ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு...!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:34 PM | Best Blogger Tips
சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.

மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்...!

இந்திய ஜனாதிபதி மாளிகை பற்றிய தகவல் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:45 PM | Best Blogger Tips
இன்று 70 கோடி செங்கல்லில் ஆச்சரிய மாளிகை - ஜனாதிபதி மாளிகை பற்றிய தகவல்.

இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது இந்த பாரம்பரிய மாளிகை. 1911 - ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை ' . யாகத்தான் இது உருவாக்கப்பட்டது தற்போது ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளி கை ,இந்தியா சுதந்திரம் பெற்ற போது , ` அரசு இல்லம் ' என்று மறுபெயர்சூட்டப்பட்டது. நாடு 1950 - ல் குடியரசானபோது ` ராஷ்டிரபதி பவன் ' என்றதற்போதைய பெயரைப் பெற்றது.

புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் ஜனாதிபதி மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக , பழைய ரெய்சினா , மால்ச்சா கிராமங்களில்இருந்து 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் ஏக்கர்

கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் , 1914 - ம் ஆண்டு முதல் 1918 - ம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர் , கட்டுமானப் பணியைப் பாதித்தது. கடைசியில் , 1929 - ம் ஆண்டு ,மாளிகை பூர்த்தியானது.

ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் செலவு என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது 4 லட்சம் பவுண்டுகள். ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தபோது அது 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாக எகிறி யிருந்தது (அந்த காலத்தைய மதிப்பு இந்திய பணத்தில் ரூ. 2 கோடி).

* கடலெனப் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை , நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது.

* மாளிகையின் நீளம் 630 அடி. இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை விட நீளமானது.

* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.

* இரும்பை மிகக் குறைவான அளவு பயன்படுத்திக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

* மாளிகை கட்டுமானத்தில் 30 லட்சம் கன அடி கல்லும் , 70 கோடி செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.

முதலில் குடியேறியவர்கள்

ஜனாதிபதி மாளிகையில் முதலில் வசித்தவர் லார்டு இர்வின். அவர் இங்கு 1931 - ம் ஆண்டு ஜனவரி 23 - ம் தேதி குடியேறினார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி , ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்.

ராஜாஜியைத் தொடர்ந்து , இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு தங்க தனித்தனி பகுதி உள்ளது. ராஜாஜி , இதன் பிரதான வசிப்பிடப் பகுதி ரொம்பப் பெரிதாக இருப்பதாக நினைத்தார். எனவே அவர்விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கினார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும் , அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். எனவே , மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குகிறார்கள் , அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மொகலாயத் தோட்டம்

ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று , இங்குள்ள `மொகல் கார்டன் ' எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும் , பலவண்ண மொகலாயத் தோட்டம் , ஜனாதி பதி மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக் கப்பட்ட மொகலாயத் தோட்டம் , உலக முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலமே இது திறந்து விடப்படுகிறது

ஏழைகளின் டானிக் முருங்கைக்கீரை.

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips
முருங்கைக்கீரை என்றவுடன் நம் எல்லோருக்கும் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம்தான் ஞாபகம் வரும். ஆனால் முருங்கைக்கீரையில், மற்ற
உணவுப்பொருட்களில் இல்லாத அற்புதமான வைட்டமின்,இரும்பு சத்துக்கள் இருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம். பெரும்பாலும் இது இலவசமாகவே கிடைப்பதால், இதனை பலர் அலட்சியப்படுத்துகிறார்கள். இதில் உள்ள பயன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

தேங்காயை கற்பக விருட்சம் என அழைப்பது போல முருங்கையை பிரம்ம விருட்சம் என போற்றுகின்றனர். இக்கீரை மரத்தில் கிடைப்பதால் நிறைய பஞ்சபூத ஆற்றல்கள் உள்ளன. மனிதர்கள் சாப்பிடக்கூடிய கீரைகளில் மிகவும் முக்கியமாக சாப்பிடக்கூடிய கீரை முருங்கையும், கறிவேப்பிலையும் தான். ஏழைகளின் பிணிகளை விரட்டும் அற்புதக்கீரை. மலிவானது. எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. மனித குலத்திற்கு என படைக்கப்பட்ட முதல் தர கீரை முருங்கையாகும்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது, ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையையும் அகற்றும்.

தலை முடி நன்கு வளர தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக்க்கீறை சூப் செய்யும் முறையை தற்போது பார்ப்போமா?

join nagapattinamnews@gmail.com

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

தினமும் இந்த முருங்கைக்கீரை சூப் பருகினால் தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக்கீரையை இனியும் நாம் உதாசீனப்படுத்தாமல், தினமும் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம்.

மூலிகை குடிநீர் (சுக்கு காபி)

மணக்கால் அய்யம்பேட்டை | 11:47 AM | Best Blogger Tips
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.

காலை மாலை இனிய பானம்:

பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையில் தவிப்போருக்கு உதவுவது சுக்கு காபி. சூடாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை நிறைவு செய்கிறது. காரமும் இனிப்பும் இருப்பதால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. காலை மாலை பானங்களுக்கு பொருத்தமானது இந்த சுக்கு காபி.

பவுடர் தயாரிப்பு:

சுக்கு, கொத்தமல்லி, சீரகம் மூன்றும் முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம்.
பூக்கள், வேர்கள், பட்டைகள், வாசனைப் பொருள்கள், என விரும்பிய எதுவும் சேர்க்கலாம்.

join nagapattinamnews@gmail.com

அவையாவன:

கருங்காலி, செஞ்சந்தனம், ரோஜா இதழ், தாமரை இதழ், செம்பருத்தி, ஆவாரம் பூ, ஏனம், ஜாதிக்காய், மிளகு, குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி, வெட்டிவேர், நன்னாரி வேர், வாய் விளங்கம், பதிமுகம், இருவேலி, துளசி, வெள்ளருகு, ஆரஞ்சுத் தோல் முதலியன. இவற்றைக் காய வைத்து அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.

ஒரு டம்ளர் தயாரிக்க

ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் தூளும், இரு ஸ்பூன் கரும்புச் சர்க்கரையும், (நாட்டுச் சர்க்கரை/ பழுப்பு சர்க்கரை/ கருப்பட்டி/ வெல்லம்) போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி மூடி வைத்து நன்கு ஆறின பின்பு வடிக்கட்டி சாப்பிடலாம். சிறிது பால் அல்லது தேங்காய் பால் கலந்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் சாப்பிடலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.

செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்

ஜில்லுன்னு ஐஸ் டீ குடிக்கிறீங்களா? கொஞ்சம் ஆலோசனை பண்ணுங்களேன்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:47 AM | Best Blogger Tips
அதிக அளவில் ஐஸ் டீ குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதற்கு தொடர்ந்து ஐஸ், டீ குடிப்பதும் ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆக்சலேட் வேதிப்பொருள்

ஐஸ், டீயில் அதிகமாக உள்ள ஆக்சலேட் என்னும் திடப்பொருள் கலவை சிறுநீரக கற்களை உருவாக்கும் மூல வேதியல் பொருள் என அறியப்பட்டுள்ளது. இவை சிறுநீரில் உப்பாகவும், தாதுக்களாகவும் தேங்கி நின்று சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன என்று சிகாகோவில் உள்ள லயோலா மருத்துவ கல்லூரியின் சிறுநீரக இயல்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜான்மில்னர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

தண்ணீரை விட சுவையாக உள்ளது. குறைந்த கலோரிகளை கொண்டது என்பதற்காக ஏராளமான மக்கள், அதிகமாக ஐஸ், டீயை பருகும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், சிறுநீரகத்திற்கு ஏற்படும் பாதிப்பை ஒப்பிட்டுப்பார்த்தால், அவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.

அடிக்கடி குடிக்காதீங்க

ஆக்சலேட் படிமங்கள் தீங்கற்றவையாக கருதப்பட்டாலும், இவை பெரிய அளவில் வளர்ந்து சிறுநீரக பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. எனவே இந்தியாவின் தட்ப-வெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஐஸ், டீ குடிக்கும் பழக்கத்தை நாம் கைவிடவேண்டும் என்று சிறுநீரகவியல்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதை சாப்பிடக்கூடாது

மேலும், ஆக்சலேட் எனப்படும் மூலப்பொருள் அதிகம் கொண்ட பசலைக்கீரை, சாக்லேட், உப்பு, பயறு மற்றும் இறைச்சி வகைகளும் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் காரணிகளான பிற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிங்க

சிறுநீரக கல் அடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் சிறுநீரக கற்களின் வளர்ச்சியை எலுமிச்சைப்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கட்டுக்குள் வைக்கும். எனவே எலுமிச்சை ரசம், ஜூஸ், பார்லி போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஆகியவற்றை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து விடுபட முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூதுவளையில் இவ்வளவு விஷயம் இருக்கா????

மணக்கால் அய்யம்பேட்டை | 11:46 AM | Best Blogger Tips
இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்ப ம் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல்

ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. துவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.

வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:41 AM | Best Blogger Tips
வயதாகிவிட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம். இப்போது அந்த நரை முடி வருவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போமா!!!

* இன்றைய அவசர மார்டன் வாழ்க்கை முறையில் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் உள்ள பிரச்சனை தான் நரை முடி. ஏனெனில் அவர்கள் நிறைய டென்சன், மனஅழுத்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தான் விரைவிலேயே நரை முடி வருகிறது. உங்களுக்கு தெரியுமா? வயதானவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், டென்சனுடன இருப்பதால் தான், அவர்களுக்கு நரை முடி ஏற்படுகிறது. ஆகவே அத்தகைய டென்சனை சிறுவயதிலேயே வந்தால், நரை முடியும் வந்துவிடும்.
எனவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்.

* தற்போதைய ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும்.

* நரை முடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வரும். அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது வருகிறது.

* கூந்தல் வெள்ளையாவதற்கு உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் காப்பர் தான், உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது. ஆகவே இத்தகைய சத்து குறைபாட்டினால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து, வெள்ளை முடி ஏற்படுகிறது. மேலும் இந்த காப்பர் சத்து கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. அதிலும் நண்டில் அதிகம் உள்ளது. சைவ உணவு என்றால் எலுமிச்சை மற்றும் காளானில் இந்த சத்து உள்ளது.

* சிலசமயங்களில் எந்த காரணத்தினால் வெள்ளை முடி வருகிறது என்று சொல்லமுடியவில்லை என்று இருப்பவர்கள், அதனை நீக்க ஒரு இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ளலாம். அது பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்கு அரைத்து, தேங்காய எண்ணெயில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கூந்தலுக்கு தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

* இந்திய மக்களின் கருமையான கூந்தலுக்கான இரகசியம் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையை சமையலில் சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான எண்ணெயில் ஊற வைத்து, கூந்தலுக்கு தடவி வரலாம்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கருமையான கூந்தல் வெள்ளையாவதை தடுக்கலாம்.

நண்பர் (Vijay Ragavan) வேண்டுக்கொலுக்கு இணங்க, இத் தகவல் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

நன்றி.
வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்:-