திடீரென்று மனத்தில் ஒரு கேள்வி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:44 | Best Blogger Tips

 




இன்று திடீரென்று மனத்தில் ஒரு கேள்வி

ஒரு குறிப்பிட்ட சாதியினர் அர்ச்சகராக உள்ளனர் நீங்களும் அர்ச்சகராக வேண்டும் என்று நம்மை துண்டுபவர்கள் ...

அதே சாதியினர் Google, Microsoft, TATA போன்ற நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் அமர்ந்து உலகை ஆள்கிறார்களே...

அதுபோல் நீங்களும் ஆகவேண்டும் என்று ஏன் நம்மை தூண்டுவதில்லை??

இந்தியாவில் அறிவியலில் வாங்கிய மூன்று நோபல் பரிசுகளும் அவர்களே வாங்கியுள்ளார்கள்! நம் ராணுவத்தில் உயரிய விருதான பரம்வீர் சக்ராவைகூட அவர்கள்தான் முதலில் வாங்கினார்கள்! எனவே அவர்களை முறியடித்து நீங்கள் இதுபோல் விருதை அடையவேண்டும் என்று ஏன் நம்மை தூண்டவில்லை???

நாம் எல்லாம் அர்ச்சகர் ஆவதற்கு தான் தகுதியானவர்களா??

நம்மை அர்ச்சகர் ஆக வேண்டும் என்று துண்டுகிரார்களே.... அவர்கள் குழந்தைகள் எத்தனை பேர் அர்ச்சகராக உள்ளனர்??? அல்லது அர்ச்சகர் வேலைக்கு முயற்சிக்கின்றனர் ??

அர்ச்சகர் வேலை அவ்வளவு சிறந்ததென்றால் அவர்களின் குழந்தைகளையும் அர்ச்சகர் ஆக்கலாம் தானே ???

ஏன் நம்மை மட்டும் தூண்டுகிறார்கள்....

கொஞ்சம் சிந்தியுங்கள்.....

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களிடம்...

இது போன்று பேசி அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள்.....

அதைக் கேட்டுக் கொண்டு நாமும் ஜாதியின் அடிப்படையில் பிரிந்து நிற்கின்றோம்....

இவர்களின் பிராமண எதிர்ப்பு கட்டமைப்பு பயன்படுத்தி தேர்தல் வெற்றி பெற்றார்கள்.

அப்போது இங்கு உள்ள அனைத்து இந்துக்களும் ஏற்றார்கள். ஆனால் அதையே 50-வருடமாக திரும்ப திரும்ப சொல்லும் போது தான் இவர்களின் பித்தலாட்டம் வெளியே தெரிகிறது.

எது அன்று அவர்களுக்கு சரியாக பட்டதோ இன்று அது தான் சவக்குழி தெரியாமல் அரசியல் செய்கிறார்கள்.

இனிமேலாவது இது போல் பேசுபவரிடம் உங்கள் பிள்ளைகளை அர்ச்சகர் ஆக்குகங்கள் நாங்களும் அதற்கான முயற்சிகளை செய்கிறோம் என்று கூறுங்கள்...

 

நன்றி இணையம்