கார், பைக் ஓட்டுகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tips
Image result for பைக்
நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள். படிமங்கள்! அனைவருக்கும் 
பகிருங்கள்!!
https://www.facebook.com/images/emoji.php/v9/f34/1/16/1f914.png🤔https://www.facebook.com/images/emoji.php/v9/f34/1/16/1f914.png🤔https://www.facebook.com/images/emoji.php/v9/f34/1/16/1f914.png🤔https://www.facebook.com/images/emoji.php/v9/f34/1/16/1f914.png🤔https://www.facebook.com/images/emoji.php/v9/f34/1/16/1f914.png🤔https://www.facebook.com/images/emoji.php/v9/f34/1/16/1f914.png🤔https://www.facebook.com/images/emoji.php/v9/f34/1/16/1f914.png🤔https://www.facebook.com/images/emoji.php/v9/f34/1/16/1f914.png🤔https://www.facebook.com/images/emoji.php/v9/f34/1/16/1f914.png🤔
சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று!
விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......
முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......
கடந்து செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா?
நீ தான் எங்கள் 
கண்மணி என்று.,.....
விடியலும் 
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......
Image result for கார்
ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்.....
காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டிய தாலி நினைவிருக்கிறதா..
கண்ணாளா?
காத்திருப்பேன் கடைசிவரை
விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட 
உன் நிழல் நான் தந்தையே!
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..
அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்;
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்
உடையாமலும்
உரசாமலும் 
கவனமுடன் 
திரும்பி வா!
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும் 
பயணமாக இருக்கலாம் ;
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......
அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனும் என வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கை
ஒரு வரமென்று 
உணர்ந்து கொள்ளுங்கள்!
தொங்கிச் செல்வதும் 
துரத்திச் செல்வதும்
உங்கள் குருதியின் 
வேகமாக இருக்கலாம்;
ஆனால், விபத்துகளிலிருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது!
விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளை எல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,....?
அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்!
நீங்கள் ஒரு மகனாக இருந்தால் 
ஒரு குடும்பத்தின் வாரிசு போச்சு! 
கணவனாக இருந்தால் குடும்பம் போச்சு!
தந்தையாக இருந்தால் ஒரு குடும்பமே
இருண்டு போச்சு!
கண நேர கவனக் குறைவால் கதை முடிகிறது நண்பா! 
கவனமாக செல் !
காத்திருக்கின்றன உறவுகள் உனக்காக!
SPEED THRILLS;
BUT KILLS!
THERE IS *NO RE-PLAY*
IN LIFE!
NO SPARE PARTS AVAILABLE FOR YOUR BODY!
நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம், 
விபத்து நமக்கு ஏற்படாது எனறு-
-
அது நமக்கு நடக்கும் வரைதான்!
*மித வேகம் மிக நன்று*
https://www.facebook.com/images/emoji.php/v9/fa/1/16/1f6b4_1f3fc_200d_2640.png🚴🏼‍♀https://www.facebook.com/images/emoji.php/v9/fc/1/16/1f6b4_1f3fc_200d_2642.png🚴🏼https://www.facebook.com/images/emoji.php/v9/fa/1/16/1f6b4_1f3fc_200d_2640.png🚴🏼‍♀https://www.facebook.com/images/emoji.php/v9/fc/1/16/1f6b4_1f3fc_200d_2642.png🚴🏼https://www.facebook.com/images/emoji.php/v9/fa/1/16/1f6b4_1f3fc_200d_2640.png🚴🏼‍♀https://www.facebook.com/images/emoji.php/v9/fc/1/16/1f6b4_1f3fc_200d_2642.png🚴🏼https://www.facebook.com/images/emoji.php/v9/fa/1/16/1f6b4_1f3fc_200d_2640.png🚴🏼‍♀https://www.facebook.com/images/emoji.php/v9/fc/1/16/1f6b4_1f3fc_200d_2642.png🚴🏼https://www.facebook.com/images/emoji.php/v9/fa/1/16/1f6b4_1f3fc_200d_2640.png🚴🏼‍♀
சமூக அக்கறையுடன்
பகிரப்படுகிறது...!!!
*என்றும் அன்புடன் ஆர்.கணேஷ்...*



 நன்றி இணையம்

காவேரி நதியில் புஷ்கர நீராடல் சிறப்பு புண்ணிய காலம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips
Image result for காவேரி நதியில் புஷ்கர நீராடல் சிறப்பு புண்ணிய காலம்
இவ்வருடம் 2017 செப்-12 முதல் செப்-23 வரை புஷ்கர தொடக்கம். அடுத்த வருடம் 2018 செப்-30 முதல் அக்-11 வரை புஷ்கர முடிவு.
புஷ்கரம் என்றால் என்ன?
புஷ்கரர் என்பவர் படைப்புக் கடவுளான பிரம்மாவின் கமண்டலுவில் உள்ள புண்ணிய தீர்த்த அரசர். உலகில் உள்ளகோடி புண்ணிய தீர்த்த தேவதைகளுக்கு அதிபதி.
வியாழ பகவான் தேவ குரு என்று நாம் அறிவோம். அவர் ஒரு முறை பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு வியாழனோநவ கிரகங்களுள் எனக்கு முக்கியத்துவமுள்ள பூஜைக்குரிய நிலை கிடைக்கவேண்டும். நான் அனைத்தும் அறிந்தவனாக ஆகவேண்டும். மேலும் உமது கமண்டலுவில் உள்ள இந்த புஷ்கரர் என்னிடம் வரவேண்டும்என்று கேட்டார். பிரம்மா அப்படியே ஆகட்டும் என்று வரம் அருளினார். ஆனால் புஷ்கர தேவன்நான் உம்மை விட்டுச் செல்ல விரும்பவில்லைஎன்று பிரம்மாவிடம் வேண்டினார்.
பிரம்மாவோஎன் வாக்கு பொய்போகாது. ஆகையால் எனது உத்தரவுபடி நீர் குறிப்பிட்ட காலமாவது வியாழனுடன் இருக்கத்தான் வேண்டும்என்று கூறினார். ஆகாயத்தில் உள்ள 12 ராசிகளில் வியாழன் ஒவ்வொரு ராசியிலும் இருக்கும் சுமார் 1 வருட காலத்தில் ஒவ்வொரு புண்ணிய நதியுடன் அவருக்கு தொடர்பு உண்டு. ஆகவே அந்தந்த ராசியில் வியாழன் இருக்கும் பொழுது முதலில் 12 நாளும் இறுதியில் 12 நாளும் முழுவதும் புஷ்கரர் அந்தந்த நதியில் இருக்க வேண்டும் என்று பிரம்மா உத்தரவிட்டார். அதே போல் இடைப்பட்ட சுமார் 1 வருட காலத்திலும் நடுப்பகல் வேளையில் 2 முகூர்த்த நேரம் (96 நிமிடங்கள்) அந்தந்த நதியில் இருக்கவேண்டும் என்றும் கூறினார்.
தீபாவளியன்று அதிகாலை அனைத்து நீர்நிலைகள் மற்றும் நீரோட்டங்களிலும் கங்கை வந்து இருப்பதாக நமது ஐதீகம் உள்ளதல்லவா! இதே போல் நமது பாரத தேசத்தில் உள்ள பன்னிரண்டு பிரதான நதிகளில் அந்தந்த காலத்தில் புஷ்கர தேவன் வந்து இருக்கிறார். ஆகவே இச்சமயம் அந்தந்த நதிகளில் நீராடுவது உலகில் உள்ளகோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதற்கு சமமான புண்ணியத்தை அளிக்கும், பாபங்களை விலக்கும்.
இத்தகைய நதி நீராடலுக்கு உகந்ததான மிக உன்னதமான புண்ணிய காலமே புஷ்கரம் எனப்படுகிறது.
வியாழன் எந்தெந்த ராசிகளில் இருக்கும்பொழுது எந்தெந்த நதிகளில் புஷ்கரம்?
மேஷம் - கங்கை
ரிஷபம் - நர்மதை
மிதுனம் - ஸரஸ்வதி
கடகம் - யமுனை
சிம்மம் - கோதாவரி
கன்னி - கிருஷ்ணை
துலாம் - காவேரி
விருச்சிகம் - தாமிரபரணி
தனுசு - சிந்து
மகரம் - துங்கபத்ரை
கும்பம் - பீமா
மீனம் - பிரணீதா
நமது காவேரியில் புஷ்கரம்
நமது தமிழ்நாட்டில் வருடாவருடமும் துலா ராசியில் சூரியன் ஸஞ்சரிக்கும் ஐப்பசி மாதம் காவேரி நதி முழுதும் புண்ணிய தீர்த்த நீராடல் உண்டு என்பதை அறிவோம். மஹாமகம் என்பதாக பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை வியாழன் சிம்ம ராசியில் இருக்கையில் மாசி மாதம் மக நக்ஷத்ரத்தில் ரிஷப லக்னத்தில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் புண்ணிய நீராடல் உண்டு என்பதும் பிரசித்தமே. இதே போல் இந்த புஷ்கர புண்ய காலத்தில் இன்ன இடத்தில் தான் என்றில்லாமல் காவேரி நதி முழுதும் புண்ணிய நீராடல் செய்து பயன்பெறுவோம்.
நிகழும் ஹேமலம்ப ஆவணி 27 (2017-செப்-12) முதல் புரட்டாசி 7 (2017-செப்-23) வரை புஷ்கர நீராடல் ஆரம்பம். இச்சமயம் காலை மதியம் மாலை என்றில்லாமல் எப்பொழுது காவேரியில் நீராடல் செய்தாலும் சிறப்பானதே. அது தொடர்ந்து ஒரு வருட காலம் புஷ்கர வருடம். இச்சமயம் நடுப்பகலில் காவேரி நீராடல் சிறப்பானது. இதன் நிறைவாக வரவிருக்கும் விலம்ப புரட்டாசி 14 (2018-செப்-30) முதல் அம்௴ 25 (2018-அக்-11) வரை புஷ்கர நீராடல் முடிவு. அச்சமயத்திலும் தொடக்கத்தில் போல் முழு நாளும் காவேரி நீராடலுக்கு சிறப்பானது.
பாபங்கள் மலிந்து புண்ணியங்கள் நலிந்திருக்கும் இக்கலிகாலத்தில் திருமூல நாயனார் -
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
என்றவாறு புஷ்கர நீராடல் போன்ற எளிமையான தர்மங்களையாவது செய்து வாழ்க்கையில் மேன்மையடைவோமாக!
தகவல் அளித்தது - ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடம் ஶ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் உத்தரவுபடி
நன்றி இணையம்