்டத்துக்கு தங்கள் மெடிக்கல் காலேஜ்ல #கிருத்தவனுக்கு மட்டும் சீட்டுன்னு இருந்ததை, திறமையுள்ள #ஏழைகளுக்கு குடுக்க வெச்ச கடுப்பு,

சி.எஸ். லாசரஸ், காஸ்பர்களுக்கு தங்கள் 13000 N.G.O களை முடக்கியதால் உள்நாட்டு கருப்பு பணத்தை வெளிநாட்டுக்கனுப்ப முடியல, வெளிநாட்டு சட்டவிரோத பணத்தை உள்ளே கொண்டுவர முடியல!

700 மீனவன் செத்திட்டிருந்தான். இப்போ 5 வருஷத்துல ஒரே ஒருத்தன். அதைக்கூட பக்கத்து நாடு நாங்க சுடவில்லைன்னு சொல்லி பம்மிடிச்சு. இப்படியே போனால் தமிழ் வியாபரமும் படுத்துடும்.

#ரியல்_எஸ்டேட் என்னும் கட்டப்பஞ்சாயத்து மூலம் நில அபகரிப்பு பண்ணுற கும்பல், அபகரிச்ச நிலத்தை விற்க முடியல. விற்பனைக்கு வரும் நிலத்தை வாங்க முடியல. ஏழைகள் வீட்டு கனவு நிறைவேற விலை கட்டுக்குள் வந்தது. காரணம் ஆதார், டிஜிட்டலைஷேசன், வரி சீரமைப்பு!

G.S.T , e-billing மூலம் கள்ள பில் , #கள்ளக்கடத்தல் பிசினஸ் பண்ணுறவன் மூலத்துல ரத்தம் வருது.

ஏற்கனவே கொள்ளையடிச்ச பணத்தை வெச்சு மிச்சமிருக்குற காலத்தை ஓட்டிடலாம்ன்னா, அதையும் செல்லாக்காசாக்கி கழிவு நீர் ஓடையில் மிதக்க விட்டுட்டாங்க.

#பணமதிப்பிழப்பு_ க்கு பின் நக்சல் இயக்கங்களுக்கு நாஷ்டா துன்னவே பிச்சையெடுக்கும் நிலை.

#கம்யூனிசத்துக்கு திரிபுராவில் கரும்புள்ளி , செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்திப்புட்டானுங்க.

ப்ளாக்ல சிலிண்டர் விற்க முடியல, ரேசன்ல கள்ளக்கணக்கு எழுத முடியல, மானிய பணம் #வங்கிகணக்கில் நேரடியாக செல்வதால் #கமிஷன் அடிக்க முடியல , '#டிஜிட்டலைஷேசன்".

மத்தியில் ஆட்சியில் இருந்துட்டே இந்த குத்துன்னா, நாளை இவனுங்க மாநிலத்திலும் வந்துட்டா , #நவோதயா பள்ளிகளை திறந்து மிச்சமிருக்குற L.K.G சீட் பிசினசையும் படுக்க வெச்சிருவானுங்க.

என்னா...... அடி!

மோடிய தோற்கடிச்சே ஆகணும் னு பூரா அயோக்கியனுகளும்.

உசுர கொடுத்தாவது ஜெயிக்க வச்சே ஆகனும்னு நாட்டு பற்று உள்ள சிலரும் மோதுகிறார்கள்.

5 ஆண்டுகளில் நாடு அடைந்த முன்னேற்றம் மிக அதிகம் தான்.

இதே போல் கடந்த 60 வருடம் இந்த தேசத்தை ஆண்டவர்கள் தங்கள் பட்டியலைத் தரட்டும். இந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து விடுவோம்..!

(பி)

Sreenivasan Mahadeva

  


நன்றி இணையம்