கடவுள் - ஒவ்வொரு நொடியும் குறிப்பு .......!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:35 AM | Best Blogger Tips

 கிருஷ்ணர் கொடுத்த குறிப்பு//மகாபாரத ...

 

மகாபாரத போரில் உணவு சமைக்க கிருஷ்ணர் கொடுத்த குறிப்பு
 
#மகாபாரதம்_கிளைக்கதை
 
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போரிட்டனர். 
 
ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். 
மகாபாரதப் போரில் வீரர்களுக்கு உணவு தயாரித்தவர் யார் தெரியுமா?Mahabharata  War Unknown Secrets - YouTube
 
இருபக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த உடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். 
 
தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். 
 
ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை.
எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.
 
தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார்
என நினைத்த யுதிஷ்டிரர் சமையர்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். 
 
அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். 
 
அதன்படிதான் சமைப்போம் என்றனர். 
 May be an image of temple and text
உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார். 
 
அதற்கு அவர் நான் தினமும் கிருஷ்ணருக்கு பாயாசம் வழங்கும் போது அதில் உள்ள முந்திரிப் பருப்பில் எத்தனை சாப்பிடுகிறார் என கவனிப்பேன்.
 
அதனை கணக்கில் கொண்டு அத்தனை வீரர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சமைக்கச் சொல்வேன். 
 
ஒவ்வொரு முந்திரி பருப்பிற்கும் ஆயிரம் வீரர்கள் என கணக்கிடுவேன்.
 
சில நேரம் கிருஷ்ணர் பாதிப் பங்கு கால் பங்கு முந்திரிப் பருப்பு கூட சாப்பிடுவது உண்டு என்றார். 
 
கிருஷ்ணர் தினமும் கொடுக்கும் குறிப்பையும் அதை உடுப்பி அரசர் கவனிக்கும் விதத்தையும்
கேட்ட யுதிஷ்டிரர் தான் ஒரு நாள் கூட இதைக் கவனிக்கவில்லையே என நினைத்துக்கொண்டார்.
 
நீதி : கடவுள் ஒவ்வொரு நொடியும் குறிப்பு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். 
 
அதனை உணரும் போது வாழ்வின் காரியம் சாத்தியமாகும்.